புதிவுகள்‌ 3% சிறுகதைகள்‌ (தொகுதி மூன்று)

பதிவுகள்‌ 36 சிறுகதைகள்‌

(தொகுதி மூன்று)

"அனைவமுடனும்‌ அறிவினைப்‌ பகிர்ந்து கொள்வோம்‌"

"அனைவருடனும்‌ அறிவினைப்‌ பகிர்ந்து கொள்வோம்‌" என்பதைத்தாரக மந்திரத்துடன்‌, எழுத்தாளர்‌ வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு மார்ச்‌ 2000 ஆம்‌ ஆண்டிலிருந்து வெளியாகும்‌ இணைய இதழ்‌ பதிவுகள்‌ யதிவுகள்‌.காம்‌). பதிவுகள்‌ இணைய இதழில்‌ வெளியான கட்டுரைகள்‌, சிறுகதைகள்‌, கவிதைகள்‌ மற்றும்‌ ஆய்வுக்‌ கட்டுரைகள்‌ மின்னூற்‌ தொகுப்புகளாக வெளியாகும்‌.

இது அவ்வகையில்‌ வெளியாகும்‌ மூன்றாவது சிறுகதைத்‌ தொகுப்பு.

பதிவுகள்‌.காம்‌' வெளியீடு!

அக்டோபர்‌ 2020

பதிவுகள்‌ ©2020

2 பதிவுகள்‌ 36 சிறுகதைகள்‌ (தொகுதி மூன்று) உள்ளே...

1. உண்மையான ஆரியன்‌! - மொஹமட்‌ நாஸிகு அலி (கற Naseehu AI)- தமிழில்‌: அ.முத்துலிங்கம்‌ 2. உற்றுழி - கமலாதேவி அரவிந்தன்‌ (சிங்கப்பூற்‌ - 3. என்ன தவம்‌ செய்தனை - பாரதிதேவராஜ்‌ எம்‌. கோவை) 4. காவி அணியாத புத்தன்‌. - குரு அரவிந்தன்‌ - 5. எதிர்காலச்‌ சித்தன்‌! - வ.ந.கிரிதரன்‌ ( கவிந்திரனின்‌ (அறிஞர்‌ அ.ந.கந்தசாமி) 'எதிர்காலச்‌ சித்தன்‌ பாடல்‌' கவிதையின்‌ சிறுகதை வடிவம்‌. சிறுகதையாக்கியிருப்பவர்‌: வ.ந.கிரிதரன்‌) - 6. ஒரு புதிய உலகம்‌ அல்லது புதியதோர்‌ உலகம்‌ - ஆங்கிலத்தில்‌ எழுதியவர்‌ : சிவகாமி விஜேந்திரா & தமிழில்‌ : லதா ராமகிருஷ்ணன்‌ 7. ஒரு விபத்து; சில நிகழ்வுகள்‌ --- சோ.சுப்புராஜ்‌ - 8. முள்ளிவாய்க்கால்‌! - வ.ந.கிரிதரன்‌ - 9. சிறகும்‌, உறவும்‌! - வ.ந.கிரிதரன்‌ 10. சேகுவேராவின்‌ சேற்று தேவதை! - எம்‌.ரிஷான்‌ ஷெரீப்‌, இலங்கை - 11. முகடுகள்‌ - - கமலாதேவி அரவிந்தன்‌ (சிங்கப்பூற்‌) - 12. ஆஞ்செலா தனிமையில்‌ இருந்தபோது... பஸ்க்கால்‌ மெரிகோ. தமிழில்‌ நாகரத்தினம்‌ கிருஷ்ணா - 13. பலிகேட்கும்‌ தேர்வுகள்‌ - சோ.சுப்புராஜ்‌ - 14. மாற்றங்கள்‌! - நெடுந்தீவு குகன்‌ - கனடா 15. வலி உணர்ந்தவன்‌ - மேரித்தங்கம்‌ - 16. காதலர்‌ தினச்‌ சிறுகதை! முகநூல்‌ காதல்‌ - குரு அரவிந்தன்‌ - 17.நீ விரும்பும்‌ தூரத்தில்‌ - ராம்ப்ரசாத்‌ சென்னை) - 18. விநோதன்‌ - ராம்ப்ரசாத்‌ ( சென்னை ) - 19. (ஒரு) மாற்றம்‌ - தமயந்தி கிரிதரன்‌ - ஆங்கிலத்திலிருந்து தமிழில்‌ : லதா ராமகிருஷ்ணன்‌ 20. நண்டு - கமலாதேவி அரவிந்தன்‌ (சிங்கப்பூற்‌ - 21. இவர்களும்‌ சுவர்களும்‌ - சோ.சுப்புராஜ்‌ - 22.. கரையோரத்து சிறு நண்டு ...! - மட்டுவில்‌ ஞானக்குமாரன்‌ - 23. நான்‌ அவனில்லை... - வ.ந.கிரிதரன்‌ 24. புகலிடம்‌ தேடி - ஸ்ரீரஞ்சனி 25. நல்லாய்க்கேட்டுத்தான்‌ என்ன செய்யப்போகிறேன்‌? - பொ.கருணாகரமூர்த்தி (பெர்லின்‌)- 26.. உதிர்ந்த இலைகள்‌ - க.ராஜம்ரஞ்சனி மலேசிய) - 271. தில்லானா - - தாஜ்‌ சீர்காழி, - 28. பெண்கள்‌...! - தாஜ்‌ சீர்காழி, - 29. மின்னல்கள்‌ கூத்தாடும்‌ மழைக்காலம்‌... - றஞ்சினி (ஜேர்மனி, -

பதிவுகள்‌ 02020

பதிவுகள்‌ 3 சிறுகதைகள்‌ (தொகுதி மூன்று)

30. இன்னும்‌ மலடியா...? - அனாமிகா பிரித்திமா - 31. அம்மாவின்‌ நிழல்‌! - புதியமாதவி, மும்பை - 22. பசி! - வி. ரி. இளங்கோவன்‌ ( பிரான்ஸ்‌ ) - 33. இந்த வாரம்‌ ராசிபலன்‌! புதியமாதவி (மும்பை) 34. குறுநாவல்‌: 'திருப்பாதங்களுக்குச்‌ சமர்ப்பணம்‌' -நாகரத்தினம்‌ கிருஷ்ணா- 35. முதியோர்‌ இல்லம்‌! - குமரவேலன்‌ - 36. நடுவழியில்‌ ஒரு பயணம்‌! - வ.ந.கிரிதரன்‌ -

பதிவுகள்‌ 02020

4 பதிவுகள்‌ 3 சிறுகதைகள்‌ (தொகுதி மூன்று)

1. உண்மையான ஆரியன்‌! - மொஹமட்‌ நாஸிகு அலி (Mohammed Naseehu Alj)- மிழில்‌: முத்துலிங்கம்‌

கதாசிரியரைப்‌ பற்றி:

கானா நாட்டைச்‌ சேர்ந்த எழுத்தாளர்‌ மொஹமட்‌ நாஸிகு அலிமொஹ்மட்‌ நாஸிகு அலி (Mohammed Naseehu All) ஆப்பிரிக்காவின்‌, கானாவைப்‌ பிறப்பிடமாகக்‌ கொண்டவர்‌. தற்போது அவர்‌ வசிப்பது நியூ யோர்க்கில்‌. இளம்‌ வயதில்‌ எழுதத்தொடங்கி திடீரென்று புகழ்‌ பெற்றவர்‌. இவருடைய கதைகளம்‌, கட்டுரைகளும்‌ நியூயோர்க்‌ டைம்ஸ்‌, நியூ யேோர்க்கர்‌ போன்ற பிரபலமான பத்திரிகைகளில்‌ பிரசுரமாயிருக்கின்றன. இவர்‌ ஓர்‌ இசைக்கலைஞரும்கூட. சமீபத்தில்‌ இவர்‌ எழுதிய 'மல்லம்‌ சிலே! என்ற சிறுகதையை நியூ யோர்க்கரில்‌ படித்துவிட்டு, ஆப்பிரிக்காவின்‌ சினுவா ஆச்சிபி, பென்‌ ஓக்ரி போல இன்னொருவர்‌ தோன்றிவிட்டார்‌ என்று நினைத்தேன்‌. கடந்தமாதம்‌ அவருடைய சிறுகதைத்‌ தொகுதி The Prophet of Zongo Steet வெளியானபோது அதை முதலாளாக நின்று வாங்கினேன்‌. அதிலே வெளியான 'உண்மையான்‌ ஆரியன்‌' என்ற இந்தக்‌ கதை எனக்கு மிகவும்‌ பிடித்துப்போனது. உலகத்தின்‌ இரு பாகங்களில்‌ இருந்து புலம்பெயர்ந்து நிய யோர்க்கில்‌ வாழும்‌ இருவருடைய கதை. இது இன்னும்‌ மற்ற நாடுகளில்‌ இருந்து புலம்பெயர்ந்தவர்களுக்கும்‌ பொருந்தும்‌. அதையே கீழே மொழிபெயர்த்திருக்கிறேன்‌. -

நான்‌ லிகுவிட்‌ லவுஞ்‌ கிளப்பில்‌ இருந்து வெளியே வந்தபோது அதிகாலை மூன்றுமணி. விதியில்‌ ஒரு சிலரின்‌ நடமாட்டமே இருந்தது. விடற்றவர்கள்‌ நிறை வண்டிகளைத்‌ தள்ளினர்‌; சனங்கள்‌ நெருக்கியடிக்கும்‌, புகை சூழ்ந்த பார்களில்‌ வேலைசெய்பவர்களும்‌, சங்கீதக்காரர்களும்‌ தங்கள்‌ அன்றைய கடுமையான உழைப்பை முடித்துவிட்டு வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தனர்‌. போதை நிறைந்த இன்னும்‌ சிலர்‌ வேறு எங்காவது சாப்பிடவோ, அல்ல மேலும்‌ குடிக்கவோ அலைந்தனர்‌.

அந்த நேரம்‌ கெட்ட நேரத்தில்‌ வாடகைக்கு வாகனமொன்று பிடிப்பது அவ்வளவு கடினமான காரியமாக இருக்கும்‌ என்று நான்‌ நினைக்கவில்லை. காலையிலோ அல்லது பரபரப்பான மாலையிலோ அல்லது வெள்ளி, சனி பின்னிரவுகளிலோ அது அத்தனை சுலபம்‌ இல்லை. அதுவும்‌ ஒரு கறுப்பு முகத்தை வாடகைக்‌ காரோட்டிகள்‌ திரும்பியும்‌ பார்க்கமாட்டார்கள்‌. இரண்டு வாடகைக்‌ கார்கள்‌ வசதியாக கிளப்புக்கு முன்‌ தரித்து நின்றன. நான்‌ என்னுடைய இரண்டு ஜிம்பே மேளங்களையும்‌, பேசும்‌ மேளத்தையும்‌, அதன்‌ உறைகளையும்‌ சுமந்தபடி முதல்‌ காரை அணுகினேன்‌. அந்தக்‌ காரின்‌ சாரதி இரண்டாவது கார்‌ சாரதியுடன்‌ ஏதோ ஆவேசமாக பேசுவதை நிறுத்திவிட்டு கையைக்‌ காட்டி 'ஓ, நண்பரே வாரும்‌, வாரும்‌' என்றான்‌. அவனுடைய பேச்சில்‌ கிழக்கு மத்தியதரை வாடை வீசியது. கிரேக்கம்‌, அல்பேனியா அல்லது துருக்கியாகக்கூட இருக்கலாம்‌. யார்‌

கண்டது? அவன்‌ கொஞ்சம்‌ தொக்கையாக, ஜம்பது வயது வாக்கில்‌ இருந்தான்‌.

இத்தனை வருடங்களில்‌ என்னைச்‌ சவாரி ஏற்கும்‌ சாரதிகளினுடனான என்‌ உறவை வர்ணிப்பதானால்‌ சண்டை - சமாதானம்‌ என்று சொல்லலாம்‌. சில வேளைகளில்‌ அது

பதிவுகள்‌ 02020

5 பதிவுகள்‌ 3 சிறுகதைகள்‌ (தொகுதி மூன்று)

மோசமான பகையாகவும்‌ மாறுவதுண்டு. இந்த டிரைவர்கள்‌, வீதி வெறிச்சோடி, அவர்கள்‌ தொழில்‌ மந்த நிலையில்‌ இருக்கும்‌ நேரங்களில்‌ மட்டுமே என்னை ஏற்றுவார்கள்‌. அவர்களுடன்‌ சுமுகமாக இருக்கவேண்டும்‌ என்ற கட்டாயம்‌ எனக்கில்லை. இன்றைய சாரதி கொஞ்சம்‌ நல்லவன்போல தோன்றினாலும்‌ என்னுடைய

வழமையான தோரணையை உதறிவிடுவது கடினமாகவே இருந்தது.

நான்‌ சாமான்களைத்‌ தூக்கிக்கொண்டு காரின்‌ ட்ரங்கை அணுகியதும்‌ அவன்‌ எனக்கு உதவ வந்தான்‌. நான்‌ இதைப்‌ பார்த்துக்கொள்கிறேன்‌. நீங்கள்‌ சிறிய பையுடன்‌ உள்ளே ஏறுங்கள்‌' என்றான்‌. அப்படியே என்‌ ஜிம்பே மேளங்களை வாங்கி ட்ரங்கிலே வைத்து மூடினான்‌.

புரூக்லினுக்கா போகிறீர்கள்‌? அவன்‌ கேட்டான்‌. பின்‌ கதவை நோக்கி நடந்தவாறு 'ஆம்‌, பார்க்‌ ஸ்லோப்‌' என்றேன்‌.

காரின்‌ உள்ளே புதிதாகத்‌ தெளித்த ஏதோ வாசனை நல்ல மணம்‌ விசியது. ஆனால்‌ அது மறைக்க முயன்ற சிகரெட்‌ நெடி இன்னும்‌ அடிவாரத்தலிருந்து அகலவில்லை. வாரத்தில்‌ ஒரு நாள்‌ என்று ஆப்பிரிக்க ஜாஸ்‌ வாத்தியக்‌ குழுவுக்கு, காற்றோட்டம்‌ இல்லாத நிலவறைக்‌ கிளப்பில்‌, மேளம்‌ வாசித்ததில்‌ எனக்கு கண்கள்‌ எரிந்து நீர்‌ கசிந்தது.

டிரைவருக்கு காத்திருக்கும்போது என்‌ பகல்‌ வேலையைப்‌ பற்றி யோசித்தேன்‌. அங்கே பத்து மணிக்கு நான்‌ நிற்கவேண்டும்‌. நாளாந்தம்‌ ஒரு கம்புயூட்டர்‌ திரைக்கு முன்‌ உட்கார்ந்து மணிக்கணக்காக கம்பனி இணைய தளங்களை உண்டாக்குவதும்‌, புதுப்பிப்பதுமாகிய என்‌ வேலையை நினைத்த மாத்திரத்திலேயே சோர்வு இன்னும்‌ கூடியது.

சாரதி காருக்குள்‌ ஏறியதும்‌ 'உங்கள்‌ முகவரி என்ன?' என்றான்‌.

நியூயோர்க்‌ சாரதிகள்‌ அரசியல்‌ விவாதங்களுக்கு பேர்போனவர்கள்‌. பேச்சை வளர்த்த எனக்கு பிரியமில்லை என்பதை உணர்த்துவதற்காக வெடுக்கென்று பதில்‌ கூறினேன்‌. அது அவனுக்கு புரிந்ததாகத்‌ தெரியவில்லை.

நீங்கள்‌ எங்கேயிருந்து?' அவன்‌ கேட்டான்‌.

புரூக்லின்‌ நான்‌ கூறினேன்‌.

'இல்லை, இல்லை. எங்கேயிருந்து வந்தீர்கள்‌ என்று கேட்டேன்‌.

'ஓ, கானாவிலிருந்து.'

பதிவுகள்‌ 02020

6 பதிவுகள்‌ 3 சிறுகதைகள்‌ (தொகுதி மூன்று)

'எனக்கு கானா தெரியும்‌. அங்கேயிருந்து எனக்கு அநேக கார்‌ சாரதி நண்பர்கள்‌ இருக்கிறார்கள்‌.

'அப்படியா!'

நான்‌ ஆர்மினியன்‌.' அவனுடைய முகத்தில்‌ தோன்றிய சிரிப்பில்‌ அளவில்லாத பெருமிதம்‌ தெரிந்தது.

நல்லது.'

நாங்கள்‌ அப்போது சமிக்ஞை விளக்குகளுக்கு முன்னால்‌ நின்றிருந்தோம்‌. இவன்‌ என்னிடம்‌ வேறு கேள்விகள்‌ கேட்பதை நிறுத்துவதற்காக நான்‌ கார்‌ யன்னல்‌ வழியால்‌ பார்த்துக்கொண்டிருந்தேன்‌.

'அப்ப நீங்கள்‌ ஒர்‌ இசைக்கலைஞரா?' நான்‌ நீளமாக மூச்சை தயாரித்து பெருமூச்சு விட்டுக்கொண்டே 'ஆம்‌' என்றேன்‌. 'என்னுடன்‌ பேச விருப்பமில்லையா, நண்பரே. எனக்கு சகமனிதரை மிகவும்‌ பிடிக்கும்‌.'

எப்படியிருந்தாலும்‌ எனக்கு என்ன என்று நினைத்தபடி திரும்பி 'இல்லை, நான்‌ மிகவும்‌ களைத்திருக்கிறேன்‌ என்றேன்‌.

கேளும்‌, நண்பரே. அவன்‌ திரும்பி கண்ணாடி தடுப்பு வழியால்‌ என்னைப்‌ பார்த்தான்‌. 'இங்கே முன்னாலே வந்து உட்காருங்கள்‌. பரவாயில்லை என்றான்‌. 'இருக்கட்டும்‌ என்றேன்‌ நான்‌. ஆனால்‌ நாங்கள்‌ ஒன்பதாவது தெருவை கடந்ததும்‌ அவன்‌ திடீரென்று பிரேக்‌ போட்டு காரை ஒரு பக்கத்தில்‌ நிறுத்தினான்‌. பின்னாலே வந்த கார்கள்‌ விடாமல்‌ ஹோர்ன்‌ அடிக்கத்‌ தொடங்கின.

நாசமாய்ப்‌ போகட்டும்‌.' அவன்‌ சிரித்தபடி நகராமல்‌ சாவகாசமாக 'முன்னுக்கு வாரும்‌, நண்பரே என்றான்‌.

நான்‌ கதவைத்‌ திறந்து வெளியே வந்தேன்‌. முன்‌ இருக்கையில்‌ உட்கார்ந்து கதவைச்‌ சாத்திய பிறகு சாரதி சொன்னான்‌ 'இது எவ்வளவோ நல்லது, நண்பரே. என்னைப்‌ பாருங்கள்‌. எனக்கு உலகத்தவர்‌ எல்லோரையும்‌ பிடிக்கும்‌. நீங்கள்‌ எங்கேயிருந்து வந்தாலும்‌ எனக்கு பரவாயில்லை. அவன்‌ சொன்னதற்கு என்‌ முகத்தில்‌ ஏதாவது மாற்றம்‌ எதிர்பார்த்தான்‌. ஆனால்‌ நான்‌ ஒருவித உணர்ச்சியையும்‌ காட்டாது மறைத்துக்கொண்டேன்‌.

பதிவுகள்‌ 02020

7 பதிவுகள்‌ 3 சிறுகதைகள்‌ (தொகுதி மூன்று)

'எனக்கு தெரியும்‌, எனக்கு தெரியும்‌.' விவாதத்தில்‌ தோல்வியடைந்தவர்‌ விட்டுக்கொடுப்பதுபோல பேசினான்‌. 'எங்களில்‌ பலர்‌ கறுப்பர்களை ஏற்றுவது கிடையாது. நான்‌ அப்படி இல்லை. என்னை அழைப்பவர்‌ எவரையும்‌ ஏற்றுவேன்‌.

கறுப்பு மனிதரில்‌ கரிசனை கொண்ட ஒரு குற்ற உணர்வுள்ள வெள்ளைக்காரன்போல இவன்‌ நடப்பதாக எனக்குப்‌ பட்டது. இவனுடைய கரிசனை உண்மையாகக்கூட இருக்கலாம்‌. நான்‌ சிலவேளைகளில்‌ குணவானாக நடப்பதுபோல இவனும்‌ மற்ற சாரதிகளின்‌ நடத்தையை சரிக்கட்டுவதற்காக நல்லவன்போல நடக்கலாம்‌. நான்‌ அதைப்‌ பொருட்படுத்தவில்லை, என்னை தனியாக விட்டால்‌ போதும்‌ என்று நினைத்தேன்‌. ஆனால்‌ பேசுவதற்கு வாயைத்‌ திறந்தபோது மாத்திரம்‌, நீங்கள்‌ மிக நல்லவராக இருக்கிறீர்கள்‌, என்றேன்‌.

'ஆம்‌, நான்‌ நல்லவன்தான்‌.' அவன்‌ சிரித்தபடி சொன்னான்‌, 'இங்கே புகை பிடிக்கலாம்‌, தெரியுமா? திடீரென்று ஒரு வெளிநாட்டு சிகரட்‌ பக்கட்டை சேர்ட்‌ பையிலிருந்து உருவி என்னிடம்‌ நீட்டினான்‌.

'இல்லை, நன்றி. நான்‌ புகைப்பதில்லை.'

'என்னவும்‌ புகைக்கலாம்‌. என்னிடம்‌ கஞ்சாவும்‌ உண்டு, வேணுமா?

'வேண்டாம்‌. எதுவுமே நான்‌ புகைப்பதில்லை.'

'உமக்கு என்ன நடந்தது? புகை பிடிக்காத இசைக்கலைஞன்‌, கரகரத்த குரலில்‌ சிரித்தான்‌.

அவன்‌ சிகரெட்டை வாயில்‌ பொருத்தி, லைட்டரை தேடியபடி, 'உங்களுக்கு பரவாயில்லையா? என்றான்‌.

'இல்லை' என்றேன்‌.

அடுத்த சிக்னல்‌ விளக்கில்‌ சிகரெட்டை பற்றவைத்தான்‌. நான்‌ அவசரமாக என்‌ வீட்டு நம்பரை அழைத்தேன்‌. மூன்று முறை மணி அடித்தபின்‌ பதிலி வந்துவிட்டது. என்ன -பிரான்ஸிசுக்கு தகவல்‌ விட்டேன்‌. 'ஏ, இது நான்‌.

விட்டுக்கு வந்துகொண்டிருக்கிறேன்‌. உன்னை எழுப்பவில்லை என்று நினைக்கிறேன்‌. விரைவில்‌ அங்கே நிற்பேன்‌.

இப்படி நடு இரவு தாண்டி நான்‌ வேலை முடித்து வரும்போது என்னுடன்‌ சேர்த்து வியர்வை மணமும்‌, புகை மணமும்‌ வந்துவிடும்‌. அவள்‌ அது தன்னை தொந்திரவு

பதிவுகள்‌ 02020

8 பதிவுகள்‌ 3 சிறுகதைகள்‌ (தொகுதி மூன்று)

செய்வதில்லை, அப்படியே தன்னுடன்‌ படுக்கலாம்‌ என்று சொல்லியிருந்தாலும்‌ நடு நிசியில்‌ அவளை எழுப்புவது எனக்கு குற்ற உணர்வைக்‌ கொடுத்தது. ஆனால்‌ இன்றிரவு, என்‌ நினைவிலிருக்கும்‌ வேறு எந்த இரவைக்‌ காட்டிலும்‌, எனக்கு -பிரான்சிஸின்‌ அன்பும்‌, தொடுகையும்‌ தேவையாக இருந்தது.

நான்‌ செல்பேசியை சட்டைப்‌ பைக்குள்‌ வைத்துவிட்டு இந்த ஆர்மினியனிடம்‌ இருந்து தப்பி என்னைச்‌ சூழ்ந்திருந்த பிரச்சினைகளில்‌ மூழ்கினேன்‌. இரண்டு மாதம்‌ முன்பு கானாவில்‌ இருக்கும்‌ என்‌ பெற்றோர்‌ தொலைபேசியில்‌ என்னை அழைத்து தாங்கள்‌ அங்கே நல்ல குடும்பத்தில்‌, குணமான ஒரு பெண்ணை எனக்கு பார்த்திருப்பதாக கூறினார்கள்‌. நான்‌ அவர்களிடம்‌ சண்டை போட்டேன்‌. அதற்கு பிறகு அவர்களை அழைக்கவில்லை. அமைதியை தொலைத்து, மனம்‌ சோர்ந்துபோய்‌ இருந்தா -பிரான்சிஸிடம்‌ சொல்லவில்லை. மூன்று வருடங்களாக நாங்கள்‌ ஒன்றாக வாழ்கிறோம்‌.

ஆனால்‌ இந்த ஆர்மினியனை இலகுவில்‌ திசை திருப்ப முடியாது. நான்‌ தொலைபேசியை முடித்தது தெரிந்ததும்‌ அவன்‌ தொடங்கினான்‌. 'உமக்குத்‌ தெரியுமா

நாங்கள்‌ கலைஞர்கள்‌ வித்தியாசமானவர்கள்‌; ஒருவரையும்‌ வெறுப்பது கிடையாது.

நான்‌ தலையை ஆட்டினேன்‌. செல்பேசியில்‌ இன்னொரு அழைப்பு செய்யாததையிட்டு என்னையே நான்‌ திட்டிக்கொண்டேன்‌.

நானும்‌ ஒரு இசைக்கலைஞன்தான்‌, உமக்கு தெரியுமா?

'அப்படியா?'

'உமக்கு சுர்ணா தெரியுமா?

'சுர்ணா, அது என்ன? ஒருவித இசையா?

'இல்லை, இல்லை. அது ஒர்‌ இசைக்‌ கருவி. சுர்ணாதான்‌ என்னுடைய சனங்களின்‌, உச்சக்குரலுக்கு ஏற்ற முதலாவது சக்ஸ்போன்‌.' அவன்‌ பேசும்போது ரர்‌' உச்சரிப்பு உருண்டு உருண்டு வந்தது.

'அந்த வாத்தியத்தையா நீர்‌ வாசிப்பீர்‌? சுரணா:

'இல்லை, இல்லை, இல்லை, நண்பரே. நீங்கள்‌ சரியாக உச்சரிக்கவில்லை. நாங்கள்‌ அதை

சுர்ர்ணாஹ்‌ என்போம்‌.

பதிவுகள்‌ 02020

9 பதிவுகள்‌ 3 சிறுகதைகள்‌ (தொகுதி மூன்று)

'ஓகே, சுர்ர்ணாஹ்‌.' அவன்‌ சொன்னமாதிரியே ர்‌ க்கு அழுத்தம்‌ கொடுத்து 'ஹ்‌' கில்‌ முடித்தேன்‌.

'அதேதான்‌, நண்பரே. அவன்‌ சந்தோசத்தில்‌ கத்தினான்‌.

'என்னவோ. அப்படியானால்‌ இந்த சுர்ர்ணாஹ்வை நீர்‌ வாசிப்பீரா?'

நான்‌ அனைத்தையும்‌ வாசிப்பேன்‌. சுர்ரணொாஹ்‌, டூடுக்‌, டாவுல்‌, டோல்‌, சுலிச்‌. எதைக்‌ கொண்டுவந்தாலும்‌ வாசிப்பேன்‌. வலது கையை மேலும்‌ கீழும்‌ பெரிதாக ஆட்டியபடி

ஆர்வமாகப்‌ பேசினான்‌. நான்‌ கனூன்‌ கூட வாசிப்பேன்‌, உமக்கு கனூன்‌ தெரியுமா?' என்றான்‌.

'இல்லை, கனூன்‌ தெரியாது. நீர்‌ ஓர்‌ இசைக்கலைஞன்‌, ஆனால்‌ உமக்கு கனூன்‌ தெரியாது, அவன்‌ தொடர்ந்தான்‌.

'இங்கே பாரும்‌. என்‌ சனங்களின்‌ சரித்திரத்தை மறைத்துவிட்டார்கள்‌. கனூன்தான்‌ உலகத்தின்‌ முதல்‌ ஹார்ப்பிஸ்கோட்‌. அதைக்‌ கண்டுபிடித்தது என்‌ சனங்கள்தான்‌.'

நான்‌ மனதுக்குள்‌, ஆர்வம்‌ குறையாத இவன்‌ அடுத்ததாக என்னத்தை தன்‌ சனங்கள்‌ கண்டுபிடித்ததாக சொல்வான்‌ என்று ஊகிக்கப்‌ பார்த்தேன்‌. என்றாலும்‌ தலையை அசைத்து ஆமோதித்தேன்‌. இந்தச்‌ சாரதியின்‌ அற்புதம்‌ வாய்ந்த ஆர்மினிய முன்னோர்கள்‌ கண்டுபிடித்த உச்சக்குரல்‌ சக்ஸ்போன்‌, முதலாவது. அவர்கள்‌ கண்டுபிடித்த ஹார்ப்பிஸ்கோட்டும்‌, முதலாவது. ஆகவே முதலாவது பியானோவைக்‌ கண்டுபிடித்ததும்‌ அவர்களே என்று ஆகிறது. என்‌ மூளையில்‌ ஒரு பொறி தட்டியது. அவன்‌ சொல்வது உண்மையில்லை. உலகத்தில்‌ பொன்‌ அல்லவா?

மன்னியுங்கள்‌. கோறா உமக்கு தெரியுமா?' நான்‌ கேட்டேன்‌.

'கோறா, இசைக்கருவியா?'

'ஆமாம்‌. ஹார்ப்லூட்‌, கீழே பெரிய குடுவையுடன்‌, இருபது தந்திகள்‌ கொண்டது. அது மேற்கு ஆப்பிரிக்காவச்‌ சேர்ந்தது.

'அதற்கென்ன?' அவன்‌ கேட்டான்‌. 'எனக்கு தெரிந்த சரித்திரத்தின்படி கோறாதான்‌ உலகத்தின்‌ முதல்‌ ஹார்ப்பிஸ்கோட்‌.

பதிவுகள்‌ 02020

10 பதிவுகள்‌ 36 சிறுகதைகள்‌ (தொகுதி மூன்று) ஆகவே அதுவே உலகத்தின்‌ முதல்‌ பியானோவும்‌' என்றேன்‌.

'இல்லை. இல்லை. இல்லை. ஆர்மினியர்களின்‌ நாகரிகத்தை தாண்டி ஒன்றுமே இல்லை, அவன்‌ கத்தினான்‌. 'எல்லோருக்கும்‌ தெரியும்‌, நாங்கள்தான்‌ முதல்‌ ஹார்ப்பிஸ்கோட்டை கண்டுபிடித்தவர்கள்‌ என்பது. ஆகவே பியானோவும்‌ எங்களுடையதுதான்‌.'

'இதில்‌ நாங்கள்‌ வித்தியாசப்படுகிறோம்‌ என்பதை ஒப்புக்கொள்வோம்‌, என்றேன்‌.

நாங்கள்‌ இப்பொழுது மான்ஹட்டன்‌ வருவதற்கு முன்பாக உள்ள கடைசி சிக்னல்‌ விளக்கில்‌ நின்றோம்‌. இது கனால்‌ தெருவையும்‌, பொவெரி தெருவையும்‌ குறுக்கறுக்கும்‌ சந்தி. என்னுடைய மறுப்பில்‌ சாரதியின்‌ உற்சாகம்‌ வற்றிவிட்டது. விழுந்துபோன முகத்துடன்‌, சிகரெட்டை மெளனமாக இழுத்து, அடுத்து என்ன பேசுவது என்ற யோசனையில்‌ ஆழ்ந்திருந்தான்‌. விளக்கு பச்சைக்கு மாறியது. அவன்‌ காரை எடுத்ததும்‌ அது துள்ளிப்‌ பாய்ந்து பக்கத்து விதியில்‌ ஓடிய இரண்டு குப்பை வண்டிகளை ஏறக்குறைய இடித்துவிட்டது. நாசமாய்ப்‌ போ என்று அவர்களைப்‌ பார்த்து இரைந்தபடியே ஓட்டினான்‌. அவன்‌ கொஞ்சநேரம்‌ தாறுமாறாக வண்டியை செலுத்தியதில்‌ இன்னொரு வேகமான காருடன்‌ மோதுவது நூலிழையில்‌ தவிர்க்கப்பட்டது. இவ்வளவுக்கும்‌ அவன்‌ என்னுடன்‌ ஒரு வார்த்தையும்‌ பரிமாறவில்லை. அதை நான்‌ வரவேற்றேன்‌. எங்கள்‌ கருத்து வேற்றுமை கடைசியில்‌ வேலை செய்துவிட்டது. எனக்கு கரைச்சல்‌ கொடுக்காமல்‌ என்னை தனியாக விட்டான்‌. நான்‌ முகத்தை திருப்பி யன்னல்‌ வழியாகத்‌ தெரிந்த மான்ஹட்டன்‌ வான விளிம்பின்‌ அழகை பருகினேன்‌. அது ஒரு ஈரப்பிடிப்பான இருள்‌ படிந்த இரவு. உலக வர்த்தக மைய கட்டிடங்கள்‌ இரண்டு எரியும்‌ வெள்ளிகள்‌ போல தெரிந்தன. நகரத்தின்‌ விளிம்பை பார்க்கும்‌ ஒவ்வொரு முறையும்‌ என்னவோ எனக்கு வெற்றியும்‌, உற்சாகமும்‌ ஏற்பட்டு, என்னுடைய அமெரிக்க இசைக்‌ கனவு நிறைவேறும்‌ என்ற நம்பிக்கை பிறக்கும்‌.

பாலத்தின்‌ நடுவில்‌ வண்டி போகும்போது சாரதி உளறினான்‌, 'உமக்கு ஆர்மினியா தெரியுமா? மறுபடியும்‌ தொடங்கிவிட்டான்‌ என்று நான்‌ நினைத்தேன்‌. சிறிது தாமதித்து 'என்ன கேட்கிறீர்‌? என்றேன்‌.

'ஆர்மினியாவைப்‌ பற்றி உமக்கு ஏதாவது தெரியுமா?

நிச்சயமாக. முந்திய சோவியத்‌ யூனியனில்‌ ஒரு பகுதி, ஜோர்ஜியாவுக்கு அருகில்‌. 'உமக்கு உலக வரைபடம்‌ நல்லாக, நல்லாக தெரியும்‌' என்றான்‌. நான்‌ ஒரு பொய்ப்‌

புன்னகையை உதிர்த்தபடி இவன்‌ இன்னும்‌ என்ன செய்யப்போகிறான்‌ என்று யோசித்தேன்‌.

பதிவுகள்‌ 02020

11 பதிவுகள்‌ 36 சிறுகதைகள்‌ (தொகுதி மூன்று)

எனக்கு தலை இடித்தது. என்‌ கண்கள்‌ சிகரெட்‌ சாம்பலிலும்‌, அவன்‌ கைகளை அசைக்கும்போதும்‌, ஊதும்போதும்‌ எழும்‌ புகையிலும்‌ எரிந்தன.

'ஆனால்‌ - ஆம்‌, ஆம்‌ - முந்திய சோவியத்‌ யூனியன்‌ என்று சொன்னது சந்தோசம்‌. இனி ஒரு போதும்‌ இல்லவே இல்லை. சற்று நிறுத்தி சிகரெட்‌ துண்டை யன்னலுக்கு வெளியே வீசினான்‌. "நூற்றாண்டுக்‌ காலங்களாக பல இன மக்கள்‌ எங்களை ஆளப்பார்த்தார்கள்‌. ஆனால்‌ நாங்கள்‌ பலமான சனங்கள்‌. நாங்களே முழு ஆசியாவின்‌, மத்திய கிழக்கின்‌ பூர்வ இனம்‌.' அவன்‌ குரல்‌ உணர்ச்சி வசப்பட்டிருந்தது.

'இங்கே பாருங்கள்‌, துருக்கியை ஸ்தாபித்தவர்‌..'

'அட்டர்ருக்‌' நான்‌ கூறினேன்‌. தற்செயலாக ௦ங்கா காப எழுதிய The Black Book என்ற புத்தகத்தை சில நாட்கள்‌ முன்புதான்‌ நான்‌ படித்து முடித்திருந்தேன்‌.

நண்பரே, உமக்கு அதிக விசயம்‌ தெரிந்திருக்கிறது. நீர்‌ ஒரு மிக மிக கெட்டிக்காரரான கறுப்பு அ...அ... அப்படியே பாதி வசனத்தில்‌ நின்றுவிட்டான்‌. பிறகு 'இசைக்கலைஞன்‌' என்றான்‌. இந்த ஆர்மினியன்‌ என்னை கெட்டிக்காரக்‌ கறுப்பன்‌ என்று அழைத்த தன்‌ மூடத்தனத்தை நினைத்துப்‌ பார்த்திருப்பான்‌ போல. எப்படி தொடருவது என்று தெரியாமல்‌ சிறிது நேரம்‌ அசெளகரியமான சிரிப்பில்‌ கழிந்தது. சில மெளனமான தருணங்கள்‌.

நீர்‌ சொன்னது சரி. ஆனால்‌ ஒரு திருத்தம்‌ உண்டு. அட்டர்ருக்தான்‌ நவீன துருக்கியின்‌ பிதா. அட்டர்ருக்குக்கு முன்பு, ஏன்‌ துருக்கிக்கு முன்பாகக்கூட நாங்கள்தான்‌ இருந்தோம்‌, ஆர்மினியர்கள்‌. ஹாமிட்தான்‌ உண்மையான ஆதி சுல்தான்‌. அவன்‌ குழறியபடி கூறினான்‌.

நான்‌ எவ்வளவு அசுவாரஸ்யம்‌ காட்டினாலும்‌ சாரதி விரிந்து கொண்டே போகும்‌ தன்‌ கதைகளை என்னிடம்‌ கூறுவதை நிறுத்துவதாகத்‌ தெரியவில்லை. பல நூற்றாண்டுகளாக அசேரியர்களும்‌, சியா துருக்கியர்களும்‌, ரஸ்யர்களும்‌ ஆர்மினியர்களை பூமியில்‌ இருந்து ஒட்டுமொத்தமாக அழிக்க முயன்றிருக்கிறார்கள்‌. ஆர்மினியர்களை இந்த ஆக்கிரமிப்புகளால்‌ அடிபணிய வைக்க முடியவில்லை. வெல்லமுடியாத ஆத்மாக்கள்‌ அவர்கள்‌. சரித்திரம்‌ ஒரு நாள்‌ மறுபடியும்‌ அவனுடைய சனங்களை வெற்றி பெறச்‌ செய்யும்‌. அவர்களை மறுபடியும்‌ அரியணை ஏற்றும்‌ - பிரபஞ்சத்தின்‌ அரியணை.

இது எல்லாம்‌ நடக்கும்போது பிரான்சிஸ்‌ பற்றி என்னால்‌ நினைக்காமல்‌ இருக்க முடியவில்லை. அவளுடைய ஒரே விருப்பம்‌ சரித்திரம்‌ செக்‌ மக்களை மறுபடியும்‌ பலமுள்ளவர்களாக ஆக்கவேண்டும்‌ என்பது. அப்படி என்றால்தான்‌ அயலில்‌ உள்ள போராசை பிடித்த நாடுகள்‌ தங்கள்‌ நாட்டுடன்‌, முந்திய ஜரோப்பிய பிணக்குகளின்‌ போது நடந்ததுபோல, செக்‌ நாட்டை இணைக்க மாட்டார்கள்‌.

பதிவுகள்‌ 02020

19 பதிவுகள்‌ 36 சிறுகதைகள்‌ (தொகுதி மூன்று)

பாலத்தை கடந்து பிளாட்புஷ்‌ தெரு வரும்போது சாரதி ஆர்மினியர்களைப்‌ பற்றிய புகழ்ப்‌ பிரசங்கத்தை ஒரு முடிவுக்கு கொண்டுவந்தான்‌. நான்‌ அவன்‌ பேசிய எல்லாவற்றையும்‌ கேட்டுக்கொண்டிருந்தேன்‌ என்ற பாவனையில்‌ தலையை அசைத்தேன்‌.

நான்‌ சொல்கிறேன்‌, நண்பரே, துருக்கியில்‌ இன்று ஒரு கலாச்சாரம்‌ இருக்குமானால்‌ அதற்கு காரணம்‌ ஆர்மினியர்கள்தான்‌. நாங்கள்‌ உண்ணும்‌ உணவை அவர்கள்‌ உண்கிறார்கள்‌. நாங்கள்‌ சமைப்பது போலவே அவர்களும்‌ சமைக்கிறார்கள்‌. எங்களைப்போலவே அவர்கள்‌ தோற்றத்திலும்‌ இருக்கிறார்கள்‌. ஆனால்‌ அவர்களுக்கு தாங்கள்‌ ஆர்மினியர்கள்தான்‌ என்பதை கேட்பதற்கு அடி ஆழத்தில்‌ விருப்பமில்லை. அந்த ஆத்மாவைக்‌ கொன்று உடம்பில்‌ இருந்து வெளியே விசவே பிரியப்படுகிறார்கள்‌. ஆனால்‌ அதை எப்படிச்‌ செய்யமுடியும்‌, நண்பரே. பெரும்‌ சிரிப்பு ஒன்றை ஆடம்பரமாகச்‌ சிரித்தான்‌.

நான்‌ தலையை ஆட்டியபடியே சொன்னேன்‌, 'ஒருக்காலும்‌ முடியாது.

நண்பரே, மிகச்‌ சரி. ஒருக்காலும்‌ முடியாது. உரத்துச்‌ சத்தமிட்டபடியே ஞாபகமறதியாக அடுத்த வரிசைக்குள்‌ நுழைந்துவிட்டான்‌. அந்த வரிசை சாரதிகள்‌ உருது, கிரியோல்‌, ஜமாய்க்கன்‌, அரபு, ஆப்பிரிக்கன்‌ என்று வசை மொழிகளை பிரவாகமாக எடுத்துவிட்டனர்‌. ஆர்மினியன்‌ ஒருவாறு சமாளித்துக்‌ கொண்டு மேலும்‌ தொடர்ந்தான்‌. 'கிரேக்கம்‌ ஒரு காலத்தில்‌ ஆர்மினியாவாக இருந்தது. ஆதிகாலத்து கிரேக்கமும்‌ அதைச்‌ சுற்றியிருந்த பிரதேசங்களும்‌ ஆர்மினியாதான்‌.

ழ்‌' நம்பமுடியாது, அல்லவா.

நான்‌ தலையசைத்தேன்‌. கார்‌ ஓட்டுவதில்‌ ஆர்மினியனின்‌ கவனம்‌ குறையக்‌ குறைய, எனக்கு வரலாறு பாடம்‌ புகட்டுவதில்‌ அவன்‌ காட்டிய ஆர்வம்‌ கூடிக்கொண்டே வந்தது. அடிக்கடி என்னை திரும்பிப்‌ பார்த்து நான்‌ செவி மடுக்கிறேனா என்பதை உறுதி செய்தான்‌.

'இரண்டாயிரம்‌ வருடங்களுக்கு முன்னர்‌ ஆப்பிரிக்காவின்‌ சூடானிலும்‌, எத்தியோப்பியாவிலும்‌ இருந்தது ஆர்மினியர்கள்தான்‌.

ஏன்‌ உலகம்‌ முழுக்க ஆர்மினியர்களால்‌ நிரம்பி வழிந்தது என்று சொல்வதற்கென்ன? நான்‌ நினைத்தேன்‌. சாரதியின்மேலும்‌, அவன்‌ சனங்களின்‌ மேலும்‌ எனக்கு ஒருவித அக்கறையும்‌ கிடையாது. கறுப்பின மக்கள்‌ பிரச்சினையில்‌ அவன்‌ ஏதாவது அக்கறை காட்டுகிறானா? அதுபோலத்தான்‌ இதுவும்‌. துருக்கியர்கள்‌ ஆர்மினியர்களை அடக்கியாண்டு துன்பப்படுத்தியதற்கும்‌, வெள்ளைக்காரர்கள்‌ கறுப்பின மக்களை அடிமைப்படுத்தியதற்கும்‌ இப்படியான மூட எண்ணமே காரணம்‌ என்று நான்‌ சொல்ல விரும்பினேன்‌.

பதிவுகள்‌ 02020

13 பதிவுகள்‌ 36 சிறுகதைகள்‌ (தொகுதி மூன்று)

ஆனால்‌ என்னால்‌ சொல்ல முடிந்ததெல்லாம்‌, 'நீர்‌ சொல்வது எனக்கு புரிகிறது. ஆனால்‌ இப்படியான மனித கொடுமைகளுக்கு ஒருத்தர்‌ என்ன செய்வது. அவன்‌ பதில்‌ சொல்லவில்லை. இந்த பயம்‌ தரும்‌ மெளனத்தை குலைக்க நான்‌ தொடர்ந்தேன்‌.

நான்‌ என்ன சொல்கிறேன்‌ என்றால்‌, பாரும்‌ அமெரிக்கா என்ன செய்தது? அமெரிக்க யப்பானியர்களைக்‌ கொடுமைப்‌ படுத்தியது. அதையே யப்பானியர்களும்‌ இரண்டாம்‌ உலக யுத்தத்தில்‌ கொரியர்களுக்கு செய்தார்கள்‌. வெள்ளைக்காரர்கள்‌ எங்களை அடிமைகளாக ஆண்ட காலத்தில்‌ செய்ததை பாருங்கள்‌. இப்பொழுது நாங்கள்‌ பேசிக்கொண்டிருக்கும்‌ இந்த தருணத்தில்‌ இஸ்ரேலியர்களும்‌ பாலஸ்தீனர்களும்‌ ஒருத்தரை ஒருத்தர்‌ கொல்கிறார்கள்‌. சேர்பியர்கள்‌ பொஸ்னியர்களைக்‌ கொல்கிறார்கள்‌. ஹ்ட்டுக்கள்‌ துட்ஸ்ியரை ஒழிக்கிறார்கள்‌. இதுதான்‌ உலக நடப்பு, இதுதான்‌ வாழ்க்கை. சாரதி திடீரென்று ஒரு வார்த்தையும்‌ உதிர்க்காமல்‌ மெளனமாகியதில்‌ கிடைத்த அசெளகரியமும்‌, நான்‌ வேறொரு போக்கில்‌ போகிறேன்‌ என்ற உணர்வும்‌ என்னை மேலே பேசவிடாமல்‌ நிறுத்தியது. அவனைப்‌ பார்த்தபோது அவன்‌ நான்‌ சொன்ன ஒவ்வொரு வார்த்தையையும்‌ ஆழமாக யோசிப்பவன்போல காணப்பட்டான்‌. கடைக்கண்ணால்‌ என்னைப்‌ பார்த்துவிட்டு ஆர்மினியன்‌ மறுபடியும்‌ தொடங்கினான்‌. நண்பரே, நீர்‌ முக்கியமான பல விடயங்களை சொன்னீர்‌. ஆனால்‌ அதில்‌ அதிமுக்கியம்‌ வாய்ந்த வாக்கியம்‌ 'ஒருத்தர்‌ என்ன செய்யமுடியும்‌?' என்பது.

' உண்மைதான்‌. இந்த நாட்டைப்‌ பாருங்கள்‌. கறுப்பின மக்கள்‌ தாங்கள்‌ அனுபவித்த கொடுமைகளுக்கு இழப்ப்டு கேட்கும்போது வெள்ளையாட்கள்‌ 'மறந்துவிடு' என்கிறார்கள்‌. உண்மை சிலவேளைகளில்‌ கொடூரமானது. கடினமான வாழ்க்கையை அனுபவித்துத்தான்‌ தீர்க்கவேண்டும்‌ என்று அவர்கள்‌ கூறுகிறார்கள்‌, நான்‌ சொன்னேன்‌.

நான்‌ இப்படி உணர்ச்சி வசப்பட்டது எனக்கே ஆச்சரியமாக இருந்தது.

நண்பரே நீங்கள்‌ சொல்வது எனக்கு புரிகிறது, சாரதி மறுபடியும்‌ தொடங்கினான்‌. காரை வேகம்‌ குறைத்து என்னுடைய தெருவுக்குள்‌ இடப்பக்கமாகத்‌ திருப்ப ஆயத்தப்‌ படுத்தினான்‌. 'நீங்கள்‌ சொல்கிறீர்கள்‌ மனிதர்கள்‌ எப்பொழுதும்‌ இன்னொரு மனிதரை வதைப்பார்கள்‌; சில சமயம்‌ கொல்லக்கூடச்‌ செய்வார்கள்‌ என்று. நான்‌ ஒர்‌ உதாரணம்‌ சொல்வேன்‌. காடுகளில்‌ புலியானது சிங்கத்தையோ, சிறுத்தையையோ உணவுக்காக தாக்காது. அது எப்பவும்‌ வலிமையில்லாத, தன்னை பாதுகாக்க தெரியாத

இன்னொரு மிருகத்தைத்தான்‌ தாக்கும்‌. வலிமை குறைந்த மிருகம்‌ பலமுள்ளதாக மாறினால்‌ அல்லது சண்டைபோட்டால்‌ ஒழிய புலி எப்பொழுதும்‌ அதையே சாப்பிடும்‌. வாழ்க்கையிலும்‌ அப்படியே. சில மனிதர்‌ எப்பொழுதும்‌ இன்னொருத்தரை விழுங்கியபடியே இருப்பார்கள்‌. நீங்கள்‌ செய்யவேண்டியது, மற்றவர்கள்‌ சாப்பிடுவது நீங்களாக இல்லாமல்‌ பார்த்துக்கொள்வது.' சாரதி சொன்னதை நான்‌ அசை போட்டுக்கொண்டு இருக்கும்போது அவன்‌ மறுபடியும்‌ தொடங்கினான்‌.

பதிவுகள்‌ 02020

14 பதிவுகள்‌ 36 சிறுகதைகள்‌ (தொகுதி மூன்று

'ஆர்மினியன்‌ சனங்களுக்கு இழைக்கப்பட்ட இன்னல்கள்‌ போன்று இனிமேல்‌ ஒன்று நடக்க நாங்கள்‌ விடமாட்டோம்‌. எங்கள்‌ எதிர்காலத்தை நாங்களே தீர்மானிப்பதற்கு குரல்‌ எழுப்புவோம்‌. ஆனால்‌ நண்பரே, கறுப்பர்களான உங்கள்‌ பிரச்சினை அதுதான்‌.

'எப்படி?' நான்‌ கேட்டேன்‌.

'ரனென்றால்‌ நீங்கள்‌ மெளனமாக இருக்கிறீர்கள்‌; ஏனென்றால்‌ போராடுவதை நிறுத்திவிட்டீர்கள்‌. ஏனென்றால்‌ உங்களுக்கு பசியில்லை. ஏனென்றால்‌ நீங்கள்‌ மன்னிக்கிறீர்கள்‌. ஆனால்‌ அது பெரிய பிழை. நீங்கள்‌ எச்சரிக்கையாக இல்லாவிட்டால்‌ மறுபடியும்‌ அவர்கள்‌ உங்களை சாப்பிட்டு விடுவார்கள்‌.

சாரதி கட்டியெழுப்பிய வாதத்தை தகர்க்க திட்டமிட்டு நான்‌ இப்படி கூற நினைத்தேன்‌. யார்‌ யாரை ஆண்டாலும்‌ இறுதியில்‌ மனிதர்கள்‌ வரலாற்றின்‌ கைப்பொம்மைகளே. ஒரு கழுதையில்‌ தங்க நாணயங்களை ஏற்றி வந்து பொதியை

இறக்கிவைத்துவிட்டு கழுதையை விரட்டுவதுபோலத்தான்‌ வரலாறும்‌ எங்களை நடத்தும்‌. ஆனால்‌ அதை நான்‌ கூறவில்லை. சாரதி கடைசியாக சொன்ன வார்த்தையில்‌ சிறிது என்னுடைய இன மக்கள்‌ பற்றிய உண்மையும்‌ இருந்ததால்‌ மெளனம்‌ சாதித்தேன்‌. நான்‌ யன்னல்‌ வழியாகப்‌ பார்த்தபோது எங்கள்‌ கட்டிடத்துக்கு வந்துவிட்டிருந்தோம்‌. கட்டிட நம்பர்‌ 823' என்றேன்‌.

'இடமோ, வலமோ?'

'வலது பக்கம்‌, கடைசி.

பிரச்சினை இல்லை, நண்பரே. ஆனால்‌ நான்‌ ஒன்று கேட்கவேண்டும்‌.

'ஓகே.'

காரை வாசலில்‌ நிற்பாட்டும்போது அவன்‌ கேட்டான்‌, 'சரத்துஸ்ற்றா பற்றிக்‌ கேள்விப்பட்டிருக்கிறீர்களா?' அப்படியே திரும்பி என்னைப்‌ பார்த்தான்‌. மிக சமீபமாக இருந்தபடியால்‌ அவன்‌ மூக்கில்‌ இருந்து வெளிப்பட்ட காற்று என்‌ நெற்றியில்‌ அடித்தது.

நாசமாய்ப்‌ போச்சு.

நான்‌ நீட்சேயின்‌ ரhப5 Spake Zarathusta வையும்‌, இன்னும்‌ ஆதி புராண இறைதூதர்‌ பற்றிய இலக்கியத்தையும்‌ என்னுடைய பல்கலைக்‌ கழக பழைய கிரேக்க தத்துவ பாட வகுப்பில்‌

பதிவுகள்‌ 02020

15 பதிவுகள்‌ 36 சிறுகதைகள்‌ (தொகுதி மூன்று)

கற்றிருந்தேன்‌. ஆனால்‌ அவரிடம்‌ 'இல்லை' என்றேன்‌. 'கடவுள்‌ என்பவருக்கு முன்பு வந்த அஹ்ரா மஸ்டா தான்‌ முதற்‌ கடவுள்‌. அவருடைய தூதர்தான்‌ 'சரத்துஸ்ற்றா, என்றான்‌.

நான்‌ தலையை அசைத்தேன்‌. 'ஆர்மினியர்களாகிய நாங்கள்‌ இன்றும்‌ அஹ்ரா மஸ்டாவையும்‌, அவருடைய தூதரான சரத்துஸ்ற்றாவையும்‌ வணங்குகிறோம்‌. அவர்‌ காக்கசஸ்‌ மலைப்பகுதியை சேர்ந்தவர்‌, ஆகவே நாங்கள்‌...' என்‌ எதிர்பார்ப்பைக்‌ கூட்டுவதற்காக நிறுத்தி என்னைப்‌ பார்த்துவிட்டு மீண்டும்‌ தொடர்ந்தான்‌. 'ஆர்மினியர்கள்தான்‌ உண்மையான காக்கசஸ்காரர்கள்‌, ஆகவே நாங்களே உண்மையான ஆரியர்‌. அவனுடைய தொனியில்‌ வெற்றி ஒலித்தது.

சாரதி எப்படி சரத்துஸ்ற்றாவில்‌ ஆரம்பித்து, அவர்கள்‌ கடவுளான அஹ்ரா மஸ்டாவிடம்‌ சென்று அதிலிருந்து தொன்மையான காக்கசஸ்‌ ஆர்மினியர்கள்தான்‌ ஆரியர்கள்‌ என்ற விடயத்தை கண்டுபிடித்தான்‌ என்பது எனக்கு புரியவே இல்லை. ஆனாலும்‌ நான்‌ ஏதாவது சொல்லப்போய்‌ அது மீண்டும்‌ அவனை தூண்டிவிடும்‌ என்ற பயத்தில்‌ வாய்‌ பொத்தியிருந்தேன்‌. திடீரென்று அவன்‌ சிந்தனையிலும்‌, மெளனத்திலும்‌ ஆழ்ந்துவிட்டான்‌; அவனுடைய ஒலிவ்‌ நிற நெற்றித்‌ தோல்‌ வாய்க்கால்போல சுருங்கியிருந்தது. ஒரு சில செக்கண்டுகள்‌ அவனிடம்‌ இருந்து ஒரு வார்த்தையும்‌ பெயரவில்லை. நான்‌ இருக்கையில்‌ அடித்து வைத்ததுபோல அமர்ந்திருந்தேன்‌. ஒரு சிரிப்புடன்‌ இருக்கைக்கு கீழே குனிந்து மெதுவாக திறப்பானை இழுத்தான்‌; ட்ரங்‌ கதவு பட்டென்று திறந்தது. நான்‌ சவாரிக்‌ கணக்கை தீர்ப்பதற்கு பணப்பையை எடுத்தேன்‌. ஆனால்‌ அந்த ஆர்மினியன்‌ என்னுடைய மணிக்கட்டைப்‌ பிடித்து, கண்களை நேராக நோக்கியபடி 'கவலையை விடுங்கள்‌, நண்பரே, பணம்‌ வேண்டாம்‌' என்றான்‌. அவனுடைய சிரிப்பு பிரகாசித்து வரிசையான பற்களை - சிகரெட்‌ கறை ஒன்றே குறை - காட்டியது.

'நிசமாகவா.'

'நிசமாக,' அவன்‌ தொடர்ந்து சிரித்தான்‌.

அந்த செய்கையில்‌ நான்‌ அசெளகரியமாக உணர்ந்தேன்‌. எனக்கு காரைவிட்டு வெளியேறுவது அவசரம்‌. நான்‌ தலையைக்‌ குனிந்து 'நன்றி' என்றேன்‌. அவன்‌ ஒரு ரசீது அச்சடித்து கொடுத்தான்‌. 'உங்கள்‌ வருமானவரிக்கு உதவும்‌.

'இதை செய்திருக்கவேண்டிய தேவை இல்லை, என்றேன்‌.

'ஒரு கலைஞருக்கு என்னாலான சிறு உதவி.

என்னவாயினும்‌.ஓட்டு வளையத்தில்‌ நெஞ்சு படுத்திருக்க, அந்த ஆர்மினியன்‌ காரின்‌ உள்‌

பதிவுகள்‌ 02020

16 பதிவுகள்‌ 36 சிறுகதைகள்‌ (தொகுதி மூன்று)

அறையில்‌ எதையோ தேடினான்‌. சிறிது நேரத்தில்‌ அவன்‌ தன்‌ முகவரி அட்டையை கண்டுபிடித்து எடுத்து என்னிடம்‌ கொடுத்து 'எப்பொழுது வேண்டுமானாலும்‌ என்னைக்‌ கூப்பிடுங்கள்‌ என்றான்‌. அவன்‌ கண்கள்‌ மிருதுவாகி கலங்கியிருந்தன.

'நன்றி' என்று சொல்லி அட்டையைப்‌ பெற்றுக்கொண்டேன்‌. அதில்‌ 'சார்கிஸ்‌' என்று பேர்‌ மட்டுமே எழுதியிருந்தது.

நண்பரே, பிரச்சினையில்லை. ஆர்மினியாவில்‌ வணக்கம்‌ கூறும்போது நாங்கள்‌ 'சானெட்‌ ரானெம்‌' என்று சொல்வோம்‌. ஆகவே நான்‌ உங்களுக்கு கூறுகிறேன்‌ 'சானெட்‌ ரானெம்‌..

எனக்கு அடுத்து என்ன செய்வதென்று தெரியவில்லை. ஆனால்‌ என்‌ உள்ளுணர்வு காரைவிட்டு சீக்கிரம்‌ இறங்கச்‌ சொன்னது. நான்‌ இடம்‌ பெயர முன்னர்‌ சார்கிஸ்‌ கேட்டான்‌, 'சானெட்‌ ரானெம்‌' என்றால்‌ என்ன பொருள்‌ என்று தெரியுமா?

'இல்லை' நான்‌ வியப்படைந்திருந்தேன்‌. 'சானெட்‌ ரானெம்‌' என்றால்‌ என்னவென்று எனக்கு எப்படித்‌ தெரியக்கூடும்‌.

அவன்‌ சொன்னான்‌, 'சானெட்‌ ரானெம்‌' என்றால்‌ 'உன்‌ வேதனைகளை நான்‌ எடுத்துக்‌ கொள்கிறேன்‌.

அந்த மனிதன்‌ சொன்ன வார்த்தைகளின்‌ ஆழத்தை உணருவதற்கு எனக்கு சில விநாடிகள்‌ பிடித்தன. நான்‌ கையை நீட்டினேன்‌. அவன்‌ அதை ஒரு ஜந்து செக்கண்டுகள்‌ விடாமல்‌ பிடித்தபடி என்‌ கண்களை உற்று நோக்கினான்‌. எனக்கு அவனின்மேல்‌

பரிவு உண்டாகியது. தன்‌ சனங்களின்‌ கனத்த வரலாற்றை தன்‌ இருதயத்திலும்‌, ஆத்மாவிலும்‌ காவித்‌ திரியும்‌ ஒருவனின்‌ வாழ்க்கை எப்படி இருந்திருக்கும்‌ என்று யோசித்துப்‌ பார்த்தேன்‌. ஒரு நோய்ப்‌ பறவையை போசித்து, இறகுகளை மீண்டும்‌ வலியதாக முளைக்க வைத்து, ஆகாயத்தை இன்னொரு முறை துளாவிப்‌ பறக்கச்‌ செய்வதற்கு அவன்‌ முயல்வதுபோல அந்த செய்கை இருந்தது. சாரதி என்‌ கையை விட்டான்‌. அவன்‌ தன்‌ பேரைச்‌ சொன்னதுபோல நான்‌ என்‌ பேரைச்‌ சொல்லவில்லை என்பது நினைவுக்கு வந்தது. ஆனால்‌ ஒரு காலை தரையிலே ஊன்றியபடி அந்தச்‌ சமயம்‌ சார்க்கிசுக்கு நான்‌ சொல்லவேண்டியது ஒன்றுதான்‌ இருந்தது. நான்‌ அவருடைய கண்களைப்‌ பார்த்தேன்‌. திடீரென்று ஏற்பட்ட மரியாதையுடன்‌ சொன்னேன்‌, 'உம்முடைய வேதனையை நானும்‌ எடுத்துக்கொள்கிறேன்‌.'

அ.முத்துலிங்கம்‌ amuttu@gmail.com பதிவுகள்‌, யூன்‌ 2006 இதழ்‌ 78

பதிவுகள்‌ 02020

17 பதிவுகள்‌ 36 சிறுகதைகள்‌ (தொகுதி மூன்று)

2. உற்றுழி - கமலாதேவி அரவிந்தன்‌ (சிங்கப்பூற்‌) -

எழுந்ததிலிருந்தே தலை முணுமுணுவென்று வலிக்கத்‌ தொடங்கியது., மின்னல்‌ வேகத்தில்‌ ,தினசரி வேலைகளைப்‌ பார்த்துக்கொண்டிருக்க, காலை பத்து மணிக்கு ஒரு தொலை பேசி அழைப்பு. ஆச்சரியம்‌ இம்மட்டு அம்மட்டல்ல. குறிப்பிட்ட எழுத்தாளினி சிங்கை வந்துள்ளாரா?. இப்போது சிங்கப்பூரில்‌ எந்த இலக்கிய நிகழ்வுமே இல்லையே என்று இவள்‌ யோசிக்க, அவரே விஷயத்தை விண்டுரைத்தார்‌. அட! அவரது அண்ணா பொண்ணு சிங்கையிலிருப்பது இப்போதுதான்‌ இவளுக்கும்‌ கூட நினைவுக்கு வந்தது. ஆமாம்‌, , திடீரென்று இவருக்கு எப்படி, என்‌ ஞாபகம்‌? என்று இவள்‌ மனதுக்குள்‌ வியக்க,

நாலு நாளாகவே உன்னுடைய பெயர்‌ தானே வானொலியில்‌ முழங்கிக்‌ கொண்டிருக்கிறது? ஆமாம்‌, நீ நாடகங்களெல்லாம்‌ கூட எழுதுவாயா?' என்று கேட்க ஏனோ சிரிப்பு வந்தது.” வரும்‌ ஞாயிறன்று சிங்கையின்‌ தேசியதின சிறப்பு நாடகம்‌ ஒலியேற இருப்பதற்கான விளம்பரம்‌ ஓடிக்கொண்டிருந்தது.

எழுத்தாளர்களுக்கு சிங்கை வானொலி இந்த மகிழ்வை, சீரும்‌ சிறப்புமாக நிறைவேற்றிக்‌ கொண்டிருப்பதை மறுப்பதற்கில்லை. ஆக இன்றிரவு டின்னருக்கு அவரை அழைத்துப்‌ போக வேண்டும்‌.வீட்டுக்கு வந்தால்‌, அவியல்‌, ஓலன்‌, காலன்‌, பிரதமன்‌,

பப்படம்‌ என , பிரமாத விருந்தே கொடுக்கலாம்‌. ஆனால்‌ சைவ உணவே அவருக்கு ஆகாதாம்‌, 'என்னை எங்காவது வெளியில்‌ அழைத்துப்போ என்று உரிமையோடு அவர்‌ அன்புக்கட்டளை இட, பிறகுதான்‌ தொடங்கியது சிக்கல்‌. அசைவம்‌ என்பதால்‌ எங்கு அழைத்துப்போக? கணவரிடம்‌ கேட்க, அவருக்கு வந்த எரிச்சல்‌?

”அது என்ன , நின்டெ இலக்கியத்தோழிகள்‌ யாருக்குமே விட்டு சாப்பாடே பிடிக்காதா?” என்று சீறினாலும்‌ , ரெஸ்டாரெண்ட்‌ டின்‌ முகவரி தந்து, இருவருக்குமான சீட்‌: டும்‌ புக்‌ செய்து உதவியவர்‌ கணவரே. தோழியை அழைத்து முகவரி சொல்லி, குறிப்பிட்ட ரெஸ்டாரெண்டுக்கு வர முடியுமா? , என்று கேட்க, இவள்‌ எதிர்பார்த்தாற்போலவே, "அதெல்லாம்‌ முடியாது! நீ வந்து என்னை இட்டுச்செல்‌! என்று மீண்டும்‌ அன்புக்‌ கட்டளை. இவள்‌ இருப்பது ஒரு கோடி, தோழி இருப்பது மறு கோடி, ரெஸ்டாரெண்டோ இன்னொரு கோடியில்‌,! என்ன செய்ய? அன்புக்கு முன்னே, நேசத்துக்கு முன்னே, இதெல்லாம்‌ பார்த்தால்‌ ஆகுமா? விருந்தோம்பல்‌ என்பதே மனசு நிறைந்து , சந்தோஷத்தோடு ஸ்விகரித்தல்‌ தானே?

இனி இந்த இலக்கியத்தோழி பற்றி--இவர்‌ குறிப்பிட்ட வேற்று மொழியில்‌ ,முத்திரை பதித்த எழுத்தாளர்‌. முற்போக்கு சிந்தனையாளினி. .எழுத்தில்‌ மட்டுமல்ல, வாழ்க்கையிலும்‌ கூட முற்போக்காகவே வாழ்ந்து வருபவர்‌.அதையே மேடையிலும்‌ முழங்கியபோது ஆச்சரியமாக இருந்தது.இப்படியெல்லாம்‌ கூட வாழ முடியுமா? என்பதே இவளுக்கு

பதிவுகள்‌ 02020

18 பதிவுகள்‌ 36 சிறுகதைகள்‌ (தொகுதி மூன்று)

அதிசயமாக இருந்தது. முதன்‌ முதலாக இலக்கிய நிகழ்வுக்கு சிங்கை வந்த போதே, அவரை பேட்டி எடுக்க வேண்டுமென்று ,மிகவும்‌ ஆசைப்பட்டாள்‌. ஆனால்‌,அன்போடு பேசப்போன மூத்த எழுத்தாளர்‌ ஒருவரை,ஓட்டும்‌ மரியாதை இன்றி,நக்கலாக அவர்‌ பேசியதை , ஜீரணிக்க முடியவில்லை.அவருடன்‌ நிகழ்வுக்கு அழைக்கப்பட்ட சக எழுத்தாளரையும்‌ ”,நீ,, டா! என்றே அழைத்துப்பேசிய ஸ்டைலும்‌

ஹூம்‌,---அன்று ஏனோ இவள்‌ பேட்டி எடுக்கவில்லை.

எழுத்தாளினி இவளை விட வயதில்‌ எவ்வளவோ மூத்தவர்‌.நரைத்த தலையும்‌ பழுத்த அனுபவமுமாய்‌, மேடையில்‌ பிட்டுப்‌ பிட்டு வைத்த அவரது கூர்மையை பலராலும்‌ ரசிக்க முடியவில்லை... ஆனாலும்‌ அவரது எழுத்துக்கள்‌ இவளுக்குப்‌ பிடிக்கும்‌.எந்தப்‌ பெண்‌ எழுத்தாளரும்‌ தொடத்‌ தயங்கும்‌, நிலவரங்களை, அவர்‌ துணிகரமாகவே எழுதியுள்ளார்‌.அவரோடு தீவிர இலக்கியம்‌ பேசும்‌ ஆர்வம்‌ இவளுக்கு இருந்தது. எழுத்தாளினியின்‌ விட்டு வாசலில்‌ காலிங்பெல்லை அழுத்தியபோது,யாரோ

ஒரு முதிர்‌ பெண்மணி தான்‌ வந்து கதவைத்திறந்தார்‌..

எழுத்தாளினி சோபாவில்‌ அலுங்கிய கூந்தலும்‌, கசங்கிய உடையுமாக, அனந்த பத்மனாபன்‌ சயனித்திருப்பதுபோல்‌ படுத்துக்கொண்டு, தொலைக்காட்சி பார்த்துக்‌ கொண்டிருந்தார்‌.வருகிறேன்‌ என்று நேரம்‌ குறிப்பிட்டும்‌ கூட அவரது அசமந்தம்‌ புரியவில்லை. வந்தாயா! என்று சிரித்துக்கொண்டே அறைக்குள்‌ ஓடியவர்‌, அடுத்த பத்து நிமிஷத்துக்குள்‌, வெளியே வந்தபோது , அவருடன்‌ வாசல்‌ கதவைத்‌ திறந்த முதிர்‌ பெண்மணியும்‌ அலங்கரித்துக்கொண்டு வந்தார்‌.

*இவர்‌ தோழி மலர்‌சிங்கப்பூருக்கு வருகிறேனென்று தெரிந்தவுடன்‌ , இவரும்‌ சிங்கப்பூர்‌ சுற்றிப்‌ பார்க்கவேண்டுமென்று, என்னுடன்‌ வந்து விட்டார்‌”, என்னை விட்டு ஒரு நிமிஷம்‌ கூட பிரிந்திருக்க மாட்டார்‌! என்ன மலர்‌ “என்று கேட்க, மலர்‌ அம்மா, உடனே கண்‌ சிமிட்டி சிரித்தார்‌.இவள்‌ ரெஸ்டாரெண்டில்‌ புக்‌ செய்தது இரண்டு பேருக்கு மட்டுமே.இனி மலர்‌ அம்மாவுக்காக, திரும்ப அழைக்கவேண்டும்‌. அவளுக்கு ஆயாஸமாக இருந்தது.தலைவலி இப்பொழுது உச்சத்தில்‌ இருந்தது.உடம்பெல்லாம்‌ சிலிர்த்து, சிலிர்த்து, வந்தது. அந்த வட்டாரத்தில்‌ 'டேக்சி' கிட்டுவதே பெரும்‌ பாடாக இருந்தது.ப்க்‌ அவர்‌ வேறு.முக்கால்‌ மணிநேரம்‌ காத்திருந்து, ஒரு வழியாய்‌ 'டேக்சி' கிட்ட, டேக்சியினுள்‌ ஏறியபோது, கை காலெல்லாம்‌ முறுக்கி முறுக்கி வலித்தது.

எழுத்தாளினியும்‌ ,தோழியும்‌, இவளைப்பற்றி, துளியும்‌ பொருட்படுத்தாமல்‌, அவர்களுக்குள்ளாகவே, இந்தியில்‌ பேசிக்கொள்ளத்‌ தொடங்கினார்கள்‌. 'ரெஸ்டாரெண்டி'னுள்‌ நுழைந்ததும்‌ அதுவரை கலகலப்பாகப்‌ பேசிக்கொண்டிருந்த , மலர்‌ அம்மாவின்‌ முகம்‌ சட்டென்று மாறிவிட்டது. மெனுகார்டை நீட்டியபோதும்‌ அவர்‌ முகம்‌ மலரவில்லை. இருவரும்‌ குசு குசுவென்று பேசிக்கொள்வதும்‌, இவளை ஏறிட்டுப்‌ பார்ப்பதுமாய்‌,சில

பதிவுகள்‌ 02020

19 பதிவுகள்‌ 36 சிறுகதைகள்‌ (தொகுதி மூன்று) நிமிஷங்கள்‌ ஓடியபிறகு,மலர்‌ அம்மா பளிச்சென்று கேட்டார்‌.

“இங்கு லிக்கர்‌ கிட்டுமா? இந்த ரெஸ்டாரெண்டைப்‌ பார்த்தால்‌ அப்படித்தோணலியே?" ஒரு கணம்‌ திகைத்துப்போனாள்‌.சிங்கையின்‌ மிகப்‌ பிரபலமான , ரெஸ்டாரெண்ட்‌ இது.ஆனால்‌ 'லிக்கர்‌' கிட்டுமா என்று இவளுக்கும்‌ தெரியவில்லை. பெண்கள்‌ மது அருந்துவதொன்றும்‌ சிதம்பர ரஹஸ்யமல்ல, என்றாலும்‌ இவளுக்கு சிரமமுண்டு. மது அருந்துபவர்களோடு இவளால்‌ சரளமாக பேச முடியாது. மதுவின்‌ நெடியும்‌, அசைவ உணவின்‌ வாடையும்‌, இவளது நாசிக்கு ,அடிவயிற்றுப்‌ புரட்டலை கொடுத்துவிடும்‌. கணவர்‌ உடன்‌ வந்தால்‌ பிரச்சினையே இல்லை.சில வருடங்களுக்கு முன்னர்‌ வரை கூட கணவர்‌ இவளுக்குத்‌ துணை வந்திருக்கிறார்‌. சில அநுபவங்களுக்குப்‌ பிறகு, எந்த ஜபதர்ஸ்து வந்தாலும்‌ கணவர்‌ வரமாட்டார்‌,.இவளையும்‌ அனுப்பமாட்டார்‌. ஆனால்‌ பெண்கள்‌ அவர்களாக தொலைபேசியில்‌ அழைத்துக்கேட்கும்போது இவளால்‌ மறுக்க முடிவதில்லை. திட்டிக்கொண்டே தான்‌ கணவர்‌ அனுப்பி வைப்பார்‌. அவர்‌ பயந்தது போலவே, இன்றும்‌ ஒரு அதிர்ச்சி.

எழுத்தாளினி கேட்டார்‌. சிங்கப்பூரில்‌ வாழ்ந்து கொண்டு நீ இதுவரை ஒரு முறைகூட 'பப்‌*புக்குப்‌ போனதே யில்லையா?”

இல்லை"

“பிறகு என்னதான்‌ நீ எழுதிக்‌ கிழிக்கிறாய்‌?' என்று கேட்டு அவர்‌ சிரிக்க, மலர்‌ அம்மாவும்‌ குபுக்கென்று சிரித்தார்‌.

கோபம்‌ வந்தது.. இலக்கியத்துக்கும்‌ மதுவுக்கும்‌ என்ன சம்பந்தம்‌? மது அருந்துபவர்களால்‌ மட்டும்‌ தான்‌ இலக்கியம்‌ படைக்க முடியுமா? என்றெல்லாம்‌ கேட்க நினைத்து, இயலாது, வேறு வழியின்றி, பேரரை அழைக்க, உடனே இருவரும்‌ அவர்களுக்கு வேண்டிய பிராண்டைச்‌ சொல்ல, அடுத்த பத்தாவது நிமிஷம்‌, குப்பிகளும்‌, குமிழ்‌ நீண்ட கிளாஸ்களும்‌, மேஜையில்‌ வந்தமர்ந்தது. கூடவே அவர்கள்‌ ஆர்டர்‌ செய்த, இறால்‌, சிலி க்ராப்நண்டு], பட்டர்‌ சிக்கன்‌, பைனேப்பிள்‌ ரைஸ்‌,ரயித்தா,என, உணவு

அயிட்டங்களும்‌ வந்து சேர அவர்கள்‌ , தொடங்கினார்கள்‌. பாட்டிலைத்‌ திறந்த லாவகமும்‌,அளவாய்‌ ஊற்றி, அழகாய்‌ ஐஸ்‌ துண்டங்களை மிதக்கவிட்டு, பொன்‌ போல்‌ , அதை அவர்கள்‌ ரசித்துக்குடித்த அழகும்‌, தேர்ந்த அனுபவமென்பதை அவளுக்கு விளக்கியது. பெண்களுக்கு இதில்‌ இவ்வளவு இன்பமிருப்பதை, ,இன்றுதான்‌ இவ்வளவு அருகில்‌ வைத்துப்‌ பார்க்கிறாள்‌. இரண்டாவது ரவுண்டில்‌ எழுத்தாளினி பிரகாசமானார்‌. மலர்‌ அம்மா நண்டைக்குத்தி, முள்கரண்டியால்‌ சதையைப்‌ பொங்கப்‌ பொங்க, வாயில்‌ போட்டுக்கொண்டு *வெரி டெலிஷியஸ்‌' என்றார்‌.எழுத்தாளினி இறாலின்‌ தொலியைக்கூட எடுக்காமல்‌,

பதிவுகள்‌ 02020

20 பதிவுகள்‌ 36 சிறுகதைகள்‌ (தொகுதி மூன்று

அப்படியே வாயில்‌ வைத்து லாவகமாய்‌ ,சதையை மட்டும்‌ சாப்பிட்டுவிட்டு, தோலை பிளேட்டில்‌ உமிழ்ந்தார்‌.

இவளுக்கு குப்பென்று உடல்‌ சுட்டது. காய்ச்சல்‌ வரும்‌ போல்‌ உடம்பு முழுக்க வலித்தது. ஒவ்வொரு முறை அவர்கள்‌ குமிழ்கிளாசை நிரப்பும்‌ போதும்‌,வெறும்‌ ஆரஞ்சு ஜூஸ்‌ மட்டும்‌ வைத்துக்கொண்டு உட்கார்ந்திருந்த இவளின்‌ கிளாஸிலும்‌ ஜஸ்‌

துண்டங்களைப்‌ போட்டு விட்டார்கள்‌. வேண்டாம்‌, என்று சொன்னால்‌ எங்கே இவளை மட்டமாக நினைத்துக்கொள்வார்களோ என்ற பயத்தில்‌ வாயைத்‌ திறக்கவில்லை. ஏற்கனவே உடல்‌ முடியாமலிருக்க, ஜஸ்‌ ஆரஞ்சைஅப்படியே குடிக்க முடியாமல்‌, துளிதுளியாக, ஸ்ட்ராவினால்‌ நாவில்‌ தொட்டுக்கொண்டிருந்தாள்‌..மலர்‌ அம்மா திடீரென்று பெங்களூரில்‌ பப்புக்குச்‌ சென்ற பெண்களை அடித்த ஆண்களை காரசாரமாகத்‌ திட்டினாள்‌. உடனே எழுத்தாளினி,ஓட்டு மொத்த ஆண்வர்க்கத்தையே சாடினார்‌.

அவர்கள்‌ வெகு உக்கிரமாக பேசத்‌ தொடங்கினார்கள்‌.இந்த ஆண்வர்க்கம்‌ பெண்களை எப்படியெல்லாம்‌ கொடுமைப்‌ படுத்துகிறது, என்பதை பட்டியலிடத்‌ தொடங்கினார்கள்‌. அவன்கள்‌ குடித்துவிட்டு, நடுரோட்டில்‌ அதைகாட்டிக்கொண்டுமல்லாந்து கிடப்பானாம்‌. ஆனால்‌ பெண்கள்‌ குடிப்பதைக்கண்டால்‌ மட்டும்‌ அவன்களுக்கு அங்கே விறைத்துக்கொள்ளுமாம்‌.

-அங்கேயே மிதிக்கணும்‌ அவன்களை”,இது மலர்‌ அம்மா!

”ஆனால்‌ ஆண்களையும்‌ மட்டும்‌ சொன்னாலும்‌ போதாது.அவன்களுக்குத்‌ துணி துவைத்து, வீடு கூட்டி, சமைத்துப்போட்டு, அவனுக்குத்‌ தேவைப்படும்‌ போதெல்லாம்‌ படுத்துக்கொண்டு,அதனால்‌ வரும்‌ கருமத்தையும்‌,சுமந்து, பெற்றுப்போட்டு, அவன்கள்‌ கையால்‌ அடிவாங்கியும்‌, மொத்துப்பட்டும்‌ வாழ்வதுதான்‌ பத்தினி தர்மம்‌, என்று வாழ்கிறார்களே, அந்த முதுகெலும்பில்லாத பெண்களை முதலில்‌ கட்டி வச்சு உதைக்கணும்‌.”அடுத்து காது பொத்தும்‌ நாராச வார்த்தைகள்‌,ப்ய்ச்சியடிக்க, இவளுக்கு குமட்டிக்கொண்டு வந்தது.நாவெல்லாம்‌ கசந்து வழிந்தது. தலை குத்தி குத்தி வலித்தது.

ஒரு நாளாவது, எந்த பயலாவது, பெண்ணுக்கு சமைத்துப்போட்டு,அவளை உட்கார்த்தி வைத்து சந்தோஷப்படுத்தியிருக்கானா?அவளுக்குப்‌ பிடித்தது என்ன என்று கேட்டு, அவளுக்காக தன்னை மாற்றிக்‌ கொண்டதாக சரித்திரம்‌ உண்டா? சமுதாய சீர்கேடுகளிலேயே பெண்களின்‌ கொத்தடிமைத்‌ தனத்தைத்தான்‌ முதலில்‌ மாற்ற வேண்டும்‌.”

"அடித்தால்‌ அவன்களை திருப்பி அடிக்க வேண்டும்‌.” இந்த ரீதியில்‌ போய்க்கொண்டிருந்தது பேச்சு,! ஹாவென்று பிரமித்துப்போய்‌ அவர்கள்‌ பேச்சைக்கேட்டுக்கொண்டிருந்தாள்‌ இவள்‌.

பதிவுகள்‌ 02020

31 பதிவுகள்‌ 36 சிறுகதைகள்‌ (தொகுதி மூன்று)

இந்த இரண்டு பெண்களு மே,வாழ்க்கையால்‌, அனுபவத்தால்‌,வயதால்‌

கூட, எவ்வளவோ முதிர்ந்தவர்கள்‌. எல்லாவற்றுக்கும்‌ மேலாக எழுத்தாளினி எவ்வளவோ அனுபவக்கதைகளை எழுதியவர்‌.இவர்கள்‌ சொல்வதுதான்‌ சரியோ, என்று இவளுக்கே கூட, ஒரு கணம்‌ தோன்றிவிட்டது. ஒரு நாளாவது கணவர்‌ சமையல்‌ கட்டுக்கு

வந்திருப்பாரா? கணவர்‌ என்றல்ல, இவர்கள்‌ வம்சத்து ஆண்களுக்கே சமையல்‌ தெரியுமா என்பதே சம்சயம்‌ தான்‌. காய்ச்சல்‌ வேகத்தில்‌ கண்கள்‌ நிரம்பி ,நிரம்பி வந்தது.சுய பச்சாதாபத்தில்‌ இவளுக்கு அழுகை வந்தது.

எழுத்தாளினி உறுமினார்‌. “இதில்‌ இன்னொரு வெட்கக்கேடு என்ன தெரியுமா? படித்த பெண்களேகூட,இன்று வெளியில்‌ போவதென்றாலும்‌, முதலில்‌ கணவரிடம்‌ கேட்டு சொல்கிறேன்‌,என்கிறாளே”, இவள்கள்‌ இப்படி பத்தினி வேஷம்‌ போடுவதாலேயேதான்‌ அவன்களுக்கு ----கூசிச்சுருங்கும்‌ கெட்ட வார்த்தையால்‌ எழுத்தாளினி திட்டினார்‌.

அப்பொழுது பேரர்‌ வந்தார்‌..இன்னும்‌ ஏதாவது வேண்டுமா? என்று கேட்க, மலர்‌ அம்மா, சட்டென்று அவன்‌ கைகளைப்‌ பிடித்து முத்தமிட்டார்‌.

”ஓ.நோயு சோ ஸ்விட்‌! எவ்வளவு அருமையாக எங்களைப்பற்றி கவலைப்படுகிறாய்‌?என்று உணர்ச்சி வசப்பட, அந்த பங்கலாதேஷ்‌ இளைஞன்‌ வெட்கிச்சிலிர்த்து, “அது என்‌ கடமை”என்று சொல்ல, இவளுக்கு குளிரின்‌ வேகத்தில்‌ உடம்பு அனத்தியது.

ஞானும்‌ எவ்வளவோ தடவை, சமுதாய சீர்கேடு பற்றியும்‌ , பெண்ணியம்‌ பற்றியும்‌ பல கதைகள்‌ எழுதிப்பார்த்துவிட்டேன்‌. எனது கதைகள்‌ என்றாலே புதுமை உண்டு, ஆனால்‌ அடாவடி எழுத்தாளர்‌ என்ற முத்திரையோடுதான்‌ பாராட்டு தெரிவிக்கிறார்களே ஒழிய, என்‌ சிந்தனையை எவனும்‌ மதித்ததாகத்‌ தெரியவில்லை. ஆனாலும்‌ இவன்களின்‌ மதிப்பீட்டால்‌ எனக்கென்ன நஷ்டம்‌? தொங்கத்‌ தொங்கத்‌ தாலியும்‌, வகிட்டில்‌ குங்குமமும்‌ தான்‌ பெண்ணுக்கு பெருமை ,எனும்‌ முட்டாள்தனத்தை இவள்களே மாற்றினால்‌ தானுண்டு,”

சிக்கன்‌ தொடையை முழுசாக கடித்துக்கொண்டும்‌, பைனேப்பிள்‌ ரைஸை,எடுத்து வாயில்‌ போட்டுக்கொண்டே, வாய்‌ நிறைய நிறைய எழுத்தாளைனி அலுத்துக்கொண்டார்‌. பட்டர்‌ சிக்கனும்‌ , பைனேப்பிள்‌ ரைஸும்‌ நல்ல காம்பினேஷன்‌,என்று மலர்‌

அம்மாவும்‌ சப்புக்கொட்டிக்கொண்டார்‌. பின்‌ விருட்டென்று எழுந்து மலர்‌ அம்மா கழிவறைப்பக்கம்‌ போய்‌ வந்தார்‌.திரும்பி வந்தபோது மலர்‌ அம்மாவின்‌ துப்பட்டாவைக்‌ காணோம்‌. அதுபற்றிய பிரக்ஞையே இல்லாமல்‌, வந்ததும்‌ சிரித்துக்கொண்டே எழுத்தாளினியின்‌ காதில்‌ ஏதோ குசுகுசுத்தார்‌ மலர்‌ அம்மா. அடுத்த கணம்‌ அது நிகழ்ந்தது. எழுத்தாளினி பளார்‌ என்று மலர்‌ அம்மாவின்‌ கன்னத்தில்‌ விட்டார்‌ ஒரு அறை .

பதிவுகள்‌ 02020

22 பதிவுகள்‌ 36 சிறுகதைகள்‌ (தொகுதி மூன்று

“எங்கே என்ன பேசுவது, என்ற விவஸ்தையே இல்லையா உனக்கு உம்‌! என்று உறுமினார்‌.

இவள்‌ வெலவெலத்துப்‌ போனாள்‌.ஆச்சரியம்‌.மலர்‌ அம்மா கோபப்படவில்லை.அவர்கள்‌ எழுந்துகொள்ள, இவள்‌ பேர்ர்‌ கொண்டுவந்த பில்லுக்குப்‌ பணமும்‌ டிப்ஸும்‌ கொடுத்துவிட்டு, வெளியே வரும்போதுதான்‌ கவனித்தாள்‌. மலர்‌ அம்மாவின்‌ பின்பாகம்பிருஷ்டம்‌| நனைந்திருந்தது.அருகே சென்றபோதோ சிறுநீரின்‌ வீச்சத்தில்‌ , குடலைப்புரட்டிக்கொண்டு வந்தது இவளுக்கு. 'டேக்சிக்காக நின்றபோது, காய்ச்சல்‌ வேகத்தில்‌ தலை சுழன்று கொண்டு வந்தது.மது அருந்திய அந்த 2 பெண்களும்‌ ஸ்டெடியாக நிற்க, குடிக்காத வைதேகி அடி வயிற்றிலிருந்து ஓங்கரித்துக்கொண்டு, குமட்டி குமட்டி வாந்தி எடுத்தாள்‌. ஒவ்வொரு டேக்சியும்‌ அவர்களைக்‌ கடந்து போய்க்கொண்டிருந்தது.

kamaladeviaravind@hotmail.com

பதிவுகள்‌, ஜூலை 2010 இதழ்‌ 127

பதிவுகள்‌ 02020

23 பதிவுகள்‌ 36 சிறுகதைகள்‌ (தொகுதி மூன்று) 3. என்ன தவம்‌ செய்தனை - பாரதிதேவராஜ்‌ எம்‌. (கோவை) -

என்ன தவம்‌ செய்தனைபொழுதுகிளம்ப வெகுநேரம்‌ இருக்கும்‌ போல இருக்கு. பொன்னுக்குட்டி கிழவனுக்கு அதற்கு மேல்‌ படுக்கையில்‌ இருப்பு கொள்ளவில்லை. கட்டிலிலிருந்து எழுந்து கொண்டார்‌. துண்டை எடுத்து மேலுக்குப்‌ போட்டுக்கொண்டார்‌.எரவாரத்தில்‌ சொருகியிருந்த கைத்தடியை உருவிக்கொண்டார்‌. திண்ணையில்‌ கிழவி அசந்துத்‌ தூங்கிக்கொண்டிருந்தாள்‌

அவளுக்கு சமாச்சாரம்‌ தொறயாது. தொழந்தால்‌ ஊரையே கூட்டி ஒப்பாரி வைப்‌ பாள; எதுக்கும்‌ தான்‌ போய்‌ பார்ப்போம்‌ என்று புறப்பட்டுவிட்டார்‌. வெளியே சொல்ல முடியாவிட்டாலும்‌ மனசு பூராவும்‌ மகனைப்‌ பற்றிய சோகமே நிறைந்து அழத்துடித்தது.

இந்த பாழாப்போனவனுக்கு பத்துமணிக்கு என்ன டீ குடிக்கக்கேக்குத. அதுவும்‌ ராத்திற. போகாம இருந்திருந்தா அந்தசேதி காதுலேயே விழுந்து தொலைச்சிருக்காது. இப்ப இந்த அவிதியுமிருக்‌॥ து.

வேலியைத்தாண்டி படலை சாத்திவிட்டு தெருவில்‌ இறங்கினார்‌. என்ன சமாதானம்‌ செய்தாலும்‌ மனசு சுத்தி சுத்தி அந்த சேதியிலேயே வந்துநின்றது. பொன்னுக்குட்டி

அதிகமாய்‌ எங்கும்‌ வெளியே வரமாட்டார்‌. வர இஷ்டமில்லை என்பது

ஒரு புறமிருந்தாலும்‌ ஆறுவருஷத்திற்கு முன்பு தன்‌ ஆசைமகன்‌ எவளோ கீழ்சாதிப்‌ பெண்ணோடு ஓடிப்போனான்‌ என்பதை கருத்தில்‌ வைத்து,

“என்னப்பிச்சி சத்தியனப்‌ பத்தி சேதி உண்டா.

“அப்பிச்சி சூலூர்‌ சந்தைக்குப்போனனா. அங்க உன்ற மகனையும்‌ மருமகனையும்‌ பாத்துபேசினே. சத்தியனெங்கியோ பண்ணைக்கு போறானாம்‌. கஷ்ட ஜீவனந்தா. சோளம்‌ வாங்கீட்டிருந்தாங்க. ஏண்டா தம்பி சோளக்கஞ்சிவச்சா குடும்பம்‌ நடத்துறே. உனக்கேண்டா தலைவிதின்னேன்‌. “வேறே வழிங்றான்‌ நாந்தா போடா போக்கத்த பயலே

அவளே எங்கயாச்சு ஓட்டியுட்டுட்டு ஊர்‌ வந்துசேருன்னுட்டு வந்தேன்‌.

இதுமாதிரி ஏதாவது ஊர்சனங்க சொல்றத காது கொடுத்துக்கேக்க முடிய வில்லை இதனால்‌ வெளியே வருவதையே விட்டொழித்துவிட்டார்‌.

பொன்னுகுட்டியின்‌ மனைவி கிட்னம்மா கூட, “இப்படி திண்ணையிலேயே

பதிவுகள்‌ 02020

24 பதிவுகள்‌ 36 சிறுகதைகள்‌ (தொகுதி மூன்று

பொழுதன்னிக்கும்‌ தடியப்புடிச்சுட்டே குக்கிட்டிருந்தா எப்பிடி. கோவில்மேட்லே சித்த உக்காரு. பக்கதாலே ரொட்டிக்‌ கடைக்கு போயி ஒரு பன்னத்‌ தின்னுட்டு டீ யக்குடிச்சிட்டுவா. இல்ல மொள்ள அப்படியே ரெங்கசாமி கோவிலுக்குப்‌ போ. அய்யிரு நல்லதா ஏதாச்சும்‌ சொல்வாரு. இப்படி கெடையிலேயே கெடக்காதே.பயித்தியந்தா புடிச்சுக்கும்‌. அரும மகந்தா புலோக ரம்பையக்‌ கூட்டீட்டு ஓடிப்போயிட்டான்‌ அதே நெனப்பு இனியும்‌ எதுக்கு எந்திரிச்சு போ சாமி.” என்பாள்‌. எல்லாம்‌ பழகிக்‌ கொண்டாச்சு.

வாரியார்சாமி ராமர்கத சொல்றார்னு வயித்துப்புள்ளத்தாச்சியா இருந்த கிட்னம்மாவக்‌ கூட்டிட்டு பத்துமைல்‌ வண்டிகட்டிட்டு தினமும்‌ கேக்கப்போனார்பொன்னுகுட்டி. ராமர்பிறந்த கதைய சொன்ன அண்ணிக்கிதான்‌ கிட்னம்மாவுக்கு வலி வந்துச்சு. நல்ல

வேளை பக்கத்திலேயே ஆஸ்பத்திரி இருந்தங்காட்டிக்கு உடனே சேத்து இவம்‌ பொறந்தான்‌ சத்தியவந்தன்‌ ராமர்‌ மாதி இருக்கணும்னு பொன்னுகுட்டி அவனுக்கு சத்தியன்னு பேர்வச்சார்‌.

ராமர்‌ காட்டுக்குப்‌ போயி தசரதர்‌ புத்திர சோகத்திலே படுறபாட்டை வாரியார்‌ சாமி சொல்லச்‌ சொல்ல பொன்னுகுட்டிக்கு கண்லே தாரதாரையா நீர்‌ வடிஞசது.அன்னிக்கு வு£ட்டுக்குவந்துங்கூட விடிய விடிய அழுதார்‌.அப்படி ஒரு சோகம்‌. வரக்கூடாதுன்னு வேண்டாத சாமியே கெடையாது.

ஆனா அவரோட வாழ்க்கையிலேயே வந்துடுச்சே! ஆசை ஆசையா வளத்து அருமையா இங்கிலிஸ்‌ பள்ளிக்கூடத்துக்‌ கெல்லாம்‌ அனுப்பிபடிக்கவச்சார்‌. அற சிச்சோத்தத்‌ தவிர வேறே எதையும்‌ கண்ணுலகூட பாத்ததில்லே. அப்பேர்பட்ட மகன்‌

சோளக்கஞ்சி குடிக்கிறான்னா மனசு என்ன பாடுபடும்‌.

ஊருக்குள்‌ புகுந்து ரொட்டிக்‌ கடையைத்‌ தாண்டும்‌ போது அந்த பழைய பேப்பர்‌ செய்தியை யாரோ உரக்கப்‌ படித்துக்கொண்டிருந்தார்‌.

“பீலினரைச்‌ சார்ந்த சத்யன்‌ என்பவர்‌ வயது3௦ இவர்‌ அதே ஊரைச்சேர்ந்த பட்டியம்மாள்‌ வயது24 என்கிற பெண்ணை காதலித்து திருமணம்‌ செய்து கொண்டார்‌. தற்‌ போது பாப்பம்பட்டியில்‌ இருவரும்‌ கூலிவேலை செய்து பிழைத்து வந்தனர்‌. கடன்‌

தொல்லை தாங்காது சத்யன்‌ விஷம்‌ குடித்து இறந்து போனார்‌. விஷயமறிந்த காவல்‌ துறையினர்‌...”

பொன்னுகுட்டியால்‌ அந்தசேதியை ஜீரணிக்க இயலவில்லை. மவன்‌ செத்துப்‌ போயிட்டானா. துக்கம்‌ தொண்டையை அடைக்க அழுகை பீறிக்கொண்டு

பதிவுகள்‌ 02020

25 பதிவுகள்‌ 36 சிறுகதைகள்‌ (தொகுதி மூன்று)

வந்தது. யாராவது பார்த்துவிட்போகிறார்கள்‌ என்று துண்டால்‌ வாயை பொத்திக்‌ கொண்டார்‌.மனசு விட்டு வாய்நிறைய சத்தம்‌ போட்டு அழவேண்டும்‌ போலிருந்தது. அழுதால்தான்‌ மனசு ஆறும்‌ போல இருந்தது. ஊருக்குவெளியே குட்டையை நெருங்கிக்கொண்டிருந்தார்‌.சுமை தாங்கிக்‌ கல்லருகே போய்‌ உட்கார்ந்து கொண்டார்‌. இருளைகிழித்துக்‌ கொண்டு காந்திபுரம்‌ போகும்‌ பஸ்வந்து நின்றது.

சட்டென்று தாவி படிக்கட்டில்‌ கால்‌ வைத்ததும்‌ பஸ்கிளம்பியது கம்பியை இரு கையால்‌ சாழயாகப்‌ பிடிக்காததால்‌ ஆடி விழப்போனார்‌.

ஏம்‌ பொழசு நீ சாகரதுக்கு எம்‌ பஸ்‌ தானாகெடச்சது.”

ஆம்‌ போ. கண்டக்டாதன்‌ கையைப்பிடித்து ஒர சீட்டில்‌ அமர்ந்தார்‌. பஸ்ஸில்‌ நாலைந்து போ;தான்‌ உட்கார்ந்திருந்தனர்‌ கண்டக்டர்‌ போட்ட சத்தத்தில்‌ தூக்கம்‌ கலைந்தவர்‌. திரும்பிப்பார்த்தார்‌.

அட என்னங்‌ மாமா மணி ஆறுகூட ஆகலே இந்நேரத்துக்கெங்க கிளம்பீட்டே .”

அடடே சுப்ராயனா.”

மாமா கேள்விப்பட்டது நெசந்தானா?”

எதை கேக்கறே”

நம்ப நஞசப்பந்தா பேப்பர்லே என்னவோ போட்டிருக்குன்னு சாயந்தரம்‌ உளர்னா, யாருக்கு தொழயும்‌.

போன வாரம்தான்‌ சந்தையிலே பாத்தானாம்‌.”

ஆமாமா எங்குட்டையும்தா சொன்னா.”

“எப்படி இப்படி”

அவம்‌ விதி. அஞ்சங்கணம்‌ ஊடு. ஆறேக்கறா தோட்டம்‌ மாடுகண்ணு ஊரு சொந்த சனங்க இத்தனை பேரு இருக்கறப்ப எங்கயோ போய்‌ தொலைஞ்சிருக்கானே பாவிமகன்‌..”

பதிவுகள்‌ 02020

26 பதிவுகள்‌ 36 சிறுகதைகள்‌ (தொகுதி மூன்று

அவரையும்‌ மீறி அழுகை பீறிட்டது. “அழுகாதீங்க மாமா.மனசைத்தேத்திகங்க. நானுமுங்க கூடத்தான்‌ வர்றேன்‌” “எதுக்கு” என்பதுபோல பார்த்தார்பொன்னுகுட்டி...

“நீங்க அக்காகிட்டகூட சொல்லாம வந்திட்டிங்களாமா.இந்த நாரவாயன்‌ நஞ்சப்பன்‌ தா ராத்திந அக்காகிட்டயும்‌ சொல்லிப்போட்டானாம்‌.. உங்களுக்கு தெரியக்‌ கூடாதுன்னு ஒண்ணும்‌ சொல்லையாம்‌. .ராத்திரி புராவும்‌ நீங்க படறபாட்டை பாத்துட்டுதா இருந்துச்சாம்‌. சொல்லாம கொள்ளம்‌ புறப்பட்டதை பார்த்ததுமே அக்காவுக்கு புரிஞ்சு போச்சாம்‌. நீங்க மகன பாக்க பாப்பம்பட்டி பொறப்பட்டீங்கன்னு விசுக்குன்னு எங்கூட்டுக்கு ஓடி வந்து சீக்கிரமா போய்‌ பஸ்ஸப்புடிக்கச்‌ சொன்னா. நா குறுக்குத்தடத்தில

ஓடிவந்து பஸ்ஸப்‌ புடிச்சு வர்றேன்‌. அதுக்குள்ள குட்டைப்‌ பக்கம்‌ வநற்துட்டீங்களே. நான்தான பஸ்ஸை நிறுத்தச்சொன்னேன்‌.”

“சேதி அப்படியா கிட்னம்மாளுக்கும்‌ விசயம்‌ தொழஞ்சு போச்சா சரியான கைகாரி.”

கண்டக்டர்‌ காந்திபுரத்துக்கு டிக்கெட்டை கொடுத்தார்‌. ஆப்பாரசட்டை பையில்‌ துழாவி பத்து ருபாய்‌ நோட்டைத்‌ தந்தார்‌;

“நீ டிக்கெட்‌ வாங்கிட்டயா.”

நா அங்கயே வாங்கிட்ட மாமா.”

பஸ்ஸின்‌ ஆட்டத்தில்‌ அவா;களுடைய பேச்சு அடிபட்டுப்போய்‌ மெளனம்‌ நிலவியது. “ஏண்டா சுப்ராயா?”

“ஏனுங்க மாமா?”

“அங்க பாப்பம்பட்டியில அவனூடு எவடதாலக்காம்‌?”

அதென்னமாமா பொறழய பட்னமா. பட்டிக்காடுதானே மிஞ்சிப்போனா நாலுசந்திருக்கும்‌.

அதுவுமில்லாம போலிஸ்‌ கேஸ்வேறே ஊரே தேர்‌ கூட்டமா கசமுசன்னு பேசிட்டு நிப்பாங்க. கண்டுபிடிக்கறதொண்ணும்‌ கஷ்டமில்லே மாமா.”

“என்னவோ போப்பா அறுபதுவயசிலே நா இப்படி இருக்கோணும்‌. அவங்காரி யத்ததை நாம்‌ பாக்கோணும்னு இருக்கு.”

பதிவுகள்‌ 02020

27 பதிவுகள்‌ 36 சிறுகதைகள்‌ (தொகுதி மூன்று “என்னங்‌ மாமா சொல்றீங்க?”

“இன்னுமென்னத்தச்‌ சொல்றது. யாரென்ன சொன்னாலும்‌ செரி. ஊரே எதுத்தா லும்‌ செரி. என்றமகனே எந்தோட்டத்திலே தான்‌ அடக்கம்‌ பண்ணனும்னு தீர்மானம்‌ பண்ணிப்‌ போட்டம்‌ போ.”

“அதெப்படிங்க மாமா முடியும்‌ ஊர்‌ கட்டுப்பாடுன்னு ஒண்ணு இருக்குதுல்லோ. குலத்துக்குப்‌ பொற யவங்க நீங்க. நீங்களே இப்படி...”

“கொலமாவது கோத்தரமாவது அதையிதையிஞ்‌ சொல்லித்தாண்டா அவன ஊரவுட்டே ஓட்னீங்க உப்ப உசிருக்கே ஒலையும்‌ வெச்சுப்போட்டிங்க.சுப்ராயா சனங்க நடக்கற மாதிரி இந்த கொங்குமண்ணிலே நடந்ததே இல்லே. ராசாக்‌ காலத்திலேகூட இந்த கொங்குமண்ணுலே சாதி பிரச்சனை கெடையாது. அதததுக்கு பட்டயமே போட்டுப்‌ போட்டான்‌. வூட்டுக்கு வெள;ளையடிக்கறது, செத்தா ரெண்டுசங்கு வைக்கறது செருப்புப்‌ போட்டுட்டு ஊருக்குள்ளே வாரதுன்னு இதுக்கெல்லாம்கூட அனுமதி தந்து

சாதிப்பிரச்சனை யே வராம இருந்தமண்ணு இந்த மண்ணு. அதுமட்டும்‌ புள்ளப்பெத்தா கொழந்தைய வளக்கறது,குளிப்பாட்டறது,ஏன்‌ புள்ளை அழுதாமுலைப்பால்‌ கொடுக்கறதுகூட அந்தமாதிரி புள்ளைகதான்‌. என்னவோ இப்பத்தான்‌ கீழ்சாதி கீழ்சாதின்னு

நெம்பத்தான்‌ ஆடறானுக.

“என்கென்னவோ சத்தியன்‌ செத்துட்டான்னே மனசு ஒப்பமாட்டீங்குது மாமா.” “பேப்பர்லே போட்டிருக்கானேடா சுப்ராயா.” “பேப்பர்லே போடறதெல்லாம்‌ நெசமாயிடுமா?”

பஸ்‌ காந்திபுரத்தை நெருங்கியது. மத்தியபஸ்‌ நிலையம்‌ மணி எட்டைக்‌ காட்டி கலகலத்துக்கொண்டிருந்தது.

“மாமா கடையிலே ஏதாவது சாப்புட்டுபோட்டு போலாங்களா? அங்க பாப்பம்‌ பட்டிலே சாப்பிடறதெல்லாம்‌ தோதுபடாது. அதுவுமில்லாம இனி எந்நேரமாகுதோ?”

“எனக்கொண்ணும்‌ வேண்டாம்‌. நீ வேண்ணா சாப்புடு.” “எனக்கும்‌ ஒண்ணும்‌ வேண்டாம்‌. நீங்க பசிதாங்கமாட்டீங்க. பரவால்லே ரெண்டு பேரும்‌

சாப்புட்டுபோட்டே போலாம்‌ வாங்க.”

பதிவுகள்‌ 02020

28 பதிவுகள்‌ 36 சிறுகதைகள்‌ (தொகுதி மூன்று

இருவரும்‌ எதிரே இருந்த காப்பிக்கடையில்‌ சாப்பிட்டுவிட்டு திரும்பினார்கள்‌. பாப்பம்பட்டி போகிற பஸ்‌ தயாராய்‌ நிக்கவும்‌ அதில்‌ ஏறப்‌ போனார்கள்‌. பஸ்‌ புறப்பட இன்னும்‌ நேரமிருந்தது. பஸ்ஸில கூட்டம்‌; நிறைய இருந்தது. இளவட்ட பையன்கள்‌

நாலைந்து பேர்‌ பஸ்ஸுூக்கு வெளியே நின்று கொண்டு வருகிற போகிறவர்களை கிண்டல்‌ செய்து கொண்டிருந்தனர்‌. பொன்னுகுட்டியும்‌,சுப்ராயனும்பஸ்ஸில்‌ ஏற முயன்றார்கள்‌. கூடீ நின்ற கும்ப லில்‌ ஒருவன்‌,

“பொறசு எதுவரைக்கும்‌?” “பாப்பம்பட்டிக்குதாங்‌ கண்ணு.” “ஆரூட்டுக்கு?*

ஆருட்டுக்குமில்லே. நேத்துசாயந்திரம்‌ பேப்பர்லே போட்டிருந்துச்சே சத்தியன்னு விசங்குடுச்சு...”

அடடே பாடிய ராத்திரியே பெரியாஸ்பத்திஈழ க்கு கொண்டுபோயி-ட்டாங்க. அவங்க சம்சாரம்கூட ஆஸ்பத்திரிக்குத்தான்‌ போயிருக்கு. ஊர்லே அவங்களுக்கு யாருமில்‌ லே. அங்க போய்‌ யாரப்‌ பாக்கப்போறீங்க?”

அட அப்பிடியா. நல்லதாப்‌ போச்சு. அப்ப பொறயாஸ்பத்திரிக்கே போயிர்‌ லாங்க மாமா.” ம்‌ சொற பொழயாஸ்பத்திரிக்குப்‌ போற பஸ்ஸப்‌ பாரு.”

பெரியாஸ்பத்திர காலைவேளை சுறுசுறுப்‌ போடு வேகமாய்‌ இயங்கிக்‌ கொண்டிருந்தது. வெள;ளை யுடுப்பில்‌ கையில்‌ ஸ்டெதாஸ்கோப்புடன்‌ கும்பல்‌ கும்பலாய்‌ மருத்துவக்கல்லூரழ மாணவமாணவிகள்‌ அரட்டையுடன்‌ போயிக்கொண்டிருந்தனர்‌. ஒவ்வொரு வார்டிலும்‌ நோயாளிகள்‌ வாநசையில்‌ டாக்டர்‌ தாழ சனத்திற்குக்காத்திருந்தனர்‌ ஸடச்சர்‌ வண்டி அவ்வப்போது கிறீச்‌ கிறீச்‌ என்ற சத்தத்தோடு போயிக்கொண்டிருந்தது. பொன்னுகுட்டியும்‌ சுப்ராயனும்‌ எந்த பக்கம்‌ போவது யாரை விசாப்பது என்பது தொறழயாமல்‌ விழித்துக்‌ கொண்டிருந்தனர்‌. இடதுபுறம்‌ மேல்‌ கோடியில்‌ கூட்டம்‌ அதிகமாயிருந்தது.

“மாமா அங்க பாருங்க அதுதான்‌ சாவுரூம்‌ அங்கதான்‌ பொணத்த அறுப்பாங்க. வாங்க போய்‌

பதிவுகள்‌ 02020

29 பதிவுகள்‌ 36 சிறுகதைகள்‌ (தொகுதி மூன்று

பாக்கலாம்‌. அதுவரை மறந்திருந்த துக்கம்‌ மறுபடியும்‌ பீறிக்கொண்டுவர பொன்னுகுட்டி தன்னையும்‌ மறந்து,

“என்ற ராசா உன்னை இந்தக்‌ கோலத்துல பாக்கவா தவமிருந்து பெத்தேன்‌. ராமரப்போல நெனைச்‌ சேனே. இப்படிப்‌ பண்ணிப்போட்டியேடா பாவி. -என்று கதறி வாய்விட்டழுதார்‌;.அவருடைய ஓலம்‌ சுற்றி நின்றவர்களையும்‌ கலங்கச்‌ செய்துவிட்டது. கூட்டத்தில்‌ யாரோ சுப்ராயனின்‌ தோளைப்‌ பற்றுவது உணர்ந்து திரும்பினார்‌. சுப்ராயன்‌ கண்ட காட்சியில்‌ அதிர்ச்சியுற்று,

மாமோய்‌ இங்க திரும்பிப்பாருங்க. இந்த அதிசயத்தை.”

சட்டென்று. திரும்பிய பொன்னுகுட்டி கண்டகாட்சியில்‌ ஆடிப்போனார்‌.

“அட என்ற ராசா. ஊன்ன செத்துப்‌ போயிட்டானுட்டானுகளே.”

இல்லப்பா நா சாகலே.”

அப்ப பேப்பர்லே போட்டது.”

அது நம்மூர்‌ அய்யர்மகன்‌ சத்தியநாராயணன்பா. அவனும்‌ பாப்பம்பட்டிலே தான்‌ குடியிருக்கான்‌.

“அப்ப பட்டியம்மான்னு போட்டிருந்ததே.”

“எம்பொண்டாட்டி பேரு பட்டத்தரசிப்பா.”

எப்படியோசாமி எங்கமாமா வேண்டுன சாமிக கையுடலங்கறதே போதுங்க சாமி இனி எவனெதுத்தாலும்‌ சொற எந்த சாதியும்‌ நமக்குத்‌ தேவையுமில்லே. இனி நீங்க பீலியுர்‌ மண்ணுலேதான்‌ பொழைக்கோணும்‌.' என்று உணர்ச்சி பொங்க

சுபடராயான்‌ சொன்னார்‌.

bharathidvrin59@gmail.com

பதிவுகள்‌, ஜூலை 2010 இதழ்‌ 127

பதிவுகள்‌ 02020

30 பதிவுகள்‌ 36 சிறுகதைகள்‌ (தொகுதி மூன்று) 4. காவி அணியாத புத்தன்‌. - குரு அரவிந்தன்‌ -

குரு அரவிந்தன்லட்சுமி மூன்று காலில்‌ எழுந்து நிற்க முயற்ச்சி செய்து, முடியாமல்‌ போகவே வேதனையோடு முனகிக்‌ கொண்டு மீண்டும்‌ படுத்துக்‌ கொண்டது. எனக்கு எல்லாமே புரிந்துபோயிற்று. பணச்செலவை நினைத்து மனிதருக்கே பொய்க்கால்‌

கட்டத்‌ தயங்கும்‌ இந்தக்‌ காலத்தில,; தான்‌ வளர்த்த பசுவிற்குப்‌ பொய்க்கால்‌ கட்டி அதை நடமாடச்‌ செய்வதில்‌ அவனுக்கு உள்ள அக்கறையை நினைத்து வியப்படைந்தேன்‌. கடந்த இரண்டு நாட்களாக அவன்‌ என்‌ பார்வையில்‌ பட்டுக்கொண்டே இருக்கிறான்‌. எதேச்சையாக யன்னலுக்கால்‌ பார்வையைப்‌ படரவிட்டபோது, அவன்‌ வாசலில்‌ உட்கார்ந்திருப்பது தெரிந்தது. கலைந்த முடியும்‌, நாலுமுழ வேட்டியும்‌ சட்டையுமாய்‌ ஏதோ ஒன்றுக்கான எதிர்பார்ப்போடு இருக்கிறான்‌ என்பது மட்டும்‌

புரிந்தது.

யாரப்பா அது தினமும்‌ வந்து வாசல்ல உட்கார்ந்திருக்கிறது.?' உதவியாளனிடம்‌ வினாவினேன்‌.

உங்களைச்‌ சந்திக்கணும்‌ என்று அடம்‌ பிடிக்கிறான்‌ சார்‌ என்றான்‌.

என்னையா, ஏனாம்‌;?

‘தெரியல்லை, லட்சுமி, லட்சுமி என்று சொல்லி ஒரேயடியாய்‌ ஒப்பாரி வேறு வைக்கிறான்‌ என்ன நடந்ததாம்‌..?” ஆர்வ மிகுதியால்‌ அவனிடமே விசாரித்தேன்‌.

என்கிட்ட சொல்ல மாட்டேன்‌ என்கிறான்‌. என்ர கால்‌ போனாலும்‌ பரவாயில்லை உன்ர கால்‌ போயிடிச்சே லட்சுமி என்று முனகிக்கொண்டு தலையில்‌ அடிச்சுக்கிறான்‌

குடும்ப விவகாரமா?

விடு பார்க்கப்போறேன்‌, காணி பார்க்கப்போறேன்‌ என்று போய்த்‌ தெரியாமல்‌ கண்ணி வெடியில எங்கேயாவது காலை வைச்சிருப்பா, அதிலை அகப்பட்டு கால்‌ போச்சுதோ தெரியலை..! தனது சந்தேகத்தை அவன்‌ வெளியிட்டான்‌.

மனசு வேதனைப்பட்டது, எவ்வளவு சாதாரணமாய்‌ சொல்லிவிட்டான்‌. அமைதியாய்‌ இருந்த இந்தமண்‌, யுத்த பூமியாய்மாறியதேன்‌? தினந்தினம்‌ இப்படியான சம்பவங்கள்‌ நடந்ததால்‌ அப்பாவி மக்களின்‌ இழப்புக்கள்‌ எல்லாம்‌ இவர்களுக்கு சாதாரணமாய்‌

போய்விட்டனவோ? மழைவிட்டும்‌ தூவானம்‌ விடவில்லை என்பதுபோல, உயிர்‌

பதிவுகள்‌ 02020

31 பதிவுகள்‌ 36 சிறுகதைகள்‌ (தொகுதி மூன்று)

இழப்புக்கள்கூட கவனத்தில்‌ கொள்ளப்படாமல்‌, மனித உயிர்கள்‌ மதிப்பற்றுப்‌ போய்விடுமோ? மனிதநேயம்‌ என்பதன்‌ அர்த்தமே இவ்வுலகில்‌ யாருக்குமே புரியாமல்‌ போய்விடுமோ?

தினமும்‌ இப்படிக்‌ கண்ணி வெடியில்‌ அகப்பட்டுக்‌ காலை இழப்பவர்களில்‌;, அதிகமானவர்கள்‌ குழந்தைகளாயும்‌, பெண்களாயும்தான்‌ இருக்கிறார்கள்‌. கணக்கிட முடியாத அளவிற்கு இப்படிப்‌ பலர்‌ ஊனமடைந்திருக்கிறார்கள்‌. ஒரு பெண்‌ ஒற்றைக்‌ காலோடு, தடி ஊன்றி, இடுப்பிலே ஒரு கைக்குழந்தையைச்‌ சுமக்க முடியாமல்‌ சுமந்து கொண்டு..! பார்த்ததும்‌ பதறிப்போனேன்‌! செல்‌ வந்து இவர்கள்‌ வீட்டு முற்றத்திலே நின்ற பனைமரத்தில்‌ பட்டு வெடித்துச்‌ சிதறியபோது அங்கே நின்ற கணவன்‌ அந்த இடத்திலேயே இறந்துபோனானாம்‌. இவள்‌ ஒற்றைக்‌ காலை இழந்து, குழந்தைக்காக உயிரைக்‌ கையிலே பிடித்துக்‌ கொண்டு வாழவேண்டிய பரிதாபநிலை! எந்த ஒரு வருமானமும்‌ இல்லாத, நாதியற்ற அவளது கண்ணீர்க்‌ கதையைக்‌ கேட்டதும்‌ என்னை அறியாமலே எனது கண்கள்‌ பனித்தன.

பாவம்‌ இந்தப்‌ பெண்களாய்ப்‌ பிறந்தவர்கள்‌! குடும்பத்தில்‌ யாருக்கு என்ன நடந்தாலும்‌ இறுதியில்‌ பாசம்‌ என்ற வலையில்‌ சிக்கி, உளரீதியாகவும்‌, உடல்ரீதியாகவும்‌, தாயாய்‌, மனைவியாய்‌, மகளாய்‌, தோழியாய்‌ எங்கேயும்‌, எப்போதும்‌ அனேகமாய்‌ பாதிக்கப்படுவர்கள்‌ இந்தப்‌ பெண்களாய்த்தானே இருக்கிறார்கள்‌!

கால்‌ இழந்தவர்களுக்கு பொய்க்கால்‌ கட்டும்‌ இந்த ஜெயப்பூர்‌ கிளை நிறுவனத்தின்‌ பொறுப்பதிகாரியாக சென்ற வருடம்தான்‌; நான்‌ பொறுப்பை ஏற்றிருந்தேன்‌. நான்‌ பொறுப்பெடுத்த நேரமோ, அல்லது யுத்தத்தின்‌ அகோரமோ, கொஞ்ச நாட்களாக பொய்க்கால்‌ கட்ட வந்தவர்களாலும்‌, அதற்குரிய பயிற்சி எடுக்க வந்தவர்களாலும்‌ ஒரு வைத்தியசாலைபோல்‌ இந்த இடம்‌ நிரம்பி வழியத்‌ தொடங்கிவிட்டது.

இராணுவம்‌ ஆக்கிரமிப்பு செய்த பிரதேசங்களில்‌ தமிழ்மக்கள்‌ மீளக்‌ குடியேறியபோது இராணுவத்தால்‌ தங்கள்‌ பாதுகாப்பிற்காகப்‌ புதைத்து வைக்கப்பட்ட பீ4 அன்ரி பார்ஷனல்‌ கண்ணி வெடிகளும்‌, முகாங்களில்‌ இருந்து அவ்வப்போது மக்கள்‌

குடியிருப்புகள்‌ மீது ஏவப்பட்ட செல்களும்தான்‌ இதற்கெல்லாம்‌ காரணம்‌ என்று எல்லோருக்கும்‌ தெரியும்‌. கண்ணி வெடிகள்‌ எங்கே எந்த மூலையில்‌ புதைத்து வைத்திருக்கிறார்கள்‌ என்று தெரியாமல்‌ அப்பாவி மக்கள்‌, நடந்து போகும்போது தவறுதலாக அதன்மேல்‌ கால்வைக்க, அவை வெடித்துச்‌ சிதறி அவர்களைத்‌ தினமும்‌ பலி எடுத்துக்‌ கொண்டே இருந்தன. இராணுவம்‌ வெளியேறிய பகுதிகளில்‌ புதைக்கப்‌ பட்டிருந்த இந்தக்‌ கண்ணி வெடிகள்‌ இன, மத வேறுபாடின்றி அப்பாவி மக்களின்‌ உயிரைத்‌

தினமும்‌ பலி எடுத்துக்‌ கொண்டே இருந்தன. நாகரிகமடைந்த எந்த ஒரு நாடும்‌ இதுபோன்ற அநாகரிகமான, மனிதாபிமானமற்ற செயல்களில்‌ ஈடுபட்டு, இதுபோன்ற

பதிவுகள்‌ 02020

32 பதிவுகள்‌ 36 சிறுகதைகள்‌ (தொகுதி மூன்று

கண்ணிவெடிப்‌ பிசாசுகளை நிலத்தில்‌ புதைத்து வைத்து அப்பாவி பொதுமக்களின்‌ உயிரைப்‌ பலி எடுப்பதில்லை. விவசாயிகள்‌ தங்கள்‌ சொந்த நிலத்தில்‌ மீளக்‌ குடியேறியபோது பச்சைப்‌ பசேலென்று கதிர்விளைந்திருந்த நிலங்கள்‌ எல்லாம்‌ உயிர்‌ குடிக்கும்‌ கண்ணி வெடிகளாய்‌ விளைந்திருந்ததைப்‌ பார்த்ததும்‌ பயந்து போனார்கள்‌. அதைப்‌ பயிரிட்ட இராணுவமோ ஆக்கிரமிப்பு நிலத்தில்‌ இருந்து, அப்பகுதியில்‌ காலாகாலமாய்‌ வாழ்ந்த பொதுமக்களின்‌ ஜனநாயகரீ தியான தொடர்‌ போராட்டத்தால்‌, அவர்களின்‌ எதிர்ப்பைத்‌ தாங்கமுடியாமல்‌ பின்‌ வாங்கிப்‌ போயிருந்தது.

கண்ணி வெடிகளில்‌ அகப்பட்டு காலை இழந்தவர்களுக்கு இந்த நிறுவனம்‌ அவர்களுக்குத்‌ தேவையான பொய்க்‌ கால்களைத்‌ தயாரித்து அவர்கள்‌ அந்தப்‌ பொய்கால்களின்‌ உதவியுடன்‌ நடப்பதற்கு வேண்டிய எல்லாப்‌ பயிற்சிகளையும்‌ கொடுத்து வந்தது.

இதை எப்படியோ கேள்விப்பட்ட கந்தசாமியும்‌ தினமும்‌ அங்கே வந்து அதற்குப்‌ பொறுப்பானவர்களைச்‌ சந்திப்தற்காகக்‌ காத்திருந்தான்‌.

அவனை உள்ளே அழைத்து வரும்படி உதவியாளனிடம்‌ செல்லவே, அவன்‌ வெளியே சென்று கந்தசாமியை அழைத்து வந்தான்‌. எனக்கு எதிரே வந்து நிற்பது, சூதுவாது அற்ற ஒரு அப்பாவி கிராமத்து விவசாயி என்பது அவனது நடையுடை பாவனையிலிருந்து என்னால்‌ புரிந்து கொள்ள முடிந்தது. அவனது முகத்தில்‌ மட்டும்‌ எதையோ இழந்துவிட்ட சோகம்‌ குடியிருந்தது.

என்னப்பா, இங்கே எதுக்கு வந்தே..?' அவனிடம்‌ மெல்ல வினாவினேன்‌.

இங்கே வந்தால்‌ பொய்க்கால்‌ பொருத்தலாம்‌ என்று சொன்னாங்க, அதுதான்‌ உங்ககிட்ட உதவிகேட்டு வந்தேனுங்க. பெரிய எதிர்பார்ப்போடு வந்திருக்கிறான்‌ என்பது அவனது பேச்சிலிருந்து புரிந்தது.

யார்‌ இதைப்பற்றிச்‌ சொன்னாங்க..?'

நம்ம கிராமத்துப்‌ பையன்‌ சின்னராசுதான்‌ சொன்னான்‌. இப்படித்தான்‌ ஒருநாள்‌, செல்‌ வந்து எங்க கிராமத்திலே விழுந்து வெடிச்சபோது அவனுக்கும்‌ ஒருகால்‌ போயிடிச்சுதுங்க. இங்கே வந்து பொய்க்கால்‌ பெருத்தி இப்போ மெல்ல மெல்ல நடக்கிறானுங்க, சீக்கிரம்‌ சைக்கிள்கூட ஓட்டப்போறேன்னு ரொம்ப உஷாராய்ச்‌ சொன்னானுங்க!'

அப்படியா? முயற்சி செய்தால்‌ முடியாதென்று ஒன்றுமே இல்லையப்பா!

ஒவ்வொருவருடைய பயிற்சியையும்‌, மனோபலத்தையும்‌ பொறுத்தது. ஆமா,இதற்கு நிறைய செலவாகுமே..?'

பதிவுகள்‌ 02020

33 பதிவுகள்‌ 36 சிறுகதைகள்‌ (தொகுதி மூன்று)

பரவாயில்லைங்க, பணத்தைவிட எனக்கு இது..?'

' உன்னோட ஆதங்கம்‌ புரியுதப்பா!. பணம்‌ பெரிசில்லையா?'

அன்னிக்கு லட்சுமி காலை வைக்காட்டி, பின்னாலே வந்த என்னுடைய கால்‌ அல்லவா போயிருக்கும்‌. மற்றவங்க லட்சுமியைப்‌ பார்த்து நொண்டி என்று பழிக்கும்போது என்னையே பார்த்துப்‌ பழிப்பதுபோல எனக்குள்ளே ஒருவித காழ்ப்புணர்வு

ஏற்படுதுங்க. என்ன செலவானாலும்‌ இந்தக்‌ குறையை எப்படியாவது நீங்கதான்‌ நிவர்த்தி செய்யணும்‌. மற்றவங்க துணையில்லாமல்‌ மெல்ல மெல்ல நடந்தாலே போதுமுங்க.

பவ்வியமாய்‌ என்னிடம்‌ சொன்னான்‌.

' உன்னோட மனநிலை எனக்குப்‌ புரியுது கந்தசாமி. அப்படின்னா வேலையை உடனே தொடங்க வேண்டியதுதான்‌! என்றேன்‌.

வந்து.. பணம்‌..?'

பணத்திற்கு இப்ப ஒண்னும்‌ அவசரமில்லை. பொய்க்கால்‌ பொருந்துமா இல்லையா என்று காலைப்‌ பரிசோதித்து பார்த்துத்தான்‌ சொல்லமுடியும்‌. எங்கே லட்சுமி? உள்ளே அழமைச்சிட்டுவாப்பா! என்றேன்‌.

கந்தசாமி தயங்கினான்‌.

நீங்கதான்‌ மனசு வைச்சு கொஞ்சம்‌ வெளியே வந்து பார்க்கணும்‌!

நடக்கவே முடியாத அளவிற்கு பாதிப்பு ஏற்பட்டிருக்குமோ?

சரி, நானே வந்து பார்க்கிறேன்‌. என்று சொல்லி அவனுடன்‌ வெளியே சென்றேன்‌. “வண்டி என்றானே, ஆட்டோவில்‌ வந்திருப்பானோ?' என்று என்‌ கண்கள்‌ ஆட்டோவைத்‌ தேடின. ஒரு ராக்ரர்‌ வண்டியும்‌ அதனோடு இணைக்கப்பட்ட ரெயிலர்பெட்டியையும்‌ தவிர வேறு எந்த வண்டியும்‌ வெளியே இல்லை.

எங்கேப்பா வண்டி?

கந்தசாமி என்னை அழைத்துச்‌ சென்று ரெயிலர்‌ பெட்டியைக்‌ காண்பித்தான்‌. உள்ளே

பசுமாடு ஒன்று தலையைத்‌ தொங்கப்‌ போட்டுக்‌ கொண்டு படுத்திருந்தது.

பதிவுகள்‌ 02020

34 பதிவுகள்‌ 36 சிறுகதைகள்‌ (தொகுதி மூன்று) ல..ட்சு..மி..?” ஏமாற்த்தோடு கேட்டேன்‌.

‘இதுதாங்க லட்சுமி, இதுக்குத்தாங்க கால்‌ போயிடிச்சு என்று சொல்லி லட்சுமியை அன்போடு தடவிக்‌ கொடுத்தான்‌.

லட்சுமி மூன்று காலில்‌ எழுந்து நிற்க முயற்ச்சி செய்து, முடியாமல்‌ போகவே வேதனையோடு முனகிக்‌ கொண்டு மீண்டும்‌ படுத்துக்‌ கொண்டது. எனக்கு எல்லாமே புரிந்துபோயிற்று. பணச்செலவை நினைத்து மனிதருக்கே பொய்க்கால்‌ கட்டத்‌ தயங்கும்‌ இந்தக்‌ காலத்தில்‌; தான்‌ வளர்த்த பசுவிற்குப்‌ பொய்க்கால்‌ கட்டி அதை நடமாடச்‌ செய்வதில்‌ அவனுக்கு உள்ள அக்கறையை நினைத்து வியப்படைந்தேன்‌. மனிதர்களால்‌ இங்கே வந்து தங்கள்‌ குறைகளைச்‌ சொல்லி அழமுடியும்‌, ஆனால்‌ இந்த வாயில்லா ஜீவன்களால்‌ சொல்லி அழமுடியுமா?

ஜீவகாருண்ய சிந்தனை உள்ள இவர்களைப்‌ போன்றவர்களுக்குக்‌ கட்டாயம்‌ உதவி செய்ய வேண்டும்‌ என்று உடனேயே எனக்குள்‌ முடிவெடுத்துக்‌ கொண்டேன்‌. ஊனமடைந்த ஆடு மாடுகளைக்‌ கசாப்புக்‌ கடைக்குத்‌ தள்ளிவிடுபவர்களைப்‌ போலல்லாது வித்தியாசமானவனாய்‌, அவைகளையும்‌ வாழவைக்க வேண்டுமென்ற இரக்கமுள்ளவனாய்‌ இவனிருந்தான்‌.

என்‌ உதவியாளனை உடனேயே அழைத்து லட்சுமியின்‌ கால்களை அளவெடுக்கச்‌ சொன்னேன்‌. இதுவரை காலமும்‌ மனிதரின்‌ கால்களையே அளவெடுத்துப்‌ பழக்கப்பட்ட அவன்‌, என்னை ஒரு கணம்‌ வினோதமாகப்‌ பார்த்துவிட்டு, தயக்கத்தோடு ஏதோ முணுமுணுத்தபடி லட்சுமியின்‌ காலின்‌ அளவுகளை எடுத்தான்‌.

‘இந்தாளுக்கு என்ன பைத்தியமா? என்று அவன்‌ மனதுக்குள்‌ என்னைத்‌ திட்டியிருக்கலாம்‌. யார்‌ என்ன சொன்னாலும்‌ லட்சுமிக்குப்‌ பொய்க்கால்‌ கட்டியே தீருவது என்று உடனேயே நான்‌ முடிவும்‌ எடுத்துக்‌ கொண்டேன்‌.

பணம்‌..?' என்று கந்தசாமி மீண்டும்‌ தயங்கினான்‌.

‘வேண்டாமப்பா, பணம்‌ வேண்டாம்‌. அன்பு, பாசம்‌, நேசம்‌, கருணை இவை எல்லாவற்றுக்கும்‌ முன்னால்‌ பணத்திற்குப்‌ பெறுமதியே இல்லையப்பா. எப்படியும்‌ லட்சுமியை நடக்க வைத்துக்‌ காட்டுவது என்னுடைய பொறுப்பு” என்று சொல்லிப்‌ பெருமிதம்‌

பொங்க அவன்‌ தோளில்‌ தட்டிக்‌ கொடுத்தேன்‌.

லட்சுமிக்கு நல்ல மனசுங்க, மனிசனுக்கு மனிசன்‌ வெச்ச பொறியில தானே லட்சுமி

பதிவுகள்‌ 02020

35 பதிவுகள்‌ 36 சிறுகதைகள்‌ (தொகுதி மூன்று

அகப்பட்டுதுங்க, பாவம்‌ வாயில்லாத ஜீவனே தவிர என்ன சொன்னாலும்‌ புரியுமுங்க, மனிசனைவிட ரொம்ப உசத்தி!

லட்சுமியைப்‌ புகழ்ந்து பெருமைப்பட்டுக்‌ கொண்டே அதன்‌ கன்னத்தை இரண்டு கைகளாலும்‌ ஆசையோடு தடவி நெற்றியில்‌ முத்தம்‌ கொடுக்க, லட்சுமி செவிகளை விரித்து கண்களை மூடி உடம்பு சிலிர்க்க வெட்கப்பட்டது.

அன்பு, பாசம்‌, மனிதநேயம்‌, ஜீவகாருண்யம்‌, இவையெல்லாம்‌ இன்னும்‌ இந்த மண்ணில்‌ அழிந்து விடவில்லை, எங்கேயோ, எப்படியோ ஏதோ உருவத்தில்‌ நிலைத்திருக்கிறது என்ற நல்ல செய்தி அந்த அப்பாவிக்‌ கிராமத்தவனின்‌ கண்களிலும்‌,

செய்கையிலும்‌ பளீச்சென்று தெரிந்தது!

kuruaravinthan@hotmail.com

பதிவுகள்‌, ஜூலை 2010 இதழ்‌ 127

பதிவுகள்‌ 02020

36 பதிவுகள்‌ 36 சிறுகதைகள்‌ (தொகுதி மூன்று

5. எதிர்காலச்‌ சித்தன்‌! - வ.ந.கிரிதரன்‌ - ( கவிந்திரனின்‌ (அறிஞர்‌ அ.ந.கந்தசாமி) எதிர்காலச்‌ சித்தன்‌ பாடல்‌' கவிதையின்‌ சிறுகதை வடிவம்‌. சிறுகதையாக்கியிருப்பவர்‌: வ.ந.கிரிதரன்‌) -

எதிர்காலத்திரை நீக்கி நான்‌ காலத்தினூடு பயணித்தபொழுதுதான்‌ அவனைக்‌ கண்டேன்‌. அவன்‌ தான்‌ எதிர்கால மனிதன்‌. இரவியையொத்த ஒளிமுகத்தினைக்‌ கொண்டிருந்த அந்த எதிர்கால மனிதனின்‌ கண்களில்‌ கருணை ஊறியிருந்தது. அவன்‌

கூறினான்‌: "நிகழ்கால மனிதா! எதிர்கால உலகமிது. இங்கேன்‌ நீ வந்தாய்‌? இங்கு நீ காணும்‌ பலவும்‌ உன்னை அதிர்வெடி போல்‌ அலைக்குமே. அப்பனே அதனாலே நிகழ்காலம்‌ நீ செல்க!" [ ஈழத்துத்‌ தமிழ்‌ இலக்கிய வானில்‌ பல்துறைகளிலும்‌

சுடர்விட்டு அமரரான அறிஞர்‌ அ.ந.கந்தசாமியின்‌ கவிதைகளில்‌ "எதிர்காலச்‌ சித்தன்‌' என்னும்‌ கவிதை என்னைக்‌ கவர்ந்த அவரது கவிதைகளிலொன்று. அதனைத்‌ தழுவி எழுதப்பட்டுள்ளது இச்சிறுகதை. மறைந்த எழுத்தாளர்‌ சுஜாதா அவர்கள்‌ மீராவின்‌ 'எனக்கும்‌ உனக்கும்‌ ஒரே ஊர்‌. வாசுதேவ நல்லூர்‌ என்பதையே முதலாவது தமிழில்‌ வெளிவந்த அறிவியற்‌ கவிதையாகக்‌ குறிப்பிடுவார்‌. ஆனால்‌ அதற்கும்‌ பல வருடங்களுக்கு முன்னர்‌ வெளிவந்த ௮.ந.க.வின்‌ 'எதிர்காலச்‌ சித்தன்‌ கவிதையினையே

தமிழின்‌ முதலாவது அறிவியற்‌ கவிதையாக நான்‌ கருதுகின்றேன்‌. சுஜாதாவுக்கும்‌ அ.ந.க.வின்‌ மேற்படி கவிதை பற்றி தெரிந்திருந்தால்‌ அவரும்‌ அவ்விதமே கூறியிருப்பார்‌. மேற்படி கவ்தை நிகழ்கால மனிதன்‌ எதிர்கால மனிதன்‌ ஒருவனைச்‌ சந்தித்து, உரையாடித்‌ திரும்புவதைப்‌ பற்றி விபரிக்கிறது.]

எதிர்காலத்திரை நீக்கி நான்‌ காலத்தினூடு பயணித்தபொழுதுதான்‌ அவனைக்‌ கண்டேன்‌. அவன்‌ தான்‌ எதிர்கால மனிதன்‌. இரவியையொத்த ஒளிமுகத்தினைக்‌ கொண்டிருந்த அந்த எதிர்கால மனிதனின்‌ கண்களில்‌ கருணை ஊறியிருந்தது. அவன்‌ கூறினான்‌: "நிகழ்கால மனிதா! எதிர்கால உலகமிது. இங்கேன்‌ நீ வந்தாய்‌? இங்கு நீ காணும்‌ பலவும்‌ உன்னை அதிர்வெடி போல்‌ அலைக்கழிக்குமே. அப்பனே! அதனாலே நிகழ்காலம்‌ நீ செல்க!"

அறிவினில்‌ அடங்காத தாகம்‌ மிக்கவனாக எதிர்காலம்‌ ஏகிட்ட என்னைப்‌ பார்த்து இந்த எதிர்கால மனிதன்‌ கூறுகின்றான்‌ "நிகழ்காலம்‌ நீ செல்க" என்று. அவனுரையால்‌ என்‌ அறிவுத்‌ தாகம்‌ அடங்குமோ? அதனால்‌ நான்‌ பின்வருமாறு கூறினேன்‌: " திரண்டிருக்கும்‌ அறிவின்‌ சேர்க்கை வேண்டும்‌ செந்தமிழன்‌ நான்‌. குற்றமேதுமற்ற பேராண்மைக்‌ கோட்டை என்னை மலைவுறுத்தாது இந்த எதிர்காலம்‌. ஆதலால்‌ கவலையை விடு நண்பனே"

இவ்விதம்‌ கூறிவிட்டு குறுகுறுத்த விழிகளையுடைய சாமர்த்தியசாலியான அந்த எதிர்கால மனிதனின்‌ பெயரென்ன என்று வினவினேன்‌.

அதற்கவன்‌ பின்வருமாறு கூறினான்‌: "எனக்கு முன்னே சித்தர்கள்‌ பலர்‌ இருந்தாரப்பா!

பதிவுகள்‌ 02020

37 பதிவுகள்‌ 36 சிறுகதைகள்‌ (தொகுதி மூன்று

நானுமொரு சித்தன்‌. எதிர்காலச்‌ சித்தன்‌..... நிகழ்காலத்தவரான உன்னவரோ உனக்கு முன்னர்‌ வாழ்ந்திட்ட சித்தரல்லாது உன்‌ காலச்‌ சித்தரையும்‌ ஏற்காரப்பா.

இதனை நான்‌ எந்தவித மனக்குறையின்‌ காரணமாகவும்‌ கூறவில்லை. உன்‌ நிகழ்காலத்துக்‌ காசினியின்‌ பண்பிதுதானே. அதுதான்‌ அவ்விதம்‌ கூறினேன்‌."

இவ்விதம்‌ கூறிய வருங்காலச்‌ சித்தன்‌ மேலும்‌ எனக்குப்‌ பல கருத்துகளைப்‌ பகன்றான்‌. சித்தனவனுரைதனை இந்த மாநிலத்தாரும்‌ அறிதற்காய்‌ இங்கு நான்‌ விளக்கிக்‌ கூறுகிறேன்‌:

" பெரும்போர்கள்‌ விளையும்‌ உன்‌ நிகழ்காலத்தில்‌ பிளவுகளை ஏற்படுத்தும்‌ பல்வகைப்‌ பேதங்களுண்டு. ஒற்றுமையாக இணைய விரும்பும்‌ மானுடரை ஒன்றாக இணையவிடாது செய்யும்‌ அநியாய பேதங்களைக்‌ கூறுவேன்‌ கேள்‌. துண்டுபட்டிருக்கும்தேசங்கள்‌, தூய்மையான இனம்‌, மதம்‌, மொழி, மதமென்ற குறுகிய ம்னப்பாங்குள்ள கோட்பாடுகள்‌ .. இவை போன்ற பேதங்களெல்லாம்‌ உனது நிகழ்கால உலகில்‌ உள்ளன. அவை எல்லாம்‌ அர்த்தமில்லாப்‌ பிரிவினைகள்‌. அவை யாவும்‌ சாகும்‌ எனது எதிர்கால உலகில்‌. ஒன்றுபட்டு இவ்வுலகம்‌ ஒற்றையாகும்‌. ஒரு மொழி கொண்ட ஒரரசு பிறக்குமப்பா. அரசுகளெல்லாம்‌ ஒழிந்து இவ்வுலகில்‌ ஒரரசு உண்டாகும்‌. அறத்தினை வலியுறுத்தும்‌ ஒரு மதமே உலகெல்லாம்‌ நிலவும்‌. விரசங்களையும்‌, விகற்பங்களையும்‌ வ்ளர்க்குமொழிகள்‌ எல்லாம்‌ விழ்ந்து ஒருமொழியே பொது மொழியாக இவ்வுலகில்‌ இருக்கும்‌ செந்தமிழ்‌ மட்டுமல்ல, சிங்கள மொழியும்‌ சாகும்‌. இச்செகமெல்லாம்‌ ஒரேயொரு மொழியே தலைதூக்கி நிற்கும்‌. எந்த மொழி இவ்வுலகில்‌ நிலவுமெனக்‌ கேட்பீரானால்‌ என்‌ பதில்‌ எண்ணிக்கை அதிகம்‌ கொண்ட மொழியே அதிககாலம்‌ நின்று நிலைக்கப்‌ போகின்றது. அந்த மொழியே அரசாளும்‌. எதிர்காலத்தில்‌. உலகத்து மக்களெல்லாரும்‌ தம்மை ஏற்றத்தாழ்வுகளற்ற மனித இனம்‌ என்றே கருதுவர்‌. தம்மை மதம்‌, இனம்‌, மொழி போன்ற வேறுபாடுகளைக்‌ கொண்டு பிரித்துப்‌ பார்க்கும்‌ வழக்கம்‌ எனது எதிர்கால உலகில்‌ இல்லை. அரசர்கள்‌ , ஏழைகள்‌ , பணக்காரர்கள்‌ போன்ற அத்தனை பேதங்களும்‌ எதிர்கால உலகில்‌

ஒழிந்து விடும்‌. எம்‌ தமிழர்‌ இனம மட்டுமல்ல, பிற இனங்களும்‌ சாகும்‌. நாடெல்லாம்‌ மனித இனமென்ற ஒன்று மட்டுமே தலை தூக்கும்‌. எல்லோரும்‌ மானுடர்கள்‌. பிரிவினைகள்‌ ஒழிதல்‌ நன்றுதானே."

இவ்விதம்‌ வருங்காலச்‌ சித்தன்‌ கூறினான்‌. பின்னர்‌ அவன்‌ மேலும்‌ கூறுவான்‌: "உன்னவரான நிகழ்காலச்‌ செந்தமிழர்‌ இவற்றைக்‌ கேட்டால்‌ , நீசனே இவ்விதமாக இங்கு உரைக்காதே. செந்தமிழே உலகின்‌ புகழ்மொழியாய்‌, உலகத்தின்‌ பொதுமொழியுமாகும்‌ புதுமைதனைக்‌ காண்பீர்கள்‌ என்று கூறிடுவார்கள்‌. எதிர்காலச்‌ சித்தனான எனது உரையினை இகழ்ந்திடுவார்கள்‌. இம்மியளவேணும்‌ மானமில்லா மூர்க்கன்‌ நிகழ்காலத்தில்‌ மட்டுமிருந்திருந்தால்‌ என்ன செய்வதென்றறிந்திருப்போம்‌. அவன்‌ நெஞ்சு பிளந்தெறிந்திருப்போம்‌ என்றுமிகழ்ந்திடுவார்கள்‌"

பதிவுகள்‌ 02020

38 பதிவுகள்‌ 36 சிறுகதைகள்‌ (தொகுதி மூன்று

இவ்விதம்‌ கூறிய வருங்காலச்‌ சித்தன்‌ சிறிது நேர மெளனத்திற்குப்‌ பின்னர்‌ மேலும்‌ கூறுவான்‌: பிறப்பாலே நான்‌ தாழ்வுரைக்க மாட்டேன்‌. பிறப்பாலே என்‌ மொழியே சிறந்ததெனச்‌ சொல்லேன்‌. பிறப்பென்றன்‌ வசமோ? அது என்‌ வசமில்லை. அது பிரமத்தின்‌ வசமல்லவா? இந்நிலையில்‌ எவ்விதம்‌ நான்‌ அவ்விதம்‌ பிறப்பாலே பெருமையுற முடியும்‌? பீருவில்‌ பிறந்திருந்தால்‌ பீருமொழி பெருமையே. இத்தாலியில்‌ பிறந்திருந்தால்‌ இத்தாலி மொழி சிறப்பே. வெறி மிகுந்த உனது நிகழ்காலத்தவர்‌ இதனை உணமரமாட்டார்‌. விழழுக்கே பெருங்கலகம்‌ விளைவிக்கும்‌ உன்னவர்கள்‌ செய்வதென்ன? அறிவற்று துன்பங்களை அனைவருக்கும்‌ விளைவிக்கின்றார்கள்‌. ஐயய்யோ! இவரது மடைமையினை என்னவென்று கூறுவேன்‌?"

எதிர்காலச்‌ சித்தனின்‌ கூற்றிலுள்ள தர்க்கம்‌ என்னைப்‌ பிரமிக்க வைத்தது. புது யுகத்தின்‌ குரலாக அவ்னது குரல்‌ ஒலிப்பதாக எனக்குப்‌ பட்டது. இவ்விதம்‌ அவன்‌ கூறியதன்‌ பின்னர்‌ நான்‌ அவனைப்‌ பார்த்து இவ்விதம்‌ கேட்டேன்‌: " எதிர்காலச்‌ சித்தா!

உனது இனிய மொழி கேட்டேன்‌. மதி கெட்டு எம்மவர்கள்‌ வாழும்‌ நிகழ்கால உலகிற்கு என்னுடன்‌ நீ வந்து புதிய வாழ்வினையேற்றினாயென்றால்‌ அவரது எண்ணங்கள்‌ விரிவடையும்‌. அதற்காகவாவது நீ நிகழ்காலம்‌ வரவேண்டும்‌. அதுவே எனது

விருப்பம்‌. அதுவே பிளவுகளால்‌ முட்டி மோதிக்கொண்டிருக்கும்‌ நம்மவர்‌ ஒன்றுபட்டுச்‌ சிந்திக்க உதவும்‌."

இவ்விதமாக நான்‌ அவனை இறைஞ்சி நின்றேன்‌. அதனைக்‌ கண்ட எதிர்காலச்‌ சித்தனின்‌ செவ்விதழ்கள்‌ மெதுவாகத்‌ திறந்தன. அங்கே மென்முறுவலொன்று பிறந்ததைக்‌ கண்டேன்‌. அத்துடன்‌ மீண்டும்‌ அந்த வருங்காலச்‌ சித்தன்‌ என்னைப்‌ பார்த்து

கீழுள்ளவாறு கூறலானான்‌: "காலக்‌ கடல்‌ தாவி நீ இங்கு வந்திருக்கின்றாய்‌. அதன்‌ காரணமாக எது உண்மையான அறிவென்பதைக்‌ கண்டாய்‌. ஆனால்‌ நிகழ்கால மயக்கத்தில்‌ வாழும்‌ உன்‌ நிகழ்கால மானுடர்‌ உண்மையான ஞானத்தினை, அறிவினைக்‌

காண்பாரோ? காணார்களப்பா! காலத்தைத்‌ தாண்டி காசினிக்கு நான்‌ வந்தால்‌ கட்டாயம்‌ என்னை அவர்கள்‌ ஏற்றி மிதித்திடுவார்கள்‌. பகுத்தறிவுக்காகக்‌ குரல்கொடுத்த சோக்கிரதரையே அன்று ஆலத்தைத்‌ தந்து கொன்றவர்கள்‌ உனது மானுடச்‌ சோதரர்களன்றோ? ஆதலினால்‌ நிகழ்கால மானுடனே! அங்கு நான்‌ வரேன்‌. நீ மீண்டும்‌ அங்கு செல்வாயாக"

இவ்விதம்‌ கூறிய வருங்காலச்‌ சித்தனின்பால்‌ என்னிடத்தில்‌ அன்பு ஊற்றெடுத்தது. அந்த அன்பு மீதுறவே அவனது கமலம்‌ போன்ற பாதங்களைத்‌ தொட்டுக்‌ கண்களிலொற்றி விடைபெற்றேன்‌. அவன்‌ மட்டும்‌ என்‌ நிகழ்காலத்திற்கு வருவானென்றால்‌

எவ்விதம்‌ நன்றாகவிருக்கும்‌. அறிவுக்‌ கடலான அவனால்‌ , ஞானசூன்யங்களாக விளங்கும்‌ நம்மவர்கள்‌ எவ்வளவு பயன்களைப்‌ பெறமுடியும்‌. அறியாமையிலிருக்கும்‌ நம்மவர்‌ அவனுரையினை அறிவதற்குரிய பக்குவமற்றுத்தானே இன்னும்‌ இருக்கிறார்கள்‌.

பதிவுகள்‌ 02020

39 பதிவுகள்‌ 36 சிறுகதைகள்‌ (தொகுதி மூன்று

ஆயிரக்கணக்கன வருடங்களுக்கு முன்னர்‌ விடத்தைக்‌ கொடுத்து சோக்கிரதரைக்‌ கொன்றார்களே அன்றைய ஆட்சியாளர்கள்‌. எதற்கு. இன்றும்‌ அதுதானே நடக்கிறது. இந்நிலையில்‌ அவன்‌ வர மறுத்ததிலும்‌ ஒரு நியாயம்‌ இருக்கத்தான்‌ செய்கிறது."

அச்சமயம்‌ .... என்ன ஆச்சரியம்‌! காலத்திரை நீங்கிற்று.

பாதகர்களின்‌ முழு மடைமைப்‌ போர்களால்‌ சூழந்துள்ள இந்தப்‌ பாருக்கு, பூமிக்கு, நிகழ்காலத்துக்கு நான்‌ மீண்டும்‌ வந்தேன்‌. வந்தவன்‌ எங்கும்‌ தீதுகளே நடம்புரியும்‌ நிலை கண்டேன்‌; திடுக்கிட்டேன்‌. பிளவுகளற்ற , மானுடர்களென்றரீ தியில்‌ இணைந்து,

வாழும்‌ எதிர்காலச்‌ சித்தனுலகம்‌ பற்றி ஒரு கணம்‌ எண்ணிப்‌ பார்த்தேன்‌. மடைமையில்‌ மூழ்கிக்‌ கிடக்கும்‌ இந்த நிகழ்கால உலகமெங்கே! அவனது உலகமெங்கே!

என்றிவர்கள்‌ உணமை காண்பாரோ? ngiri2704@rogers.com

மூலம்‌: எதிர்காலச்‌ சித்தன்‌ பாடல்‌! - அ.ந.கந்தசாமி பதிவுகள்‌, ஜூலை 2010 இதழ்‌ 127

1. எதிர்காலச்‌ சித்தன்‌ பாடல்‌! - அ.ந.கந்தசாமி -

எதிர்காலத்‌ திரைநீக்கி அதற்கப்‌ பால்யான்‌ ஏகிட்டேன்‌ ஏகிட்ட போதில்‌ என்முன்‌ கதிர்போலும்‌ ஒளிமுகத்தான்‌ கருணையூறும்‌ கமலம்போற்‌ கண்ணினையான்‌ ஒருவன்‌ வந்தான்‌ "எதிர்கால உலகமிது மனிதா நீயிங்‌ கேன்வந்தாய்‌ இவண்காணும்‌ பலவுமுன்னை அதிர்வெடி போல்‌ அலைக்கழிக்கும்‌ ஆதலாலே அப்பனே நிகழ்காலம்‌ செல்க" என்றான்‌.

அறிவினிலே அடங்காத தாகம்‌ கொண்டேன்‌ அவ்வுரையால்‌ அடங்கவில்லை அவனை நோக்கிச்‌ 'செறிவுற்ற பேரறிவின்‌ சேர்க்கை வேண்டும்‌ செந்தமிழன்‌ யானொருவன்‌ ஆதலாலே

மறுவற்ற பேராண்மைக்கோட்டை என்னை மலைவுறுத்தா தெதிர்காலம்‌" என்று கூறிக்‌ குறுகுறுத்த விழியுடையான்‌ குழுத வியான்‌

பதிவுகள்‌ 02020

40 பதிவுகள்‌ 36 சிறுகதைகள்‌ (தொகுதி மூன்று

குணமென்ன பெயரென்ன என்று கேட்டேன்‌.

"எனக்குமுன்னே சித்தர்பலர்‌ இருந்தா ரப்பா எதிர்காலச்‌ சித்தன்யான்‌ நிகழ்காலத்தர்‌ உனக்குழுன்னர்‌ வாழ்ந்திட்ட சித்த ரல்லால்‌ உன்காலச்‌ சித்தரையும்‌ ஏற்கா ரப்பா மனக்குறைவால்‌ கூறவில்லை மகிதலத்தில்‌ மடமையொரு மயக்கத்தின்‌ ஆட்சி என்றும்‌ கனத்துளதிங்‌ கென்பதையே கருதிச்‌ சொன்னேன்‌ காசினியின்‌ பண்பிதனைக்‌ காணப்பா நீ.

வருங்காலச்‌ சித்தனுரை செய்த வார்த்தை வையகத்தார்‌ அறிதற்காய்‌ இங்கு சொல்வேன்‌ "பெரும்போர்கள்‌ விளைகின்ற நிகழ்காலத்தில்‌ பிளவுறுத்தும்‌ பலவகையாம்‌ பேதமுண்டு ஒருமைபெறும்‌ மனிதர்களை ஒன்றா வண்ணம்‌ ஊடமைத்த சுவரனைய பேதம்‌ யாவும்‌ நோக்கிடுவாய்‌ தூரஎதிர்‌ கால மீதே"

அண்டுபவர்‌ அண்டாது செய்வதேது

அநியாய பேதங்கள்‌ பெயரைச்‌ சொல்வேன்‌ துண்டுபட்டுத்‌ தேசங்கள்‌ என்றிருத்தல்‌ தூய்மையாம்‌ இனம்மொழிகள்‌ மதங்க ளென்று அன்றுதொட்டிங்‌ கின்றுவரை இருக்குமந்த அர்த்தமிலாப்‌ பிரிவினைகள்‌ எல்லாம்‌ சாகும்‌. ஒன்றுபட்டிவ்‌ வுலகெல்லாம்‌ ஒற்றையாகும்‌ ஒருமொழியில்‌ ஒரரசு புரக்குமப்பா.

அரசெல்லாம்‌ ஒழிந்துலகில்‌ ஓரரசே யுண்டாம்‌ அறங்கூறும்‌ ஒருமதமே உலகெல்லாம்‌ ஆகும்‌ விரசமொடு விகற்பங்கள்‌ வளர்க்குமொழி எல்லாம்‌ விழ்ந்துவிடும்‌ ஒருமொழியே இவ்வுலகில்‌ உண்டாம்‌ சரசமொடு உலகத்து மககளெல்லாம்‌ தம்மைச்‌ சமானர்கள்‌ மனிதகுலம்‌ என்ற இன மென்பார்‌ அரசர்கள்‌ ஏழைபணக்காரனென்ற பேதம்‌ அத்தனையும்‌ ஒழிந்து விடும்‌ எதிர்கால உலகில்‌.

பதிவுகள்‌ 02020

41 பதிவுகள்‌ 36 சிறுகதைகள்‌ (தொகுதி மூன்று

செந்தமிழும்‌ சாமீழச்‌ சிங்களமும்‌ சாகும்‌ செகமெல்லாம்‌ ஒருமொழியே தலை தூக்கி நிற்கும்‌. நந்தமிழர்‌ இனஞ்சாகும்‌ பிற இனமும்‌ சாகும்‌ நாடெல்லாம்‌ மனித இனம்‌ ஒன்றுதலை தூக்கும்‌. எந்தமொழி இவ்வுலகில்‌ நிலவுமெனக்‌ கேட்பில்‌ எண்ணிக்கை கொண்டமொழி எம்மொழியோ இங்கு அந்த மொழி தானப்பா அரசாளும்‌ உண்மை அதுநன்று தானப்பா பிரிவினைகள்‌ ஒழிதல்‌.

நிகழ்காலச்‌ செந்தமிழர்‌ இது கேட்டுச்‌ சீறி

நீசனுரை நிகழ்த்தாதே செந்தமிழே உலகின்‌ புகழ்மொழியாய்‌ உலகத்தின்‌ பொது மொழியும்‌ ஆகும்‌ புதுமைதனை காண்பீர்கள்‌ என்றுபுகன்‌ றிடுவார்‌. இகழ்ந்திடுவார்‌ எதிர்காலச்‌ சித்தனுரை தன்னை இம்மியள வேணும்‌ மானமில்லா மூர்க்கன்‌ நிகழ்காலத்‌ திருந்திருந்தால்‌ செய்வதறிந்திடுவோம்‌. நெஞ்சுபிளரந்‌ தெறிந்திருப்போம்‌ என்றிகழ்த்திடுவார்‌.

பிறப்பாலே யானுயர்வு தாழ்வுரைக்க மாட்டேன்‌ பிறப்பாலே என்மொழியே சிறந்ததெனச்‌ சொல்லேன்‌. பிறப்பென்றன்‌ வசமாமோ? பிரமத்தின்‌ வசமாம்‌. பீருவில்‌ பிறந்திருந்தால்‌ பீருமொழி பீடே வெறிமிகுந்த நிகழ்காலத்‌ தீதுணரமாட்டார்‌ விழழுக்கே பெருங்கலகம்‌ விளக்கின்றார்‌ அன்னார்‌ அறிவற்றே துன்பங்கள்‌ அனவர்க்கும்‌ விளைப்பவர்‌ ஐய்யய்யோ இவர்மடமை என்னென்று சொல்வேன்‌.

புதுயுகத்தின்‌ குரல்போல்‌ எதிர்காலச்‌ சித்தன்‌ புகன்றமொழி கேட்டபின்னர்‌ யானவனைப்‌ பார்த்து "எதிர்காலச்‌ சித்தா உன்‌ இனியமொழி கேட்டேன்‌. எண்ணங்கள்‌ விரிவடையும்‌ என்னுடன்‌ நீவந்து

மதி கெட்டார்‌ வாழ்கின்ற வையகத்தில்‌ புதிய வாழ்வேற்றிச்செல்வாயோ என்றிறைஞ்சி நிற்க மெதுவாகச்‌ செவ்விதழ்கள்‌ திறந்ததையுமங்கே மென்னிலவுக்‌ குஞ்சிரிப்புப்‌ பிறந்ததையும்‌ கண்டேன்‌.

காலத்தின்‌ கடல்‌ தாவி நீங்கு வந்த

பதிவுகள்‌ 02020

42 பதிவுகள்‌ 36 சிறுகதைகள்‌ (தொகுதி மூன்று

காரணத்தால்‌ ஏதறிவு என்பதை நீ கண்டாய்‌ ஞாலத்தில்‌ நிகழ்கால மயக்கத்தி ஓலுள்ளோர்‌. ஞானத்தைக்‌ காண்பாரோ? காணார்களப்பா காலத்தை யான்தாண்டிக்‌ காசினிக்கு வந்தால்‌ கட்டாயம்‌ எனையவர்கள்‌ ஏற்றிமிதித்திடுவார்‌ ஆலத்தைத்‌ தந்தன்று சோக்கிரதரைக்‌ கொன்ற அன்பர்களுன்‌ மனிதச்‌ சோதரர்களன்றோ?

ஆதலினால்‌ நிகழ்கால மனிதா அங்கு யான்வரேன்‌ நீபோவாய்‌ என்றான்‌ ஜயன்‌ காதலினால்‌ கால்களென்னும்‌ கமலம்‌ தொட்டுக்‌ கண்ணொற்றி விடைபெற்றேன்‌ திரை நீங்கிற்று. பாதகர்கள்‌ முழுமடைமைப்‌ போர்கள்‌ சூழும்‌ பாருக்கு நிகழ்காலம்‌ வந்தேன்‌ எங்கும்‌ தீதுகளே நடம்புரியும்‌ நிலைமை கண்டு திடுக்கிட்டேன்‌ என்றிவர்கள்‌ உண்மைகாண்டல்‌?

- தேன்மொழி -

பதிவுகள்‌ 02020

43 பதிவுகள்‌ 36 சிறுகதைகள்‌ (தொகுதி மூன்று

6. ஒரு புதிய உலகம்‌ அல்லது புதியதோர்‌ உலகம்‌ - ஆங்கிலத்தில்‌ எழுதியவர்‌ : சிவகாமி விஜேந்திரா & தமிழில்‌ : லதா ராமகிருஷ்ணன்‌

! டொரண்டோ ஸ்டார்‌ நடாத்திய 'ஸ்டார்சிப்‌ சிறுகதைப்‌ போட்டியில்‌ பரிசுபெற்ற சிறுகதை (£௭௦௦ Star Starship Contest Winner); தலைப்பு: A NEW WORLD J]

ஒரு புதிய உலகம்‌ அல்லது புதியதோர்‌ உலகம்‌அந்த வெதுவெதுப்பான புழுக்கமான ஏவுகணைக்கூடு ஆரம்பத்தில்‌ வசதியாகத்‌ தான்‌ இருந்தது. ஆனால்‌ எட்டுமாதங்களுக்கும்‌ மேல்‌ ஆகிவிட்ட பிறகு அத்தனை சிறிய, உருண்டையான்‌ அமைவிடத்தைக்‌

குறிக்க வசதியானது என்ற வார்த்தை ஆகச்‌ சிறந்த சொல்லாட்சியாக அமைய வழியில்லை என்பதைக்‌ கண்டறிந்துகொண்டான்‌. தொடக்கத்தில்‌ அங்கிருந்த சுய- உணவளிப்புக்‌ கருவி குறித்தும்‌, சிந்தனையும்‌, செயலும்‌ வெகு அபூர்வமாகவே தேவைப்படுவதான, பெரும்பாலான நேரங்களில்‌ ஓய்வெடுத்துக்கொண்டு இருக்கும்படியான வாழ்முறை குறித்தும்‌ அவனுக்கு மிகுந்த ஆர்வம்‌ இருந்தது. ஆனால்‌, காலம்‌ செல்லச்செல்ல அந்தக்‌ குறுகலான வெளி அவனுடைய பொறுமையின்‌ மீது பாரமாக அழுந்தியது. இயல்பிலேயே சுறுசுறுப்பானவனாக இருந்தவன்‌ என்பதால்‌ அவன்‌ தன்னுடைய இந்த இயந்திரத்தனமான செயற்பகுதியை பூர்த்தி செய்து முடித்துவிட்டு ஆய்வலசல்களில்‌ ஈடுபட ஏங்கினான்‌.

நூற்றாண்டுக்கணக்காய்‌, அவன்‌ உருவானதற்கு முந்தைய காலகட்டங்களில்‌ மற்றவர்களால்‌ ஆர்வமாக அனுபவங்கொள்ளப்பட்டுவந்த தனது போக்குவரத்து உபகரணத்தின்‌ விரித்துநீட்டக்‌ கூடிய சுவர்களுக்குள்‌ ஆழ அமிழ்ந்துகொண்டு அந்தச்‌ சுவர்கள்‌ இப்பொழுதிருப்பதைவிட பன்மடங்கு பெரியதாகத்‌ தோற்றமளித்த ஒரு காலகட்டத்தை அவன்‌ நினைவுபடுத்திக்கொண்டான்‌. இப்பொழுது ஏன்‌ அவன்‌ இத்தனை நெரிசலாக, குறுக்கப்பட்டுத்‌ திணிக்கப்பட்டிருப்பதாக உணர்ந்தான்‌? சுவரின்‌ மீது ஆத்திரமாக எட்டி உதைத்தவன்‌, அது மெதுவே , ஒரு திணறும்‌ மூச்சொலி எதிர்ப்பாய்‌ கிளம்ப, சற்றே ஒதுங்கிக்கொள்வதைப்‌ போல்‌ உணர்ந்தான்‌. பின்‌, அவன்‌ சந்திக்கப்போகும்‌ உயிரினங்கள்‌ அவனிடம்‌ எதிர்பார்க்கும்‌ கண்ணியமும்‌, நற்பண்பும்‌ நினைவுக்கு

வந்தவனாய்‌, அவன்‌ மீண்டும்‌ தன்னைக்‌ கிடத்திக்கொண்டு சிறு உறக்கத்தில்‌ குறட்டைவிட முயற்சிசெய்தான்‌.

அவன்‌ ஒரு முக்கியப்‌ பணியை மேற்கொண்டிருந்தான்‌. அவனுக்கு முன்‌ எத்தனையோ பேர்‌ மேற்கொண்ட பணித்திட்டம்‌ அது. இந்தக்‌ கூட்டிலிருந்து அவன்‌ இறுதியாக வெளிமேறியதும்‌ புதிய உலகத்தைத்‌ துருவியாராய்வது அவனுடைய பொறுப்பாகத்‌ தரப்பட்டிருந்தது. மேலும்‌, அங்கே இருக்கவேண்டிய காலம்‌ முடியுமட்டும்‌ அவன்‌ அந்தப்‌ புதிய உலகத்தில்‌ ஆகச்சிறந்த வாழ்வு வாழ வேண்டும்‌. ஒரு புதிய மொழியைக்‌ கற்றுக்கொள்வதற்கும்‌, ஒரு புதிய கோணத்தில்‌, வழியில்‌ சிந்திக்கக்‌

பதிவுகள்‌ 02020

44 பதிவுகள்‌ 36 சிறுகதைகள்‌ (தொகுதி மூன்று

கற்றுக்கொள்ளவும்‌ அவன்‌ தயாராயிருந்தான்‌; வினோதமான உணவுப்பண்டங்களைச்‌ சாப்பிடவும்‌, புதிய வெளிகளில்‌ நடக்கவும்‌ அவன்‌ சித்தமாயிருந்தான்‌. இந்தப்‌ பணித்திட்டத்தில்‌ அவன்‌ எதிர்பார்த்திராத ஒன்று, தனது இலக்காக அமைந்த இடத்தைச்‌ சென்றடைவதற்கு முன்பாக அவன்‌ கடக்கவேண்டியதாக இருக்கும்‌ சழ்நிலைமைகள்‌ தான்‌ அவனைச்‌ சுற்றியிருந்த சுவர்கள்‌ திடுமென தாமாகவே நகர்ந்தன. நீள்‌-நெடுங்காலமாய்‌ ஆவலோடு எதிர்பார்த்துக்‌ காத்திருந்த அந்தத்‌ தருணம்‌ வந்துவிட்டதோ?

அந்த ஏவுகணைக்கூட்டின்‌ முனகல்களும்‌, அசைவுகளும்மெதுவாக அவனை நோக்கிப்‌ பெயரத்‌ தொடங்கியவுடன்‌ “ஆமாம்‌”, என்று பரவசத்தோடு தீர்மானித்துக்கொண்டான்‌ அவன்‌. ஒருவழியாக, 'பயணம்‌ முடிவுக்கு வந்துவிட்டது. அவன்‌ ஒரு புதிய

உலகத்தை அனுபவங்கொள்ளப்போகிறான்‌. நீண்ட காலம்‌ அசைவற்று இருந்துவிட்ட காரணத்தால்‌ மிகுந்த சிரமத்தோடும்‌ கொஞ்சம்‌ உடல்வலியோடும்‌ அவன்‌ மெதுவே வெளியே வந்து அந்தப்‌ புதிய உலகின்‌ வினோசதச்‌ சூழலை முதன்முறையாக ஆழ்ந்து சுவாசித்தான்‌. தனது பின்புறத்தில்‌ சுளீரென்ற ஒரு வலி ஏற்பட்டது அவனுக்கு. என்றாலும்‌, சில கணங்கள்‌ மட்டுமே வலியில்‌ வீறிட்டவன்‌ அதன்பின்‌ தன்னைச்‌ சுற்றி ஆர்வதோடு பார்வையை செலுத்தத்தொடங்கினான்‌.

சுற்றிலுமிருந்த உயிரினங்கள்‌ அவன்‌ கற்பனை செய்திருந்ததைக்‌ காட்டிலும்‌ பன்மடங்கு வினோதமாக இருந்தன. அவனோடு ஒப்புநோக்க, அவை பிரம்மாண்டமாக இருந்தன. பச்சை, நீலம்‌ அல்லது வெள்ளை நிறத்தில்‌ இருந்தன. அவை அவன்‌ மேல்‌

கவிந்தபோது, அவற்றின்‌ முக நிறம்‌ உடலின்‌ நிறத்தைவிட வேறாக அமைந்திருந்ததை அவனால்‌ பார்க்க முடிந்தது. அவனுடைய பின்பக்கத்தின்‌ அருகில்‌ ஒரு வயதான தம்பதியர்‌ வட்டமிட்டுக்கொண்டிருக்க, இளந்தம்பதியர்‌ இன்னும்‌ அருகில்‌ இருந்தனர்‌.

அவர்கள்‌ ஆர்வக்குறுகுறுப்போடு அவனைக்‌ கவனித்துக்‌ கொண்டிருக்க, அவன்‌ அவர்களைக்‌ கண்டதில்‌ தனக்கு ஏற்பட்டிருக்கும்‌ மட்டற்ற மகிழ்ச்சியையும்‌, தன்னுடைய பணித்திட்டம்‌ இருதரப்பினருக்கும்‌ வெற்றிகரமாக அமையும்‌ என்ற தனது நம்பிக்கையையும்‌ அவர்களிடம்‌ தெரியப்படுத்த முயன்றான்‌. இருந்தபோதிலும்‌, அவனுடைய மொழி அந்தப்‌ புதிய உயிரினங்களைத்‌ தொந்தரவு செய்வதாய்‌ தோன்றியது, ஏனெனில்‌, அங்கே சூழல்‌ மிகவும்‌ பரபரப்பாக இருந்தது. தங்களுடைய அந்நியமொழியில்‌ பேசியவாறு அந்த உயிரிகள்‌ அங்குமிங்கும்‌ மிகவும்‌ பரபரப்பாகப்‌ போய்வந்துகொண்டிருந்தன. இதில்‌ சில நிமிடங்கள்‌ கழிந்தோடிய நிலையில்‌ அவனுடைய உணவு செலுத்தப்படும்‌ நீள்‌-குழாய்கள்‌ ஏவுகணையிலிருந்து துண்டிக்கப்பட்டு அவன்‌ ஒவ்வொரு உயிரியிடத்தும்‌ செலுத்தப்பட்டுக்கொண்டிருந்தான்‌. இது ஒருக்கால்‌ அவனை மரியாதை செய்வதற்காக நடத்தப்பட்டதாயிருக்கும்‌, தங்களை அவன்‌ நன்றாகப்‌ பார்த்துக்கொள்ள அவனுக்கு ஒரு நல்ல வாய்ப்பை ஏற்படுத்தித்‌ தர அவை விரும்பினவாயிருக்கும்‌.

இறுதியாக, அவன்‌ எந்தப்‌ பகுதியில்‌ வந்திறங்கினானோ அந்தப்‌ பகுதியில்‌ கொண்டுவந்து இருத்தப்பட்டான்‌. அவன்‌ இறுக்கம்‌ தளர்ந்தது; இங்கே, இந்தத்‌ திறந்த வெளியில்‌ தனது

பதிவுகள்‌ ©2020

45 பதிவுகள்‌ 36 சிறுகதைகள்‌ (தொகுதி மூன்று

விசித்திரமான ரசிகர்களை வெகுதொலைவிலிருந்து அவனால்‌ பார்க்க

முடியும்‌. ஆனால்‌, வருந்தத்தக்க வகையில்‌, தன்னால்‌ அசையவே முடியவில்லை என்பது அவனுக்குத்‌ தெரியவந்தது. ஆனால்‌, பிரயாணத்தின்‌ இறுக்கம்‌ விலகியவுடன்‌ அதுவும்‌ மாறிவிடலாம்‌ அந்த வயதான தம்பதியர்‌ தயக்கத்தோடு முன்னோக்கி

அடியெடுத்து வைத்தனர்‌, அவனுடைய போக்குவரத்து வாகனம்‌ திடுமென நகர ஆரம்பித்து, ஒரு ஆச்சரியகரமான அளவு இதமான சைகையொன்றால்‌ அவனையும்‌ தன்னுள்‌ இழுத்துக்கொண்டது. அவனைச்‌ சுற்றியிருந்த அந்த உயிரினங்களின்‌

மர்மப்புதிரான மொழியிலிருந்த்து குறிப்பிடத்தக்க அளவு வேறுபட்ட ஒலிகளை எழுப்பியவாறே , அது தன்னை நோக்கி முன்னேறிக்கொண்டிருந்த வயதான தம்பதியினரிடம்‌ கூறியது: அம்மா...அப்பா... உங்களுடைய புதிய பேரப்பிள்ளையை சந்தியுங்கள்‌

அனுப்பியவர்‌: ஸ்ரீரஞ்சனி விஜேந்திரா

sri.vie@gmail.com

பதிவுகள்‌, ஜூலை 2010 இதழ்‌ 127

பதிவுகள்‌ 02020

46 பதிவுகள்‌ 36 சிறுகதைகள்‌ (தொகுதி மூன்று) 7. ஒரு விபத்து; சில நிகழ்வுகள்‌ -- சோ.சுப்புராஜ்‌ -

சோ.சுப்புராஜ்மறக்கவே முடியாதபடி மனதில்‌ ஆழப்‌ பதிந்து போனது இந்த வருஷ (ஹோலிப்‌ பண்டிகை. ஹோலி; ஹோலி என்று ஜாலியாய்க்‌ கூவியபடி ஆண்களும்‌ பெண்களும்‌ ஒருவர்‌ மீது ஒருவர்‌ வண்ணப்‌ பொடிகளை வாரி இறைத்தும்‌,

சித்தாள்ப்‌ பெண்கள்‌ ஹோலிப்‌ பாடல்கள்‌ பாடி என்ஜீனியர்களிடமும்‌ ஆபிஸர்களிடமும்‌ காசு கேட்டுக்‌ கலாய்த்துக்‌ கொண்டும்‌ சந்தோஷமாய்‌ அலைந்து கொண்டிருந்த போது, விதி எல்லோருடைய முகங்களிலும்‌ கரியைப்‌ பூசி அழகு பார்த்த கறுப்பு

தினமானது அன்றைக்கு. ஹோலிப்‌ பண்டிகைக்‌ கொண்டாட்டங்களும்‌ மகிழ்ச்சி ஆரவாரங்களும்‌ ஒரு பக்கம்‌ உற்சாகமாக அரங்கேறிக்‌ கொண்டிருக்க, இன்னொரு பக்கம்‌ பால்ராஜும்‌, நரேந்திரனும்‌ மறுநாள்‌ போட வேண்டிய சிலாப்‌ கான்கிரிட்டுக்கான

ஆயத்தப்‌ பணிகளில்‌ மும்முரமாய்‌ இருந்தார்கள்‌. அப்போது திடீரென்று வேலை ஆட்களின்‌ கூடரங்களிலிருந்து அழுகையும்‌ கூச்சலுமாய்‌ சத்தம்‌ கேட்கத்‌ தொடங்கவும்‌ ஏதோ விபரீதம்‌ என்று புரிந்து இருவரும்‌ கூடாரம்‌ நோக்கி ஓடினார்கள்‌.

வேலை ஆட்களின்‌ உபயோகத்திற்காகக்‌ கட்டப்‌ பட்டிருந்த தண்ணீர்‌ தொட்டியின்‌ இரண்டு சுவர்கள்‌ அப்படியே சரிந்து அப்போது குளித்துக்‌ கொண்டும்‌ தண்ணீர்‌ பிடித்துக்‌ கொண்டு மிருந்தவர்களின்‌ மீது விழுந்து ஆண்களும்‌ பெண்களும்‌ குழந்தைகளும்‌ விழுந்த சுவற்றிற்கு அடியில்‌ மாட்டிக்‌ கொண்டு உயிருக்குப்‌ போராடிக்‌ கொண்டிருந்தார்கள்‌. பார்த்த மாத்திரத்திலேயே எல்லோருக்கும்‌ நெஞ்சு பதறியது. தண்ணீர்த்‌ தொட்டியில்‌ நீர்‌ நிரப்பிய டேங்க்கர்‌ லாரி ஒன்று அவசர அவசரமாக வெளியேறிக்‌

கொண்டிருந்தது.

சூழல்‌ முழுக்க பதட்டமும்‌ அழுகையும்‌ அவசர ஓட்டங்களுமாய்‌ இருந்தது. எல்லோரும்‌ தங்கள்‌ தங்கள்‌ குழந்தை குட்டிகளும்‌, உறவினர்களும்‌ பத்திரமாய்‌ இருக்கிறார்களா என்று பார்த்துக்‌ கொண்டார்கள்‌. தைரியமான சிலர்‌, இடிபாடுகளுக்கிடையில்‌ சிக்கிக்‌ கொண்டிருந்தவர்களை வெளி யில்‌ இழுத்துப்‌ போட்டுக்‌ கொண்டிருந்தார்கள்‌. விழாது நின்று கொண்டிருந்த மற்ற இரண்டு சுவர்களும்‌ எப்போதும்‌ விழுந்து விடலாம்‌ என்பது போல்‌ நிறைய விரிசல்களுடன்‌ பயமுறுத்திக்‌ கொண்டிருந்தன.

“பத்துப்‌ பேர்ருக்கு மேல செத்துட்டாங்க போலருக்கு...”

“இன்னும்‌ கூட இருக்கும்கிறாங்க; குறைஞ்சது இருபது பேர்‌ காலின்னு பேசிக்கிறாங்க” “அதெல்லாம்‌ சும்மா யாரோ பீதியக்‌ கெளப்பி விடுறாங்க; உயிர்ச்‌ சேதமெல்லாம்‌ ஒண்ணுமில்ல; கொஞ்சப்‌ பேருக்கு அடி பட்டுருக்கு அவ்வளவு தான்‌...” பலரும்‌ பலவிதமாய்க்‌ கூடிக்கூடிப்‌ பேசினார்கள்‌. உண்மை நிலவரம்‌ யாருக்கும்‌ தெரிய வில்லை.

பதிவுகள்‌ 02020

47 பதிவுகள்‌ 36 சிறுகதைகள்‌ (தொகுதி மூன்று

எல்லாம்‌ அனுமானங்கள்‌, கைகால்‌ முளைத்து கதைகளாகி உலவத்‌ தொடங்கின.

அரசு அலுவலர்களுக்கான அடுக்குமாடிக்‌ குடியிருப்புகள்‌ கட்டும்‌ பணி அது. ஹைதராபாத்‌ கம்பெனிக்கு டெண்டர்‌ கிடைத்து அப்போது தான்‌ வேலைகள்‌ தொடங்கி இருந்தன.பெரும்பாலான கட்டிடத்‌ தொழிலாளர்கள்‌ ஹைதராபாத்திலிருருந்தே வரவழைக்கப்பட்டு, அவர்களும்‌ வேலைத்தளத்திலேயே கூடாரங்கள்‌ அமைத்துத்‌ தங்க வைக்கப்‌ பட்டிருந்தார்கள்‌. அந்தத்‌ தொழிலாளர்களின்‌ உபயோகத்திற்காகக்‌ கட்டப்‌ பட்டிருந்த தண்ணீர்த்‌ தொட்டிதான்‌, டேங்க்கர்‌ லாரி மூலம்‌ தண்ணீர்‌ நிரப்பப்‌ பட்டுக்‌ கொண்டிருந்தபோது இடிந்து விழுந்து விட்டது. செய்தி கேள்விப்‌ பட்டதும்‌ கம்பெனியின்‌ முக்கியப்‌ பொறுப்பிலிருந்தவர்கள்‌ எல்லோரும்‌ அடித்துப்‌ பிடித்துக்‌ கொண்டு சம்பவ இடத்திற்கு ஓடி வந்தார்கள்‌.

“ஏதாவது வண்டி ஏற்பாடு பண்ணுங்க; அடிபட்டவங்கள ஆசுப்பத்திரிக்குக்‌ கொண்டு போகலாம்‌...” யாரோ ஒருத்தர்‌ சத்தம்‌ போடவும்‌, சிலர்‌ ரோட்டை வழிமறித்து அப்போது அந்த வழியாய்ப்‌ போன சரக்குகள்‌ ஏற்றும்‌ மினிவேன்‌ ஒன்றை நிறுத்தினார்கள்‌. கைகால்‌ நசுங்கிய, மண்டையில்‌ அடிபட்ட மற்றும்‌ பயத்திலேயே மயக்கமாகி விட்ட என்று மொத்தம்‌ பதினெட்டு உடல்களை வேனில்‌ வரிசையாகப்‌ படுக்க வைத்தார்கள்‌.வேனின்‌ டிரைவர்‌ முனகிக்‌ கொண்டிருந்தான்‌. “இதென்ன அக்கிரமமா இருக்கு? வண்டி யெல்லாம்‌ ஒரே இரத்தமா வேற ஆக்குறாங்களே! எங்க ஒனருக்கு யாரு பதில்‌ சொல்றது?”

“கொஞ்சம்‌ உதவி பண்ணுப்பா, உன்‌ வேனுக்கு உண்டான வாடகைய செட்டில்‌ பண்ணீடு றோம்‌; உன்‌ வண்டியையும்‌ அப்புறம்‌ மேல நாங்களே கழுவிக்‌ கொடுத்துடுறோம்‌..” என்று அவனை சமாதானப்‌ படுத்தினார்‌ திவாகர்‌ ராவ்‌ - கம்பெனியின்‌ அட்மினிஸ்ட்ரேஷன்‌ மேனேஜர்‌. அப்புறம்‌ அவனிடம்‌ “இது விபத்துக்‌ கேஸா இருக்குறதால பிரைவேட்‌ ஆஸ்பத்திரியில எடுத்துக்க மாட்டாங்க...அதால நேரா ஜி.ஹெச்சுக்கே கொண்டு போயிரு...” என்றார்‌.

“ஏன்‌ செலவாகும்னு பாக்குறீங்களாக்கும்‌! அவ்வளவு தூரம்‌ ஜி.ஹெச்சுக்குக்‌ கொண்டு போனா, போற வழியிலேயே பாதி உயிர்‌ போயிடும்‌; அதால பக்கத்துல இருக்குற தனியார்‌ ஆஸ்பத்திரிக்கே கொண்டு போகச்‌ சொல்லுங்க...” உண்ர்ச்சி மேலிட உரிமையாய்ச்‌ சொன்னார்‌ அடிபட்டுக்‌ கிடப்பவர்களின்‌ உறவினர்‌ ஒருவர்‌.

அவர்‌ சொன்னதைக்‌ கேட்டதும்‌ திவாகரின்‌ முகம்‌ சட்டென்று விழுந்து விட்டது. "பணம்‌ பெரிசில்ல; எத்தனை கோடி செலவானாலும்‌ கம்பெனி மூலம்‌ நான்‌ ஏற்பாடு பண்றேன்‌; எங்க வேனுமின்னாலும்‌ கொண்டு போங்க , நமக்கு உயிர்‌ பிழைக்குறது தான்‌ முக்கியம்‌.” என்றார்‌. தேறும்‌ என்று நிச்சயமாய்த்‌ தெரிந்தவர்களை மட்டும்‌ தங்களின்‌ மருத்துவமனையில்‌ அனுமதித்துக்‌ கொண்டு, மற்ற இழுபறி கேஸ்களை தங்களின்‌

பதிவுகள்‌ 02020

48 பதிவுகள்‌ 36 சிறுகதைகள்‌ (தொகுதி மூன்று

ஆம்புலன்ஸ்‌ வண்டியிலேயே ஜி.ஹெச்‌. அனுப்பிவைத்தது அருகிலிருந்த தனியார்‌ மருத்துவமனை.

அதுவும்‌ சரிதான்‌; எல்லோரையும்‌ ஒரே எடத்துல வச்சு சிகிச்சை குடுத்தா என்னமோ ஏதோன்னு பார்க்குறவங்களுக்கெல்லாம்‌ பதட்ட மாயிடாதா...” என்று தங்களுக்குள்ளாகவே சமாதானம்‌ சொல்லிக்‌ கொண்டார்கள்‌. விபத்து நடந்த இடத்தில்‌ உடைந்த வளையல்‌ துண்டுகளும்‌, அறுந்த செருப்புகளும்‌, நசுங்கிக்‌ கிடந்த பாத்திரங்களும்‌, சிதறிக்‌ கிடந்த பொம்மைகளும்‌, அங்கங்கே திட்டுத்‌ திட்டாய்‌ உறைந்து கிடந்த இரத்தத்‌ துளிகளும்‌ பார்க்கும்‌ யாருக்கும்‌ சிலீரென்ற ஒர்‌ உணர்வை ஊட்டி வாழ்தலின்‌ நிச்சயமின்மையை உணர்த்திக்‌ கொண்டிருந்தன.

போலீஸ்‌ வந்து கூட்டத்தைக்‌ கலைத்தது. தீயணைப்புப்‌ படையினர்‌ வந்து விழுந்து கிடந்த சுவர்களுக்கடியில்‌ இன்னும்‌ வேறு யாரேனும்‌ மீட்கப்படாமல்‌ மாட்டிக்‌ கொண்டிருக்கிறார்களா என்று பரிசோதித்தார்கள்‌. மேலும்‌ விரிசல்‌ விழுந்திருந்த சுவர்களுக்கருகில்‌ பொதுஜனம்‌ யாரும்‌ போகாமல்‌ பார்த்துக்‌ கொண்டார்கள்‌. “தண்ணித்‌ தொட்டி கட்டியிருக்கிற இலட்சணத்தப்‌ பாருங்க; அஸ்திவாரமே தோண்டாம தரைக்கு மேல அப்படியே ஏனோதானோன்னு கட்டியிருக்குறாங்க....

“உடைஞ்சு கிடக்குற சுவர்‌ எதுலயாவது உயிரோட்டமிருக்கா பாருங்க... காஃபிக்கு சர்க்கரை போடுறது மாதிரி, சிமெண்ட்ட ஸ்பூன்ல அளந்து போட்டுல்ல கட்டிருப்பாங்க போலருக்கு; இப்படிக்‌ கெட்டுனா சுவர்‌ எப்படி ஸ்ட்ராங்கா இருக்கும்‌? அதான்‌

வாயப்‌ பொழந்துருச்சு...”

“கவர்மெண்ட்‌ என்ஞ்னியர்கள்‌ எல்லாம்‌ என்னத்தப்‌ புடுங்குனாங்கன்னே தெரியல...!”

“அதுங்களா, எச்சக்கல நாயிங்க....கான்ட்ராக்ட்காரன்ட்ட காச வாங்கிக்கிட்டு வாலாட்டிக்கிட்டு எதையும்‌ கண்டுக்காம இருந்துருக்குங்க...” வேடிக்கை பார்க்கும்‌ பொதுஜனம்‌ போகிறபோக்கில்‌ காண்ட்ராக்டரின்‌ வேலைத்தரத்தை விமர்சித்துப்‌ போனது.

மருத்துவமனை வட்டாரத்திலிருந்து சேதாராங்கள்‌ பற்றிய செய்தி கசியத்‌ தொடங்கியது. ஒரு பதினைந்து வயதுப்‌ பெண்‌, ஐம்பது வயது மூதாட்டி, ஆறு மற்றும்‌ எட்டு வயதில்‌ இரண்டு சிறுவர்கள்‌ இறந்து போயிருந்தார்கள்‌. ஐந்து பேர்‌ இன்னும்‌

கவலைக்கிடமான நிலையில்‌ உயிருக்குப்‌ போராடிக்‌ கொண்டிருந்தார்கள்‌. மற்றவர்கள்‌ அபாயக்‌ கட்டத்தைத்‌ தாண்டி விட்டிருந்தார்கள்‌.

“இந்த வேலைக்கு இன்சார்ஸு யாருங்க?” மிடுக்காய்‌ இருந்த இன்ஸ்பெக்டர்‌ லோகநாதன்‌ அதிகாரமாய்க்‌ கேட்டார்‌. நாற்பது வயதிலேயே அறுபது வயதுக்குரிய தளர்வுடனிருந்த

பதிவுகள்‌ 02020

49 பதிவுகள்‌ 36 சிறுகதைகள்‌ (தொகுதி மூன்று

நரேந்திரன்‌ “நான்‌ தாங்க ..”என்றபடி இன்ஸ்பெக்டரின்‌ அருகில்‌ போனார்‌.தன்னைக்‌ கைது பண்ணி, ஜெயிலில்‌ அடைத்து சித்ரவதை பண்ணுவார்களோ என்ற பயமும்‌ கலக்கமும்‌ அவரின்‌ முகத்தில்‌ அப்பட்டமாய்த்‌ தெரிந்தது.

“வாங்க ஸ்டேஷனுக்குப்‌ போயிட்டு வந்துடலாம்‌... தோளில்‌ கை போட்டபடி இன்ஸ்பெக்டர்‌ மிக மரியாதையாகவே அழைத்துப்‌ போனார்‌. ”பயப்படாதீங்க; நீங்க என்ன கொலையா பண்ணிட்டீங்க! எதிபாராம நடந்த விபத்துக்கு நீங்க என்ன பண்ணுவிங்க?

ஒரே ஒரு ஸ்டேட்மெண்ட்‌ மட்டும்‌ குடுத்துட்டு திரும்பிடலாம்‌... வில்லங்கமில்லாம எப்படி ஸ்டேட்மெண்ட்‌ கொடுக்குறதுன்னும்‌ நானே சொல்லித்‌ தாறேன்‌...” நரேந்திரனின்‌ காதுகளுக்குள்‌ கிசுகிசுத்த இன்ஸ்பெக்டரின்‌ கண்களுக்குள்‌ கரன்ஸிகள்‌

படபடத்தன. இது அவருக்கு கொழுத்த வாய்ப்பு!

ரீஜினல்‌ டைரக்டர்‌ சேதுராமன்‌ அவசரமாய்‌ அவர்களுக்கு அருகில்‌ வந்து “நீங்க ஸ்டேஷன்ல போயி இருங்க; ஆனா ஸ்டேட்மெண்ட்‌ எதுவும்‌ கொடுக்க வேண்டாம்‌... நான்‌ மினிஸ்ட்டர்ட்டப்‌ பேசிட்டு நம்ம வக்கீலையும்‌ அழைச்சுக்கிட்டு ஸ்டேஷனுக்கு

வர்றேன்‌; அப்புறம்‌ மத்ததப்‌ பார்த்துக்கலாம்‌...” என்றார்‌. நரேந்திரன்‌ பயம்‌ தெளிந்து இன்ஸ்பெக்டரைத்‌ தொடர்ந்தார்‌.

போலீஸைச்‌ சமாளிப்பது பெரிய விஷயமாய்‌ இருக்கவில்லை. மினிஸ்டரின்‌ போன்காலும்‌ கொஞ்சம்‌ பணமும்‌ போதுமானதாக இருந்தது. ஹோலிப்‌ பண்டிகைக்‌ கொண்டாட்டங்‌ களில்‌ வேலை ஆட்கள்‌ குடித்துவிட்டு தண்ணீர்த்‌ தொட்டியின்‌ மேலேறி

ஆட்டம்‌ போட்டதால்‌ தான்‌ சுவர்‌ விழுந்து விட்டதென்று பதிந்து கொண்டார்கள்‌. மினிஸ்டரின்‌ உத்தரவின்‌ பேரில்‌ அந்தப்‌ பகுதி எம்‌.எல்‌.ஏ. ஆச்சரியமாய்‌ அதிகக்‌ கூட்டமும்‌ ஆரவாரமும்‌ இல்லாமல்‌ வந்தார்‌. துக்கம்‌ வழிகிற முகத்துடன்‌ காரிலிருந்து

இறங்கி, வேலைஆட்களிடம்‌ போய்‌ ஆறுதலாய்‌ ஏதோ பேசினார்‌. வேலை ஆட்களுக்கும்‌ மெளனமாய்க்‌ கண்ணீருடன்‌ கேட்டுக்‌ கொண்டார்கள்‌. அப்புறம்‌ விபத்து நடந்த பகுதியைச்‌ சுற்றிப்‌ பார்த்து விட்டு விருட்டென்று கிளம்பிப்‌ போய்விட்டார்‌.

அவர்‌ கிளம்பிப்‌ போன அடுத்த நிமிடமே, அதற்காகவே காத்துக்‌ கொண்டிருந்தது போல, அந்தப்‌ பகுதி சுத்தமாய்த்‌ துடைத்தெடுக்கப்பட்டது. விபத்து நடந்ததற்கான எந்த அடையாளமும்‌ இல்லாமல்‌ இரத்தம்‌ தோய்ந்த, விரிசல்‌ கண்டிருந்த சுவர்களும்‌

அப்புறப்‌ படுத்தப்‌ பட்டன. ஆஸ்பத்திரியில்‌ அபாயக்‌ கட்டத்திலிருந்தவர்களும்‌ இயல்பு நிலைமைக்குத்‌ திரும்பி விட்டார்களென்ற செய்தி வந்ததும்‌ ரீஜினல்‌ டைரக்டருக்கு மூச்சு சீரானது.

விபத்து பற்றிய செய்தியை பெரிது படுத்தாமலிருக்க, பத்திரிக்கைக்‌ காரர்களிடம்‌ தான்‌ பெரிதும்‌ போராட வேண்டியிருந்தது; பெரும்‌ தொகையும்‌ செலவழிக்க வேண்டியிருந்தது.

பதிவுகள்‌ 02020

50 பதிவுகள்‌ 36 சிறுகதைகள்‌ (தொகுதி மூன்று

கடைசியில்‌ செய்தியை இருட்டடிப்ப்பு செய்ய முடியாதென்றும்‌ ,

முக்கியத்துவ மில்லாமல்‌ மூன்றாம்‌ நான்காம்‌ பக்கங்களில்‌ பொடி எழுத்துக்களில்‌ கம்பெனியின்‌ பெயரின்றி வெளியிடவும்‌ ஒத்துக்‌ கொண்டு அதன்‌ படியே வெளியிட்டார்கள்‌.பணம்‌ பத்திரிக்கை வரையும்‌ பாயும்‌ என்பது நிரூபணமானது.

அடுத்தநாள்‌ களைப்பும்‌ தூக்கமுமாய்‌ அலுவலக அறையில்‌ திவாகர்‌ ராவும்‌ சேது ராமனும்‌ உட்கார்ந்து அடுத்து என்ன செய்யலாம்‌ என்பது பற்றிப்‌ பேசிக்‌ கொண்டிருந்த போது, போலீஸின்‌ இன்னொரு பிரிவிலிருந்து தொப்பியும்‌ தொப்பையுமாய்‌ இருவர்‌

வந்து விபத்து பற்றிய விபரங்களை க்‌ கேட்டார்கள்‌. பேச்சில்‌ கறாரான சிடுசிடுப்பு இருந்தது.

“போலீஸுக்குத்தான்‌ ஏற்கெனவே ஸ்டேட்மெண்ட்‌ கொடுத்து பார்மாலிட்டிஸும்‌

“அது லோக்கல்‌ போலீஸ்‌. நாங்க ...” வந்தவர்‌ முடிப்பதற்குள்‌ சேதுராமன்‌ எழுந்து வந்து அவர்களை பக்கத்து அறைக்குள்‌ அழைத்துப்‌ போனார்‌. கொஞ்ச நேரத்திலேயே சிரித்தபடி அவர்கள்‌ வெளியேறினர்‌. போகிறபோக்கில்‌ “நீங்க எதுக்கும்‌ கவலைப்‌

படாதீங்க; எல்லாத்தையும்‌ நாங்க பார்த்துக்குறோம்‌... ஏதாவது உதவி வேணுமின்னா தயங்காமப்‌ போன்‌ பண்ணுங்க...” என்று அசடு வழிந்து போனார்கள்‌. சேதுராமனும்‌ திவாகரும்‌ இலேசாய்ச்‌ சிரித்துக்‌ கொண்டார்கள்‌.

அவர்கள்‌ கிளம்பிப்‌ போன கொஞ்ச நேரத்தில்‌ தும்பைப்‌ பூப்போல வெள்ளை வெளேரென்று வேஷ்டியும்‌ சட்டையும்‌, மிக நிளமான துண்டும்‌ அணிந்திருந்த ஒருவர்‌ தன்‌ பின்னால்‌ ஆறேழுபேர்‌ புடைசூழ புயல்‌ போல வேகமாய்‌ வந்தார்‌. வந்ததுமே ஏக

வசனத்தில்‌ ஆரம்பித்தார்‌._இங்க எவன்டா கான்ட்ராக்டர்‌?” யாரும்‌ அவருக்கு பதில்‌ சொல்லா திருக்கவும்‌ அவர்‌ பாட்டுக்குப்‌ பேசத்‌ தொடங்கினார்‌.

“தொழிலாளி உயிருன்னா உங்களுக்கு மயிருக்குச்‌ சமானமாயிடுச்சா... நாலு பேர்‌ தான்‌ செத்துட்டாங்கன்னு ஏன்‌ பொய்த்‌ தகவல்‌ தர்றீங்க? கை, கால்‌ எழந்து நடைப்‌ பிணமா வாழப்‌ போறவங்களுக்கு உங்களோட பதிலு என்ன? கவர்மெண்ட்‌ தந்த

சிமெண்ட்ட எல்லாம்‌ வெளிமார்க்கெட்டுல வித்துட்டு சாம்பலக்‌ கலந்து தண்ணித்‌ தொட்டி கட்டுனதால தான்‌ அது சரிஞ்சிடிச்சுன்னு தெரியாதா எங்களுக்கு! இதை நான்‌ சும்மா விடப்‌ போறதில்ல; சாலை மறியல்‌ பண்ணி இந்த விஷயத்தைக்‌ கோட்டை

வரைக்கும்‌ கொண்டுபோவேன்‌...” தாம்தீமென்று குதித்தார்‌.

அதே வேகத்தில்‌ தன்‌ பரிவாரங்களுடன்‌ போய்‌ வேலை ஆட்களைச்‌ சந்தித்து, “உங்கள எல்லோரும்‌ ஏமாத்தப்‌ பாக்குறாங்க; உங்களுக்கு நியாயம்‌ கிடைக்கப்‌ போராடுவேன்‌...”

பதிவுகள்‌ ©2020

54 பதிவுகள்‌ 36 சிறுகதைகள்‌ (தொகுதி மூன்று)

என்றபடி நடுவீதியில்‌ நின்றபடி மீட்டீங் போலப்‌ பேசத்‌ தொடங்கினார்‌. “இதென்ன ஸார்‌ புதுக்‌ குழப்பம்‌! சாலை மறியல்‌ அது இதுன்னு பயமுறுத்துறார்‌. கூப்புட்டு ஏதாவது குடுத்து அனுப்பலாமா?” திவாகர்‌ பதறினார்‌.

“இவனெல்லாம்‌ வெத்து வேட்டு... சும்மா ஃ.பிலிம்‌ காட்டுறான்‌...போனதடவை வார்டு எலக்சன்ல நின்னு டெபாஸிட்‌ காலி; இவனுக மாதிரி ஆளுக மிரட்டலுக்கெல்லாம்‌ பயந்து குடுக்க ஆரம்பிச்சா, கம்பெனிய வித்தாலும்‌ குடுத்து மாளாது; ஈசல்‌ மாதிரி

வந்துக்கிட்டே இருப்பா னுங்க... அதனால கண்டுக்காம விட்டுடு; அவனே குதுச்சு அடங்கி காணாமப்‌ போயிடுவான்‌; அப்படியும்‌ போகலைன்னா, நம்ம போலீஸ்‌ ப்ரண்டுக எதுக்கு இருக்குறாங்க! கூப்பிட்டுச்‌ சொன்னா புடிச்சுட்டுப்‌ போயி பொய்கேசப்‌

போட்டு நாலு தட்டுத்‌ தட்டி அனுப்புனா, அப்புறம்‌ இந்தப்‌ பக்கம்‌ தலை வச்சே படுக்க மாட்டாங்க...” என்றார்‌ சேதுராமன்‌. அப்படியே தான்‌ நடந்தது.

“தொழிலாளத்‌ தோழர்களே...” என்று ஆரம்பித்து அரை மணிநேரம்‌ பேசினார்‌. அவருடன்‌ வந்த கைத்தடிகள்‌ மட்டும்‌ அவ்வப்போது கைதட்டினார்கள்‌. வேலை ஆட்கள்‌ யாரும்‌ அவர்‌ பேச்சில்‌ ஆர்வம்‌ காட்டாது ஒதுங்கி நிற்க, இங்கு எதுவும்‌ பெயராது

என்று தெரிந்து ஆளுக்கொரு பக்கமாய்ச்‌ சிதறிப்‌ போனார்கள்‌.

லேபர்‌ ஆபிஸிலிருந்து இரண்டு பேர்‌ வந்தார்கள்‌. ஏகப்பட்ட கேள்விகள்‌! இறந்தவர்‌ களின்‌ பெயர்கள்‌ எதுவும்‌ தினசரி ரோல்‌ ரிஜிஸ்ட்டரிலேயே இல்லை. யாருக்கும்‌ எந்த விதமான விபத்துக்‌ காப்பீடும்‌ எடுக்கப்‌ பட்டிருக்கவில்லை. திவாகர்ராவ்‌ முழிமுழி என்று முழித்தார்‌. சேதுராமன்‌ தான்‌ சாமர்த்தியமாய்ப்‌ பேசிச்‌ சமாளித்து, அலுவலகத்தில்‌ வந்து அவர்களைக்‌ கவனிப்‌ பதாய்‌ உறுதி அளித்து அனுப்பி வைத்தார்‌.

போஸ்ட்மார்ட்டம்‌ முடிந்து செத்துப்‌ போனவர்களின்‌ உடல்கள்‌ ஜி.ஹெச்‌.சிலிருந்து வருகிற செய்தி கிடைத்ததும்‌ சேதுராமன்‌ பரபரப்பானார்‌.

“பாடிய எந்தக்‌ காரணத்துக்காகவும்‌ வேலை ஆட்களின்‌ கூடாரங்களுக்கு கொண்டு வரக்‌ கூடாது.ஆஸ்பத்திரியில்‌ இருந்தபடியே சுடுகாட்டிற்கு கொண்டு போய்‌ இறுதிச்‌ சடங்குகள நிறைவேற்றி விடுங்கள்‌.பாடிய இங்கு கொண்டு வந்தா பலரும்‌ பலவிதமாய்‌

கிளப்பி விடுவார்கள்‌. அப்புறம்‌ வேறு பிரச்சினைகள்‌ வரலாம்‌...” சேதுராமன்‌ கண்டிப்பாய்‌ சொல்லி விட்டு அவசர அவ சரமாய்‌ கிளம்பிப்‌ போனார்‌.

வெட்டியானிடம்‌ சொல்லி குழி எல்லாம்‌ வெட்டி தயாராக வைத்திருந்தார்கள்‌. மாலை 5 மணிக்கெல்லாம்‌ நான்கு உடல்களும்‌ அமரர்‌ ஊர்தி மூலம்‌ சுடுகாட்டிற்கு வந்து சேர்ந்து விட்டன. திவாகர்‌ ராவிற்கு அப்பாடா என்று இருந்தது.இன்றைக்காவது

சீக்கிரம்‌ விட்டிற்குப்‌ போய்‌ கொஞ்சம்‌ தூங்கலாம்‌ என்று நினைத்துக்‌ கொண்டார்‌.ஆனால்‌

பதிவுகள்‌ 02020

52 பதிவுகள்‌ 36 சிறுகதைகள்‌ (தொகுதி மூன்று அது அவ்வளவு சுலபமில்லை என்று அதற்கப்புறம்‌ நிகழ்ந்தவை உணர்த்தின.

இறுதி சடங்குகள்‌ செய்ய சுடுகாட்டிற்கு வர, வேலை ஆட்கள்‌ மறுத்தார்கள்‌.தங்களின்‌ பெரிய மேஸ்திரி ஹைதராபாத்திலிருந்து வந்த பின்பு தான்‌ உடல்களை அடக்கம்‌ செய்ய அனுமதிப்‌ போம்‌ என்று முரண்டு பண்ணினார்கள்‌. சுடுகாட்டிற்கு வெளியே

பிணங்களை இறக்கி விட்டு அமரர்‌ ஊர்தி சென்று விட கம்பெனி ஆட்கள்‌ பிணங்களுக்கு காவல்‌ இருந்தனர்‌.திவாகர்‌ ராவும்‌ மற்றும்‌ சிலரும்‌ வேலை ஆட்களை சமாதானப்‌ படுத்த முயன்று தோற்றுக்‌ கொண்டிருந்தனர்‌.

“காலைலருந்து இவங்க எதைப்பத்தியும்‌ பேசாம அமைதியா இருந்துட்டு இப்பப்‌ போயி பெரிய மேஸ்திரி வரணும்னு சொல்றாங்கன்னா அதனோட உள்ளர்த்தம்‌ வேற. செத்துப்‌ போனவங்களுக்கு நஷ்ட ஈடு பத்தி பேசி தீர்மானிக்க, பிணங்களை அப்புறப்‌

படுத்தும்‌ முன்பேயே நினைக்கிறார்கள்‌.அதை வெளிப்படையா கேட்க கம்பெனி விசுவாசம்‌ தடுக்குறதால பெரிய மேஸ்திரி வரணும்னு ஜால்சாப்பு சொல்றாங்க...” நரேந்திரன்‌ திவாகர்‌ ராவிடம்‌ சொல்ல அவர்‌ சேதுராமனை அவருடைய செல்போனில்‌

தொடர்பு கொண்டார்‌.

“நஷ்ட ஈடு பத்தி எல்லாம்‌ நானோ நீயோ தீர்மானிக்க முடியாது.மேனேஜிங்‌ டைரக்டர்‌ தான்‌ தீர்மானிக்கணும்‌. நான்‌ அங்க இருந்தா அவங்க என்கிட்ட நஷ்ட ஈடு பத்தி கேட்பாங்கன்னு தான்‌ நான்‌ அப்பவே ஆபிஸ்க்கு வந்துட்டேன்‌.எப்படியாவது சமாளித்து சுமுகமாய்‌ பிணங்களை அடக்கம்‌ செய்கிற வழியைப்‌ பார்‌...” என்று சிடுசிடுத்தார்‌ சேதுராமன்‌. இருட்டிக்‌ கொண்டு வந்தது. குண்டும்‌ குழியும்‌ மனித நரல்களாயும்‌ கிடக்கிற முள்‌ பாதைக்குள்‌ பிணங்களை எப்படி எடுத்துச்‌ செல்வது என்று எல்லோருக்கும்‌ கவலை மேலிட்டது. பிணங்கள்‌ வேறு சிதைந்து துர்நாற்றம்‌ விசத்‌ தொடங்கி இருந்தன.

இரவு பதினோறு மணியைத்‌ தாண்டியும்‌ வேலை ஆட்கள்‌ மசிவதாய்த்‌ தெரிய வில்லை. பெரிய மேஸ்திரி வருவதற்கான எந்த அறிகுறியும்‌ தென்படவில்லை.இந்தா இருக்கிற ஹைதராபாத்‌ திலிருந்து வருவதற்கு ஏன்‌ இவ்வளவு தாமதம்‌? அவருக்கு

தகவல்‌ சொல்லப்பட்டதா? ஒருவேளை கம்பெனி அவரைப்‌ போகக்‌ கூடாதென்று ஹைதராபாத்திலேயே தடுத்து நிறுத்தி விட்டதா? ஒன்றும்‌ உறுதியாய்த்‌ தெரியவில்லை. மீண்டும்‌ ரீஜினல்‌ டைரக்டர்‌ சேதுராமனைத்‌ தொடர்பு கொள்ள அவர்‌ ஏகப்பட்ட உண்ைத்தில்‌ கத்தினார்‌.

“இதைக்‌ கூட சமாளிக்க துப்பில்லைனா நீ என்ன அட்மினிஸ்ட்ரேஷன்‌ மானேஜர்‌? எம்‌.டி. கிட்ட நஷ்ட ஈடு பத்தி பேசிட்டேன்‌.அவர்‌ தலைக்கு பத்தாயிரமோ பதினைஞ்சாயிரமோ கம்பெனி சார்புல கொடுக்கலாம்ங்கிறார்‌. செத்துப்‌ போனவங்க யாருக்கும்‌

இன்ஸரன்ஸ்‌ கூட நம்ம பண்ணியிருக்கல. இதை எல்லாம்‌ இப்பவே அவங்களுக்குச்‌

பதிவுகள்‌ 02020

53 பதிவுகள்‌ 36 சிறுகதைகள்‌ (தொகுதி மூன்று) சொன்னா என்னை நாற அடிச்சிடு வானுங்க. மெதுமெதுவாத்‌ தான்‌ சொல்லி சம்மதிக்க சொன்னார்‌.

“எப்படியாச்சும்‌ அவங்களை சுடுகாட்டிற்குக்‌ கொண்டு போயிடுங்க. நான்‌ அங்க வந்து அவங்க கிட்ட பேசிப்‌ பார்க்கிறேன்‌...” என்று சொல்லி போனை வைத்தார்‌.

“பிணம்‌ தனியாக இருக்கிறது; பெரிய மேஸ்திரி வரும்வரை பிணங்களுக்கு அருகி லாவது போய்‌ காத்திருக்கலாம்‌...” என்று பேசி ஒரு வழியாய்‌ வேலை ஆட்களை எல்லாம்‌ சமாதானப்‌ படுத்தி சுடுகாட்டிற்கு கொண்டு வந்தார்‌ திவாகர்ராவ்‌.

சேதுராமன்‌ வந்ததும்‌ வேலை ஆட்களிடம்‌ “ஏன்‌ இப்படிப்‌ ப்ண்ணுகிறீர்கள்‌? எங்களுக்கும்‌ துக்கமாகத்தான்‌ இருக்கிறது. போட்டோகிராபரை வைத்து போட்டோ எடுத்துக்‌ கொள்வோம்‌. உங்கள்‌ பெரிய மேஸ்திரிக்கு காட்டிக்‌ கொள்ளுங்கள்‌..” என்று கூறி

கையோடு கூட்டி வந்திருந்த போட்டோ கிராபரின்‌ மூலம்‌ போட்டோக்கள்‌ எடுத்துத்‌ தள்ளினார்‌.அப்புறமும்‌ வேலை ஆட்கள்‌ விரைத்துக்‌ கொண்டு தான்‌ நின்றார்கள்‌.சேதுராமனின்‌ சமாளிப்புகளை செவிமடுக்கத்‌ தயாரின்றி திரும்பிக்‌ கொண்டார்கள்‌.அப்புறம்‌ தான்‌ அவர்‌ காரிலிருந்து அந்த பெட்டியை இறக்கினார்‌.

எல்லோருடைய கண்களிலும்‌ தூக்கத்தையும்‌ துக்கத்தையும்‌ மீறி ஒரு பிரகாசம்‌ ஒளிர்ந்தது. காரிலிருந்து இறங்கிய பெட்டியில்‌ உயர்ரக மதுவகைகள்‌ பாட்டில்‌ பாட்டிலாய்‌ அடுக்கப்பட்டிருந்தன.

“எல்லோருக்கும்‌ குடுங்கப்பா. குடிச்சு மனசை ஆத்திக்கிட்டு பெரிய மேஸ்திரிக்கு காத்திருப்போம்‌.....திவாகரைப்‌ பார்த்து கண்சிமிட்டியபடி சொன்னார்‌.

ஆளுக்கொரு பாட்டிலுடன்‌ ஒதுங்கினார்கள்‌.குடித்து முடித்து வட்டமாய்‌ உட்கார்ந்து குழறலாய்ப்‌ பேசினார்கள்‌. இதை எல்லாம்‌ நமுட்டுச்‌ சிரிப்புடன்‌ வேடிக்கை பார்த்துக்‌ கொண்டிருந்தார்‌ சேதுராமன்‌.

“பிணம்‌ நாத்தமெடுக்கத்‌ தொடங்கியிருச்சு. இன்னும்‌ எதுக்கு இதுங்களை வச்சு வேடிக்கை பார்த்துக்கிட்டு இருக்கனும்‌; குழிக்குள்ள எறக்கி மண்ணத்‌ தள்ளுங்கப்பா...” என்று ஒரு கூட்டம்‌ அபிப்ராயம்‌ சொல்ல, இன்னொரு கூட்டம்‌ அவனுடன்‌

சண்டைக்குப்‌ போனது.

“பெரிய மேஸ்திரி வரணும்‌; அதுவரைக்கும்‌ எந்தக்‌ காரியமும்‌ பண்ணக்‌ கூடாது... பேசித்‌ தீர்க்காமப்‌ பிணத்தப்‌ புதைச்சாச்சுன்னா அப்புறம்‌ ஒத்தப்‌ பைசா கூடக்‌ குடுக்காம கம்பெனி

பதிவுகள்‌ 02020

54 பதிவுகள்‌ 36 சிறுகதைகள்‌ (தொகுதி மூன்று நம்மல ஏமாத்திடும்‌....”

“பெரிய மேஸ்திரி என்ன பெரிய புடுங்கியா? ஆக்ஸிடெண்ட்‌ நடந்து ரெண்டு நாளாகுது, இன்னும்‌ வந்த பாடில்ல; அவன்‌ வந்து மட்டும்‌ என்ன பண்ணப்‌ போறான்‌! கம்பெனிக்கு

தொடங்கினார்கள்‌. அவர்களை விலக்கி விடப்‌ போன அலுவலக ஆட்களை தடுத்து நிறுத்தினார்‌ சேதுராமன்‌.

“சண்டை போடட்டும்‌; அப்புறம்‌ தான்‌ பிரச்னை ஒரு முடிவிற்கு வரும்‌...” என்றார்‌ குரூரமாய்ச்‌ சிரித்தபடி. சண்டை போட்டபடியே ஒரு கூட்டம்‌ பிணங்களை எல்லாம்‌ ஏற்கெனவே வெட்டி வைத்திருந்த குழிகளுக்குள்‌ தள்ளி மண்‌ பொட்டு மூடினார்கள்‌. காரியங்கள்‌ எல்லாம்‌ போதையிலேயே மளமஎவென்று நடந்தேறின.

“எப்படி சுலபமா முடிச்சுட்டேன்‌ பார்த்தியா?” தன்‌ சாமர்த்தியத்தை தானே ரசித்தபடி திவாகரிடம்‌ சொன்னார்‌ சேதுராமன்‌. திவாகர்ராவிற்குத்‌ தான்‌ தொழிலாளர்களின்‌ மீது பச்சாதாபமும்‌ கோபமும்‌ ஏற்பட்டது. போதை தெளியாதவர்கள்‌

சுடுகாட்டிலேயே விழுந்து கிடக்க மற்றவர்கள்‌ அங்கிருந்து வெளியேறினார்கள்‌.

Email: engrsubburaj@yahoo.co.in

பதிவுகள்‌, ஜூலை 2010 இதழ்‌ 127

பதிவுகள்‌ 02020

55 பதிவுகள்‌ 36 சிறுகதைகள்‌ (தொகுதி மூன்று

8. முள்ளிவாய்க்கால்‌! - வ.ந.கிரிதரன்‌ -

பாழத்தமிழர்களைப்‌ பொறுத்தவரையில்‌ கருப்பு தலை 1983 ஒரு திருப்பு முனை. ஒரு குறியீடு. தமிழினத்தின்‌ மீதான அரச பயங்கரவாதத்தைத்‌ தொடர்ந்து ஈழத்தமிழர்களின்‌ விடுதலைப்‌ போராட்டம்‌ ஆயுதப்‌ போராட்டமாக விரிவுபெற்றது அதன்‌ பின்புதான்‌. அதனைத்‌ தொடர்ந்து மள்ளிவாய்க்காலில்‌ முடிவுற்ற யுத்தம்‌ இன்னுமொரு திகுப்புமனை. விடுதலைப்‌ புலிகளுக்கும்‌ இலங்கை அரசுக்குமிடையிலான்‌ யுத்தம்‌ எதிர்பாராதவகையில்‌ முடிவுக்கு வந்தது. கருப்பு தலை 1983 இல்‌ இந்தியாவின்‌ ஆதரவுடன்‌ விரிவுபெற்ற ஆயுதப்‌ போராட்டம்‌, 2009 மேயில்‌ இந்தியா, சீனா, பாகிஸ்தான்‌, மேற்குநாடுகளின்‌ ஆதரவுடன்‌ முடிவுக்கு வந்தது. ஈழத்தமிழர்களின்‌ போராட்டம்‌ மள்ளிவாய்க்காலைத்‌ தொடர்ந்து இன்னுமொரு திக்கில்‌ விரியப்‌ போகிறது.

ஆயுதத்தை நோக்கியா அல்லது அமைதியை நோக்கியா என்பதைக்‌ காலம்‌ உணர்த்தும்‌. ]

மணிக்‌ பண்ணைத்‌ தடுப்பு முகாமில்‌ வாழ்க்கை ஒரு வருடத்தைத்‌ தாண்டியோடிவிட்டதா? இதயச்சந்திரனுக்கு நம்பவே முடியவில்லை. அதை மட்டுமா அவனால்‌ நம்ப முடியவில்லை... அவன்‌ இன்னும்‌ உயிருடன்‌ இருப்பதையும்தான்‌ நம்ப

முடியவில்லை. விடுதலைப்‌ புலிகளுக்கும்‌ , இலங்கை அரசுக்குமிடையில்‌ நடைபெற்ற அந்தக்‌ கொடிய போரின்‌ இறுதி நாட்கள்‌... அந்த நாட்களின்‌ ஒவ்வொரு கணங்களும்‌ இன்னும்‌ அவன்‌ ஞாபகத்தில்‌ பசுமையாக இருக்கின்றன. அவன்‌ மறையும்‌ வரையும்‌ அவன்‌ நெஞ்சை விட்டு அவை மறையப்‌ போவதில்லை. போரின்‌ கொடூரத்தை அறிந்த, அனுபவித்த நாட்கள்‌. இருப்பு பற்றிய அவனது புரிதல்களை அடியோடு மாற்றிவிட்ட நாட்கள்‌. எவ்விதம்‌ நெஞ்சை விட்டகலும்‌? மனிக்‌ பண்ணை தடுப்பு முகாமில்‌

வாழ்க்கை ஒரு வருடத்தைத்‌ தாண்டியோடிவிட்டதா? இதயச்சந்திரனுக்கு நம்பவே முடியவில்லை. அதை மட்டுமா அவனால்‌ நம்ப முடியவில்லை... அவன்‌ இன்னும்‌ உயிருடன்‌ இருப்பதையும்தான்‌ நம்ப முடியவில்லை. விடுதலைப்‌ புலிகளுக்கும்‌ , இலங்கை அரசுக்குமிடையில்‌ நடைபெற்ற அந்தக்‌ கொடிய போரின்‌ இறுதி நாட்கள்‌... அந்த நாட்களின்‌ ஒவ்வொரு கணங்களும்‌ இன்னும்‌ அவன்‌ ஞாபகத்தில்‌ பசுமையாக இருக்கின்றன. அவன்‌ மறையும்‌ வரையும்‌ அவன்‌ நெஞ்சை விட்டு அவை மறையப்‌ போவதில்லை. போரின்‌ கொடூரத்தை அறிந்த, அனுபவித்த நாட்கள்‌. இருப்பு பற்றிய அவனது புரிதல்களை அடியோடு மாற்றிவிட்ட நாட்கள்‌. எவ்விதம்‌ நெஞ்சை விட்டகலும்‌?

குறுகிய நிலப்பரப்புக்குள்‌ புலிகளும்‌, மக்களும்‌ அடைபட்டுக்‌ கிடந்த நிலையில்‌ , இலங்கை அரசின்‌ பல்வேறு வகையான தாக்குதல்களும்‌ தீவிரமடைந்திருந்தன. எறிகணைகத்‌ தாக்குதல்கள்‌, கொத்தணிக்குண்டுத்‌ தாக்குதல்கள்‌, இரசாயன வாயுத்‌

தாக்குதல்கள்‌... ஆயிரக்கணக்கில்‌ மக்கள்‌ கொன்று குவிக்கப்பட்டுக்‌ கொண்டிருந்த தருணத்தில்‌... பாதுகாப்பு வலயங்களெல்லாம்‌ பாதுகாப்பற்றுப்‌ போன அந்தக்‌ கணங்கள்‌...

பதிவுகள்‌ 02020

56 பதிவுகள்‌ 36 சிறுகதைகள்‌ (தொகுதி மூன்று

மானுடம்‌ தன்‌ நாகரிகத்தை இழந்து அம்மணமாக நின்ற தருணங்களவை. உயிருக்கே உத்தரவாதமற்றுப்‌ போன பொழுதுகள்‌ அதுவரை மக்கள்‌ கண்ட கனவுகளை, கற்பனைகளை, எதிர்கால இலட்சியங்களை, குடும்ப உறவுகளை, வரையறுத்த நீதி, நியாயக்‌ கோட்பாடுகளையெல்லாம்‌ துவம்சம்‌ செய்துவிட்டு வெறியாட்டமாடிய போர்‌ அரக்கரின்‌ அட்டகாசத்தால்‌ சமூக அமைப்புகளும்‌, சூழலும்‌ சிதைந்து போயிருந்த கொடிய தருணங்கள்‌. ஆனால்‌ இவையெல்லாவற்றையும்‌ சர்வதேசமோ வேடிக்கை பார்த்துக்‌ கொண்டிருந்தது. அன்று ருவாண்டா! இன்று சிறிலங்கா! அளவில்‌

சிறிதானாலும்‌, அழிவின்‌ தன்மையில்‌ மாறுதலேது?

சிந்தனை வயப்பட்டுக்‌ கிடந்தவனின்‌ கவனம்‌ சரோஜாவின்‌, ஆனந்தனின்‌ பக்கம்‌ திரும்பியது. சரோஜாவையும்‌, ஆனந்தனையும்‌ அவனது வாழ்வுடன்‌ பிணைத்துவிட்டது எது? அதுதான்‌ விதியா? இவற்றிலெல்லாம்‌ ஒரு காலத்தில்‌ நம்பிக்கையில்லாமல்‌ இருந்தவனின்‌ சிந்தனையா இவ்விதம்‌ திரும்பியிருக்கின்றது? அவனுக்கு அவனை எண்ண வியப்பாகவிருந்தது. விரக்தியாகவுமிருந்தது. காலம்‌, அதன்‌ கோலமும்‌ எவ்விதம்‌ ஒருவரை தலைகீழாக மாற்றி விடுகிறது?

புதுக்குடியிருப்பு மருத்துவமனை தாக்கப்பட்டு, எஞ்சியிருந்த உடையார்கட்டு மருத்துவமனையும்‌ தாக்கப்பட்டபோதுதான்‌, அதற்கு முன்னர்‌ நடந்த தாக்குதல்களில்‌ தன்‌ மனைவி, மகள்மாரை இழந்திருந்த இதயச்சந்திரன்‌, எங்கே ஒடுகிறோமென்று

தெரியாத நிலையில்‌, உயிரைக்‌ காப்பதற்காக சனங்களோடு சனங்களாக ஓடிக்கொண்டிருந்தபோதுதான்‌, வழியில்‌ சரோஜாவைக்‌ கண்டான்‌. கைகளில்‌ இரத்தம்‌ வழிந்தோடிக்கொண்டிருந்த, ஏற்கனவே உயிரிழந்திருந்த குழந்தையொன்றுடன்‌ , அக்குழந்தை இற்ந்ததைக்‌ கூடப்‌ புரிந்துகொள்ள முடியாமல்‌, வீதியோரம்‌ பேயறைந்தவளாக, சித்தப்பிரமை பிடித்தவளாகக்‌ காணப்பட்ட சரோஜாவைக்‌ கண்டதும்‌ , அதற்கு முன்னர்‌ நடந்த தாக்குதல்களில்‌ தன்‌ குழந்தைகளையும்‌, மனைவியையும்‌ இழந்திருந்த இதயச்சந்திரனால்‌ அவளை அந்த நிலையில்‌ விட்டுவிட்டுப்‌ போக முடியவில்லை. அவ்விதம்‌ விட்டு ஓடியிருந்தால்‌ அவள்‌ அரச படைகளின்‌ குண்டு மழைக்குள்‌ சிக்கி எந்தக்‌ கணத்திலும்‌ உயிர்‌ துறக்கலாம்‌? மந்தைகளாகத்‌ திரண்டோடிக்‌ கொண்டிருக்கும்‌ அகதிகளின்‌ கால்களுக்குள்‌ அகப்பட்டு உருக்குலையலாம்‌?

குழந்தையை அருகில்‌ கிடந்த இடிந்த குடிசையொன்றில்‌ வைத்துவிட்டுச்‌ சரோஜாவையும்‌ இழுத்தபடியே ஓடினான்‌. அவ்விதமாக அவர்கள்‌ ஓடிக்கொண்டிருந்தபோது அவர்களுடன்‌ வந்திணைந்து கொண்டவந்தான்‌ ஆனந்தன்‌. பத்து வயது மதிக்கத்தக்க

சிறுவன்‌. அவர்களைப்‌ போல்‌ அவனும்‌ தன்‌ தாய்‌, தந்தை, சகோதரர்களை இழந்து, யாருமற்ற நிலையில்‌ சனங்களோடு சனங்களாக ஓடிக்‌ கொண்டிருந்தான்‌. மிகவும்‌ பயந்து போயிருந்தான்‌.

பதிவுகள்‌ 02020

57 பதிவுகள்‌ 36 சிறுகதைகள்‌ (தொகுதி மூன்று

அவனையும்‌, சரோஜாவையும்‌ இழுத்தபடி இதயச்சந்திரனும்‌ ஓடியோடி, இறுதியில்‌ புலிகளின்‌ ஆயுதங்கள்‌ மெளனிக்கப்பட்ட காலகட்டத்தில்‌ அரச கட்டுப்பாட்டுப்‌ பகுதியை வந்தடைந்தான்‌... அதன்‌ பின்‌ இதுவரையில்‌ தடுப்பு முகாமில்‌ வாழ்வு ஓடிக்கொண்டிருக்கின்றது. சர்வதேசத்தின்‌ அழுத்தங்களைத்‌ தொடர்ந்து கட்டம்‌ கட்டமாகத்‌ தடுப்புமுகாமில்‌ தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்கள்‌ வெளியேறிக்கொண்டிருந்தார்கள்‌. இப்பொழுது நிலைமை முன்பிருந்ததை விடப்‌ பரவாயில்லை. ஆனால்‌

ஆரம்பத்தில்‌ மூன்று இலட்சங்களுக்கும்‌ அதிகமான மக்களை மிருகங்க்ளைப்‌ போல்‌ அடைத்து வைக்கப்பட்டிருந்ததொரு பெரியதொரு பட்டியாகவே அந்த முகாம்‌ விளங்கியது. அரசின்‌ உளவுத்துறை அதிகாரிகள்‌ முகாமெங்கும்‌ திரிந்து கொண்டிருந்தார்கள்‌. புலிகளென்னும்‌ சந்தேகத்தின்‌ பெயரில்‌ இளைஞர்கள்‌, யுவதிகளென நாளுக்கு நாள்‌ காணமல்‌ போய்க்‌ கொண்டிருந்தார்கள்‌. பெண்கள்‌ பாலியல்‌ வல்லுறவுக்குள்ளானது பற்றிய கதைகள்‌ முகாமெங்கும்‌ நிறைந்திருந்தது. குடும்ப உறுப்பினர்களையே பிரித்து, வெவ்வேறிடங்களில்‌ ஒருவரை ஒருவர்‌ பார்க்க முடியாதபடி அடைத்து வைக்கப்பட்டிருந்தார்கள்‌. அவற்றை இப்பொழுது எண்ணவே அவனுக்கு ஒருவித அச்சமாகவிருந்தது.

ஒரு கணம்‌ அவனது பார்வை விரிந்து கிடந்த விண்ணை நோக்கியது. கண்ணுக்கெட்டியதூரம்‌ வரையில்‌ நீலப்படுதாவாக விரிந்து கிடந்த விண்‌ முன்பென்றால்‌ உணர்வுகளை வருடிச்‌ சென்றிருக்கும்‌. இப்பொழுதோ கேள்விகளையே எழுப்ப முனைந்தது.

விரிந்து கிடக்கும்‌ பெருவெளி! விரைந்தோடும்‌ சுடரும்‌, கோளும்‌. விரிவும்‌ தெரியவில்லை! விரைவும்‌ புரியவில்லை! சின்னஞ்சிறு கோளுக்குள்‌, சின்னஞ்சிறு தீவிற்குள்‌,

குத்து, வெட்டுகள்‌!

புரிந்திருந்தால்‌

படர்ந்திருக்குமோ

சாந்தி!

இவ்விதமாக அவனது மனதினுள்‌ கவிதை வரிகள்‌ சில எழுந்தன. எத்தனை காலம்‌ எழுதி. இத்தகையதொரு பேரழிவுச்‌ சூழலில்‌ கவிதையெங்கே வரும்‌?

பதிவுகள்‌ 02020

58 பதிவுகள்‌ 36 சிறுகதைகள்‌ (தொகுதி மூன்று

இந்த ஒரு வருடத்தில்‌ அவர்கள்‌ மூவரும்‌ ஒன்றாகத்‌ தற்காலிகமாகக்‌ கட்டப்பட்டிருந்த வீட்டினுள்‌ 'மனிக்பார்ம்‌' முகாமில்‌ வ்சித்து வந்தாலும்‌, இற்ந்தகாலம்‌ தந்த நினைவுச்‌ சுமையிலிருந்தும்‌, எதிர்காலம்‌ பற்றிய வெறுமையான , நம்பிக்கையற்ற்‌ உணர்வுகளிலிருந்தும்‌ விடுபடமுடியாதவர்களாகவே பொழுதைக்‌ கழித்துக்‌ கொண்டிருந்தார்கள்‌. அவனுக்கு அவனது மனைவி வதனாவையும்‌, மகள்மார்கள்‌ ஆஷா, ஷோபா இருவரையும்‌ மறக்க முடியவில்லை. மிகவும்‌ மென்மையான்வள்‌ இளையவள்‌ ஷோபா. அக்கவென்றால்‌ அவளுக்கு உயிர்‌. இருவருமே ஒருவருக்கொருவர்‌ சகோதரிகளாய்‌, சிநேகிதிகளாய்‌ எவ்வளவுதூரம்‌ ஒன்றித்துப்‌ போயிருந்தார்கள்‌. அவர்களைப்பற்றி, அவர்களின்‌ எதிர்காலத்தைப்‌ பற்றியெல்லாம்‌ அவனும்‌, வதனாவும்‌ எவ்வளவு கற்பனைகளைப்‌ படர விட்டிருப்பார்கள்‌? எல்லாமே எவ்விதம்‌ அடித்து நொருக்கப்பட்டு விட்டன?

மனிதர்களால்‌ எவ்விதம்‌ இவ்விதம்‌ வெறிகொண்டு தாண்டவமாட முடிகிறது?

இப்பொழுது அவன்‌ முன்னாலுள்ள பிரச்சினை. வெளியில்‌ செல்வதானால்‌ சரோஜாவையும்‌, ஆனந்தனையும்‌ என்ன செய்வது? சரோஜா மன்னார்ப்‌ பக்கமிருந்து ஓடியோடி வன்னிக்கு வந்திருந்தவள்‌ போரில்‌ அகப்பட்டிருந்தாள்‌. அவனது நிலையும்‌ இதுதான்‌. அவனும்‌ முழங்காவில்‌ பகுதியிலிருந்து ஒடி வந்திருந்தான்‌. ஆனந்தனோ கிளிநொச்சி முரசுமொட்டையைச்‌ சேர்ந்தவன்‌. போர்ச்‌ சூழல்‌ எவ்விதம்‌ அவர்கள்‌ மூவரையும்‌ ஒன்றாகச்‌ சேர்த்து விட்டிருந்தது. அவளோ இன்னொருத்தரின்‌ மனைவியாக, தனக்கென்றொரு குடும்பத்துடன்‌ வாழ்ந்து வந்தவள்‌. அவனோ அவளைப்போல்‌ தன்‌ மனைவி, குழந்தைகளென தனக்கொரு வட்டத்தைப்‌ போட்டு , அதனுள்‌ வாழ்ந்து

வந்தவன்‌. ஆனந்தனின்‌ நிலையும்‌ அதுதானே... அவனும்‌ தன்‌ தாய்‌, தந்தையென வாழ்ந்து வந்திருந்தவன்‌. சிந்தனையினின்றும்‌ நீங்கியவனாக, நனவுலகிற்கு வந்த இதயச்சந்திரன்‌ தனக்குள்ளாகவே தீர்மானமொன்றினை எடுத்தவனாக , சரோஜாவுடன்‌

எப்படியும்‌ இது விடயமாகக்‌ கதைத்துவிட வேண்டுமென்று எண்ணினான்‌. அப்பொழுதுதான்‌ ஆனந்தன்‌ அருகிலிருந்த அவனையொத்த சிறுவர்கள்‌ சிலரைச்‌ சிந்திப்பதற்காகச்‌ சென்றிருந்தான்‌ என்பது நினைவுக்கு வந்தது. நல்லதாகப்‌ போய்‌ விட்டதென்று பட்டது. முதலில்‌ சரோஜாவுடன்‌ கதைப்பதே நல்லதென்று பட்டது.

சரோஜாவோ வழக்கம்போல்‌ தனிமையில்‌ மூழ்கியிருந்தாள்‌. இதயச்சந்திரன்‌ தன்னைத்‌ த்யார்படுத்திவனாக அவளருகில்‌ சென்று " சரோஜா" என்றழைத்தான்‌.

அவனது அழைப்பின்‌ வேறுபாட்டை உடனேயே சரோஜாவின்‌ பெண்ணுள்ளம்‌ புரிந்து கொண்டது. 'என்ன என்பது போல்‌ அவனை ஏறிட்டுப்‌ பார்த்தாள்‌. அவனே தொடர்ந்தான்‌: "கெதியிலை வெளியிலை போகலாம்‌ போலக்‌ கிடக்குது. அதுதான்‌ அதைப்பற்றிக்‌ கதைக்கலாமெயென்று பட்டது. அதுதான்‌ உங்களுக்கும்‌ நேரமிருக்குமென்றால்‌ ,

பதிவுகள்‌ 02020

59 பதிவுகள்‌ 36 சிறுகதைகள்‌ (தொகுதி மூன்று)

கொஞ்சநேரம்‌ என்னுடன்‌ நீங்கள்‌ எல்லோரும்‌ சந்தித்துக்‌ கலந்தாலொசிக்க முடியுமே?" அதற்கவள்‌ பதில்‌ அவளது மனநிலையினை மிகவும்‌ துல்லியமாகவே வெளிப்படுத்தியது. "எல்லாமே முடிந்து விட்டதே."

"என்ன சொல்லுகிறீர்கள்‌ சரோஜா?"

"சொல்ல என்ன இருக்கு. என்னைப்‌ பொறுத்தவரையில்‌ எல்லாமே முடிஞ்சு போயிற்று. "

இவ்விதம்‌ சரோஜா கூறவே, இதயச்சந்திரன்‌ இடை மறித்தான்‌: " சரோஜா. நீங்களே இப்படிச்‌ சொன்னால்‌ எப்படி. ஆனந்தனைக்‌ கொஞ்சம்‌ நினைச்சுப்‌ பாருங்கள்‌. அவனுக்காகவாவது நாங்களேதாவது நல்ல முடிவை எடுக்க வேண்டும்தானே.. "

இதற்கு அவள்‌ மெளனமாகவிருந்தாள்‌. அவனே தொடர்ந்துக்‌ கூறினான்‌: "சரோஜா. நான்‌ நல்லாய்‌ யோசித்துத்தான்‌ இந்த முடிவுக்கு வந்திருக்கிறன்‌. இன்னும்‌ கொஞ்ச நாளிலை எங்களையும்‌ இந்த முகாமிலிருந்து வெளியிலை அனுப்பி விடுவாங்கள்‌.

வெளியிலை போனவங்களிலை பலருக்கு இன்னும்‌ குறைஞ்ச அளவு வசதிகள்‌ தானும்‌ செய்து கொடுக்க வில்லையாமே... இப்படியான சூழலிலை நீங்களும்‌ , ஆனந்தனும்‌ தனியே இருந்தால்‌ என்ன நடக்குமென்றதை நினைச்சுப்‌ பார்த்தாலே

பயமாயிருக்கு. அதனால்தான்‌ நான்‌ கடைசியிலை இந்த முடிவுக்கு வந்திருக்கிறன்‌.."

"நீங்கள்‌ என்ன கூறுகிறீர்கள்‌? சரோஜாதான்‌ கேட்டாள்‌.

இதற்குச்‌ சிறிது யோசித்துவிட்டு இதயச்சந்திரனே கூறினான்‌: "சரோஜா. நாங்கள்‌ மூவரும்‌ வெளியிலை போன பிறகும்‌ ஒன்றாகவே வசித்தால்‌ அதுதான்‌ நல்லதுபோலை எனக்குத்‌ தெரியிது. நான்‌ உயிரோடை இருக்கிற வரையில்‌ என்னால்‌ முடிஞ்ச

அளவுக்கு உங்களுக்கும்‌, ஆனந்தனுக்கும்‌ செய்வன்‌. உங்களை அன்றைக்கு அந்தப்‌ போர்‌ சூழலிலை பார்த்த அந்தக்‌ கணத்திலேயே எனக்குள்‌ சொல்லிக்‌ கொண்டேன்‌ இந்தப்‌ பெண்ணை எப்படியும்‌ , என்னாலை முடிஞ்ச்‌ அளவுக்குக்‌ காப்பாத்துவேன்‌. நான்‌

ஒன்றாக இருப்போம்‌ என்று சொன்னதும்‌ தவறாக ஒன்றும்‌ நினைச்சு விடாதீங்கள்‌. இருவரும்‌ ஆனந்தனுக்கு அவனது அப்பா, அம்மா இருந்தால்‌ என்ன செய்வாங்களோ அப்படியே எதவிதக்‌ குறையுமில்லாமல்‌ எங்களால்‌ முடிஞ்சதைச்‌ செய்ய வேண்டும்‌. அதுக்காக நாங்களிருவரும்‌ புருசன்‌, பெண்டாட்டியாகத்தான்‌ இருக்க வேண்டுமென்று அர்த்தமில்லை. அப்படி வாழக்‌ கிடைச்சால்‌ அதை நான்‌ மறுக்க மாட்டன்‌. ஆனால்‌ அதுவல்ல என்‌ இப்போதைய விருப்பம்‌. நாங்கள்‌ மூவருமே இந்தப்‌ போரினால்‌ பாதிக்கப்பட்டிருக்கிறம்‌. மனுசங்க என்ர அடிப்படையில்‌ நாங்கள்‌ ஒருவருக்கொருவர்‌ உதவி

பதிவுகள்‌ 02020

60 பதிவுகள்‌ 36 சிறுகதைகள்‌ (தொகுதி மூன்று

செய்து கொண்டு வாழ வேண்டுமென்றுதான்‌ நினைக்கிறன்‌. நீங்கள்‌ இப்பவே இதுக்கான பதிலைச்‌ சொல்ல வேண்டுமென்றில்லை. நல்லா யோசித்து, ஆற , அமர

யோசித்துச்‌ சொன்னால்‌ போதும்‌. இந்த முகாமை விட்டு போறதுக்குள்ளை சொன்னால்‌ அது போதும்‌. நீங்கள்‌ நல்ல பதிலைச்‌ சொல்லுவீங்களென்று நினைக்கிறன்‌"

இவ்விதம்‌ கூறிவிட்டு, சரோஜாவைத்‌ தனிமையில்‌ விட்டுவிட்டு, குடிசையின்‌ வெளியே வந்தான்‌ இதயச்சந்திரன்‌. முதன்‌ முறையாக எதிர்காலத்தைப்‌ பற்றிய நம்பிக்கைக்‌ கீற்றொன்று சிந்தையில்‌ தோன்றி மறைந்தது. முடிவு கூடத்‌ தன்னுள்‌ தொடக்கமொன்றினை எவ்விதம்‌ மறைத்து வைத்துள்ளது.

போர்கள்‌ மட்டும்‌ இல்லையென்றால்‌ இந்தப்‌ பூவுலகுதான்‌ எவ்விதம்‌ ஆனந்தமாக விளங்கும்‌. எந்தவித இன,மத, சாதி வேறுபாடுகளற்று, இந்தப்‌ பூமிப்பந்தின்‌ மானுடர்கள அனைவரும்‌ ஒரு தாய்ப்பிள்ளைகளாக வாழ்ந்திருக்கும்‌ சாத்தியம்‌ ஏற்பட்டால்‌ எவ்விதம்‌ இன்பமாகவிருக்கும்‌.

போரே ! போய்‌ விடு! போரே ! போய்‌ விடு! போரே ! போய்‌ விடு! போரே ! போய்‌ விடு!

ngiri2704@rogers.com

பதிவுகள்‌, ஆகஸ்ட்‌ 2010 இதழ்‌ 128

பதிவுகள்‌ 02020

61 பதிவுகள்‌ 36 சிறுகதைகள்‌ (தொகுதி மூன்று)

9. சிறகும்‌, உறவும்‌! - வ.ந.கிரிதரன்‌ -

மாதவனின்‌ மனதில்‌ அமைதியில்லை. கடந்த சில வாரங்களாக அவனுக்கும்‌, மனைவி வசுந்தராவுக்குமிடையில்‌ ஏற்பட்டிருந்த ஊடல்‌ நாளுக்குநாள்‌ குறைவதற்குப்‌ பதில்‌ அதிகரித்தவண்ணமேயிருந்தது. கூடலிருந்து ஆரம்பமான ஊடலிது. ஊடலுக்குப்‌ பின்‌ கூடுவதிலுள்ள இன்பம்‌ பற்றிப்‌ பல சங்கக்‌ கவிதைகள்‌ விபரித்துள்ளன. ஆனால்‌ கூடலே ஊடனலுக்கான காரணம்‌ பற்றி ஏதாவது சங்கப்‌ பாடல்‌ உள்ளதா? இத்தனைக்கும்‌ வசுந்தரா அவனது தாலி கட்டிய மனைவி. அவனைத்‌ துரத்தித்‌ துரத்தி ஒற்றைக்காலில்‌ நின்று காதலித்து மணம்‌ முடித்த துணைவி.

அவன்‌ சலிப்புற்றிருக்கும்‌ நேரங்களிலெல்லாம தன்‌ பார்வையால்‌, சொல்லால்‌, மயக்கும்‌ கண்களால்‌, புன்னைகையால்‌, அரவணைப்பால்‌ அவன்‌ சலிப்பைப்‌ போக்கும்‌ கலையில்‌ வல்லவள்‌. அவளா இப்படி மாறிப்‌ போனாள்‌ என்று சிந்தனையிலாழ்ந்தான்‌

மாதவன்‌. திருமணம்‌ முடிந்து இன்னும்‌ ஒரு வருடம்‌ கூட ஆகவில்லை. அதற்குள்‌ அவளேன்‌ இவ்விதம்‌ மாறி விட்டாளென்பது அவனுக்குப்‌ புரியாத புதிராகவிருந்தது. அவனது மனதில்‌ அண்மைக்‌ காலத்துச்‌ சம்பவங்களின்‌ தொகுப்பொன்று ஓடி மறைந்தது.

எப்பொழுதுமே கலகலப்பாகவிருக்கும்‌ வசுந்தராவின்‌ நடத்தையில்‌ அண்மைக்காலமாகவே ஒரு சிறு மாற்றம்‌. அடிக்கடி தன்பாட்டில்‌ சிந்தனையில்‌ ஆழ்ந்து போய்‌ விடுவாள்‌. அவனுக்கு அது ஒரு வித ஆச்சரியத்தையே தந்தது.

"என்ன வசந்தி! உமக்கேதாவது பிரச்சினையா? கொஞ்சக்‌ காலமாகவே நானும்தான்‌ பார்க்கிறன்‌ .. நீர்‌ ந்ல்லாத்தான்‌ மாறிப்‌ போட்டீர்‌.. என்ன பிரச்சினையென்றாலும்‌ என்னட்டை மனதைத்‌ திறந்து சொல்லலாம்தானே

அதற்கு அவள்‌ ஒன்றுமே பதில்‌ கூறாமல்‌ மெளனமாகவிருந்தாள்‌. அவன்தான்‌ மீண்டும்‌ கேட்டான்‌: "என்ன வசந்தி. நான்‌ பேசுறது காதிலை விழுகுதா?"

அதற்கும்‌ அவள்‌ பதிலெதனையும்‌ கூறாமல்‌ மெளனமே சாதித்தாள்‌. அப்பொழுதுதான்‌ அவனுக்கு அந்த யோசனை வந்தது. அவன்‌ சலிப்பாகவிருக்கும்‌ சமயங்களிலெல்லாம்‌ அவள்‌ எத்தகைய தந்திரங்களைச்‌ செய்து அவனை மாற்றிவிடுவாளோ, அதே

மாதிரியான தந்திரங்களை வைத்து அவளையும்‌ மாற்றிவிடவேண்டுமென்று அவன்‌ முடிவு செய்தது அப்பொழுதுதான்‌. கூடலில்‌ இருக்கும்‌ இன்பமே தனி. கூடலுக்கு மயங்காத உயிரினம்தானேது.

பதிவுகள்‌ 02020

62 பதிவுகள்‌ 36 சிறுகதைகள்‌ (தொகுதி மூன்று

மெதுவாக வசுந்தராவின்‌ பின்புறமாகச்‌ சென்றவன்‌ அவளை அப்படியே தன்‌ மார்புடன்‌ வாரித்தழுவ முயன்றான்‌. அடுத்து நடந்த நிகழ்வுகள்‌ அவனுக்குப்‌ பெரிதும்‌ ஆச்சரியத்தையும்‌, அதிர்ச்சியையும்‌ கூடவே தந்தன. அவன்‌ அவ்விதம்‌ பின்புறமாக வந்து அணைப்பதை எதிர்பார்க்காத வசுந்தரா அன்னியனொருவன்‌ அணைக்க வந்தால்‌ எவ்விதம்‌ எதிர்த்துப்‌ போராடுவாளோ அவ்விதமே அவனைத்‌ தன்‌ பலமனைத்தையும்‌ ஒன்றாக்கிப்‌ பிடித்துத்‌ தள்ளி, அவன்‌ அனைப்பினின்றும்‌ தன்னை விடுவித்துக்‌

கொண்டாள்‌.

மாதவன்‌ ஒரு கணம்‌ அதிர்ந்தே போனான்‌. அக்கணத்தில்‌ அவள்‌ தன்னையொரு வேற்று மனிதனாகவேக்‌ கருதி நடந்து கொண்டதாக உணர்ந்தான்‌.

அதுவே அவனது அதிர்ச்சியின்‌ காரணம்‌. 'இவளுக்கென்ன நடந்து போச்சுது. ஒரு வ்ருசமாய்க்‌ குழந்தை, குட்டியென்று ஒன்றும்‌ கிடைக்காமலிருக்கிறதாலை ஏதாவது விரக்தி, கிரக்தி அல்லது மன அழுத்தமென்று ஏதாவது மன வியாதி இவளைப்‌ பிடித்தாட்டுகிறதோ?.' அதே சமயம்‌ தன்னை அவள்‌ அவ்விதம்‌ அன்னியனைப்‌ போல்‌ தள்ளியதாலேற்பட்ட ஒருவித சோகம்‌ அவனைப்‌ பிடித்து வாட்டத்‌ தொடங்கியது. அந்த வாட்டத்திற்குரிய சோகமும்‌, அவளது நடத்தையால்‌ ஏற்பட்ட அதிர்ச்சியும்‌ ஒன்று சேர்ந்து தாக்கவே, அவன்‌ அவளத்‌ தன்‌ அணைப்பினிலிருந்து விலக்கினான்‌. தன்னை உயிருக்கு உயிராய்‌ காதலித்து மணந்த துணைவி அவள்‌. அவள்‌ இப்பொழுது தன்னை அன்னியன்‌ ஒருவனைப்‌ போல்‌ நடத்துகின்றாளே. அந்தப்‌ புறக்கணிப்பு அவனுக்கு ஒருவித வேதனையைத்‌ தந்தது.

அத்துடன்‌ ' ஆம்‌ சொறி என்றான்‌.

இவ்விதம்‌ தான்‌ கூறியதும்‌ ,அவளேதாவது மன்னிப்பு கேட்பாளென்று எண்ணிய மாதவனுக்கு , அவள்‌ அப்படியெதுவும்‌ கேட்காமல்‌, தவறு செய்தது அவன்தான்‌ என்பது போலவும்‌, அவனது மன்னிப்பு போதுமானதல்ல என்பது போலவுமொரு நிலையில்‌ தலையைத்‌ திருப்பிக்‌ கொண்டு நின்றது மேலும்‌ அதிர்ச்சியையே தந்தது. அவளாகவே திரும்பி வந்தால்‌ மட்டுமே இனி கதைப்பது என்று விரைவாகவே தீர்மானித்துக்‌ கொண்டான்‌. இப்பொழுது அவனை வசுந்தராவின்‌ திடீர்‌ மனமாற்றத்திற்கான

காரணங்கள்‌ என்னவாகவிருக்கும்‌ என்பதுபற்றிய எண்ணங்களே ஆக்கிரமிக்கத்‌ தொடங்கின.

2.

வசுந்தரா வேலையிலிருந்து வரும்போது மணி மாலை ஏழை நெருங்கி விடும்‌. அவர்கள்‌ வசிப்பது ஸ்கார்பரோவில்‌. அவள்‌ வேலை பார்க்கும்‌ வங்கி இருப்பது டொராண்டோ நகரின்‌

பதிவுகள்‌ 02020

63 பதிவுகள்‌ 36 சிறுகதைகள்‌ (தொகுதி மூன்று

மேற்குப்‌ புறத்தின்‌ எல்லையில்‌ ரோயல்‌ யோர்க்‌ விதியும்‌, புளோர்‌ விதியும்‌ சந்திக்கும்‌ இடத்திற்கண்மையில்‌. வேலை முடிந்து பாதாள்‌ இரயிலேறி , ரபிட்‌ ட்ரான்சிட்‌, பஸ்களென மாறி மாறி ஏறி இறங்கி வரவேண்டும்‌. இந்த விடயத்தில்‌ அவன்‌ கொடுத்து வைத்தவன்‌.

அவன்‌ தகவல்‌ தொழில்‌ நுட்ப நிபுணனாக, ஒப்பந்த அடிப்படையில்‌, அத்துறையிலுள்ள வேலை வாய்ப்பு முகவர்களினூடு சுய தொழில்‌ செய்து கொண்டிருந்தான்‌. அடிக்கடி பணி புரியும்‌ நிறுவனங்கள்‌ மாறிக்‌ கொண்டிருந்தாலும்‌, அதனைத்தான்‌ அவனும்‌

விரும்பினான்‌, பல்வேறு நிறுவனங்களில்‌ வேலை செய்வதன்‌ மூலம்‌ அதிக அளவில்‌ தொழில்‌ நுட்ப அனுபவங்களைப்‌ பெறக்‌ கூடியதாகவிருந்தது. அனுபவங்களுக்கேற்ப ஒவ்வொரு முறையும்‌ ஊதியத்தையும்‌ அவனால்‌ அதிகரிக்க முடிந்தது. 'வெப்‌

சேர்வர்‌' நிர்வகிப்பதில்‌, அதற்குரிய 'அப்ளிகேசன்களை' நிறுவுதற்குரிய 'சேர்வர்‌களை உருவாக்கி, 'அப்ளிகேசன்களை' நிறுவுவது .. இவைதான்‌ அவனது முக்கியமான தொழில்‌. மைக்ரோசாவ்ட்டை மையமாகக்‌ கொண்டு அந்நிறுவனத்தால்‌ உருவாக்கப்படும்‌ மென்பொருள்களைப்‌ பாவித்து மேற்படி சேவைகளை ஆரம்பத்தில்‌ வழங்கியவன்‌ ஒப்பந்த அடிப்படையில்‌ மேலும்‌ பல நிறுவனங்களில்‌ பணி புரிந்ததன்வாயிலாக இன்று லினிக்ஸ்பிஎச்பிமை எஸ்குயூஎல்‌, ஜபிஎம்‌ ௭.ஜ.எக்ஸ்‌ யுனிக்ஸ்‌! வெப்‌ ஸ்பெயர்‌ அப்ளிகேஷன்‌ சேர்வர்‌ எனத்‌ தன்‌ அறிவாற்றலையும்‌, அனுபவத்தையும்‌ வளர்த்தெடுத்திருந்தான்‌. இணையமும்‌ அது பற்றிய பல்வேறு தொழில்‌ நுட்பங்களும்‌ அவனை மிகவும்‌ கவர்ந்தவை. இதனால்‌ அவன்‌ தன்‌ பணியினை மிகவும்‌ இரசித்து, விரும்பி,

ஆற்றினான்‌. தற்போது அவன்‌ பணி புரியும்‌ நிறுவனம்‌ அவர்களது இருப்பிடத்திற்கண்மையில்தானிருந்தது. இதனால்‌ நேரத்துடனேயே அவன்‌ வீடு திரும்பிவிடுவான்‌.

அன்றும்‌ அவ்விதமே திரும்பியவன்‌ வீட்டின்‌ பின்‌ வளவில்‌ பிளாஸ்டிக்‌ கதிரையொன்றைத்‌ தூக்கிக்‌ கொண்டு வந்து போட்டமர்ந்தபடியே சிந்தனையிலாழ்ந்தபோது மாலை மணி ஆறு ஆகிவிட்டிருந்தது. அவனது சிந்தனை முழுவதையும்‌ வசுந்தராவே

ஆக்கிரமித்திருந்தாள்‌. இந்தப்‌ பிரச்சினைக்கொரு முடிவு கட்டினால்‌ நல்லதென்று பட்டது. இவ்விதமே இருவரும்‌ அண்மைய மாற்றங்களுக்கென்ன காரணமென்பது தெரியாமல்‌ , ஒருவிதமான ஒட்டாத வாழ்க்கை வாழ்வதிலும்‌, ஆற அமர யோசித்து,

பிரச்சினைகளைப்‌ பற்றி மனந்திறந்து கதைப்பதன்‌ மூலம்தான்‌ தற்போது நிலவும்‌ இறுக்கமான சூழலுக்கொரு தீர்விருக்க முடியுமென்று பட்டது. அவ்விதம்‌ நினைத்ததுமே மனதிலொரு ஆறுதலேற்பட்டது. அது வரையில்‌ வசுந்தரா பற்றிய எண்ணங்களில்‌ மூழ்கிக்‌ கிடந்தவனின்‌ கவனம்‌ அதன்பின்பே சுற்றியிருந்த அந்திச்‌ சூழலின்மேல்‌ திரும்பியது.

சிவந்திருந்த அந்தி வான்‌ எப்பொழுதுமே அவனைக்‌ கவருமொரு நிகழ்வு. பொதுவாக

பதிவுகள்‌ 02020

64 பதிவுகள்‌ 36 சிறுகதைகள்‌ (தொகுதி மூன்று

விரிந்திருக்கும்‌ நீலவான்‌, சுடர்‌ கொழிக்கும்‌ இரவு வான்‌, முகில்‌ மூடி அவ்வப்போது உறுமும்‌ கார்காலத்துக்‌ கருவான்‌.. இவ்விதம்‌ விரிந்திருக்கும்‌ வானின்‌ பல்வேறு வடிவங்களும்‌, நிகழ்வுகளும்‌ அவனுக்கு மிகவும்‌ பிடித்தமானவை. இயற்கையை எவ்வளவு இரசித்தாலும்‌ அலுப்பதில்லை. இயற்கையின்‌, படைப்பின்‌ நேர்த்தி மிக்க அழகு எப்போழுதுமே அவனது தாகமெடுத்தலையும்‌ சிந்தனையைத்‌ தூண்டிவிடும்‌

வல்லமை மிக்கது. அவனது பால்யகாலத்தில்‌ காடுமேடென்று அலைந்து திரிவது அவனுக்கு மிகவும்‌ பிடித்தமான பொழுதுபோக்குகளிலொன்று. அதிலும்‌ கொட்டும்‌ மழை அவனை மிகவும்‌ கவர்ந்ததொரு இயற்கை நிகழ்வு. இரவு முழுக்க , ஓட்டுக்‌

கூரை சடசடக்கக்‌ கொட்டும்‌ மழையையும்‌, கூடவே அருகிலிருக்கும்‌ வயற்புறங்களிலிருந்து ஒலிக்கும்‌ தவளைக்‌ கச்சேரிகளையும்‌ கேட்பதைப்‌ போல்‌ மகிழ்ச்சி தருவது வேறொன்றுமுண்டோ?

இவ்விதமே அன்றும்‌ அந்தியின்‌ அழகில்‌ மெய்மறந்திருந்த அவனைக்‌ கண்டதும்‌ படையெடுக்கும்‌ மாடப்புறாக்கள்‌ சில தற்பொழுதும்‌ அவனைக்‌ கண்டதும்‌ அருகில்‌ வந்தமர்ந்தபடி அகப்பட்டடதைக்‌ கொறிக்க ஆரம்பித்தன. ஒவ்வொரு முறையும்‌ அவன்‌ புறாக்களைக்‌ கண்டதும்‌ அவற்றுக்குப்‌ பாணைச்‌ சிறு சிறு துண்டுகளாக்கிப்‌ போடுவான்‌. அதன்‌ விளைவாக ஏற்பட்ட நட்பின்‌ அடிப்படையில்‌ அந்தப்‌ பட்சிகளுக்கும்‌ அவனுக்குமிடையில்‌ ஒருவிதமான உறவும்‌ , பிணைப்பும்‌ ஏற்பட்டிருந்தன. அவற்றின்‌ விளைவாக அந்தப்‌ புறாக்கள்‌ அவன்மேல்‌ எந்தவிதமான ஐயமும்‌, அச்சமும்‌ கொள்வதில்லை. அவனை தங்களது நம்பிக்கைக்குரியதொரு உயிரினமாக அவை கருதின போலும்‌. மாதவன்‌ வீட்டினுள்‌ சென்று கிடந்த பாணொன்றை எடுத்துக்கொண்டு வந்து

சிறு சிறு துண்டுகளாக்கி புறாக்களை நோக்கி விசினான்‌. அவையும்‌ மிகவும்‌ உற்சாகத்துடன்‌ தீனியைத்‌ தேடிக்‌ கொறிக்க ஆரம்பித்தன.

அவனது கவனம்‌ அவற்றின்பால்‌ திரும்பியது. ஆரம்பத்தில்‌ சாதாரணமாகக்‌ கவனிக்க ஆரம்பித்தவனின்‌ கவனத்தை அவற்றின்‌ நடத்தை மிகவும்‌ கவர்ந்து விடவே மனமொன்றிக்‌ கவனிக்க ஆரம்பித்தான்‌. அத்துடன்‌ உள்ளே சென்று மேலுமொரு

பாணொன்றைப்‌ பிய்த்தெடுத்துவந்து சிறு சிறு துண்டுகளாக்கி அவற்றிற்கிட்டான்‌.

ஆரம்பத்தில்‌ உண்பதில்‌ கவனத்தைப்‌ பதித்திருந்த ஆண்‌ புறாவொன்றின்‌ கவனம்‌ , அதன்‌ வயிற்றுப்‌ பசி ஓரளவுக்குத்‌ தணிந்ததும்‌, வேறு திசையில்‌ ப்யணிக்க ஆரம்பித்தது. அவற்றிலிருந்த ஆண்‌ புறாவின்‌ அங்க சேட்டைகள்‌ மாதவனுக்கு ஒருவித

சிரிப்பையும்‌, இன்பத்தையும்‌ முடிவில்‌ ஆச்சரியத்தையும்‌ தந்தன. தனது வாலைச்‌ சிறிது விரித்து, தரையுடன்‌ தேய்த்தபடி, கழுத்துப்புறத்துச்‌ சிறகுகளைச்‌ சிலிர்த்தபடி, கழுத்தை மேலும்‌ கீழுமாக விரைவாக மேலும்‌ கீழும்‌ அசைத்தபடி அந்த ஆண்‌ புறா

அருகில்‌ உண்பதில்‌ கவனமாயிருந்த பெண்‌ புறாவின்‌ கவனத்தைக்‌ கவர முயன்றது. துணையுடன்‌ கூடுவதற்காக அது செய்த தந்திரமும்‌, அதன்‌ ஒரு விதமான நடன அசைவும்‌

பதிவுகள்‌ 02020

65 பதிவுகள்‌ 36 சிறுகதைகள்‌ (தொகுதி மூன்று

அவனை மேலும்‌ கவரவே அவற்றைக்‌ கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தான்‌

மாதவன்‌. ஒவ்வொரு முறையும்‌ ஆண்‌ புறாவின்‌ முயற்சியினை அந்தப்‌ பெண்‌ புறா கவனித்ததாகத்‌ தெரியவில்லை. அலட்சியம்‌ செய்தபடியே தன்‌ பாட்டில்‌ விலகி, விலகிச்‌ சென்றபடியே தன்‌ கவனத்தை ஆங்காங்கே சிதறிக்‌ கிடந்த உணவுத்‌

துணிக்கைகளைத்‌ தேடி உண்பதில்‌ கவனமாகவிருந்தது. அவனுக்கு அந்த ஆண்‌ புறாவின்‌ மேல்‌ ஒருவித பரிவு கலந்த உணர்வு ஏற்பட்டது. அதே அதன்‌ முயற்சிகளை அலட்சியம்‌ செய்து கொண்டிருந்த அந்தப்‌ பெண்‌ புறாவின்மேல்‌ சிறிது ஆத்திரமாகக்‌

கூட வந்தது. 'என்ன பெண்ணிது... கொஞ்சம்‌ கூடத்‌ துணையின்‌ உணர்வுகளைப்‌ புரிந்து கொள்ளமுடியாமல்‌... சரியான அகங்காரம்‌ பிடித்த பெண்ணாகவிருக்க வேண்டும்‌' இவ்விதம்‌ தனக்குள்ளாகவே அவன்‌ கூறிக்கொள்ளவும்‌ செய்தான்‌.

ஆனால்‌ அந்த ஆண்‌ புறா தனது பெண்‌ துணையின்‌ புறக்கணிப்பைப்‌ பற்றியும்‌ சிறிதும்‌ அலட்டிக்கொள்ளவேயில்லை. விடாமல்‌ , சலிக்காமல்‌ மீண்டும்‌ மீண்டும்‌ முயற்சி செய்து கொண்டேயிருந்தது. அப்பொழுது அவனுக்கு அவனது பால்ய காலத்து

நினைவொன்று ஞாபகத்துக்கு வந்தது. அவனது அம்மா எப்பொழுதுமே விட்டில்‌ கோழி வளர்க்கத்‌ தவறியதேயில்லை. அப்பொழுதெல்லாம்‌ முற்றத்தில்‌ அடிக்கடி பெட்டைக்‌ கோழிகளைத்‌ துரத்தித்‌ துரத்தித்‌ தம்‌ ஆண்மையினை அகங்காரத்துடன்‌,

பலவந்தமாக வெளிப்படுத்தும்‌ சேவல்களின்‌ ஞாபகம்‌ இச்சமயத்தில்‌ தோன்றியது. அவை இந்தப்‌ புறாக்களிலிருந்து எவ்வளவு வித்தியாசமானவையென்று சடுதியாக பொறியாக அவன்‌ சிந்தையில்‌ எண்ணமொன்று ஓடி மறைந்தது. குறைந்தது பத்து

தடவைகளாவது அந்த ஆண்‌ புறா அந்தப்‌ பெண்‌ புறாவினைக்‌ கவருவதற்குத்‌ தன்னால்‌ முடிந்தவரையில்‌ முயற்சி செய்திருக்கும்‌. ஆனால்‌ ஒருமுறை கூட தன்‌ துணையின்‌ அலட்சிய நடத்தைக்காக அது ஆத்திரமுற்று, சேவலைப்‌ போல்‌ துரத்திப்‌

பலவந்தமாகத்‌ தன்‌ வேட்கையினைத்‌ தணிக்க முயற்சி செய்யவேயில்லை என்ற விடயம்‌ அப்பொழுதுதான்‌ அவனது கவனத்தில்‌ உறைத்தது. அந்த ஆண்‌ புறாவின்‌ மேல்‌ மிகுந்த மதிப்பும்‌, பெருமிதமுமேற்பட்டன.

இந்தப்‌ பெண்‌ புறா ஏன்‌ தன்‌ ஆண்‌ கூடுவதற்கு முயன்றும்‌ அலட்சியம்‌ காட்டுகின்றது. எவ்வளவோ காரணங்களிருக்கக்‌ கூடும்‌. அதன்‌ உளவியல்‌, உடலியல்‌ ரீதியிலான எத்தனையோ காரணங்கள்‌ இருக்கக்‌ கூடும்‌. அதற்காக, அதன்‌ அலட்சியத்திற்காக

அந்த ஆண்‌ புறா தன்‌ மனதைப்‌ போட்டு அலட்டிக்‌ கொள்ளவில்லையே. எப்பொழுதுமே கலகலப்பாக இருக்கும்‌ வசுந்தராவின்‌ நடத்தையில்‌ அந்தக்‌ கலகலப்பு காணாமல்‌ போனதென்றால்‌ அதற்கேதாவது உளவியல்‌, அல்லது உடலியல்ரீதியிலான காரணங்கள்‌ இருக்கக்‌ கூடும்‌. அவற்றைக்‌ கண்டறிவதற்கு, புரிந்து கொள்வதற்கு அவன்‌ எப்பொழுதுதாவது முயன்றதுண்டா? அதனைவிட்டுவிட்டு, அவளுடன்‌ பலவந்தமாகக்‌ கூடுவதற்கு முய்னற தன்‌ செய்கையையும்‌, கூடுவதற்குக்‌ கூட கண்ணியத்தைக்‌ கடைப்பிடித்த, துணையின்‌ மனநிலையினைக்‌ கவனத்திலெடுத்து அதனை வற்புறுத்தாத

பதிவுகள்‌ 02020

66 பதிவுகள்‌ 36 சிறுகதைகள்‌ (தொகுதி மூன்று

அந்த ஆண்‌ புறாவின்‌ நடத்தையையும்‌ ஒரு முறை மனது ஒப்பிட்டுப்‌ பார்த்தது. வெட்கித்துப்‌ போனான்‌.

பதிவுகள்‌, ஆகஸ்ட்‌ 2010 இதழ்‌ 128

பதிவுகள்‌ 02020

67 பதிவுகள்‌ 36 சிறுகதைகள்‌ (தொகுதி மூன்று) 10. சேகுவேராவின்‌ சேற்று தேவதை! - எம்‌.ரிஷான்‌ ஷெரீப்‌, இலங்கை -

யோகராணிக்குக்‌ குளிக்கச்‌ சேறு இன்றிப்‌ பெரிதும்‌ அவதிப்பட்டாள்‌. தோளில்‌ சுமந்த நீண்ட பொலிதீன்‌ பையோடு சேற்று நீர்‌ தேடி ஊர்‌ முழுதும்‌ அலைந்தபடியிருந்தாள்‌. பதினைந்து வருடங்களுக்கும்‌ மேலாக அவள்‌ குளித்து வந்த அழுக்குச்‌ சேற்று வாய்க்கால்‌ மூடப்பட்டுவிட்டது. மூடப்பட்ட காலம்‌ தொட்டு அவள்‌ அள்ளிக்குளிக்கப்‌ பயன்படுத்தும்‌ அகன்ற பெரும்‌ அழுக்குச்‌ சிரட்டையைப்‌ போல, அவளும்‌ தலையில்‌ ஈரம்‌ படாமலே விதிகள்‌ தோறும்‌ சுற்றி வந்தாள்‌. இத்தனைக்கும்‌ ஊரின்‌ மத்தியில்‌ பெரிய ஆறு, நாணல்களைத்‌ தொட்டபடி ஓடிக்கொண்டிருக்கிறது.

அவளுக்கென்று தனி இருப்பிடம்‌ இல்லை. இருட்டிவிட்டால்‌ போதும்‌. எந்த இடத்தில்‌ நிற்கிறாளோ அதற்கு அண்மையிலுள்ள வீட்டின்‌ திண்ணையில்‌, மாட்டுக்கொட்டகையில்‌, கிணற்றடியிலெனத்‌ தங்கிவிடுவாள்‌. அவளால்‌ யாருக்கும்‌ எந்தத்‌ தொந்தரவுமற்ற காரணத்தால்‌ ஊரார்‌ எதுவும்‌ சொல்வதில்லை. இன்னுமொரு காரணம்‌ இருக்கிறது. விடியலின்‌ முதல்‌ கிரணம்‌ கண்டு அவள்‌ விழித்தெழுந்து, எந்த இடத்தில்‌ தங்கினாளோ அந்த இடம்‌, முற்றம்‌, கிணற்றடி என எல்லா இடத்தையும்‌ மிகவும்‌ நேர்த்தியாகக்‌ கூட்டிச்‌ சுத்தம்‌ செய்துவிட்டு நகர்வாள்‌. சூழ இருக்கும்‌ குப்பைகளை எல்லாம்‌ அள்ளிக்‌ கொண்டு போவாள்‌. தான்‌ அழுக்காக இருந்தாளே ஒழிய சூழ இருந்தவைகளை ஒரு போதும்‌ அழுக்கடைய விட்டதில்லை அவள்‌.

வீடுகளில்‌ கொடுக்கப்படும்‌ எஞ்சிய பாண்‌, ரொட்டி, சோற்றுக்கென அவளது நீண்ட பொலிதீன்‌ பைக்குள்‌ ஒரு சிறிய பொலிதீன்‌ பையிருந்தது. ஓரங்களில்‌ கிழிந்து அழுக்கேறிய இன்னுமொரு உடுப்போடு ஒரு போர்வையையும்‌ சுருட்டி அவள்‌ அந்த நீண்ட

பொலிதீன்‌ பைக்குள்‌ பத்திரப்படுத்தியிருந்தாள்‌. அவ்வப்போது பார்த்துத்‌ தனது அழகிய இறந்த காலத்தை மீட்டவென அந்தப்‌ போர்வைக்குள்‌ அவளது குடும்பப்‌ புகைப்படமொன்றையும்‌ ஒளித்துப்‌ பாதுகாத்து வந்தாள்‌.

அவளது தங்கையின்‌ பிறந்தநாளொன்றில்‌ தனது கணவரோடு சேர்த்து மூவருமாக ஜானகி ஸ்டுடியோவில்‌ போய்‌ எடுத்துச்‌ சட்டமிட்ட புகைப்படமது. யாரும்‌ அருகில்‌ இல்லாப்‌ பொழுதுகளில்‌ மட்டும்‌ வெளியே எடுத்து அவ்வப்போது பார்த்துக்‌ கண்ணீர்‌

உகுப்பவள்‌, பூனை அசையும்‌ சிறு சலனத்துக்கும்‌ பதறியவளாகப்‌ படத்தை ஒளிப்பாள்‌. மூளை பிசகிவிட்டதெனப்‌ பெரியவர்களாலும்‌, பைத்தியம்‌ எனச்‌ சிறுவர்களாலும்‌ அழைக்கப்படுபவள்‌ முன்னர்‌ அழகானவளாகவும்‌, அன்பானவளாகவும்‌, மிகத்தூய்மையானவளாகவும்‌ இருந்தவள்தான்‌.

பதிவுகள்‌ 02020

68 பதிவுகள்‌ 36 சிறுகதைகள்‌ (தொகுதி மூன்று

எண்பதுகளின்‌ இறுதிப்பகுதியில்‌ அரசாங்கம்‌ வழங்கிய கல்லூரி குவார்ட்டஸில்‌ அவனும்‌ யோகராணியும்‌ தங்கியிருந்த காலப்பகுதியில்தான்‌ ஜே.வி.பி குழப்பமென எல்லோராலும்‌ அழைக்கப்பட்ட ஜே.வி.பி கலவரம்‌ அவ்வூரிலும்‌ உச்சத்தை எட்டியது.

வசந்தனுக்கு ஆசிரியர்‌ வேலை. அவ்வூரின்‌ மத்திய கல்லூரியில்‌ உயர்தர வகுப்புக்களுக்கு அரசியல்‌ பாடம்‌ கற்றுக்கொடுத்துவந்தான்‌. நல்லவன்‌. அவர்களது சொந்த ஊர்‌ இதுவல்லவெனினும்‌ இங்கு மாற்றல்‌ கிடைத்தவனுக்குத்‌ துணையாகத்‌ தனது வாசிகசாலை உதவியாளர்‌ பணியையும்‌ விட்டுவிட்டு வந்த யோகராணி தையற்தொழிலைச்‌ செய்துகொண்டு வீட்டோடு இருந்து வந்தாள்‌.

இக்‌ கலவரம்‌ ஆண்டாண்டு காலமாக நீடித்தது. இலங்கையின்‌ வடக்கு கிழக்கில்‌ இந்திய அமைதிப்‌ படையினரின்‌ பயங்கரவாதங்கள்‌ இடம்பெற்றுக்‌ கொண்டிருந்த காலப்பகுதியது. ஏனைய திசைகளிலெல்லாம்‌ ஜே.வி.பி. கலகக்காரர்களின்‌ பயங்கரவாதம்‌

இடம்பெற்றுக்‌ கொண்டிருந்தது. தினமும்‌ கலகக்காரர்களால்‌ விதிக்கப்பட்ட ஊரடங்குச்‌ சட்டம்‌ தொடர்ந்தது. இரவுகளில்‌ வீடுகளில்‌ பெரும்‌ வெளிச்சம்‌ துப்பும்‌ விளக்குகளை ஏற்றிவைப்பது கூடத்‌ தடுக்கப்பட்டிருந்த காலமது. அதற்கும்‌ மேலாக

மின்மாற்றிகளும்‌ மின்கம்பங்களும்‌ கிளர்ச்சிக்காரர்களால்‌ தகர்க்கப்பட தேசத்தின்‌ ஊர்கள்‌ தோறும்‌ இருள்கள்‌ சூழ்ந்தன. கம்யூனிசத்துக்கும்‌, இடதுசாரிக்‌ கொள்கைகளுக்கும்‌ ஆதரவாகப்‌ பெரும்‌ படைகளாக பல்கலைக்கழக, கல்லூரி மாணவர்கள்‌ திரண்டனர்‌. தபாலகங்கள்‌, அரச நிறுவனங்கள்‌, அரச கட்டடங்கள்‌ பலவற்றையும்‌ உடைத்தும்‌ எரித்தும்‌ அழிக்க முனைந்தனர்‌. பஸ்‌, ரயில்‌ போக்குவரத்துகள்‌ ஸ்தம்பிதமடைந்தன. மீறி நகர்ந்தவை எரிக்கப்பட்டன. பாடசாலைகள்‌, பல்கலைக்கழகங்கள்‌ மறு அறிவித்தல்‌

வரை இழுத்து மூடப்பட்டன. விதிகள்‌ வெறிச்சோடின.

கலகக்காரர்கள்‌ தாங்கள்‌ சொல்வதைச்‌ செய்ய மறுக்கும்‌ அனைவரையும்‌ கொன்றார்கள்‌. தமது பணத்தேவைகளுக்காக வீடுகள்‌ புகுந்து கொள்ளையடித்தார்கள்‌. ஆட்களைக்‌ கடத்திக்‌ கப்பம்‌ கேட்டார்கள்‌. அவர்களை அழித்து ஒழிக்க அரசு மேற்கொண்ட

நடவடிக்கைகளும்‌ தினமும்‌ தொடர்ந்தன. தினந்தோறும்‌ இரவுகளில்‌ எல்லா வீதிகளிலும்‌ காவல்துறையினர்‌ மற்றும்‌ கருப்புப்ப்னைப்‌ படையினர்‌ ஜே.வி.பி கிளர்ச்சிக்காரர்களை வேட்டையாடவென வலம்‌ வந்தனர்‌. சந்தேகத்துக்குரியவர்களைக்‌ கைது

செய்தனர்‌. அவ்வாறு கைது செய்யப்படுபவர்கள்‌ மீண்டு வரமாட்டார்கள்‌.

யோகராணிக்கு ஒரு தங்கையிருந்தாள்‌. பல்கலைக்கழகத்தில்‌ படித்துக்கொண்டிருந்தவள்‌ கம்யூனிசக்‌ கொள்கைகளில்‌ கவரப்பட்டாள்‌. அதன்‌ கூட்டங்களுக்குத்‌ தவறாது சென்றுவந்தவள்‌ படையினரால்‌ தேடப்பட்டு வந்த பொழுது எப்படியோ தப்பித்து சகோதரியிடம்‌ அடைக்கலம்‌ தேடிவந்தாள்‌. நள்ளிரவொன்றில்‌ அவளுக்கான பதுங்குகுழி வீட்டின்‌ அருகேயிருந்த காட்டுக்குள்‌ வசந்தனாலும்‌ யோகராணியாலும்‌ தோண்டப்பட்டது. மேலால்‌ குறுக்கே தடிகளிட்டு தென்னோலை, வாழை இலைச்‌ சருகுகள்‌ என

பதிவுகள்‌ 02020

69 பதிவுகள்‌ 36 சிறுகதைகள்‌ (தொகுதி மூன்று) மூடப்பட்ட குழியில்‌ உமாவின்‌ நாட்கள்‌ கழிந்தன.

பகல்‌ வேளைகளுக்கும்‌ சேர்த்து இரவில்‌ தயாரிக்கும்‌ உணவினை யோகராணி எடுத்து வருவாள்‌. பல இரவுகள்‌ தங்கையுடனே பதுங்குகுழி இருளுக்குள்‌ கழித்தாள்‌. இடையிடையே தங்கையைத்‌ தேடிப்‌ படையினர்‌ வீட்டுக்கு வரும்‌ நாட்களில்‌ நெஞ்சு பதறியபடி அவள்‌ தம்‌ வீட்டில்‌ இல்லையெனப்‌ பதிலளித்தார்கள்‌ வசந்தனும்‌ யோகராணியும்‌. மழை நாட்களில்‌ குழியினோரமாக நீரும்‌, சேறுமாக ஒழுகி வழியும்‌. தூங்க விடாமல்‌ விஷப்பூச்சிகளும்‌, தேளும்‌, தவளையும்‌ குழிக்குள்‌ ஒதுங்கும்‌. குளிருக்கும்‌ சகதிக்கும்‌ மத்தியில்‌ உயிரற்ற பிணம்‌ போல அச்சத்தில்‌ உறைந்து கிடப்பாள்‌ உமா.

இப்படியாக மூன்று மாதங்களுக்கும்‌ மேலாக இருந்துவந்த வேளையில்தான்‌ கல்லூரியில்‌ வசந்தன்‌ கற்பித்து வந்த வகுப்பறைக்‌ கட்டிடம்‌ ஒரு இரவில்‌ கிளர்ச்சியாளர்களால்‌ எரியூட்டப்பட்டது. தீப்பற்றியெரிவதைக்‌ கண்ட கல்லூரி வளாக குவார்ட்டஸில்‌ தங்கியிருந்த அவன்‌ ஓடிவந்து விதியில்‌ நின்று நெருப்பு , நெருப்பெனக்‌ கத்தினான்‌. செய்வதறியாத அல்லது ஏதும்‌ செய்யப்‌ பயந்த ஊராட்கள்‌ வேடிக்கை பார்த்தனர்‌. இது குறித்து முதலில்‌ காவல்துறைக்கும்‌ அதிபருக்கும்‌ அவன்‌ தான்‌ அறிவித்தான்‌. கிளர்ச்சியாளர்களின்‌ கோபம்‌ அவனில்‌ சூழ்ந்தது. கால வரைமுறையற்ற விடுமுறை கல்லூரியில்‌ விடப்பட்டது.

இச்‌ சம்பவத்திற்குப்‌ பிறகு ஊருக்குள்‌ தினந்தோறும்‌ காவல்துறை விசாரணைகளும்‌ கரும்பூனைப்படையின்‌ கடத்தல்களும்‌ அதிகரித்தன. கிளர்ச்சிக்காரர்களெனக்‌ கண்டறியப்பட்டவர்கள்‌, சந்தேகத்துக்குரியவர்கள்‌ ஒவ்வொருவராகக்‌ கரும்பூனைப்‌ படையினரால்‌ கைது செய்யப்பட்டனர்‌. கடத்தப்பட்டனர்‌. கடத்தப்பட்டவர்கள்‌ வீதிகளினோரமும்‌, மின்கம்பங்களிலும்‌ சுடப்பட்டும்‌ , எரிக்கப்பட்டும்‌ ,வதைக்கப்பட்டும்‌ பிணங்களாகக்‌ கிடந்தனர்‌. நதிகளில்‌ பிணங்கள்‌ மிதந்துவந்தன. ஊரிலிருந்த கிளர்ச்சிகளோடு சம்பந்தப்பட்ட இளைஞர்கள்‌ காடுகளுக்குள்‌ மரங்கள்‌ மேலும்‌, பதுங்குகுழிகளுக்குள்ளும்‌ ஒளிந்து வாழ்ந்தனர்‌.

இவ்வாறான நாட்களின்‌ ஒரு பிற்பகலில்‌ ஊரார்‌ அனைவருக்கும்‌ அடையாள அட்டைகளோடு கல்லூரி மைதானத்துக்கு வரச்‌ சொல்லிக்‌ காவல்துறையினரால்‌ அறிவிப்புச்‌ செய்யப்பட்டது. ஊரார்‌ அனைவரோடும்‌ வசந்தனும்‌ யோகராணியுமாக எல்லோரும்‌ வரிசையில்‌ நிற்கவைக்கப்பட்டார்கள்‌. கரும்பூனைப்‌ படையினரால்‌ கண்களிரண்டும்‌ இருக்குமிடத்தில்‌ மட்டும்‌ துளையிடப்பட்டு முழுவதுமாகக்‌ கறுப்பங்கி அணிந்து சாக்கினால்‌ தலை மூடப்பட்ட உருவம்‌ ஒவ்வொரு வரிசையாக படையினரோடு பொதுமக்களைப்‌ பார்த்தபடி நகர்த்தப்பட்டது. முன்னமே கைதுசெய்யப்பட்ட கிளர்ச்சியாளனாக இருக்கக்கூடுமான அது தலையசைத்துக்‌ குறிப்பால்‌ காட்டியவர்கள்‌ அனைவரும்‌ கைது செய்யப்பட்டு வாகனங்களில்‌ அடைக்கப்பட்டனர்‌.

பதிவுகள்‌ 02020

70 பதிவுகள்‌ 36 சிறுகதைகள்‌ (தொகுதி மூன்று

அவ்வுருவம்‌ வசந்தனையும்‌ பார்த்துத்‌ தலையசைத்த கணத்தில்‌ யோகராணி அதிர்ந்தாள்‌. பெருங்குரலெடுத்த அழுகை அவளையும்‌ மீறி வெளிப்பட்டது. பாரிய வெளிச்சம்‌ சுமந்த இடி அவள்‌ தலையில்‌ வீழ்ந்து வாழ்வினை இருளாக்கியது. மயங்கிவீழ்ந்தவளை வீட்டுக்குத்‌ தூக்கிவந்து மயக்கம்‌ தெளிவித்து அகன்றது கூட்டம்‌. சித்திரவதை தாங்காமல்‌ சொன்னானோ, அவர்களாகக்‌ கண்டுபிடித்தார்களோ அன்றைய இரவிலேயே உமா ஒளிந்திருந்த காட்டுக்குள்‌ கரும்பூனைகள்‌ நுழைந்தன. அவள்‌ கதறக்கதறத்‌ தாக்கிக்‌ கடத்தப்பட்டாள்‌. காப்பாற்றவென மறித்த யோகராணிக்கும்‌ பல அடிகள்‌ விழுந்து இறுதியாகத்‌ துப்பாக்கியின்‌ பின்புறத்தால்‌ பின்மண்டையில்‌ அடிவாங்கி அவ்விடத்திலேயே மயங்கிவிழுந்தாள்‌.

அவ்விரவில்‌ பலத்துக்‌ கத்தியும்‌ கதறியும்‌ ஊராட்கள்‌ எவரும்‌ காப்பாற்றவென வரவில்லை. எல்லோரிடத்திலும்‌ மிகுந்த அச்சம்‌ சூழ்ந்த நாட்களவை. அடிபட்டுக்கிடந்தவள்‌ முற்றத்தில்‌ அப்படியே கிடந்தாள்‌. மறுநாட்காலை கல்லூரி வாசலருகே டயர்‌

போட்டுப்‌ பாதி எரிந்த நிலையில்‌ வசந்தனின்‌ சடலம்‌ கிடந்தது. உமா குறித்தான எந்தத்தகவலும்‌ யாருக்கும்‌ இன்றுவரைக்கும்‌ தெரியவரவேயில்லை. காகங்களால்‌ குதறப்பட்ட சடலத்தின்‌ சதைத்துணுக்குகள்‌ கல்லூரிக்கிணற்றில்‌ மிதந்தன.

அப்பொழுதிலிருந்துதான்‌ அவள்‌ சித்தம்‌ பேதலித்திருக்கக்கூடும்‌. ஆட்சிகள்‌ மாறின. கிளர்ச்சிக்காரர்கள்‌ முற்றிலுமாக அழித்து ஒழிக்கப்பட்டனர்‌. மீளப்பெற முடியாத்திசைகளில்‌ அவளது வசந்தங்கள்‌ தொலைந்தன. காலங்களுமாற்றாத்‌ துயர்களைச்‌ சுமந்து வாழத்திணிக்கப்பட்டாள்‌. என்றோ உதித்து மறைந்த சேகுவேராவின்‌ கருத்துக்களில்‌ அவளது குடும்பம்‌, வாழ்க்கை, சுயம்‌ எல்லாம்‌ அழிந்தது. நீண்ட அழகிய நதி நீரோட்டம்‌, பழகிய வனங்கள்‌, கடை விதிகள்‌, தெரியாத சனங்கள்‌ அவளுக்கு அச்சமூட்டி

அசைந்தன.

பகல்‌ முழுதும்‌ வயல்வெளிகளில்‌ தங்கினாள்‌. வயல்வரப்பினூடு ஒடும்‌ சேற்றுநீரில்‌ உடுத்த உடையோடு சிரட்டையால்‌ அள்ளிக்‌ குளிக்கப்பழகினாள்‌. மழையென்றில்லை. வெயிலென்றில்லை. அவளுக்குக்‌ குளிக்கவேண்டும்‌. அதுவும்‌ ஆனந்தமாகச்‌ சிரித்துச்‌ சிரித்து அவள்‌ குளிப்பாள்‌. வழியும்‌ நீரின்‌ சொட்டுக்களில்‌ வசந்தனை, உமாவைக்‌ காணுபவளாக இருக்கக்கூடும்‌. குளித்துத்‌ துடைத்து, உடை மாற்றி அதே வயல்வரப்பில்‌ ஈர ஆடையைக்‌ காயப்போட்டுவிட்டு அந்திநேரத்தில்‌ ஊருக்குள்‌ நடக்கத்‌

துவங்குவாள்‌.

இப்பொழுது அவளுக்குப்‌ பகலில்‌ தங்கவும்‌ குளிக்கவும்‌ வாய்ப்பற்றுப்‌ போனது. வயல்வெளிகள்‌ மூடப்பட்டுப்‌ பெரிய கட்டிடங்கள்‌ கட்டப்பட்டுக்கொண்டிருக்கின்றன. குளிக்கச்‌ சேற்றுநீர்‌ தேடி ஊர்‌ முழுதும்‌ அலைந்தவள்‌ ஓர்‌ நாள்‌ விடியலில்‌ செண்பகமக்கா வீட்டுப்‌ பாழடைந்த கிணற்றில்‌ பிணமாக மிதந்தாள்‌. குளிக்கவெனப்‌ பாய்ந்திருக்கக்‌

பதிவுகள்‌ 02020

71 பதிவுகள்‌ 36 சிறுகதைகள்‌ (தொகுதி மூன்று) கூடுமென ஊருக்குள்‌ பேசிக்‌ கொண்டனர்‌.

(கனடா உதயன்‌ பத்திரிகை நிறுவனம்‌ நடத்திய சிறுகதைப்‌ போட்டியில்‌ நான்காவது பரிசினை வென்ற சிறுகதை - 2010)

mrishanshareef@gmail.com

பதிவுகள்‌, ஆகஸ்ட்‌ 2010 இதழ்‌ 128

பதிவுகள்‌ 02020

72 பதிவுகள்‌ 36 சிறுகதைகள்‌ (தொகுதி மூன்று 11. முகடுகள்‌ - - கமலாதேவி அரவிந்தன்‌ (சிங்கப்பூற்‌) -

காமாட்சி பாட்டிக்கு துக்கமாக இருந்தது. நெஞ்சிலறைந்துகொண்டு அழணும்போல்‌ அப்படி குமுறிக்‌ குமுறி வந்தது அழுகை. என்ன வாழ்க்கை இது? புருஷனும்‌ போனபின்னால்‌, பிள்ளைகளாலும்‌ அலட்சியப்படுத்தபட்டு, யாருக்குமே வேண்டாத பொருளாய்‌ இப்படியாவது ஏன்‌ வாழணும்‌? செத்துப்போனால்‌ தான்‌ என்னகமலாதேவி அரவிந்தன்‌ (சிங்கப்பூர்‌) -காமாட்சி பாட்டிக்கு துக்கமாக இருந்தது. நெஞ்சிலறைந்துகொண்டு அழணும்போல்‌ அப்படி குமுறிக்‌ குமுறி வந்தது அழுகை. என்ன வாழ்க்கை இது? புருஷனும்‌ போனபின்னால்‌, பிள்ளைகளாலும்‌ அலட்சியப்படுத்தபட்டு, யாருக்குமே வேண்டாத பொருளாய்‌ இப்படியாவது ஏன்‌ வாழணும்‌? செத்துப்போனால்‌ தான்‌ என்ன? ஆனா அதுக்கும்கூட திட்டமிடவோ,சமயோசிதமாய்‌ காரியம்‌ சாதிக்கவோ துப்பு

இல்லை. புத்தியும்‌ இல்லை. இத்தனைக்கும்‌ பாட்டி ஒன்றும்‌ மலடி இல்லை. கலயாணமாகி 10௦ வருஷங்களுக்குப்‌ பின்னால்‌,கருத்தரித்து ஆசை ஆசையாய்‌, பிள்ளைபெற்று, பாடான பாடெல்லாம்‌ பட்டு, வளர்த்தி ஆளாக்கிய, [சாண்பிள்ளையானாலும்‌,

ஆண்பிள்ளை,என்று சொல்லிக்கொள்ள] தடித்தடியாய்‌ இரண்டு ஆண்பிள்ளைகள்‌ இருக்கிறார்கள்‌ தான்‌. ஆனால்‌ பாட்டியைப்‌ பார்த்துக்‌ கொள்ளத்தான்‌ யாருக்குமே பொறுமை இல்லை. இத்தனைக்கும்‌ அவர்களொன்றும்‌ அப்படி கொடுமைக்காரப்‌

பிள்ளைகளும்‌ அல்ல.எல்லாமே கிரகாச்சாரம்‌ தான்‌, வேறென்ன சொல்ல ? பாட்டிக்கும்‌ வயசென்ன கொஞ்ச சொச்சமா? அது ஆச்சு எழுபது கிட்டே,.எழுபது வயசுக்கு தள்ளாமை ஒருபுறம்‌, மறதி ஒருபுறம்‌ என , ரொம்பவே தான்‌ ஆட்டிப்படைத்தது. என்ன

சொன்னாலும்‌ அடுத்த நிமிடமே மறந்து விடும்‌. மீண்டும்‌ அடியைப்பிடிடா, பாரதப்பட்டா, என்று, கேட்ட கேள்வியையே மீண்டும்‌ மீண்டும்‌ கேட்டு துளைக்கும்போது யாருக்குத்தான்‌ எரிச்சல்‌ வராது? பெரிய மகன்‌ சுந்தரம்‌ வீட்டில்‌ இதுதான்‌ பெரிய

பிரச்சினை. குளித்து, ரெடியாயிரு, என்று மகன்‌ சொல்லி விட்டுப்‌ போவான்‌. பாட்டி தொலைக்காட்சிப்பெட்டிக்கு முன்னால்‌ கசங்கிய புடவையும்‌, கழுவாத மூஞ்சியுமாய்‌ , உட்கார்ந்திருப்பாள்‌. எப்ப சொன்னே? என்ன சொன்னே? என்று கேள்வி கேட்பாள்‌. பாட்டிக்குத்தான்‌ மறதியாச்சே? அரக்கப்பரக்க பாட்டியை ரெடியாக்கி , *பாலி க்ளினிக்குக்‌' கொண்டுபோனால்‌, அனுமார்வால்போல்‌ நீண்ட கியூ தான்‌ வரவேற்கும்‌? காத்துக்‌ காத்து கடுப்பேறி, கார்டு கிட்டி, மருத்துவரைப்பார்த்து, மருந்து வாங்கி, அலுத்துக்‌

களைத்து,வீடு திரும்புவதற்குள்‌, புக்கித்தீமாவிலுள்ள திருக்குன்றம்‌ முருகன்‌ சாமியிலிருந்து,கட்டின பெண்டாட்டியின்‌ மூஞ்சிவரை, சே”, என்று வெறுத்துப்போயிருக்கும்‌ சுந்தரத்துக்கு... அன்றைக்குப்‌ பார்த்து பிள்ளைகள்‌ ஏதாவது அவர்களுக்குள்‌ சண்டை போட்டுக்கொண்டால்‌ போச்சு. அடி வெளுத்து வாங்கிவிடுவான்‌. சுந்தரத்தின்‌ கோபம்‌ கண்டு புருஷனிடம்‌ கிட்டே நெருங்கவே நடுங்குவாள்‌ மனைவி. இதாவது தேவலை, காலையில்‌ வேலைக்குப்போகும்போதே, யார்‌ வந்துதட்டினாலும்‌ ,கதவைத்திறக்கக்கூடாது, என்று படித்துப்படித்து சொல்லிவிட்டுப்‌ போவாள்‌ மருமகள்‌. ஆனால்‌ பாட்டிக்கு வாசலில்‌ மணிச்சத்தம்‌ கேட்டுவிடக்கூடாது. டபால்‌, என்று கதவைத்‌ திறந்து விடுவாள்‌.தெரிந்த

பதிவுகள்‌ 02020

73 பதிவுகள்‌ 36 சிறுகதைகள்‌ (தொகுதி மூன்று

அரைகுறை மலாயில்‌ நின்று கதைபேசுவார்‌.

ஒருநேரம்‌ போல இருக்குமா? என்று மருமகளும்‌ எவ்வளவோ சொல்லிப்‌ பார்த்தாயிற்று. இதுவும்‌ கூட பரவாயில்லை.. இரவில்‌ முழிப்பு வந்தவுடனேயே முட்டிக்கொண்டு வந்துவிடும்‌ பாட்டிக்கு. உடனே போகாவிட்டால்‌ படுக்கை நனைந்துவிடும்‌.

ஒருமுறை அப்படித்தான்‌ வயிறு நிறைந்துபோய்‌,அவசரம்‌ அவசரமாய்‌ எழுந்த பாட்டி,சடாரென்று போய்‌ சிறுநீர்‌ கழித்துவிட்டு வந்து படுத்துவிட்டாள்‌. எந்த சீமான்‌ எந்த பட்டணம்‌ போனாலும்‌, அதிகாலையிலேயே முழித்துக்கொள்ளும்‌ பாட்டிக்கு, அன்றைக்குப்பார்த்து நல்ல தூக்கம்‌.பொழுது நன்றாக விடிந்தும்‌ கூட வெளியில்‌ ஏதோ சத்தம்கேட்டுத்தான்‌ எழவே முடிந்தது. பார்த்தால்‌ மருமகள்‌ 'காச்‌ மூச்‌, சென்று கத்திக்கொண்டிருந்தாள்‌.என்னடா சேதி 2 என்று பேரனிடம்‌ கேட்க, அவன்‌ தரதரவென்று பாட்டியின்‌ கையை இழுத்துக்‌ கொண்டு போய்‌, பாத்ரூமுக்கு முன்னால்‌ தான்‌ நிறுத்தினான்‌. பாத்ரூம்‌ வாசலில்‌ ,தேங்கியும்‌ , சிதறியும்‌ கிடந்த சிறுநீரின்‌ வீச்சத்தில்‌ குமட்டிக்கொண்டு வந்தது .இது என்ன கண்றாவி? என்று ஒருவினாடி பாட்டிக்கு ஒன்றுமே புரியவில்லை. *விடே நாறிப்போச்சே? இதுகூடவா உறைக்கலை? என்று மருமகள்‌ நாக்கைபிடுங்கறாப்பில கேட்டப்ப தான்‌,விஷயமே புரிந்தது. வயிறு முட்டிய அவசரத்தில்‌ , இருட்டில்‌ பாத்ரூம்‌ என்று நினைத்து, பாத்ரூம்‌ வாசலில்‌,

வெளியிலேயே மூத்திரத்தை பெய்து விட்டு வந்திருக்கிறாள்‌ பாட்டி. நிதர்சனம்‌ உறைத்தபோது,அப்படியே அவமானத்தில்‌ குன்றிப்போனாள்‌ ..இப்படிப்பண்ணிப்புட்டோமே, என்று தலைகுனிந்து நின்றபோது அழுகையே வந்து விட்டது. ஆனால்‌ பாட்டியின்‌ துக்கமெல்லாம்‌ , மருமகள்‌ அந்த ஆட்டம்‌ போட்டாளே, பெரிய மகன்‌ சுந்தரம்‌ அப்போது வீட்டில்‌ தானே இருந்தான்‌. ஒருவார்த்தை அந்த தடிச்சியைப்‌ பார்த்து, தா, வாயை மூடு, என்ன இருந்தாலும்‌ அவுங்க எங்ம்மாதானே?” என்று ஒரு அதட்டல்‌ கூட

போடலையே, பிறகு, நான்‌ செஞ்சது மட்டும்‌ தப்புதான்‌, என்னை மன்னிச்சுடுங்க,” என்று மன்னிப்பு கேட்க பாட்டிக்கு மட்டும்‌ என்ன தலையில்‌ வண்டா ஓடுகிறது?

மறுநாளே இரண்டாவது மகன்‌, ராஜு விட்டுக்கு வந்துவிட்டாள்‌ .ராஜு கப்பல்‌ பட்டறையில்‌ இரும்பு உருக்கும்‌ பணியாளன்‌. சிரமதசைதான்‌, என்றாலும்‌ அவன்‌ மனைவியும்‌ பேக்டரியில்‌ வேலை செய்து வந்ததால்‌ , , இரண்டு பிள்ளைகளை வளர்க்க,

எப்படியோ குடும்பம்‌ ஓடிக்கொண்டிருந்தது.ஆனால்‌ காமாட்சிப்பாட்டியின்‌ இங்கிதமற்ற பல செயல்களால்‌ ,அவனும்‌ கஷ்டப்படத்தொடங்கியபோதுதான்‌ ,அவனாலுமே எரிச்சலைக்‌ கட்டுப்படுத்த முடியவில்லை. பிள்ளைகள்‌ படித்துக்கொண்டிருந்தாலும்‌

பாட்டிக்கு சன்‌.டி.வி, சீரியலை பார்த்தே ஆகவேண்டும்‌. சாப்பிடும்போது அப்படித்தான்‌,”ஏதோ நாத்தமடிக்குதே, என்று சின்னப்பேரன்‌ சொல்ல, பெரிய பேரன்‌, டேய்‌, பாட்டி, இன்னைக்கு குளிக்கவே இல்லையே?” என்று போட்டுடைப்பான்‌. அப்பொழுதுதான்‌ நேற்றிலிருந்தே குளிக்கவே இல்லையே, என்பதே பாட்டிக்கு ஞாபகம்‌ வரும்‌.ஆனால்‌ எப்படி ஒத்துக்கொள்வது? பிறகு மருமகள்‌ முன்னால்‌ நம்ம கெளரதை என்னவது? என்றாலும்‌ பேரன்‌ மேல்‌ அப்படிக்கோபம்‌ வரும்‌. மகனாவது அந்தப்பயல்‌ தலையில்‌ ஒரு கொட்டு

பதிவுகள்‌ 02020

74 பதிவுகள்‌ 36 சிறுகதைகள்‌ (தொகுதி மூன்று

வைத்திருக்கணும்‌.எங்கே? புருஷனும்‌ பெண்சாதியும்‌ தான்‌ அமுக்காய்‌ அப்பால்‌ போய்‌ விட்டார்களே? அதைத்தான்‌ தாங்கமுடியவில்லை பாட்டியால்‌. குளிப்பது மட்டுமல்ல. பாட்டிக்கு மருந்து குடிப்பதிலும்‌ சிக்கல்தான்‌. மருந்து குடித்தோமா, இல்லையா என்பதே மறந்துபோய்‌,, இரண்டு முறை ஒரே மருந்தைக்குடித்துவிட்டு, நாளெல்லாம்‌ தலைச்ற்றிப்போய்‌ மயக்கமாய்‌ படுத்துக்கிடப்பாள்‌ . சில சமயங்களில்‌ சாப்பிடவே பிடிக்காது..ஆனால்‌ சில நாட்களில்‌ அகோரமாய்‌ பசிக்கும்‌. சாப்பிட்டுவிட்டு அந்தண்டை போவதற்குள்‌ அப்படி பசிக்கும்‌. சத்தமிடாமல்‌, கீழே போய்‌ ஹாக்கர்‌ செண்டரில்‌ மீகோரேங்‌ சாப்பிட்டுவிட்டு வந்துவிடுவார்‌.வீடு திரும்பி வந்தால்‌, வாசல்‌ கதவு வெட்டி மல்லாத்தியாய்‌* திறந்து கிடக்கும்‌. போகும்‌ வேகத்தில்‌ வீட்டைப்‌ பூட்டக்கூட பாட்டி மறந்து போயிருக்கிறாள்‌. நல்லவேளை, அதற்குள்‌ யாருமே வீடு திரும்பியிருக்கவில்லை. அதனால்‌ பாட்டி அன்று பிழைத்தாள்‌. என்றாலும்‌ தன்னுடைய ஞாபக மறதி எங்கே கொண்டு போய்‌ விடுமோ என்ற பயத்தில்‌ , சதா கிலிதான்‌. அன்று ஞாயிற்றுக்கிழமை, பாட்டியும்‌ பிள்ளைகளும்‌ ,ஹாலில்‌ உட்கார்ந்து தொலைக்காட்சி பார்த்துக்‌ கொண்டிருந்தார்கள்‌.மகனும்‌ மருமகளும்‌ அறைக்குள்‌ தூங்கிக்கொண்டிருக்க, திடீரென்று பாட்டிக்கு இருமல்‌ வந்து விட்டது. விடாமல்‌ இருமல்‌ படுத்த, நெஞ்சில்‌ விக்ஸ்‌ போட்டுத்தேய்க்கணும்‌ போலிருந்தது. விக்ஸ்‌ பாட்டில்‌ மகன்‌ ரூமில்‌ தானே இருக்கிறது என்பது ஞாபகம்‌ வர, சடாரென்று கதவைத்‌ திறந்து கொண்டு உள்ளே போய்‌ விட்டார்‌.ஒரு கணம்‌ கண்கள்‌ ஏன்‌ குருடாகிப்போகவில்லை,என்று அப்படியே கூசிப்போய்விட்டது. பதறிக்கொண்டு பெட்ஷீட்டுக்குள்‌ தன்னை சுருட்டிக்கொண்டான்‌ மகன்‌. அலங்கோலத்தோடேயே, பாய்ந்துசென்று பாத்ரூமுக்குள்‌ தன்னை மறைத்துக்கொண்டாள்‌ மருமகள்‌. *கதவைக்கூட சாத்தாமல்‌ அப்படி என்னடி அலட்சியம்‌,” என்று மகன்‌ ராஜு , மனைவியைப்போட்டு ஒங்கி அறைய, நெருப்பாய்‌ உமிழும்‌ சினத்தோடே, வெளியே வந்த மருமகளின்‌ முகத்தில்‌ , பாட்டியால்‌ விழிக்கவே முடியவில்லை.

பிறகுதான்‌ , முதியோர்களுக்கான இந்த ஸ்டூடியோ அபார்ட்மெண்ட்‌ விட்டுக்கு பாட்டி குடி புகுந்தாள்‌.பாட்டியின்‌ புருஷன்‌ நாச்சிமுத்து விட்டுப்போன பணம்‌ போதவில்லைதான்‌.என்ராலும்‌ மகன்கள்‌ ராஜு, சுந்தரம்‌, இருவரும்‌ , கடனை உடனை வாங்கி, காசை எப்படியோ புரட்டி, முதியோர்களுக்கான இந்த விட்டில்‌ பாட்டியை குடிவைத்த அன்றுதான்‌, பாட்டிக்கும்‌, மகன்களுக்கும்‌ அப்பாடா என்றிருந்தது. மருமகள்களும்‌ சும்மா சொல்லக்கூடாது. தங்கள்‌ பங்குக்கு, வீட்டு சாமான்‌ வாங்கிப்போடவும்‌, மற்றபடி, கையைக்கடித்த மற்றசெலவுகளுக்கும்‌, தங்கள்‌ நகைகளக்கூட பாசாக்கடையில்‌ அடகு வைத்து,காசு கொடுத்து உதவிய தாராளத்தில்‌, காமாட்சிப்பாட்டிக்கு, பழசெல்லாம்‌ மறந்துபோய்‌, மனசு அப்படியே ' குள்ளக்குளிர' குளுந்துபோச்சு. இப்படியாக,பெரிய தலைவலியிலிருந்து தப்பித்த நிம்மதியில்‌ மகன்களும்‌, இனியாவது சுதந்திரமாக மூச்சு விட முடிந்த சந்தோஷத்தில்‌, பாட்டிக்கும்‌ பெரிய ஆஸுவாசம்‌ தான்‌. முதல்‌ ரெண்டு மாசத்துக்கு, பொழுதன்னிக்கும்‌ டி. வி. பார்ப்பதுதான்‌ வேலை. முடிந்தால்‌ சமைப்பது. இல்லையென்றால்‌ புளோக்கின்‌ கீழேயே, உள்ள ஹாக்கர்‌ செண்டரில்‌ போய்‌

பதிவுகள்‌ 02020

75 பதிவுகள்‌ 36 சிறுகதைகள்‌ (தொகுதி மூன்று

சாப்பிட்டுவிட்டு ஆடி அசைந்து வீட்டுக்கு வந்துபடுத்தால்‌ , பாட்டிக்கு சுகமாய்‌ தூக்கம்‌ வந்தது.நினைத்தால்‌ குளிப்பது. இல்லையென்றாலும்‌ , அப்படியே குளிக்க மறந்துபோனாலும்‌ யார்‌ கேட்பது? பாட்டியின்‌ விடு அது. பாட்டியின்‌ இஷ்டம்‌ தானே? ராஜா மெச்சியதே ரம்பா, என்பதுபோல்‌,பாட்டி வைததுதானே சட்டம்‌. சனிக்கிழமை வந்தால்‌ பெரிய மகன்‌ சுந்தரம்‌ , பசார்‌ செலவு வாங்கிப்போட்டு, தேவையானால்‌

கரண்டு பில்லும்‌ கட்டி விட்டுப்‌ போவான்‌. சின்ன மகன்‌ ராஜு வீட்டிலிருந்து ஞாயிற்றுக்‌ கிழமையானால்‌ கோழியோ, மீனோ சமைத்துக்‌ கொண்டு வந்து கொடுத்து , கையில்‌ பத்தோ, இருபதோ கொடுத்து விட்டுப்‌ போவார்கள்‌. சதா பாட்டிக்கு சிரிப்பு

வந்தது, சின்ன சின்ன வடிவேலு ஜோக்குக்கெல்லாம்கூட பாட்டி விழுந்து விழுந்து சிரித்தாள்‌. பார்க்கிறவங்களிடமெல்லாம்‌ வலியப்போய்‌ பேசி , விஷயம்‌ விசாரித்தாள்‌. அக்கம்‌ பக்கத்திலும்‌ கூட எல்லாருமே சீனர்களாயிருந்ததால்‌ அவர்களிடமும்‌ , தனக்குத்தெரிந்த ஓட்டை மலாயில்‌ பேசப்போனாள்‌. எல்லாமே முதல்‌ ரெண்டுமாசத்துக்கு ரொம்ப நல்லாதான்‌ இருந்துச்சி. ஆனால்‌ மூணு நாலு மாசத்துக்கப்புறம்‌, பாட்டிக்கு லேசாக இந்த வாழ்க்கையிலும்‌ அலுப்பு தட்டதொடங்கியது. நாள்முச்கடும்‌

எவ்வளவுநேரம்தான்‌ டி.வி. பாக்கறது? பூட்டிய விட்டுக்குள்‌ சதா ஒண்டியாய்‌ , பேசக்கூட ஒரு நாதியில்லாமல்‌,தானே வளைய வருவது, வரவர, பாட்டிக்கே,

அவுப்பும்‌, ,வெறுப்புமாய்‌, மண்டிக்கொண்டு வந்தது. இந்த நேரத்தில்தான்‌ ஒரு நாள்‌ காலைப்பொழுதில்‌, வீட்டுவாசலில்‌ வந்து நின்றாள்‌ பாக்கியம்‌. தஞ்சாவூர்ப்பொண்ணு. *தங்க ஒரு இடம்‌ வேணும்‌ பாட்டி, நான்‌ இதோ, இப்படி ஹாலில்‌ கூட படுத்துக்கறேன்‌, உங்களுக்கு ஒரு தொந்தரவும்‌ கொடுக்கமாட்டேன்‌ பாட்டி,” என்று ரொம்ப

பணிவாய்‌ கேட்டபோதே பாக்கியத்தை பாட்டிக்கு ரொம்பவும்‌ பிடிச்சுப்போச்சு. வெளியிலே ரொம்ப வாடகை கேட்கறாங்க பாட்டி, என்னாலெ கொடுக்க கட்டுப்படியாகலை” என்று பாக்கியமே தன்னிலை விளக்கம்‌ கொடுத்தபோது பாவமாய்‌

இருந்தது.ஆனால்‌ பாட்டியின்‌ கையில்‌ டிப்போசிட்‌ 150 ம்‌ ,வாடகைப்பணம்‌ 150 மாக , 300 வெள்ளியை கொடுத்து விட்டாள்‌ பாக்கியம்‌. பாக்கியம்‌ வந்த பிறகு விடே சுத்தமாகிப்போனது,.விடுகூட்டி, அவ்வப்போது, நேரமிருந்தால்‌ பாட்டிக்கு, சிம்பளாக , ஏதாவது சமைத்துக்கொடுப்பது, ராத்திரி படுக்கப்போகுமுன்‌ , நீலீபெருங்காலித்தைலத்தை, கால்‌ கெண்டைவிரலில்‌, மெத்து மெத்தென்று உருவிவிடுவது,என பாக்கியம்‌ ரொம்பவே அனுசரனையாயிருந்ததில்‌, பாட்டி, ஒரு சுற்றுப்‌ பெருத்துக்‌ கூட விட்டார்‌. முதியோர்களுக்கான வீடு என்பதால்‌, ஆக இருந்த ஒரே அறைக்குள்‌, பாட்டி கட்டிலிலும்‌, பாக்கியம்‌ , கீழேயும்‌ படுத்துக்கொண்டாள்‌. பாட்டிக்கு மீண்டும்‌ வாழ்க்கையில்‌ வசந்தம்‌ துளிர்த்தது. அன்றுகாலை 11 மணிக்கு, வாசல்‌ கதவு தட்டப்படும்‌ ஒசை மிக

விரோதமாக கேட்க , கதவைத்திறந்தால்‌, பாட்டிக்கு ஒரே ஆச்சரியம்‌. அதிர்ச்சி. வாசலில்‌ போலீஸ்காரர்கள்‌ நின்றிருந்தார்கள்‌. ஆனால்‌ பக்கத்தில்‌ குனிந்த தலையுடன்‌ , கையில்‌ விலங்குடன்‌ பாக்கியமும்‌ நின்று கொண்டிருந்தாள்‌.

"ஏன்‌? என்னாச்சும்மா பாக்கியம்‌? கொஞ்சம்‌ முந்தி தானே வேலைக்குப்போனே?'?

பதிவுகள்‌ 02020

76 பதிவுகள்‌ 36 சிறுகதைகள்‌ (தொகுதி மூன்று

என்னாச்சு? கையிலே என்னா இது? ,என்று பாட்டி கேட்டு முடிக்குமுன்‌, போலீஸ்காரர்கள்‌ ஏதோதோ ஆங்கிலத்தில்‌ கேட்க, பாக்கியம்‌ பாட்டியைச்‌ சுட்டிக்‌ காட்டினாள்‌.

ஏதோ தலையாட்டினாள்‌., அவ்வளவுதான்‌, நின்று நிதானிக்குமுன்‌, அடுத்தகணமே , பாட்டியையும்‌ தள்ளிக்கொண்டு,போய்‌, போலீஸ்‌ ஜீப்பில்‌ ஏற்றிக்‌ கொண்டு போய்விட்டார்கள்‌. அதிர்ச்சியில்‌ வெல வெலத்துப்‌ போன பாட்டிக்கு அவர்கள்‌ பேசிய ஆங்கிலம்‌ புரியவே இல்லை. விக்கித்துப்போய்‌ அய்யா, அய்யா, என்று அழத்தொடங்கினாள்‌. இந்தியாவிலிருந்து வந்த கள்ளக்‌ குடியேறியான பாக்கியம்‌, சட்டத்துக்கு புறம்பாக சிங்கப்பூரிலேயே தங்கிக்கொண்டு , கிடைத்த,"அல்லற. சில்லறை " வேலையைச்‌ செய்து கொண்டு, தங்கியிருந்த கதையோ, காமாட்சிப்பாட்டியின்‌ விட்டில்‌ தஞ்சம்‌ புகுந்தபோது கூட, உண்மையைச்சொல்லாமல்‌, அப்பாவிப்‌ பாட்டியை இந்த நிலைமைக்கு கொண்டுவந்து மாட்டிவிட்ட கதையோ, எதுவுமே பாட்டிக்கு தெரியாது. கள்ளக்குடியேறிக்குமட்டுமல்ல, அவர்களை வாடகைக்கு வைத்த வீட்டு உரிமையாளருக்கும்‌ கூட, இந்தக்‌ குற்றத்துக்குசிங்கப்பூரில்‌ குறைந்தது ஆறுமாத தண்டனையாவது நிச்சயம்‌, என்பதும்கூட பாட்டிக்குத்‌ தெரியாதுதான்‌. பதறிக்கொண்டு காவல்நிலையத்துக்கு வந்த மகன்களைப்‌ பார்த்ததும்‌ பாட்டி கதறிவிட்டாள்‌. ”எய்யா!, எய்யா! சுந்தரம்‌ ! , ராஜு,! என்னிய ஏன்‌ போலீஸ பிடிச்சுக்கிட்டு வந்திருக்கு? நானாச்சும்‌ பரவாயில்லை. வயசானவ, ஆனா பாக்கியம்‌ வயசுப்பொண்ணாச்சே?

அதையும்‌ பிடிச்சுக்கிட்டு வந்திருக்காங்களே? என்ன கோராமை இது? இதை கேட்பாரே இல்லையா? அந்தப்‌ பிள்ளை பாக்கியத்தையும்‌ போயிப்‌ பாத்து ரெண்டு வார்த்த ஆறுதலாப்‌ பேசுங்கய்யா?” தேம்பித்தேம்பி அழும்‌ காமாட்சிப்‌ பாட்டியைப்பார்த்து , சின்னப்பேரனுக்குத்தான்‌ அழுகை பொத்துக்கொண்டு வந்தது.

kamaladeviaravind@hotmail.com

பதிவுகள்‌, செப்டம்பர்‌ 2010 இதழ்‌ 129

பதிவுகள்‌ 02020

77 பதிவுகள்‌ 36 சிறுகதைகள்‌ (தொகுதி மூன்று

12. ஆஞ்செலா தனிமையில்‌ இருந்தபோது... பஸ்க்கால்‌ மெரிகோ. தமிழில்‌ நாகரத்தினம்‌ கிருஷ்ணா -

வரவேற்பறையில்‌ ஒரு பெரிய மேசையின்‌ பக்கத்தில்‌ அமர்ந்திருந்தாள்‌. கடந்தபல வருடங்களாக எதுவுமே அவள்‌ விரும்பினமாதிரி நடப்பதில்லை என்பது உண்மைதான்‌, எனினும்‌ தனிமைப்படுத்தப்பட்டிருந்த சூழல்‌ அவளை என்னவோ செய்தது.

இத்தனைக்கும்‌ கல்லறையிலிருந்து வீட்டிற்குத்‌ திரும்புகிற தருணத்தைப்போல கொடுமையானது வேறில்லையென்று ஓயாமல்‌ பலரும்‌ கூறியிருக்கிறார்கள்‌. அவளைப்பொறுத்தவரை எல்லாமே ஒழுங்காகத்தான்‌ நடக்கிறது. தேவாலயம்‌ நிறைந்திருந்தது. கல்லறையிலும்‌ வந்திருந்த கிராம மக்கள்‌ அனைவரையும்‌ ஒருவர்‌ பாக்கியின்றி கட்டி௮ணைத்து, அவர்களுடைய ஆறுதலை ஏற்றுக்கொள்ளவேண்டியிருந்தது. கிழம்‌ திபூகூட வந்திருந்தாளே அவளைக்‌ கடைசியாகச்‌ சந்தித்தது குறைந்தது ஒருவருடம்‌ இருக்குமா? இருக்கலாம்‌, எமிலி மர்த்தேன்‌ சவ அடக்கத்தின்போது பார்த்தது. எமிலி மர்த்தேன்‌ சவ அடக்கம்‌ மட்டும்தானா? வேறெதுவும்‌ நடக்கவில்லை? நினவிலில்லை. மாறாக இன்றைக்கு யார்‌ யாரெல்லாம்‌ கல்லறைக்கு வந்திருந்தார்களென்று

சொல்ல முடியும்‌. உதாரணமாக ஆந்தரே, நாற்பது வருடங்களுக்கு முன்பு ஒருமுறை நடனத்தின்போது, இவளை உதாசீனப்படுத்தியவர்‌. பாப்திஸ்த்‌ இவளுடைய வாழ்க்கையில்‌ குறுக்கிடுவதற்கு முன்பு நடந்த சம்பவம்‌. பாப்திஸ்த்‌! அவருடைய நீலக்‌

கண்களும்‌, பூபோட்ட சட்டைகளும்‌, வாயிலிருக்கும்‌ ரொம்பப காலத்திய புகைபைப்பும்‌; பைப்‌ அவருடைய தகப்பனுடையது, அதையும்‌ தகப்பனே விரும்பி மகனிடம்‌ கொடுத்ததாக பெருமைவேறு... அவளுக்கு இன்றைக்குக்‌ கசப்பினைத்‌ தந்த அனுபவமென்று சொன்னால்‌ ழெர்மேன்‌ ரிஷார்‌ என்பவளை கல்லறையிலிருந்து புறப்படும்‌ நேரத்தில்‌ நேருக்கு நேராக பார்க்க நேர்ந்தது. அவளுக்கு அறுபது வயது, இந்த வயதிலும்‌ தேவடியா மாதிரி இருக்கிறாள்‌.. ம்‌ அப்படித்தானே இருந்தாள்‌.

அஞ்செலா எழுந்தாள்‌. எல்லாம்‌ முடிந்தது. வீட்டில்‌ மரணச்‌ சுவடே கூடாது. தொலைத்து தலைமுழுகவேண்டும்‌. முதலில்‌ மெழுகு வர்த்திகள்‌, பிறகு கட்டில்‌ நெடுக ஆளுக்கேற்ப போட்டிருந்த நாற்காலிகள்‌. ஒழித்துமுடிந்ததும்‌ ஒரு முறை பெருக்கினால்‌

தீர்ந்தது. திரும்பி நடந்தபோது சட்டென்று பார்வை தோட்டத்தின்‌ பக்கம்‌ சென்றது. ஆமாம்‌, இதிலென்ன சந்தேகம்‌? எப்படி அவர்‌ அங்கிருக்கமுடியும்‌? இருந்தால்‌ அநேகமாக விதைகள்‌ தூவிய பாத்தியில்‌ குனிந்தபடியிருப்பார்‌- காரட்‌ ஒழுங்காக முளைத்துவருகிறதா எனப்‌ பார்ப்பதுண்டு. அப்படிப்‌ பார்ப்பதும்‌ அநேகமாக அன்றைக்கு மூன்றாவது முறையாக இருக்கும்‌. இருக்கமாட்டாரெனத்‌ தெரிந்தும்‌ வில்லோ மரமிருக்கும்‌ திசைநோக்கியும்‌, ஒருவேளை ஆப்பிள்‌ மரத்தின்கீழ்‌, ஏன்‌ கூடையில்‌ பழங்களை பொறுக்கிபோட்டபடி வலம்‌ வரக்கூடாதென்றெண்ணி அந்தப்‌ பக்கமாகக்கூட பார்வை சென்றது. ஒரிரவு திடீரென்று கண்விழித்தவர்‌, வயிற்றுப்புண்‌ மீண்டும்‌ உபத்திரவம்‌ கொடுக்கிறதென்றார்‌, அதற்குப்‌ பிறகு மளமளவென்று எல்லாம்‌ முடிந்தது. இத்தனைக்கும்‌ ஒரு சில ஆண்டுகளாகவே அதற்குப்‌

பதிவுகள்‌ 02020

78 பதிவுகள்‌ 36 சிறுகதைகள்‌ (தொகுதி மூன்று

பழகியிருந்தார்‌. அன்றைய தினம்‌ மருத்துவரை அழைக்க, அவரும்‌ வந்திருந்தார்‌. பொதுவாகவே அந்த ஆளுக்கு நோயாளிகளைப்‌ பதட்டப்படவைக்கும்‌ குணம்‌. அவர்‌ வருவதற்கு முன்பாகவே பாப்திஸ்த்‌ இப்போது பரவாயில்லை என்ற மனநிலைக்கு வந்திருந்தார்‌... மூன்று வாரங்கள்‌ கடந்திருந்த நிலையில்‌ ஆஞ்செலாவிடம்‌ எக்காரணத்தை முன்னிட்டும்‌ மருத்துவமனையில்‌ சேர்க்கமாட்டேன்‌ என சத்தியம்‌ பண்ணிக்கொடு என்று கேட்டு வாங்கிக்கொண்டார்‌. மருத்துவரை மீண்டும்‌ விட்டுக்கு அழைக்கவேண்டியிருந்தது. அவருக்கு ஒன்று புரியவில்லை. எதுவும்‌ நடக்கக்கூடாதென்பதுபோல வலியினாற்‌ கட்டிலில்‌ துடித்துக்கொண்டிருந்தபோதும்‌ பாப்திஸ்த்‌ தனக்குச்‌ சரியாகிவிட்டதென்றார்‌. மறுநாள்‌, எல்லாவற்றையும்‌ மறந்துபோனார்கள்‌. அவளோடு தனியாக இருந்தபோது தனது உயிர்‌ மருத்துவமனையிற்‌ போகக்கூடாதென்றார்‌. தமக்கு முடிவு நெருங்குகிறதென்பதை அறிந்தவர்‌ போல நாட்களை எண்ணிணார்‌. இளம்‌ வயதினரெல்லாம்‌

இறக்கிறபோது தாம்‌ மட்டும்‌ எவ்வளவு நாட்களுக்கு உயிர்வாழ்வதாம்‌, அவருக்குத்‌ தெரியாதா என்ன? ஆனால்‌ அவர்‌ செயிண்ட்‌ -ஜான்‌ தினம்வரை உயிர்வாழவேண்டுமென நினைத்தார்‌. எனினும்‌ மனதிலுள்ள ஆசையைக்‌ வெளிப்படுத்தியவரல்ல.

ஆஞ்செலாவுக்கு அவர்‌ மனது விளங்கியிருந்தது, அவரும்‌ அது போதுமென நினைத்தார்‌. அவ்வருடம்‌ செயிண்ட்‌ - ஜான்‌ தினத்தைப்‌ பார்க்க அவருக்குக்‌ கொடுப்பினையில்லை. மாலை, திருச்சபை குரு வீட்டிற்கு வந்தார்‌. அன்றுகாலைதான்‌ பாப்திஸ்த்‌

இறந்திருந்தார்‌. அவர்‌ சரீரத்தை இரண்டாக வகுந்திருந்த சனியன்‌ ஜெயித்திருந்தது. எதிர்பார்த்ததுதான்‌.

செசில்‌ வந்திருந்திருந்தாள்‌. அவள்‌ வீட்டுக்குள்‌ எப்படி வந்தாளென்பது ஆச்சரியமாக இருந்தது. கல்லறையிலிருந்து வீட்டுக்குத்‌ திரும்பி உடைமாற்றிக்கொண்டு நேரே இவளைத்‌ தேடிக்கொண்டு வந்திருந்தாள்‌. இவளுக்கு ஏதேனும்‌ உதவித்‌ தேவைப்படுமென நினைத்திருக்கலாம்‌. அவளுக்கு யாருடைய உதவியும்‌ வேண்டியதில்லை. அவளை அமரும்படிக்‌ கேட்டுக்கொண்டாள்‌. இருவருமாக உரையாடினார்கள்‌. கடைசியில்‌ செசில்‌ பேசினாள்‌. நடந்து முடிந்த சவ அடக்கம்பற்றி - பேசித்தானே ஆகவேண்டும்‌; வந்திருந்தவர்களில்‌ ஒரு சிலர்‌ கண்ணீர்சிந்தியது, பொதுவாக துக்க சம்பவத்தில்‌ கலந்துகொண்ட அனைவருமே வருந்தினார்கள்‌ என்றாள்‌. அஞ்செலா அவள்‌ கூறியது எதையும்‌ காதில்‌ வாங்கியதாகத்‌ தெரியவில்லை.

பாப்திஸ்தும்‌ அவளும்‌ செயின்ட்‌ - கிராஸ்‌ கிராமத்திற்கு வெளியே காலெடுத்து வைத்தவர்களல்ல. அது குறித்த வருத்தம்‌ அவளுக்கிருந்தது. லூர்துக்குப்போகும்‌ விருப்பம்‌ நிறைய. லூர்து தேவாலயத்தில்‌ நடக்கும்‌ சமய ஊர்வலங்களைப்‌

தொலைக்காட்சிகளிற்‌ கண்டு திருப்திபட்டதோடு சரி.

கணவன்‌ பாப்திஸ்த்தை மிகவும்‌ நேசித்தாள்‌. ஏறக்குறையை ஆரம்பத்திலிருந்தேயென சொல்லவேண்டும்‌. மணமுடித்த முதல்‌ வருடம்‌ அவனுடன்‌ வயலுக்குச்‌ சென்று

பதிவுகள்‌ 02020

79 பதிவுகள்‌ 36 சிறுகதைகள்‌ (தொகுதி மூன்று

ஒத்தாசையாக இருந்திருக்கிறாள்‌. அதற்கு பிறகு அவளுக்கு முடியவில்லை.

திட்டமான சூட்டுபதத்துடன்‌ அவனுக்கு எந்நேரமும்‌ காப்பி வேண்டும்‌, கொதிக்கக்கூடாது. தாயாராகும்‌ காப்பியைக்‌ கண்காணித்தபடி காத்திருந்தாள்‌, மூக்கின்‌ அவசியமின்றி ஒரப்பார்வையே அதற்குப்‌ போதுமானதாக இருந்தது. மணிக்கூடிற்கு

வேலையில்லை. கோழிகளுக்கு தீனி வைக்கும்‌ நேரமெது? உணவை மேசைக்குக்‌ கொண்டுவரவேண்டிய நேரமெது? என்று அவளுக்குத்‌ தெரியும்‌. பாப்திஸ்த்‌ விட்டிற்கு வரும்‌ நேரம்‌ கூட துல்லியமாக அறிவாள்‌. விட்டிற்கு செசில்‌ வருவதும்‌, அவளுக்குத்‌

துணையாக இருப்பதும்‌ நடந்தது. செசில்‌ வருகிறபோது கையோடு பின்னல்வேலைகளைக்‌ கொண்டுவருவாள்‌, ஊர்க்கதைகளும்‌ அவளோடு சேர்ந்து ஏராளமாக வரும்‌. அப்படியொருநாளில்தான்‌ உரையாடலுக்கிடையில்‌ திராட்சைப்‌ பண்ணையில்‌ பாப்திஸ்த்‌, ழெர்மென்‌ ரிஷார்டோடு பேசிக்கொண்டிருந்ததைக்‌ கண்டதாகக்‌ கூறினாள்‌. அடுத்துவந்த மாதங்களில்‌ ஜாடைமாடையாக வேறு சிலகதைகளும்‌ சேர்ந்துகொண்டன. அதன்‌ பிறகு ஒன்றுமில்லை, அவள்‌ வாயிலிருந்து எதுவுமில்லை. சொல்லாவிட்டால்‌

என்ன? ஆஞ்செலுக்கு நடப்பதெதுவும்‌ தெரியாதா? தெரியும்‌ இருந்தாலும்‌ வெளிப்படையாகக்‌ காட்டிக்கொள்வதில்லை, மெல்ல மெல்ல எல்லாம்‌ பழகிப்போனது. அதுபற்றிய எந்த சிந்தனையும்‌ இல்லாமலேயே பாப்திஸ்த்திடமோ அயல்‌ மனிதர்களிடமோ அதனைப்‌ பேசுவதில்லையெனத்‌ தீர்மானித்தாள்‌. அதுதான்‌ அவளுக்கும்‌ மரியாதை. இந்நிலைமை பாப்திஸ்த்‌ கட்டிலில்‌ விழுந்து பிறகு எழமுடியாமற்போன காலம்வரை நீடித்தது. ஏறக்குறைய இருபது ஆண்டுகள்‌. அவளுடைய துயரமெல்லாம்‌ தமக்கு பிள்ளைகள்‌ இல்லையே என்பதுதான்‌. அவள்‌ பொய்‌ சொன்னவளல்ல. ழெர்மென்‌ ரிஷாரை அவளுக்குப்‌ பிடிக்காமற்போனதற்கு வேறொரு காரணமும்‌ இருந்தது. அவளுக்கு ஒரு மகன்‌ இருந்தான்‌, தகப்பன்‌ இறந்த கொஞ்சகாலத்தில்‌ பிறந்தவன்‌. இறந்த

தகப்பனுக்கு எட்மண்ட்‌ ரிஷார்‌ என்று பேரு, ராட்சசன்‌ மாதிரி கண்களும்‌, நிறைய தலைமுடியுமாகவும்‌ இருப்பான்‌ திடீரென்று படுக்கையில்‌ விழுந்தவன்‌, ஒரு சில கிழமைகளிலேயே இறந்துபோனான்‌. என்னதான்‌ நடந்ததென ஒருவருக்கும்‌ தெரியாது. மகன்‌ ரிஷாரை செயிண்ட்‌-கிராஸ்‌ கிராமத்து சனங்கள்‌ ஒருவரும்‌ பார்த்ததில்லை. ஆன்ழே (Aஏூரவில்‌ அவனுடைய அத்தையின்‌ வளர்ப்பில்‌ இருப்பதாக ஊரில்‌ பேச்சு. ஒருநாள்‌ அதாவது பாப்திஸ்த்‌ சுகவீனப்பட்டு கட்டிலில்‌ படுப்பதற்கு முதல்‌ நாள்‌

அவனுடைய அம்மாவைப்‌ பார்க்க வந்திருந்தான்‌. செசிலும்‌ அங்கே இருந்திருக்கிறாள்‌. பின்னே செசில்‌ இல்லாமலா? ஊரில்‌ என்ன நடந்தாலும்‌ அங்கே செசில்‌ இருந்தாகவேண்டுமென்பது ஒரு பிரார்த்தனை. வெளுத்த பெரிய கண்களுடன்‌ பையனைப்‌ பார்க்க மந்தபுத்திக்கொண்டவன்போல இருந்திருக்கிறான்‌. செசில்‌ கூறியதைக்கேட்டு ஆஞ்செலா மனக்குழப்பத்துக்குள்ளானது உண்மை.

செசில்‌ புறப்பட்டுப்‌ போய்விட்டாள்‌. இரவு வந்தது. சமயலறையில்‌ கழுவாமற்கிடந்த பாத்திரங்ளை கழுவி முடித்தாள்‌. சில குவளைகளையும்‌ கழுவ வேண்டியிருந்தது. அவள்‌

காப்பி குடிப்பவளல்ல என்பதால்‌ இனி உபயோகப்படாதென்று தோன்றிய பழைய

பதிவுகள்‌ 02020

80 பதிவுகள்‌ 36 சிறுகதைகள்‌ (தொகுதி மூன்று

வெண்மைநிற காப்பிமசினையும்‌ கழுவினாள்‌. அனைத்தையும்‌ சுவரை ஒட்டியிருந்த மேசையின்‌ மேற்தட்டில்‌ வைத்தாள்‌. சிங்க்கின்‌ கீழே காலியான ஜாம்‌ பாட்டில்கள்‌ இருந்தன, அப்புறப்படுத்தினாள்‌. ஜாம்‌ செய்யவேண்டுமென்ற அவசியமில்லையென்கிறபோது அவற்றினால்‌ உபயோகமென்ன? செய்து வைத்திருக்கும்‌ ஜாமையையே சாப்பிட்டு முடித்தால்‌ போதும்‌, நிறைய இருக்கிறது. துடைப்பதெற்கென வைத்திருந்த சிலதுணிகளையும்‌, முக்கால்‌ டப்பி காலியாகியிருந்த

எலிமருந்தையும்‌ அப்புறப்படுத்தினாள்‌. இனி அவைகளை குப்பையிற்‌ சேர்க்கவேண்டும்‌. அந்த வீட்டில்‌ கடந்த இருபது ஆண்டுகளாகவே எலிநடமாட்டமென்று எதுவுமில்லை.

nagarathinam.krishna@neuf.fr

பதிவுகள்‌, செப்டம்பர்‌ 2010 இதழ்‌ 129

பதிவுகள்‌ 02020

81 பதிவுகள்‌ 36 சிறுகதைகள்‌ (தொகுதி மூன்று)

13. பலிகேட்கும்‌ தேர்வுகள்‌ - சோ.சுப்புராஜ்‌ -

பத்தாம்‌ வகுப்பு மாணவர்களின்‌ பொதுத்‌ தேர்வு விடைத்தாள்‌ திருத்தும்‌ மையத்திற்கு அங்கயற்கண்ணி கொஞ்சம்‌ தாமதமாய்த்‌ தான்‌ போய்ச்‌ சேர்ந்தாள்‌. மையத்தின்‌ சூபர்வைசர்‌ ஏற்கெ னவே பரிச்சயமானவர்‌. “என்ன டீச்சர்‌, முதல்‌ நாளே லேட்டா வர்றீங்க! வழக்கம்‌

காலையிலருந்து காத்திருக்கிறார்‌; என்னன்னு விசாரிச்சுட்டு வந்துருங்க...” என்று ஒரு நமட்டுச்‌ சிரிப்புடன்‌ அனுப்பி வைத்தார்‌.

உறவுகளே இல்லாமலாகி விட்ட வாழ்க்கையில்‌ நம்மை யார்‌ தேடி வந்திருக்கிறார்கள்‌? சூபர்வைசரின்‌ சிரிப்பைப்‌ பார்த்தால்‌ இதில்‌ ஏதோ வில்லங்கம்‌ இருக்கும்‌ போலிருக்கிறதே என்று மனசுக்குள்‌ நிழலாடும்‌ கேள்விகளுடன்‌, தேடி வந்தவரை

அணுகி விசாரித்தபோது அவர்‌ சென்னையிலிருக்கும்‌ ஒரு பிரபல பள்ளியின்‌ புரோக்கர்‌ என்று புரிந்தது. என்று புரிந்தது.

அந்த பள்ளியின்‌ மாணவர்கள்‌ எழுதிய விடைத்தாட்கள்‌ இந்த மையத்திற்குத்‌ தான்‌ திருத்துவதற்கு வந்திருக்கிறது என்றும்‌, அவை இவளிடம்‌ வந்தால்‌ தாராளமாக மதிப்பெண்களைப்‌ போடவேண்டும்‌ என்றும்‌ அப்படிச்‌ செய்தால்‌ ஒரு பேப்பருக்கு இவ்வளவு என்று கொடுத்து விடுவதாகவும்‌ சொல்லி ஒரு பெருந்தொகையை முன்பணமாகவும்‌ கொடுக்க முன்‌ வந்தார்‌. அங்கயற்‌ கண்ணி அவரைத்‌ திட்டி அனுப்பி விட்டு விடைத்தாள்‌ திருத்தும்‌ அறைக்குள்‌ போனாள்‌.

“என்ன டீச்சர்‌ நல்ல அறுவடையா..?” என்றார்‌ சூபர்வைசர்‌ கிண்டலாய்ச்‌ சிரித்தபடி.

எல்லாம்‌ ரகசியமா வச்சிருந்தும்‌ எப்படி ஸார்‌ பேப்பர ட்ரேஸ்‌ பண்ணி வந்துடுறாங்க...” என்றாள்‌.

“அந்த அரசியல்‌ எல்லாம்‌ நமக்கு விளங்காது டீச்சர்‌; ஆனால்‌ இந்தத்‌ தடவ பேப்பர ட்ரேஸ்‌ பண்றது கொஞ்சம்‌ கஷ்டம்‌ தான்‌; ஏன்னா இப்ப புதுசா வந்துருக்கிற லேடி சி.இ.ஓ. கடைசி நேரத்துல, முதல்ல போட்டுருந்த ஷெட்யூல்படி பேப்பர்கள அனுப்பாம மாத்தி மாத்தி அனுப்பச்‌ சொல்லீட்டாங்க... இப்பக்‌ கூட உங்களத்‌ தேடி வந்து பார்த்துட்டுப்‌ போறாருல்ல; அவர்‌ ஸ்கூல்‌ பேப்பர்‌ இந்த சென்டருக்கு வரல; நானும்‌ சொல்லிப்‌ பார்த்தேன்‌; அவர்‌ கேட்கல...” என்றபடி அவள்‌ திருத்து வதற்கான பேப்பர்‌ கட்டைக்‌ கொடுத்தார்‌.

“இது எந்த ஸ்கூல்‌ பேப்பர்‌ ஸார்‌...” என்று அங்கயற்கண்ணி கேட்கவும்‌ அடையாரிலிருக்கும்‌ பிரபல பள்ளியின்‌ பெயரைச்‌ சொன்னார்‌ அவர்‌. அங்கயற்கண்ணிக்கு

பதிவுகள்‌ 02020

82 பதிவுகள்‌ 36 சிறுகதைகள்‌ (தொகுதி மூன்று

சிலீரென்றிருந்தது. அந்தப்‌ பள்ளியில்‌ தான்‌ அவளின்‌ பெண்‌ அன்புச்செல்வி ஒன்பதாம்‌ வகுப்பு வரைப்‌ படித்தாள்‌. பத்தாம்‌ வகுப்பில்‌ தொடர்ந்து படிக்க அனுமதி மறுத்து விட்டார்கள்‌.

சென்ற வருஷ ஜூன்‌ மாதத்தின்‌ மத்தியில்‌ கோடை விடுமுறைக்குப்‌ பின்‌ பள்ளிகள்‌ திறந்து கொஞ்ச நாட்களாகியிருந்த நிலையில்‌, அன்புச்‌ செல்வி படிக்கும்‌ பள்ளி நிர்வாகம்‌ அங்கயற்‌ கண்ணியை பள்ளிக்கு அழைத்திருந்தது. அலுவலக உதவியாளன்‌ அனுமதிக்கவும்‌, அவள்‌ அன்புச்‌ செல்வியையும்‌ அழைத்துக்‌ கொண்டு தலைமை ஆசிரியையின்‌ அறைக்குள்‌ நுழைந்தாள்‌. இவள்‌ வணக்கம்‌ சொன்னதைக்‌ கூட கவனிக்காத பாவணையில்‌ முகத்தைக்‌ கடுகடுவென்று வைத்துக்‌ கொண்டு “நீங்கதான்‌ அன்புச்‌ செல்வியோட அம்மாவா?” என்றாள்‌ தலைமை ஆசிரியை.

இவள்‌ ஆமாம்‌ என்று பவ்யமாய்‌ தலை அசைக்கவும்‌ *பொம்பளப்‌ பிள்ளைய இப்படியா பொறுப்‌ பில்லாம வளப்பீங்க! அறிவியல்லயும்‌ ஆங்கிலத்துலயும்‌ இவ சிங்கிள்‌ டிஜிட்‌ மார்க்கத்‌ தாண்டுறதே இல்ல; இதெல்லாம்‌ நீங்க கவனிக்கிறதே

இல்லையா? எனனவா வேலை பார்க்கு நீங்க?” என்றாள்‌.

“அரசு மேல்நிலைப்‌ பள்ளியில ஆசிரியரா இருக்கேன்‌ மேடம்‌..”

அவளுக்கு ஆங்காரமாய்க்‌ கோபம்‌ வந்தது.“ஆசிரியர்‌ பிள்ளை மக்குன்னு நீங்க ரெண்டு

“இல்ல மேடம்‌ வீட்ல கொஞ்சம்‌ பிரச்னை; நானும்‌ காட்பாடியத்‌ தாண்டி ரொம்ப தூரம்‌ வேலைக்குப்‌ போயிட்டு வர்றதால இவளக்‌ கவனிக்க நேரமிருக்கிறதில்ல; இனிமே பார்த்துக்கிறேன்‌”

“8 லேட்‌; காரியம்‌ கொஞ்சம்‌ கை மீறிப்‌ போயிருச்சு, இனிமே ஒண்ணும்‌ பண்ண முடியாது; உங்க பொண்ணோட ட.சி.யக்‌ குடுத்துடுறோம்‌, நீங்க வேற ஸ்கூல்ல சேர்த்து படிக்க வச்சுக்குங்க...”

“அப்படியெல்லாம்‌ சொல்லாதீங்க மேடம்‌... அவளுக்கு ஒரு நல்ல கல்வி கிடைக்கனும்னு தான்‌, சென்னையிலயே சிறந்தது உங்க ஸ்கூல்ன்னு கேள்விப்பட்டு, எவ்வளவோ சிரமங்களப்‌ பொறுத்துக்கிட்டு ஆறாம்‌ வகுப்புல இருந்து அவள இங்க சேர்த்து படிக்க வைக்கிறேன்‌; இவளுக்காக காட்பாடியிலருந்து வில்லிவாக்கத்துக்கு குடி வந்துருக்கேன்‌... பயணத்துலயே என்னோட பாதி நாள்‌ கழிஞ்சுடுது; இவ படிப்புக்காகத்‌ தான்‌ பொறுத்துக்‌ கிட்டிருக்கேன்‌... பெரிய மனசு பண்ணி ஒரே ஒரு வாய்ப்புக்‌ குடுங்க, மூணே மாசத்துல முழுசா அவள நான்‌ மாத்திக்‌ காட்டுறேன்‌ மேடம்‌... ப்ளீஸ்‌, தயவு பண்ணுங்க...”

பதிவுகள்‌ 02020

83 பதிவுகள்‌ 36 சிறுகதைகள்‌ (தொகுதி மூன்று) கையெடுத்துக்‌ கும்பிட்டு இறைஞ்சினாள்‌ அங்கயற்கண்ணி.

“அன்புச்‌ செல்வியோட அப்பா என்ன பண்றார்‌? என்று கேட்டாள்‌ தலைமை ஆசிரியை. “அவர்‌ எலக்ட்ரானிக்ஸ்‌ என்ஜீனியர்‌ மேடம்‌; ஆனா அவர்‌ இப்ப எங்க கூட இல்ல மேடம்‌; சிங்கப்பூர்ல வேறொரு பொண்ணு கூட குடும்பம்‌ நடத்திக்கிட்‌

டிருக்கிறார்‌...அதான்‌ இவளப்‌ பாதிச்சு படிப்புல சுணங்கிப்‌ போயிட்டாள்‌ மேடம்‌......“கண்‌ கலங்கினாள்‌ அங்கயற்கண்ணி.

“ஓ... ஜயாம்‌ சாரி....வேணும்னா ஒண்ணு பண்ணலாம்‌; எங்க ஸ்கூல்லயே தொடர்ந்து படிக்கட்டும்‌... ஆனா எங்க ஸ்கூல்‌ ரோல்ல வராம பரீட்சைய பிரைவேட்டா பணம்‌ கட்டி வெளி மாணவர்களோட சேர்ந்து எழுதட்டும்‌; ஒருவேளை பாஸ்‌

பண்ணிட்டாள்னா ப்ளஸ்‌ ஒன்னுக்கு எங்க ஸ்கூல்லயே சேர்த்துக்குறோம்‌; அதுக்குன்னா ஏற்பாடு பண்ணட்டுமா...?”

“அய்யோ வேண்டாம்‌ மேடம்‌; அது சரியா வராது...கொஞ்சம்‌ பெரிய மனசு பண்ணி...” அங்கயற்கண்ணி முடிப்பதற்குள்‌ சீறினாள்‌ தலைமை ஆசிரியை.சொன்னாப்‌ புரிஞ்சுக்குங்க

பொண்ண பத்தாம்‌ வகுப்பு பொதுத்‌ தேர்வுக்கு அனுப்பினா கண்டிப்பா ..பெயிலாயிடுவாள்‌; அது எங்க பள்ளிக்கே பெரிய களங்கமாப்‌ போயிடும்‌...2௦ வருஷங்களுக்கும்‌ மேலா பத்தாம்‌ வகுப்புலயும்‌ 42ல்யும்‌ 100% பாஸ்‌ ரிசல்ட்‌ காண்பிச்சுட்டு வர்றோம்‌; அதோட ஸ்டேட்‌ ரேங்க்‌ வாங்குற ஸ்கூல்ல ஃபெயிலியர்‌ வந்தா பேர்‌ கெட்டுடாதா?”

அப்போது ஒரு நடுத்தர வயதுப்‌ பெண்‌ அறைக்குள்‌ வந்து “நான்‌ தான்‌ இவளோட கிளாஸ்‌ டீச்சர்‌ மேம்‌; ஸ்பெஷல்‌ கேர்‌ எடுத்துப்‌ பார்த்துக்கிறேன்‌ மேம்‌..நாம ஒரு சான்ஸ்‌ குடுத்துப்‌ பார்க்கலாம்‌ மேம்‌...” என்று அன்புச்செல்விக்காகப்‌ பரிந்து பேசவும்‌, தலைமை ஆசிரியைக்கு பலியாய்‌ கோபம்‌ வந்து விட்டது”யாரக்‌ கேட்டு உள்ள வந்த, மேனர்ஸ்‌ இல்லாம...உன்‌ வேலை எதுவோ அதை மட்டும்‌ பாரு... .பெயிலாயிட்டா மேனேஜ்‌ மென்ட்டுக்கு நீயா வந்து பதில்‌ சொல்வ? கெட்‌ அவுட்‌..”என்று சீறினாள்‌. அங்கயற்கண்ணிக்கு அந்த டீச்சரைப்‌ பார்க்க பாவமாக இருந்தது.

“வேணும்னா அன்புச்‌ செல்விய இந்த வருஷம்‌ ஒன்பதாம்‌ வகுப்பிலேயே பெயில்‌ பண்ணிடுங்க மேடம்‌....அவளோட பெர்மான்மஸ்‌ பார்த்துட்டு அடுத்த வருஷம்‌ பத்தாவது புரமோட்‌ பண்ணிக்குங்க...” என்றாள்‌ அங்கயற்கண்ணி. தலைமை ஆசிரியை அதையும்‌ ஒத்துக்‌ கொள்ள வில்லை. “நாங்க யாரையும்‌ எந்த வகுப்பிலயும்‌ பெயில்‌ பண்றதில்ல; அது எங்க ஸ்கூலோட பாலிஸி...” என்றபடி அன்புச்செல்வியின்‌ டீ.சி.யை கிழித்துக்‌ கொடுத்து பெஸ்ட்‌ ஆஃப்‌ லக்‌ என்று

வாழ்த்தி அனுப்பி வைத்தாள்‌.

பதிவுகள்‌ 02020

84 பதிவுகள்‌ 36 சிறுகதைகள்‌ (தொகுதி மூன்று

என்ன செய்வதென்று தெரியாமல்‌, முகவாட்டத்துடன்‌ வெளியே வந்த அங்கயற் கண்ணியை அன்புச்செல்வியின்‌ வகுப்பாசிரியை தான்‌ தேற்றினாள்‌. தன்‌ பெயரைத்‌ தங்கம்மாள்‌ என்று அறிமுகப்‌ படுத்திக்‌ கொண்டாள்‌. “இது சரியான முசுடு

மேடம்‌; ரிசல்ட்‌, ரிசல்ட்டுன்னு பேயா அலையும்‌; இதுவரைக்கும்‌ இவளோட சேர்த்து ஏழு பேருக்கு டீ.சி. குடுத்து அனுப்பீருச்சு; அஞ்சு பேர பிரைவேட்டா எழுதச்‌ சொல்லிருச்சு; ஒவ்வொரு வருஷமும்‌ இப்படித்தான்‌... தேறாதுன்னு கொஞ்சம்‌ சந்தேகம்‌

இருந்தாலும்‌ பேரண்ட்ஸக்‌ கூப்பிட்டு டீ.சி.யக்‌ குடுத்துருவாங்க..அப்புறம்‌ நூறு சதவிகிதம்‌ தேர்ச்சி காண்பிச்சுட்டோம்னு பீத்திக்குவாங்க...

விடுங்க; இவங்க புரஜெக்ட்‌ பண்ற அளவுக்கு அன்புச்செல்வி ஒண்ணும்‌ அத்தனைக்கு மோசமான ஸ்டூடண்ட்‌ இல்ல; இப்ப கொஞ்ச நாளாத்தான்‌ ரொம்பவும்‌ டல்லா இருக்கிறா... வீட்ல எதுவும்‌ பிரச்னையா? சொல்லலாம்னா என்கிட்டச்‌ சொல்லுங்க...” என்றாள்‌. அவளின்‌ பேச்சில்‌ நிஜமான கரிசனம்‌ தெரிந்தது. அங்கயற்கண்ணி அவளின்‌ கதையைச்‌ சொல்லத்‌ தொடங்கினாள்‌.

அங்கயற்கண்ணிக்கு சொந்த ஊர்‌ தென்காசிக்குப்‌ பக்கத்திலுள்ள வாசுதேவறநல்லூர்‌.அங்கேயே எலக்ட்ரானிக்ஸில்‌ டிப்ளமா முடித்த முத்துராமன்‌ என்பவளைக்‌ காதலித்திருக்கிறாள்‌. வேறு ஜாதி என்பதாலும்‌ அவன்‌ வேலை வெட்டி எதுவுமில்லாமல்‌ வெறுமனே ஊர்‌ சுற்றுகிறான்‌ என்பதாலும்‌ அங்கயற்கண்ணியின்‌ அப்பா அவனை மணந்து கொள்ள சம்மதிக்க வில்லை.

அவளின்‌ அம்மா இருவரையும்‌ ரகசியமாய்‌ அழைத்து “நீங்க என்ன தான்‌ கெஜவித்தை செஞ்சு பார்த்தாலும்‌ இவளோட அப்பா உங்க ரெண்டு பேத்துக்கும்‌ கல்யாணம்‌ பண்ணி வைக்க மாட்டார்‌; உங்களுக்கும்‌ வயசாகலையா? பேசாம இந்த

ஊரை விட்டுப்‌ போயி எப்படியாவது பொழச்சுக்குங்க...நான்‌ அவரச்‌ சமாளிச்சுக்கிறேன்‌....” என்று சொல்லி பணமும்‌ நகையும்‌ கொடுத்து வாழ்த்தி வழி அனுப்பி வைத்திருக்கிறாள்‌.

இருவரும்‌ பாண்டிச்சேரிக்கு ஒடிப்போய்‌ கல்யாணம்‌ கட்டிக்‌ கொண்டு ஒரு ஒண்டுக்‌ குடித்தனத்தில்‌ வாழ்க்கையைத்‌ தொடங்கியிருக்கிறார்கள்‌. அங்கயற்கண்ணி பி.எஸ்‌.ஸி, பி.எட்‌. படித்திருந்ததால்‌ மெட்ரிக்குலேசன்‌ பள்ளியில்‌ எளிதாய்‌ வேலை கிடைத்திருக்கிறது.ஆனால்‌ முத்து ராமனுக்குத்‌ தான்‌ சரியான வேலை அமையாமல்‌ சிறு சிறு வேலைகள்‌ தான்‌ செய்ய வேண்டியிருந்ததாம்‌. தன்‌ படிப்பிற்கும்‌, திறமைக்கும்‌ தகுந்த வேலை சென்னைக்குப்‌ போனால்‌ கிடைக்கு மென்று முத்துராமன்‌

அபிராயப்படவும்‌, அதுவும்‌ சரி என்று சென்னைக்குக்‌ குடி வந்திருக்கிறார்கள்‌.

சென்னையில்‌ தடுக்கி விழுந்தால்‌ மெட்ரிக்குலேசன்‌ பள்ளிகள்‌ தான்‌ என்பதால்‌ அங்கயற்கண்ணிக்கு வேலை கிடைப்பதில்‌ பிரச்னையில்லை.ஆனால்‌ முத்துராமனுக்கு

பதிவுகள்‌ 02020

85 பதிவுகள்‌ 36 சிறுகதைகள்‌ (தொகுதி மூன்று

சென்னையிலும்‌ சிலாக்கியமான வேலை அமையவில்லை. அதனால்‌

முத்துராமனின்‌ தகுதியை உயர்த்தும்‌ விதமாக அங்கயற்கண்ணி அவளுடைய சொற்ப வருமானத்திலும்‌ அவனை பகுதி நேரக்‌ கல்லூரியில்‌ சேர்த்து பி.இ. படிக்க வைத்திருக்கிறாள்‌. அதற்கப்புறம்‌ அவர்கள்‌ எதிபார்த்தபடியே அவனுக்கு ஒரு கம்பெனியில்‌ நல்ல வேலை கிடைத்திருக்கிறது. அப்புறம்‌ அவனின்‌ நண்பன்‌ ஒருவனின்‌ மூலம்‌ சிங்கப்பூரில்‌ வேலை கிடைத்து அங்கு போய்‌ செட்டிலாகி விட்டான்‌. எப்போதாவது இந்தியாவிற்கும்‌ வந்து போய்க்‌ கொண்டிருந்தான்‌.

திடீரென்று தொடர்ந்து சில வருஷங்களுக்கு அவன்‌ இந்தியா வராமல்‌ இருக்கவும்‌ , அவனுக்கு என்னவாயிற்றோ என்று பதறிப்‌ போய்‌, அங்கயற்கண்ணி டூரிஸ்ட்‌ விசா வாங்கிக்‌ கொண்டு சிங்கப்பூர்‌ போய்ப்‌ பார்த்தவள்‌ அதிர்ந்து

போய்‌ விட்டாள்‌. முத்துராமனுக்கு சிங்கப்பூரிலும்‌ இன்னொரு குடும்பம்‌ மனைவி குழந்தைகள்‌ என்று இருந்தது. பைத்தியக்காரி மாதிரி அவன்‌ என்றைக்காவது இந்தியா வருவான்‌ என்று தான்‌ காத்திருக்க, அவன்‌ அங்கேயே இன்னொரு குடும்பத்துடன்‌ வாழ்வதைப்‌ பார்த்ததும்‌ உடைந்து சிதறிப்‌ போனாள்‌. அடிப்படை நியாயம்‌ கூட இல்லாத அவனிடம்‌ பேசிப்‌ பிரயோசனமில்லை என்று அடுத்த விமானம்‌ பிடித்து இந்தியாவிற்கு வந்து விட்டாள்‌.

“அப்பாவோட நம்பிக்கைத்‌ துரோகத்தை அன்புச்செல்வியாலயும்‌ தாங்கிக்க முடியல; அதான்‌ படிப்புல சுணங்கிப்‌ போயிட்டா... நானும்‌ அதக்‌ கவனிக்காம இருந்துட்டேன்‌...” என்று தன்‌ கதையைச்‌ சொல்லி முடித்தாள்‌

அங்கயற்கண்ணி.

“சரி போனதெல்லாம்‌ போகட்டும்‌; நீங்க கவலைப்‌ படாதீங்க; அன்புச்செல்விய நான்‌ தேத்திக்‌ காண்பிக்கிறேன்‌...” என்றாள்‌ தங்கம்மாள்‌ சவாலாக.

வில்லிவாக்கத்துலருந்து தினசரி வந்து போனால்‌ பயணத்துலயே இவள்‌ கலைத்துப்‌ போயிடுவாள்‌ என்றும்‌ படிப்பில்‌ கவனம்‌ செலுத்த முடியாது என்றும்‌ தங்கம்மாள்‌ அபிப்ராயப்‌ பட்டாள்‌. அவளின்‌ ஆலோசனைப்படி அன்புச்செல்வியை அங்கயற்கண்ணி குடியிருந்த திருவான்மியூர்‌ பகுதியில்‌ ஒரு அரசாங்க மேல்நிலைப்‌ பள்ளியில்‌ பத்தாம்‌ வகுப்பில்‌ சேர்த்து விட்டு அவளை தன்னுடைய வீட்டிலிருந்து பள்ளிக்குப்‌ போய்‌ வர ஏற்பாடுகள்‌ செய்தாள்‌.

”ஒரு வருஷம்‌ உங்க பொண்ணை நீங்க மறந்திடுங்க , நான்‌ பார்த்துக்கிறேன்‌..” என்றாள்‌. அப்படியே ஆனது. அந்த வருஷமே அன்புச்செல்வி தொண்ணூறு சதவிகிதத்திற்கும்‌ மேலாக மதிப்பெண்‌ எடுத்து தேறினாள்‌. தொடர்ந்து அரசாங்க பள்ளியிலேயே இப்போது ப்ளஸ்‌ ஒன்‌ படித்துக்‌ கொண்டிருக்கிறாள்‌.

பதிவுகள்‌ 02020

86 பதிவுகள்‌ 36 சிறுகதைகள்‌ (தொகுதி மூன்று

“என்ன டீச்சர்‌, பேப்பரயே பார்த்துக்கிட்டு இருக்கிறீங்க ; திருத்தத்‌ தொடங்கலயா..?” என்று மையத்தின்‌ சூபர்வைசர்‌ கேட்கவும்‌ தான்‌ நினைவு கலைந்து நிகழ்‌ காலத்திற்கு வந்தாள்‌ அங்கயற்கண்ணி. இது தற்செயலானதா, அல்லது விதியின்‌ விளையாட்டா என்று தெரிய வில்லை. இதோ தன்‌ செல்ல மகளுக்கு டீ.சி. கொடுத்து அவமானப்‌ படுத்தி அனுப்பிய அடையாறு பள்ளியின்‌ பேப்பர்கள்‌ திருத்துவதற்காக அவளுக்கு முன்‌ விரிந்து கிடக்கிறது. ஃபெயிலாகிப்‌ போவாள்‌ என்று தானே என்‌ பெண்ணிற்கு டீ.சி. கொடுத்து அனுப்பினீர்கள்‌! இதோ உங்கள்‌ பள்ளியின்‌ எதிர்காலம்‌ என்‌ கையில்‌; என்‌ பேனாவின்‌ முனையில்‌... அவளுக்குள்‌ ஒரு வன்மம்‌ கிளர்ந்தது.

கண்ணில்‌ விளக்கெண்ணை விட்டுக்‌ கொண்டு ஒவ்வொரு பேப்பரையும்‌ மிக மிகக்‌ கவனமாக திருத்தத்‌ தொடங்கினாள்‌. சிறு பிழை என்றாலும்‌ தடாலடியாக மதிப்பெண்களைக்‌ குறைத்தாள்‌. இது அவளுடைய இயல்பே அல்ல;

பொதுவாய்‌ மதிப்பெண்களை கர்ணபிரபு மாதிரி வாரி வாரி வழங்குவது தான்‌ அவளது வழக்கம்‌ . மாணவர்கள்‌ 25 மதிப்பெண்களை நெருங்கி விட்‌ டாலே, அங்கொன்றும்‌ இங்கொன்றுமாய்ப்‌ போட்டு 35க்குக்‌ கொண்டு வந்து பாஸாக்கி விடுவாள்‌.

ஆனால்‌ இந்த முறை அப்படிச்‌ செய்யவில்லை. ஜந்து மாணவர்கள்‌ 30,33 என்று பாஸக்குப்‌ பக்கத்தில்‌ வந்தும்‌, எந்த மாற்றமும்‌ செய்யாமல்‌, எங்கள்‌ பள்ளியில்‌ யாரும்‌ ஃ.பெயிலாக மாட்டார்‌ களென்று பெருமை பீற்றினீர்களே, இதோ அந்த வரலாற்றை உடைக்கிறேன்‌ என்று மனசுக்குள்‌ கறுவியபடி விடைத்தாள்களைக்‌ கட்டி சூபர்வைசரிடம்‌ ஒப்படைத்தாள்‌ அங்கயற்கண்ணி. ஆங்கில மீடியம்‌ பள்ளி என்று அலப்பறை பண்ணும்‌ பள்ளி; மாணவர்கள்‌ பள்ளி வளாகத்தில்‌ ஆங்கிலத்தில்‌ மட்டுமே பேச வேண்டுமென்றும்‌ தமிழில்‌ பேசினால்‌ தண்டம்‌ விதிக்கும்‌ பள்ளியில்‌ ஆங்கிலப்‌ பாடத்திலேயே ஐந்து பேர்‌ ஃ.பெயிலென்றால்‌.... அது எத்தனை முரண்‌; அந்த தலைமை ஆசிரியை முகத்தை எங்கு போய்‌ வைத்துக்‌ கொள்வாள்‌! மனசுக்குள்‌ குரூரமாகச்‌ சிரித்துக்‌ கொண்டாள்‌ அங்கயற்கண்ணி.

“என்ன டீச்சர்‌, அஞ்சு பேர பார்டர்ல ஃ.பெயிலாக்கி இருக்குறீங்க! நீங்க பொதுவா அப்படிப்‌ பண்ற ஆளு இல்லயே, எத்தனை வருஷமா உங்களப்‌ பார்த்துக்‌ கிட்டு இருக்கிறேன்‌; இன்னைக்கு என்னாயிருச்சு..” என்று கேட்ட சூபர்வைசரிடமும்‌ “அதெல்லாம்‌ அரை மார்க்‌ போடக்கூட எடமில்ல ஸார்‌; ஃபெயிலாப்‌ போகட்டும்‌; அப்பத்‌ தான்‌ அவங்களுக்கெல்லாம்‌ புத்தி வரும்‌...” என்றாள்‌ வெளத்துடன்‌.

“வேண்டாம்‌ டீச்சர்‌; பசங்க பாவம்‌...யாரு மேலயோ உள்ள கடுப்புல பசங்களோட எதிகாலத்தப்‌ பாழ்‌ பண்ணிடாதீங்க...” என்று அவர்‌ எவ்வளவோ எடுத்துச்‌ சொல்லிய போதும்‌ அவள்‌ பிடிவாதமாய்‌ மறுத்து விட்டாள்‌. “அவ்வளவு தான்‌

ஸார்‌...பேசாம பேப்பர வாங்கிக்குங்க...” என்றாள்‌ மிகவும்‌ கடுமையாக.

பதிவுகள்‌ 02020

87 பதிவுகள்‌ 36 சிறுகதைகள்‌ (தொகுதி மூன்று

கிணறு வெட்டப்‌ போய்‌ பூதம்‌ கிளம்பிய கதையாக, பத்தாம்‌ வகுப்பு பரீட்சை முடிவுகள்‌ வெளியாகி ஓரிரு தினங்களுக்குப்பின்‌ தினப்பத்திரிக்கையில்‌ வந்திருந்த “அந்த” செய்தியை வாசித்த அங்கயற்கண்ணி அலறிவிட்டாள்‌.

ஆசிரியை தற்கொலை முயற்சி; தன்னுடைய மாணவர்கள்‌ தேர்வில்‌ தோல்வி அடைந்ததின்‌ எதிரொலி!

சென்னை, மே 23 - அடையாறிலுள்ள மிகப்‌ பிரபலமான தனியார்‌ பள்ளியைச்‌ சேர்ந்த ஒரு ஆசிரியை தன்னிடம்‌ பயின்ற மாணவர்கள்‌ சமீபத்தில்‌ நடந்த பத்தாம்‌ வகுப்பு பொதுத்‌ தேர்வில்‌ தோல்வி அடைந்ததைத்‌ தாங்கிக்‌ கொள்ள முடியாமல்‌ மனம்‌ உடைந்து தற்கொலைக்கு முயன்று, உயிருக்கு மிகவும்‌ ஆபத்தான நிலைமையில்‌ மருத்துவமனையில்‌ சேர்க்கப்‌ பட்டிருக்கிறார்‌. இதைப்‌ பற்றி மேலும்‌ கூறப்‌ படுவதாவது:- இரண்டு தினங்களுக்கு முன்னால்‌ அரசு பள்ளிக்‌ கல்வித்துறை இயக்குனகரம்‌ பத்தாம்‌ வகுப்பு பொதுத்‌ தேர்வுக்கான மாணவர்‌ தேர்ச்சி முடிவுகளை வெளியிட்டிருந்தது. அதில்‌ அடையாறிலுள்ள மிகப்‌ பிரபலமான தனியார்‌ பள்ளியைச்‌ சேர்ந்த ஜந்து மாணவர்கள்‌ ஆங்கிலப்‌ பாடத்தில்‌ தேர்ச்சி பெறவில்லை என்றும்‌, இதைக்‌ கேள்விப்‌ பட்டதும்‌ அந்தப்‌ பாடத்தைப்‌ போதித்த ஆசிரியை திருமதி தங்கம்மாள்‌ (43) நேற்று முன்தினம்‌ அவருடைய விட்டிலிருக்கும்‌ போது பூச்சிக்‌ கொல்லி மருந்தைக்‌ குடித்து தற்கொலைக்கு முயன்றதாகவும்‌ , உயிருக்குப்‌ போராடிக்‌ கொண்டிருந்த நிலையில்‌ சக ஆசிரியை ஒருவரின்‌ மூலம்‌ அமுகாமையிலிருந்த அரசு மருத்துவ மனையில்‌ சேர்க்கப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்‌ படுவதாகவும்‌ ஏஜென்சி செய்திகள்‌ தெரிவிக்கின்றன.

அடையாறு காவல்நிலைய ஆய்வாளர்‌ பன்னீர்‌ செல்வம்‌ வழக்குப்‌ பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்‌. ஆசிரியையின்‌ தற்கொலை முயற்சிக்கு பள்ளி நிர்வாகம்‌ கொடுத்த கெடுபிடிகளும்‌ அழுத்தமும்‌ காரணமா என்பது விசாரணையின்‌ முடிவில்‌ தெரிய வரலாம்‌.

அங்கயற்கண்ணிக்கு மனசு பாரமாக வலித்தது. தான்‌ செய்த முட்டாள்‌ தனத்தால்‌ ஒரு அற்புதமான மனுஷியின்‌ உயிரல்லவா போய்‌ விடும்‌ போலிருக்கிறது. கண்டிப்பாக “பெயிலாகி விடுவாள்‌ என்று நம்பிய தன்னுடைய மகள்‌ அன்புச்‌ செல்வியை

எப்படி பயிற்சி கொடுத்து அவளே ஆச்சர்யப்படும்‌ விதமாக மிக நல்ல மதிபெண்களில்‌ தேர்ச்சி பெற வைத்திருந்தாள்‌. அந்த தங்கம்மாள்‌ டீச்சருக்கா இந்த நிலைமை? அவளுக்கு எதுவும்‌ ஆகியிருக்கக்‌ கூடாது என்று மனசுக்குள்‌ மறுகினாள்‌.

அன்புச்செல்வியையும்‌ அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்குப்‌ போனபோது தங்கம்மாள்‌ அபாயக்‌ கட்டத்தைத்‌ தாண்டி ஆனால்‌ மிகவும்‌ சோர்ந்து போய்‌ படுத்திருந்தாள்‌. அவளின்‌ படுக்கையைச்‌ சூழ்ந்து கொண்டு சக ஆசிரியைகளும்‌ மாணவர்களும்‌

நிறையப்பேர்‌ நின்று கொண்டிருந்தார்கள்‌. அன்புச்‌ செல்வி ஓடிப்போய்‌ ஆசிரியையின்‌ கைகளைப்‌ பிடித்துக்‌ கொண்டு அழத்‌ தொடங்கவும்‌ “அய்யோ...எனக்கு ஒண்ணுமில்லைடா; ஜயாம்‌ ஆல்ரைட்‌.” என்று அவளை சமாதானப்‌ படுத்தினாள்‌.

பதிவுகள்‌ 02020

88 பதிவுகள்‌ 36 சிறுகதைகள்‌ (தொகுதி மூன்று

அங்கயற்கண்ணி அவளுக்கு அருகில்‌ போய்‌ மிக மெல்லிய குரலில்‌ அவளுக்கு மட்டும்‌ கேட்கும்‌ படியாக “ஸாரி டீச்சர்‌; உங்களோட இந்த நிலைமைக்கு நான்‌ தான்‌ காரணம்‌..”என்றாள்‌ குற்ற உணர்ச்சி மேலிட.

“அய்யய்யோ, நான்‌ முட்டாள்‌ தனமா ஏதோ பண்ணதுக்கு நீங்க என்ன மேடம்‌ பண்ணுவிங்க; பாஸ்‌ ..பெயிலெல்லாம்‌ பரீட்சையில சகஜம்னு யோசிக்காம அவசரத்துல ஏதோ பண்ணிட்டேன்‌; அந்தப்‌ பசங்க பரீட்சையில்‌ பெயிலானத என்‌

டீச்சிங்க்கான தோல்வியா நெனைச்சு ஒரு நிமிஷம்‌ தடுமாறிட்டேன்‌; அந்தப்‌ பசங்க மறு மதிப்பீட்டுக்கு அப்ளை பண்ணியோ அல்லது அடுத்த மாசமே அரசாங்கம்‌ நடத்துற மறு தேர்வ எழுதியோ பாஸ்‌ பண்ணீடப்‌ போறாங்க; இதக்கூட அந்த நிமிஷத்துல

யோசிக்க முடியாமப்‌ போயிடுச்சு...” என்றாள்‌ விரக்தியாய்‌.

அங்கயற்கண்ணி தான்‌ வலிந்து மதிப்பெண்களைக்‌ குறைத்துப்‌ போட்டதை விளக்கமாய்ச்‌ சொன்னான்‌. “அந்த பள்ளிக்‌ கூடத்துமேல இருந்த கோபத்துல, உங்க கேரியர்ல கறுப்புப்‌ புள்ளி விழ வச்சு, உயிருக்குமில்ல உலை வைக்கப்‌ பார்த்துட்டேன்‌..தயவு

பண்ணி என்னை மன்னிச்சுடுங்க...” என்று சொல்லி கண்‌ கலங்கினான்‌.

engrsubburaj@yahoo.co.in

பதிவுகள்‌, நவமபர்‌ 2010 இதழ்‌ 131

பதிவுகள்‌ 02020

89 பதிவுகள்‌ 36 சிறுகதைகள்‌ (தொகுதி மூன்று

14. மாற்றங்கள்‌! - நெடுந்தீவு குகன்‌ - கனடா

மாலை நேரக்கதிரவன்‌ கொஞ்சம்‌ கொஞ்சமாய்‌ மேற்கு நோக்கி மறையத்தொடங்க இருட்டு நட்சத்திரக்கூட்டங்களுடன்‌ கூட்டணி சேர்ந்து கொண்டு பூமியில்‌ ஆட்சி அமைத்துக்கொண்டது. செல்லம்மா பரபரத்துக்‌ கொண்டிருந்தாள்‌. ' நாலு மணிப்பிளைற்றில வாறன்‌ எண்டவன்‌. மணி ஆறாகப்போகுது. இன்னும்‌ பிள்ளையக்காணயில்லை. வழியில ஏதாவது பிரச்சனையோ , இல்லாட்டி இந்த மனுசன்‌ அவனத்தவற விட்டிட்டு எங்கயாவது தடவிக்கொண்டு நிக்குதோ தெரியாது..." செல்லம்மா விதியைப்பார்ப்பதும்‌ வீட்டுக்குள்‌ வருவதுமாக தவித்துக்கொண்டிருந்தாள்‌.

தன்‌ மகனை இனி எப்ப பார்க்கப்போறன்‌ என்றிருந்தவளுக்கு ஜீவா இப்ப இன்னும்‌ கொஞ்நேரத்தில வரப்போறான்‌ .பத்து வருசத்துக்கு முன்னால காலத்தின்‌ கட்டாயத்தால இந்த நாட்டை விட்டு கனடா போனவன்‌ இன்று வருகிறான்‌ என்ற

சந்தோசத்திலும்‌ செல்வம்மாவுக்கு ஏதோ இனம்‌ புரியாத சோகம்‌.

பாவம்‌ பிள்ளை அவன்ர மனசில ஆசைய வளத்துப்போட்டு இப்ப எப்பிடி இந்த விசயத்த சொல்லப்போறன்‌...." பவானியின்‌ நிலமையை எப்படி மகனுக்குச்சொல்வது என்ற கவலை செல்வம்மாவுக்கு. அந்தக்கவலையிலும்‌ பத்து வருசத்துக்கு முன்‌ பார்த்த

முகம்‌. இப்ப எப்பிடி இருப்பானோ.....!

அவள்‌ நினைவை தெருவிலே வந்து நின்ற ஆட்டோ சத்தம்‌ கலைத்தது. ஆட்டோவிலிருந்து வேலுப்பிள்ளை மாஸ்ரரும்‌ , ஜீவாவும்‌ இறங்குவது தெரிகிறது. கைகளில்‌ இரண்டு சூட்கேசுகளுடன்‌ கம்பீரமாய்‌ நடந்துவரும்‌ மகனைப்பார்க்க செல்லம்மாவின்‌

பெத்த வயிறு குளிர்ந்து போனது. அன்போடு அவனை நெருங்குகையில்‌ செல்லம்மாவின்‌ கண்களில்‌ கண்ணீர்‌.

மகனின்‌ வருகைக்ககாக செல்லம்மா ஒரு விருந்தே செய்திருந்தாள்‌. பல வருடங்களுக்குப்பின்‌ அம்மாவின்‌ கையால்‌ அப்பாவுடன்‌ ஒன்றாக இருந்து சாப்பிடுவது ஜீவாவுக்கு மிகவும்‌ சந்தோசமாக இருந்தது. கையால்‌ அப்பாவுடன்‌ ஒன்றாக இருந்து சாப்பிடுவது ஜீவாவுக்கு மிகவும்‌ சந்தோசமாக இருந்தது. தன்‌ கனடா வாழ்க்கை , அக்கா , அத்தான்‌ , நாட்டு நிலமைகள்‌ , உறவினர்கள்‌ அயலவர்கள்‌ என்று கதைத்துக்‌ கொண்டிருந்ததில்‌ நேரம்‌ இரவு 12 ஆகிவிட்டிருந்தது.

ஆனால்‌ அம்மாவோ , அப்பாவோ பவானி பற்றி ஒன்றும்‌ கதைக்காதது ஜீவாவுக்கு வியப்பாக இருந்தது. தானாகக்கேட்கலாம்‌ என்று நினைத்தக்கொண்டவன்‌ ' சீ... வந்த உடன

பதிவுகள்‌ 02020

90 பதிவுகள்‌ 36 சிறுகதைகள்‌ (தொகுதி மூன்று) எப்பிடிக்கேக்கிறது...? அவையள்‌ ஏதாவது நினைப்பினம்‌. விடிஞ்சதும்‌

கேப்பம்‌...." என்று தனக்குள்‌ நினைத்துக்கொண்டான்‌. ஆனால்‌ மாஸ்ரரோ பவானி பற்றி எப்படி மகனிடம்‌ சொல்வது என்று தவித்துக்கொண்டிருந்தார்‌. ' சரி . மோனை .. வந்த களைப்பா இருக்கும்‌ , நீ போய்‌ படு மோனை விடியக்கதைப்பம்‌....." என்று தன்‌ பேச்சை முடிக்கிறார்‌.

ஜீவாவுக்கு தூக்கமே வரவில்லை. ' பல வருடங்களுக்கு முன்‌ சொந்த மண்ணில்‌ ஒன்றாகப்படித்து , ஓடி விளையாடியவள்‌ பவானி. இப்ப என்ர வாழ்க்கைத்துணைவியாக வரப்போகிறாள்‌.

கனடா வாழ்க்கையில்‌ கனடியக்‌ குடியுரிமை கைநிறையக்கிரடிட்‌ காட்‌ , கார்‌ என்று வசதிகள்‌ இருந்தும்‌ வேதனையான வாழ்க்கை. அந்த வேதனையான வாழ்க்க யிலும்‌ ஒரு சந்தோசம்‌. என்‌ இன்பத்திலும்‌ , துன்பத்திலும்‌ என்னோடு துணை நிற்க ஒருத்தி வருகிறாள்‌ என்பதுதான்‌. அவளோடு ரெலிபோனில்‌ கதைத்த அந்த நேரங்கள்‌ , அவள்‌ புகைப்படம்‌ பார்த்து அவள்‌ நினைவுகளைச்சுமந்திருந்த அந்த நாட்கள்‌ இதையெல்லாம்‌ விட சந்தோசம்‌ காலையில்‌ அவளைச்சந்திக்கப்போற சந்தோசம்‌...சீ... இந்த

நேரமே போக மாட்டன்‌ எண்டுது..." ஜீவா தூக்கமே வராமல்‌ படுக்கையில்‌ புரண்டுகொண்டிருந்தான்‌.

நட்சத்திரக்கூட்டணிக்குள்‌ பிளவை ஏற்படுத்திவிட்டு சூரியன்‌ மீண்டும்‌ ஆட்சியைப்பிடித்துவிட பொழுது விடிந்து விட்டிருந்தது. ஜீவா பரபரப்பாக விழித்துக்கொண்டான்‌. பவானியைப்பார்க்கப்‌ போகிற சந்தோசம்‌ அவனை ஒரு இயந்திரமாக மாற்றியிருந்தது.

'அப்பா நான்‌ ஒருக்கா பவானி வீட்ட போய்ட்டுவாறன்‌......" என்ற ஜீவாவின்‌ குரல்‌ கேட்டு கையில்‌ அன்றைய தினசரியுடன்‌ இருந்த மாஸ்ரர்‌ நிமிர்ந்தார்‌. செல்லம்மா குசினிக்குள்ளிருந்து வெளியே வந்தாள்‌. இருவர்‌ முகத்திலும்‌ கலவரம்‌.

'என்னப்பா நான்‌ கேக்கிறன்‌. நீங்க போசாம நிக்கிறீங்க..." ஜீவா புரியாமல்‌ கேட்க ' அது

கலவரமடைந்தவனாக அம்மாவை பார்க்க ' ஓம்‌ தம்பி. அந்த இடம்‌ எங்களுக்குச்சரி வராது. நாங்க வேற இடம்‌ பாப்பம்‌..." என்ற அப்பாவின்‌ குரலில்‌ ஜீவா அதிர்ச்சியடைந்தான்‌. ' என்னப்பா... உங்களுக்கென்ன விசரே..? நீங்களே பாத்து முடிவு செய்து போட்டு ...இப்ப இப்பிடிச்சொன்னா ..ஏனப்பா ஏதாவது பிரச்சனையே... ஏனம்மா பேசாம நிக்கிறீங்க....? என்னண்டு சொல்லுங்கோவன்‌...." ஜீவாவுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.

பதிவுகள்‌ 02020

91 பதிவுகள்‌ 36 சிறுகதைகள்‌ (தொகுதி மூன்று)

'அது மோனை வந்து... போன கிழமை பவானிய ஆமிக்காறர்‌ பிடிச்சுக்கொண்டு போய்ட்டாங்கள்‌. இப்ப எங்க வைச்சிருக்கிறாங்கள்‌...? , என்ன நடந்தது எண்டு ஒண்டுமே தெரியாது...? நாங்கள்‌ உனக்கு முதல்லயே சொல்லுவம்‌ எண்டுதான்‌ யோசிச்சனாங்கள்‌... நீ திடிரெண்டு வெளிக்கிட்டு வந்நதால சொல்ல முடியாமப்போச்சுது....."

செல்லம்மாவின்‌ வார்த்தைகள்‌ ஜீவாவுக்கு முள்ளாய்‌ குத்தியது. ' அதுதான்‌ மோனை இப்ப நாங்கள்‌ அவையள்‌ வீட்ட போகவிரும்பயில்ல....இனி ஆமிக்காறர்‌ கொண்டு போய்‌ வைச்சிருந்த இடத்தில என்ன நடந்ததோ யாருக்குத்தெரியும்‌...? நீ ஒரு மாசம்‌ நிக்கப்போறாய்தானே....வேற ஒரு நல்ல இடமாய்‌ பாப்பம்‌...” என்றபடி மாஸ்ரர்‌ அவனை நெருங்க ' சீ உங்கள என்ர அப்பா எண்டு சொல்லவே வெக்கமாயிருக்கு...எத்தினை பிள்ளைகளுக்கு படிப்புச்சொல்லிகுடுக்கிற நீங்களே இப்பிடியெண்டா...அம்மா ஒரு பெண்ணா பிறந்த நீங்களும்‌ பாவம்‌ அந்தப்பிள்ளையப்‌ பற்றி யோசிக்கவேயில்லை...இப்பிடி ஒரு இக்கட்டான நேரத்தில அந்தக்குடும்பத்துக்கு ஆறதலா உதவியா இருக்க வேண்டிய நீங்களே அவையளத்திரும்பிக்‌ கூடப்பாக்கயில்லை....."

பல வருடங்களுக்குப்பின்‌ சந்தித்த பெற்றோரிடம்‌ இப்படி பேசும்படியாகிவிட்டதே என்ற வேதனையிலும்‌ ஜீவா கோபமாய்‌ கத்தினான்‌. ' அதில்லை மோனை நாளைக்கு சனம்‌ நாலு கதை கதைக்கும்‌ எண்டுதான்‌..." அவனைச்சமாதானப்படுத்த முயன்ற செல்லம்மாவை ' அம்மா இதுவே உங்கிட மகள்‌ சுதாவுக்கு நடந்திருந்து அத்தான்‌ ஆட்கள்‌ இப்பிடி விட்டிருந்தா உங்களுக்கு எப்பிடியிருக்கும்‌ எண்டு யோசிச்சுப்பாருங்கோ...அப்பா நீங்க என்னை படிக்க வைச்சு கனடா அனுப்பினதாலதான்‌ நான்‌ இண்டைக்கு இப்பிடியிருக்கிறன்‌. அத நான்‌ ஒருக்காலும்‌ மறக்க மாட்டன்‌. ஆனால்‌ நான்‌ இப்ப உங்கிட முடிவை மீறுறதுக்காக என்னை மன்னிச்சுக்கொள்ளுங்கோ.... நான்‌ இப்ப பவானி வீட்ட போறன்‌. எப்பிடியும்‌ பவானியக்‌ கண்டு பிடிச்சு எழுத்த எழுதிப்போட்டுத்தான்‌ கனடா போவன்‌. உங்கிட பிள்ளை செய்யிறது சரியெண்டு பட்டா , நீங்க மாறினா நான்‌ உங்களததேடி வருவன்‌. இல்லாட்டி உங்கிட செலவுக்கு மாசாமாசம்‌ என்ர காசு வரும்‌...நான்‌ வாறன்‌...." ஜீவா ஒரு முடிவுக்கு வந்தவனாய்‌ ' அம்மா என்ன மன்னிச்சுக்கொள்ளுங்கோ..... நான்‌ போய்ட்டு வாறன்‌." என்றபடி தன்‌ சூட்கேசை எடுத்துக்கொண்டு செல்கிறான்‌. மாஸ்ரரும்‌ , செல்லம்மாவும்‌ ' தம்பி... நில்லு மோனை ...." என்ற படி அவன்‌

பின்னாலேயே செல்கிமுற்றும்‌.

delftkugan@yahoo.ca

பதிவுகள்‌ 02020

92 பதிவுகள்‌ 36 சிறுகதைகள்‌ (தொகுதி மூன்று) 15. வலி உணர்ந்தவன்‌ - மேரித்தங்கம்‌ -

கல்லூரிகள்‌ எல்லாம்‌ திறந்து ப்ளஸ்‌ முடித்தவர்கள்‌ எல்லாம்‌ உற்சாகமாக, யூனிபார்ம்‌ களிலிருந்து விடுதலை பெற்று, பட்டாம்‌ பூச்சிகளாக சிறகடித்து கல்லூரிகளுக்குப்‌ போய்க்‌ கொண்டி ருக்க, அல்லது கல்லூரிகளில்‌ சேர்வதற்கான ஆயத்தங்களில்‌ இருக்க, இவற்றில்‌ எதிலும்‌ கலந்து கொள்ளாமல்‌ பூக்காரம்மாளின்‌ பெண்‌ மட்டும்‌ இன்னும்‌ எங்கோ வேலைக்குப்‌ போய்க்‌ கொண்டிருப்‌ பதைப்‌ பார்த்த இவாஞ்சலினின்‌ மனசுக்கு வருத்தமாக இருந்ததுகல்லூரிகள்‌ எல்லாம்‌ திறந்து ப்ளஸ்‌ டூ முடித்தவர்கள்‌ எல்லாம்‌ உற்சாகமாக, யூனிபார்ம்‌ களிலிருந்து விடுதலை பெற்று, பட்டாம்‌ பூச்சிகளாக சிறகடித்து கல்லூரிகளுக்குப்‌ போய்க்‌ கொண்டி ருக்க, அல்லது கல்லூரிகளில்‌ சேர்வதற்கான ஆயத்தங்களில்‌ இருக்க, இவற்றில்‌ எதிலும்‌ கலந்து கொள்ளாமல்‌ பூக்காரம்மாளின்‌ பெண்‌ மட்டும்‌ இன்னும்‌ எங்கோ வேலைக்குப்‌ போய்க்‌ கொண்டிருப்‌ பதைப்‌ பார்த்த இவாஞ்சலினின்‌ மனசுக்கு வருத்தமாக இருந்தது.

அந்தப்‌ பெண்‌ ரொம்பவும்‌ நன்றாகப்‌ படிக்குமென்று அவள்‌ கேள்விப்‌ பட்டிருந்தாள்‌. அப்படிப்‌ பட்ட பெண்‌, கல்லூரிக்குப்‌ போகாமல்‌ இன்னும்‌ ஏன்‌ வேலைக்குப்‌ போய்க்‌ கொண்டி ருக்க வேண்டும்‌? ஒருவேளை படித்தது போதுமென்று நிறுத்தி விட்டார்களா? மனசுக்குள்‌ உழலும்‌ கேள்விகள்‌ இவாஞ்சலினுக்கு மிகவும்‌ கவலை யளித்தன. பூக்காரம்மாளிடம்‌ இது பற்றி விசாரிக்கலா மென்றால்‌, இப்போதெல்லாம்‌ அவளைப்‌ பார்க்கவே முடிவதில்லை. தண்ணீர்க்‌ குழாயில்‌ சந்தித்து கூட ரொம்ப நாளாகி விட்டது.

இவாஞ்சலினின்‌ வீடு வாஸ்து சாஸ்திரக்காரர்கள்‌ பயமுறுத்தும்‌ தெருப்பார்வையில்‌ அமையப்‌ பெற்றது. அந்த விட்டிற்கு நேர்‌ செங்குத்தாக விரியும்‌ தெருவின்‌ இறுதியில்‌ குறுக்காக வரிசை பிடித்து தீப்பெட்டிகளாக அடுக்கப்‌ பட்டிருக்கும்‌ ஓடு வேய்ந்த விடொன்றில்‌ தான்‌ பூக்காரம்மாவும்‌ அவளின்‌ குடும்பமும்‌ வாடகைக்கு வசிக்கிறது. அவர்களின்‌ காம்பெளண்ட்டிற்கு வெகு அருகாமையில்‌ தான்‌ நகராட்சிக்‌ காரர்கள்‌ அமைத்திருக்கும்‌ தெருக்குழாயும்‌ இருக்கிறது.

பூக்காரம்மாவுடன்‌ இவாஞ்சலினுக்கு இலேசான பழக்கந்தான்‌. எப்போதாவது தெருக்குழாயில்‌ சந்தித்துக்‌ கொண்டால்‌ பரஸ்பரம்‌ சிரித்துக்‌ கொள்வார்கள்‌; அதிகாலையில்‌ எழும்பி கோயம்பேடு மார்க்கெட்டிற்குப்‌ போய்‌ மொத்தமாய்‌ பூ வாங்கி வந்து அதை சரமாய்‌ தொடுத்து விற்பது தான்‌ அவளின்‌ பிரதான தொழில்‌. இவாஞ்சலின்‌ எப்போதாவது பூக்கேட்டால்‌ தன்‌ நீளமான கையினால்‌ தாராளமாய்‌ முழம்‌ போட்டு ஒரு புன்னகைக்‌ கீற்றையும்‌ பூவுடன்‌ ஓட்டவைத்துக்‌ கொடுப்பாள்‌. இவாஞ்செலினும்‌ பேரம்‌ எதுவும்‌ பேசாமல்‌ வாங்கிக்‌

கொள்வாள்‌.

பதிவுகள்‌ 02020

93 பதிவுகள்‌ 36 சிறுகதைகள்‌ (தொகுதி மூன்று

பூக்காரம்மாள்‌ பார்ப்பதற்கு மிகவும்‌ லட்சணமாக, கருப்பென்றுசொல்லிவிடமுடியாத மாந்தளிர்‌ நிறத்தில்‌,மினுமினுக்கிற தேக அழகுடன்‌ இருப்பாள்‌. அவளை மூன்று பிள்ளைகளுக்கு அம்மா என்று சொன்னால்‌ நம்புவதற்கு மிகவும்‌ கஷ்டமாக இருக்கும்‌. இதற்கு நேர்மாறாக அவளின்‌ புருஷன்‌ அடர்த்தியான கருப்பில்‌ கட்டை குட்டையாக...கொஞ்சம்‌ தவங்கித்‌ தவங்கித்‌ தான்‌ நடப்பான்‌. இருவரையும்‌ ஒன்றாய்ச்‌ சேர்த்து வாழ வைத்தது எந்த விதியோ என்று அவ்வப்போது தனக்குள்‌ அங்கலாய்த்துக்‌ கொள்வாள்‌ இவாஞ்சலின்‌.

அன்றைக்கு இரண்டு குடங்களைத்‌ தண்ணீர்க்‌ குழாயில்‌ வைத்து விட்டு தன்‌ முறை வருவதற்கு கொஞ்சம்‌ நேரமாகுமென்று தோன்றியதால்‌ சமையலறையில்‌ கைவேலையாக இருந்தாள்‌ இவாஞ்சலின்‌. வாசல்‌ கேட்டை யாரோ கிணுக்குவது கேட்டு வெளியில்‌ வந்து பார்த்தாள்‌. இவளு டைய காலிக்‌ குடங்களை கைகளில்‌ வைத்துக்‌ கொண்டு பூக்காரம்மாள்‌ நின்று கொண்டிருந்தாள்‌.

“ரொம்ப நேரமா காலிங்பெல்‌ அடிச்சடிச்சுப்‌ பார்த்தேன்‌; சத்தமே கேட்கல; அதான்‌ கேட்டை

“ஆமாங்க, கொஞ்ச நாளாவே காலிங்‌ பெல்‌ வேலை செய்யல; ரிப்பேர்ப்‌ பண்ணச்‌ சொன்னா இவர்‌ சாக்குப்‌ போக்குச்‌ சொல்லி காலங்‌ கடத்திட்டு இருக்கார்‌...அதுக்குள்ளயா தண்ணி நின்னு போச்சு?”

“இன்னைக்கு என்னன்னு தெரியல, சீக்கிரமே நின்னு போச்சு; எல்லாரும்‌ அவங்கங்க கொடத்த எடுத்துட்டுப்‌ போயிட்டாங்க...உன்‌ கொடம்‌ மட்டும்‌ தனியாக்‌ கெடந்துச்சு; எவளாவது லவட்டிக்கிட்டு போயிடப்‌ போறாளேன்னு தான்‌ கொண்டு வந்தேன்‌...” சிரித்தபடி சொன்னாள்‌ பூக்காரம்மாள்‌. இவாஞ்சலினுக்கு ஆச்சர்யமாக இருந்தது. பட்டணத்தில்‌ இப்படியும்‌ மனிதர்களா?

“இதென்ன தங்கமா, பித்தளையா திருடு போறதுக்கு? எவர்‌ சில்வர்‌ தான! உங்களுக் கெதுக்குங்க சிரமம்‌?” குடங்களைப்‌ பெற்றுக்‌ கொண்டு “வீட்டுக்குள்ள தான்‌ வாங்களேன்‌..”என்றாள்‌.

“இல்லை தாயி நெறைய வேலை இருக்கு; எனக்கும்‌ இன்னைக்கு ஒரு கொடம்‌ கூடத்‌ தண்ணி கெடைக்கல; அடிபம்ப்புலப்‌ போயித்‌ தான்‌ அடிச்சிட்டு வரணும்‌....நீயும்‌ வர்றீயா?

“அய்யோ நான்‌ வரலைங்க; அவ்வளவு தூரத்துலருந்து என்னால தூக்கிட்டு வரமுடி யாது. அதோட அந்தத்‌ தண்ணி அவ்வளவு நல்லாவும்‌ இருக்காது; நாங்க கேன்‌ தண்ணி

வாங்கிக்கு வோம்‌ ... “* என்ற இவாஞ்சலின்‌ அப்புறம்‌ ரொம்ப நாளாவே உங்ககிட்ட

பதிவுகள்‌ 02020

94 பதிவுகள்‌ 36 சிறுகதைகள்‌ (தொகுதி மூன்று

ஒண்ணு கேட்கணும்னு நெனச்சிருந்தேன்‌; நல்லாப்‌ படிக்கிற உங்க பொண்ணோட படிப்ப ஏன்‌ பாதியிலயே நிறுத்தீட்டீங்க? ஒரு டிகிரியாச்சும்‌ படிக்க வச்சுருக்கலாமில்ல....!” என்றாள்‌.

பூக்காரம்மாளின்‌ கண்களில்‌ நீர்‌ திரையிட்டது. “அந்தக்‌ கொடுமைய ஏன்‌ தாயி கேட்குற....?” என்றபடி வாசல்படியில்‌ கால்‌ நீட்டி வசதியாக உட்கார்ந்து கொண்டு பேசத்‌ தொடங்கினாள்‌. “என்‌ பொண்ணு பத்தாப்புல நானூத்தி பதிநாலு மார்க்கு ; நம்ம தெருவே மூக்குல விரல்‌ வச்சு சந்தோஷப்‌ பட்டுச்சு; நான்தான்‌ ப்ளஸ்‌ சேர்க்குறதுக்கு கவர்மெண்ட்‌ பள்ளிக்‌ கூடத்துக்குக்‌ கூட்டிட்டுப்‌ போனேன்‌; என்ன குரூப்‌ வேணுமின்னு கேட்டாங்க. எங்களுக்கு சொல்லத்‌ தெரியல! உன்னை மாதிரி விஷயம்‌ தெரிஞ்ச மகராசி யாரையாச்சும்‌ கூட்டிட்டாவது போயிருக்க லாம்‌; அப்பத்‌ தோணாமப்‌ போயிடுச்சு...

'ஏழை வீட்டுப்‌ புள்ளைய்யா; நல்லதா நீங்களே ஏதாவது படிப்புல சேர்த்துக்குங்க; உங்களுக்குக்‌ கோடி புண்ணியம்‌ கெடைக்கும்‌ ன்னு அவங்ககிட்டயே பொறுப்பக்‌ குடுத்தேன்‌. அவங்கதான்‌ ஏதோ பேசன்‌ டிசைன்னு ஒரு புதுக்குரூப்புல சேர்த்துக்குறோம்‌; ப்ளஸ்‌ படிச்சு முடிச்சாலே வேலை கிடைச்சுடும்னு ஆசைகாட்டி சேர்த்துக்‌ கிட்டாங்க; ஆனா படிச்சு முடிச்சப்புறம்‌ தான்‌ அந்தப்‌ படிப்போட வண்டவாளம்‌ தெரிஞ்சுச்சு, வேலையும்‌ கிடைக்கல; ஒரு மண்ணும்‌ கிடைக்கல...

அந்தப்‌ படிப்புல படிக்குறதுக்கு ஆளே சேரலைன்னு அரசாங்கமே அந்தக்‌ குரூப்ப மூடச்‌ சொல்லீருச்சாம்‌; அப்படி மூடிட்டா எங்க அதைச்‌ சொல்லிக்‌ குடுக்குற வாத்தியாருங்களுக்கு வேலை இல்லாமப்‌ போயிருமோன்னு பயந்துக்கிட்டு கூட்டுக்‌ களவாணி வாத்திமாருங்களெல்லாம்‌ ஒண்ணாச்‌ சேர்ந்துக்‌ கிட்டு விவரந்தெரியாத என்னை மாதிரி ஏழை விட்டுப்‌ புள்ளைங்கள அமுக்கி அந்தக்‌ குரூப்ல சேர்த்துக்கிட்டாங்களாம்‌; இந்த உண்மையெல்லாம்‌ இப்பத்தான்‌ தெரியுது, என்ன செய்றது?

அந்தப்‌ படிப்புலயும்‌ கண்ணும்‌ கருத்துமாப்‌ படிச்சு ஆயிரத்துச்‌ சொச்சம்‌ மார்க்‌ வாங்கி யிருந்தா என்‌ பொண்ணு; சரி இன்னொரு மூனு வருஷம்‌ வாய, வயிறக்‌ கட்டி ஒரு டிகிரியாச்சும்‌ படிக்க வச்சா அது பொழைப்ப அது பார்த்துக்கிடட்டும்னு காலேஸ்‌ தேடுனா, அக்கம்‌ பக்கத்துல எந்தக்‌ காலேஸுலயும்‌ அந்தப்‌ படிப்பு தட்டுப்‌ படல: பெரிய பெரிய பணக்காரங்க படிக்கிற தனியார்‌ காலேஷுல தான்‌ அது இருக்காம்‌! அவ்வளவு பணத்துக்கு நாங்க எங்க போறது? அதான்‌ போட்டோக்‌ கடையில வேலைக்குப்‌ போயிக்கிட்டு இருக்காள்‌... எல்லாம்‌ விதிம்மா! வேறென்ன சொல்றது? சரி தாயி, ரொம்ப நேரமாயிருச்சு, நான்‌ கெளம்புறேன்‌” என்றபடி எழுந்து போனாள்‌.

அன்றைக்கு இரவே அருள்தாஸிடம்‌ சொன்னபோது அவனுக்கும்‌ ஆத்திரம்‌ பொங்கி யது. “நானூறுக்கு மேல மார்க்‌ எடுத்த பொண்ணுக்கு ஃ.பேஷன்‌ டிசைன்‌ குரூப்‌ குடுத்தாங்களா?

பதிவுகள்‌ 02020

95 பதிவுகள்‌ 36 சிறுகதைகள்‌ (தொகுதி மூன்று

அந்த வாத்திமாருங்கள எல்லாம்‌ நிக்க வச்சு சுடணும்‌! காலேஷுல போயி அந்தப்‌ படிப்பப்‌ படிச்சாலும்‌ இந்தப்‌ பொண்ணால அதுல கரை சேர்றது கஷ்டம்‌! அதுக்கெல்லாம்‌ கத்தை கத்தையா பணமிருந்தால்‌ தான்‌ முடியும்‌...” என்றான்‌.

அப்புறம்‌ “வேணுமின்னா பாலிடெக்னிக்குல சேர்ந்து படிக்கச்‌ சொல்லலாம்‌...” என்று அவன்‌ சொல்லவும்‌ அவள்‌ மலர்ந்து, “ரெண்டாவது வருஷத்துல சேர்த்துக்குவாங்களா...?” என்றாள்‌.

“அது சாத்தியமில்லப்பா... ப்ளஸ்‌ டூ மேத்ஸ்‌,பிஸிக்ஸ்‌,கெமிஸ்ட்ரி படிச்சிருந்தாத்‌ தான்‌

இரண்டாவது வருஷத்துல சேர முடியும்‌; இந்தப்‌ பொண்ண எஸ்‌.எஸ்‌.எல்‌.சி. மார்க்க வச்சு

முதல்‌ வருஷத்துல தான்‌ சேர்த்து விடணும்‌...” என்றான்‌. “அப்ப ரெண்டு வருஷப்‌ ப்ளஸ்‌ படிப்பு பாழ்‌ தானா! சரி நான்‌ நாளைக்கு அவங்க கிட்டப்‌ பேசிப்‌ பார்க்குறேன்‌..”என்றாள்‌.

அடுத்த நாள்‌ பூக்காரம்மாளை அழைத்து இது சம்பந்தமாகப்‌ பேசிய போது,”எனக்கென்னம்மா புரியுது இதெல்லாம்‌! நான்‌ என்‌ பொண்ணையே கூட்டிட்டு வாறேன்‌; அவள்‌ கிட்டயே பேசு...” என்றபடி உடனே ஓடிப்போய்‌ தன்‌ பெண்ணை அழைத்து வந்தாள்‌.

அந்தப்‌ பெண்‌ நிறத்திலும்‌ முக வார்ப்பிலும்‌ அவளின்‌ அப்பாவைப்‌ போல்‌ இருந்தாலும்‌ பூக்காரம்மாவைப்‌ போலவே சித்துப்‌ பெண்ணாக பர்க்க லட்சணமாக இருந்தாள்‌.”உன்‌ பேரென்‌ னம்மா..? என்றாள்‌ இவாஞ்சலீன்‌ அவளின்‌ தலையை வாஞ்சையாய்‌ வருடியபடி. இத்தனை நாளில்‌ இந்தப்‌ பெண்ணின்‌ பேரைக்‌ கூடத்‌ தெரிந்து வைத்திருக்கவில்லையே என்று மனசுக்குள்‌ தன்னைத்‌ தானே கடிந்து கொண்டாள்‌ அவள்‌.

“சுகந்தி ஆண்ட்டி...”என்று அவள்‌ சொல்லவும்‌, “அழகான பேரா இருக்கே, யாரு வச்சது? என்றாள்‌ இவாஞ்சலீன்‌. “அவங்க அப்பாரு வச்ச பேரு தான்‌; நல்ல ரசணையான மனுஷன்‌ தான்‌; இப்பத்தான்‌ எதுக்கும்‌ பிரயோசணமில்லாமப்‌ போயிருச்சு ...” என்றாள்‌ பூக்காரம்மாள்‌ கண்களில்‌ மின்னும்‌ காதலுடன்‌.

“உன்னோட பிளான்‌ என்ன சுகந்தி? போட்டோக்‌ கடையிலேயே இன்னும்‌ எவ்வளவு காலத்துக்கு வேலை பார்த்துட முடியும்னு நெனைக்குற?” என்று கேட்டாள்‌ இவாஞ்சலின்‌.

“தெரியல ஆண்ட்டி; ஓடுற வரைக்கும்‌ ஓடட்டும்‌... கூடவே கரஸ்பாண்டன்ஸ்ல ஏதாவது படிக்கலாம்னு நெனைச்சிருக்கேன்‌. வேறென்ன பண்ண முடியும்‌? கண்களில்‌ கண்ணீர்‌.

“பாலிடெக்னிக்குல சேர்ந்து டிப்ளமோ படிக்குறியா சுகந்தி? “என்று கேட்டாள்‌ இவாஞ்சலின்‌. அவள்‌ கொஞ்சம்‌ கூட யோசிக்காமல்‌ சந்தோஷம்‌ பொங்க “சரி ஆன்ட்டி ...” என்று

தலையை ஆட்டினாள்‌ வேகமாக. படிக்க வேண்டுமென்கிற ஆசையும்‌ வேகமும்‌ அந்தத்‌

பதிவுகள்‌ 02020

96 பதிவுகள்‌ 36 சிறுகதைகள்‌ (தொகுதி மூன்று தலையாட்டலில்‌ தெரிந்தது.

“முதல்‌ வருஷத்துல தான்‌ சேர்த்துக்குவாங்களாம்‌; ரெண்டு வருஷம்‌ வீணாப்‌ போயிருச்‌ சுன்னோ, நம்மவிட வயசுல சின்னவங்களோட சேர்ந்து படிக்குறது மாதிரி ஆயிடுச்சேன்னோ ஃ.பீல்‌ பண்ணக்‌ கூடாது சரியா?” என்று ஆறுதலாய்ப்‌ பேசினாள்‌ இவாஞ்சலின்‌.“அதெல்லாம்‌ பரவாயில்ல ஆண்ட்டி...” சுகந்தி தெளிவாய்த்‌ தான்‌ பேசினாள்‌. அடுத்து வந்த நாட்களில்‌ பூக்காரம்மாளும்‌ இவாஞ்சலினும்‌ பாலிடெக்னிக்‌ பாலி டெக்னிக்காக ஏறி இறங்கி விசாரித்தார்கள்‌.

இருவரும்‌ சில நாட்கள்‌ சில பொழுதுகளாவது ஒன்றாகத்‌ திரிய நேர்ந்ததில்‌ இவாஞ்‌ சலின்‌ பூக்காரம்மாளின்‌ வாழ்க்கை பற்றிய நிறைய விபரங்களை அறிந்து கொண்டாள்‌. ஒருமுறை இவாஞ்சலின்‌, அவளிடம்‌ “நீங்க பள்ளிக்‌ கூடத்துக்கே போனதில்லையா?” என்று கேட்கவும்‌, “அதெல்லாம்‌ போனேன்‌ தாயி; நாலாப்பு வரைக்கும்‌ படிச்சேன்‌. அப்புறம்‌ எனக்கொரு தம்பி

பிறக்கவும்‌ என்‌ படிப்பை நிறுத்தி என்னைய புள்ளை தூக்கப்‌ போட்டுட்டாங்கல்ல..” என்றாள்‌ கடந்த காலத்தின்‌ கசப்புகளை விழுங்கியபடி.

இன்னொரு சமயம்‌ “சுகந்தி அப்பாவ நீங்க எப்படி கல்யாணம்‌ கட்டிக்கிட்டீங்க! விட்டுல வற்புறுத்தி கட்டி வச்சுட்டாங்களோ..” என்று கேட்டாள்‌ சிரித்தபடி. “அப்படியெல்லாம்‌ ஒண்ணுமில்ல தாயி; நாங்க காதலிச்சுத்‌ தான்‌ கல்யாணம்‌ கட்டிக்கிட்டோம்‌..” என்றாள்‌. இவாஞ்சலின்‌ முகத்தில்‌ ஆச்சர்யம்‌ காட்ட அவளே விளக்கமாய்ச்‌ சொல்லத்‌ தொடங்கினாள்‌.

“நாங்க பக்கத்து பக்கத்து ஊரு; சுகந்தி அப்பா பிராயத்துல கருப்பா இருந்தாலும்‌

நல்லா களையா இருக்கும்‌. அப்பல்லாம்‌ நல்லா மேளம்‌ வாசிக்கும்‌. கல்யாணம்‌, கருமாதி, ஊர்த்‌ திருவிழான்னு அததுக்குத்‌ தகுந்தபடி அபாரமா வாசிக்கும்‌. அப்ப அதோட கழுத்தசைவையும்‌ விரலோட நாட்டியத்தையும்‌ பார்த்துப்‌ பார்த்து நான்‌ சொக்கித்‌ தான்‌ போனேன்‌. ரொம்பத்‌ தெறமை யான மனுஷன்ம்மா... நான்‌ தான்‌ மொதல்ல அதுட்டப்‌ போயி, “எனக்கு உன்மேல ரொம்ப இஷ்டம்‌; என்னையும்‌ உன்கூடவே கூட்டிட்டுப்‌ போயிரு; உன்‌ மேள வாசிப்பக்‌ கேட்டுக்கிட்டே இருக்கனும்‌ போலருக்குன்னு சொன்னேன்‌. அது முதல்ல ஒண்ணுஞ்‌ சொல்லாம சிரிச்சிட்டுப்‌ போயிருச்சு...

நான்‌ திரும்பத்‌ திரும்ப அதுகிட்டப்‌ போயி இதையே சொல்லவும்‌, சரி வான்னு கூட்டிட்டுப்‌ போயி ஒரு கோயில்ல வச்சு தாலி கட்டிருச்சு; நாங்க வேற வேற ஜாதி; அதால ரெண்டு குடும்பத்திலயும்‌ எங்கள ஏத்துக்காம, வெட்டுவோம்‌, குத்துவோம்னு

பட்டணத்துக்கு வந்துட்டோம்‌. ஆரம்பத்துல எல்லாம்‌ என்கிட்ட ரொம்ப ஆசையா பிரியமாத்தான்‌ இருந்துச்சு... ஏனோ பட்டணத்துக்கு வந்ததும்‌ மேளம்‌ வாசிக்கிறத

பதிவுகள்‌ 02020

97 பதிவுகள்‌ 36 சிறுகதைகள்‌ (தொகுதி மூன்று

விட்டுருச்சு. அதுக்குப்‌ பதிலா சென்ட்ரிங்‌ வேலைக்குப்‌ போக ஆரம்பிச்சது. நல்ல வருமானம்‌ வந்துச்சு.சொந்தமா கான்ட்ராக்ட்‌ கூட எடுத்துப்‌ பண்ணுச்சு... ஒரு சமயம்‌ மூணாவது மாடியில சென்ட்ரிங்‌ வேலை செஞ்சுக்கிட்டு இருக்குறப்போ சாரம்‌ சரிஞ்சு கீழ விழுந்துருச்சு. புட்டாணி போயிருச்சு. பொழச்சு வந்தது அந்த கடவுள்‌ கிருபை; சேர்த்துவச்ச பணமெல்லாம்‌ அதோட மருத்துவ செலவுலேயே காலியாயிருச்சு; உடம்பு ஒடுங்கி பாதி ஆளாப்‌ போயிடுச்சு; தொடர்ந்து வேலைக்கும்‌ போக முடியல. இப்படி ஒண்ணுக்கும்‌ உதவாமப்‌ போயிட்டமேன்கிற மன உளைச்சல்ல ரொம்பவும்‌ ஒடைஞ்சு போயிட்டுது...

சென்ட்ரிங்‌ சாமான்களை யெல்லாம்‌ கூட்டாளிங்களே வித்துத்‌ தின்னுட்டாங்க; வீட்டுல பசியும்‌ வறுமையும்‌ ... கஞ்சிக்கில்லைன்னா சண்டை சச்சரவுதான வரும்‌; அதான்‌ நடக்குது

புள்ளைங்கள வச்சுக்கிட்டு எனக்கு முழி பிதுங்கிப்‌ போச்சு. என்ன பண்ற துன்னே புரியல; அப்புறம்‌ தான்‌ எனக்குத்‌ தெரிஞ்ச பூக்கட்டி விற்குற இந்த வேலையில ஏதோ வயித்துப்‌

நிறித்தினாள்‌ பூக்காரம்மாள்‌.

பெரும்பாலான பாலிடெக்னிக்குகளில்‌ ப்ளஸ்‌ வில்‌ சம்பந்த மில்லாத குரூப்பைப்‌ படித்த பெண்ணை சேர்த்துக்‌ கொள்ளத்‌ தயக்கம்‌ காட்டினார்கள்‌. ஒரிரு அரசு உதவி பெறும்‌ பாலி டெக்னிக்குகளோ சுகந்தி எஸ்‌.எஸ்‌.எல்‌.சி. யில்‌ எடுத்திருக்கும்‌ மார்க்‌ இடம்‌ கிடைப்பதற்கு போதாது என்று சொல்லி விண்ணப்பப்பாரம்‌ தருவதற்கே மறுத்து விட்டார்கள்‌. சுய நிதி பாலிடெக்னிக்கு களில்‌ டொனேஷன்‌ அது இதென்று கட்டணம்‌ எக்குத்‌ தப்பாய்க்‌ கேட்டார்கள்‌. கடைசியில்‌ ஒரு முஸ்லீம்‌ மைனாரிட்டி பாலிடெக்னிக்கில்‌ விசாரித்தபோது ஆறுதலாயும்‌ நம்பிக்கையாயும்‌ பேசினார்‌ கள்‌. ஆனால்‌ அங்கு சேர்வதற்கும்‌ வருஷத்திற்கு குறைந்தது இருபதாயிரம்‌ ரூபாய்த்‌ தேவைப்‌ படுமென்று தெரிந்தது. “இதெல்லாம்‌ கதைக்கு ஆகிற காரியமில்லை தாயி; அவளுக்கு விதிச்சபடி ஆகட்டும்‌...” என்று சொல்லி பூக்காரம்மாள்‌ விடை பெற்றுக்‌ கொண்டாள்‌.

இவாஞ்சலினுக்கு மனசு ஆறவே இல்லை.எந்த வகையிலாவது அந்தப்‌ பெண்ணிற்கு உதவ வேண்டுமென்று மனசு கிடந்து துடித்தது. “இப்படி பாலிடெக்னிக்‌ படிக்கிற ஆசைய அந்தப்‌ பொண்ணுக்கு ஊட்டிட்டு, அது இப்ப முடியாமப்‌ போயிடும்‌ போல இருக்குங்க...” அருள்தாஸிடம்‌ சொல்லிப்‌ புலம்பினாள்‌. “நாம வேணுமின்னா பணம்‌ கட்டி அந்தப்‌ பொண்ண படிக்க வைக்க லாம்ப்பா...” என்றான்‌ அவன்‌. “நெசமாவா...பணம்‌ கட்டுவிங்களா?” பதட்டப்பட்டாள்‌ அவள்‌.

பூக்காரம்மாளையும்‌ சுகந்தியையும்‌ அழைத்து விவரம்‌ சொல்லவும்‌ அவர்களால்‌ இதை நம்பவே முடியவில்லை.இரண்டு பேர்களின்‌ கண்களிலும்‌ தாரை தாரையாகக்‌ கண்ணீர்‌. பூக்காரம்‌ மாள்‌ தடாலென்று இவாஞ்சலினின்‌ கால்களில்‌ விழுந்து விட்டாள்‌. இவாஞ்சலின்‌

பதிவுகள்‌ 02020

98 பதிவுகள்‌ 36 சிறுகதைகள்‌ (தொகுதி மூன்று

பதறிப்போய்‌ “அய்யோ என்னங்க இதெல்லாம்‌... என்று அவளை எழுப்பி சோபாவில்‌ உட்கார வைப்பதற்குள்‌ போதும்‌ போதென்றாகி விட்டது. அப்புறமும்‌ பொங்கிப்‌ பொங்கி அழுது கொண்டிருந்தாள்‌ அவள்‌.

“சொந்த பந்தங்களே ஒரு பைசா தந்துதவாத காலம்‌ தாயி இது; முன்னப்பின்ன பழக்கமில்லாத எங்களுக்கு இவ்வளவு பெரிய தொகையக்‌ கட்டி படிக்க வைக்குறேன்றியே, நெசமாலுமே நீ தெய்வம்‌ தாயி...” என்று அரற்றினாள்‌.

காரியங்கள்‌ சரசரவென்று நடந்தேறின. அடுத்த நாளே இருவரும்‌ போய்‌ விண்ணப்ப படிவம்‌ வாங்கி வந்தார்கள்‌. அன்றைக்கே மூவரும்‌ உட்கார்ந்து அதை நிரப்பத்‌ தொடங்கினார்கள்‌. இவாஞ்சலின்‌ ஒவ்வொரு பகுதியாக வாசித்து, சுகந்தியும்‌ பூக்காரம்மாளும்‌ சொல்வதை படிவத்தில்‌ நிரப்பிக்‌ கொண்டிருந்தாள்‌. ஜாதி பற்றிய கட்டத்தை நிரப்புவதற்காக , “நீங்க என்ன கம்யூனிட்டி சுகந்தி?” என்று கேட்கவும்‌ “எஃப்‌. சி. ஆன்ட்டி ...” என்றாள்‌ சுகந்தி.

“அந்தக்‌ வயித்தெரிச்சல ஏன்ம்மா கேட்குற நாங்க கோயிலுக்கு பூக்கட்டி பொழைக்குற பண்டாரம்‌ ஜாதி; ஆண்டிப்‌ பண்டாரம்னு போட்டுருந்தா பிற்படுத்தப்பட்ட வகுப்புன்னு பதிவாயிருக்‌ கும்‌; எங்க ஆளுங்க எல்லாம்‌ அப்படித்தான்‌ பதிஞ்சிக்கிறாங்க... பிள்ளைங்கள பள்ளிக்‌ கூடத்துல சேர்க்குறதுக்குத்‌ தூக்கிட்டுப்‌ போன கூறுகெட்ட மனுஷன்‌ வெறுமனே பண்டாரம்‌: ஜாதின்னு சொல்லிப்‌ பதிஞ்சிட்டு வந்துருச்சு; பண்டாரம்னா முற்போக்கு ஜாதியாம்‌, சலுகை எதுவும்‌ கெடைக்காதாம்‌. அப்புறமும்‌ மனுக்‌ குடுத்து மாத்தச்‌ சொல்லி எவ்வளவோ சண்டை போட்டுப்‌ பார்த்தேன்‌; ஒரே அடியா முடியாதுன்னுடுச்சு...அதை விட இன்னொரு கொடுமை தாயி; என்‌ ஜாதியில பிள்ளைங்கள சேர்க்காம இவ அப்பனோட ஜாதியில பிள்ளைங்களச்‌ சேர்த்திருந்தா இன்னும்‌ விசேஷமா நிறைய சலுகைகள்‌ கெடைச்சிருக்கும்‌....” என்றாள்‌.

“ஏன்‌ அவரு அப்படி என்ன ஜாதி” என்றாள்‌ இவாஞ்சலின்‌ ஆர்வம்‌ மேலிட. பூக்காரம்‌ மாள்‌ சுற்றுமுற்றும்‌ பார்த்துக்‌ கொண்டு மிகவும்‌ மெல்லிய குரலில்‌ “அவரோட ஜாதி என்னன்னு இந்தப்‌ பட்டணத்துல யாருக்குமே தெரியாது; உன்கிட்ட மட்டும்‌ சொல்றேன்‌; நீயும்‌ உன்‌ மனசோட வச்சுக்கோ...” என்று பெரும்‌ ப்டிகைக்குப்‌ பின்‌ சொன்னாள்‌. “அது எஸ்‌.ஸி. கம்யூனிட்டி தாயி;துப்புக்‌ கெட்ட மனுஷன்‌ அது ஜாதியிலயும்‌ பிள்ளைகளச்‌ சேர்க்காம, என்‌ ஜாதியையும்‌ முழுசாச்‌ சொல்லாம படுபாவி பிள்ளைகளுக்கு ஒரு சலுகையும்‌ கிடைக்க விடாமப்‌ பண்ணீருச்சு..”

இவாஞ்சலினுக்கு நிஜமாகவே ஆச்சர்யமாக இருந்தது. எத்தனையோ பேர்‌ தாங்கள்‌ வசதி வாய்ப்புகளோடிருந்தும்‌ தங்களின்‌ பிறந்த ஜாதியை மறைத்து பொய்ச்‌ சான்றிதழ்‌ கொடுத்‌ தேனும்‌ சலுகைகள்‌ அனுபவிக்கத்‌ துடிக்கிறார்கள்‌. அவளுடைய சொந்த கிராமத்தில்‌ நிலபுலன்களும்‌ தோட்டந்‌ துறவுகளும்‌ நிறைந்த ஒரு பெரும்‌ பணக்காரக்‌ குடும்பம்‌;

பதிவுகள்‌ 02020

99 பதிவுகள்‌ 36 சிறுகதைகள்‌ (தொகுதி மூன்று

தாங்கள்‌ பிறந்த ரெட்டியார்‌ ஜாதியை கஞ்ச ரெட்டி என்று மாற்றிக்‌ கொண்டால்‌, மலை ஜாதி மக்களுக்கான சலுகைகள்‌ கிடைக்குமென்று அறிந்து அதற்கான முயற்சிகளில்‌ இறங்கி, அவர்களின்‌ மாவட்டத்திலேயே அப்படிப்பட்ட ஜாதிப்‌ பிரிவினர்‌ வசிக்கவில்லை என்று தாசில்தார்‌ சான்றிதழ்‌ தர மறுத்தும்‌ தன்னுடைய பணத்தையும்‌ செல்வாக்கை யும்‌ பயன்படுத்தி வேறொரு மாவட்டத்தில்‌ போய்‌ அப்படிப்‌ பட்ட சான்றிதழ்‌ பெற்று, சலுகைகளை அனுபவிப்பதை நேரிடையாகவே அவள்‌ அறிவாள்‌. அப்படிப்‌ பட்ட மனிதர்களுக்கு மத்தியில்‌ உண்மையிலேயே தாழ்த்தப்‌ பட்ட குடியில்‌ பிறந்திருந்தும்‌ அதைத்‌ தன்‌ பிள்ளைகளுக்குத்‌ தராமல்‌ மறைத்துவிடும்‌ மனுஷன்‌. அறியாமையாலா? ஆணவத்தாலா? இவாஞ்சலினுக்குப்‌ புரியவில்லை.

ஒரு நல்ல நாளில்‌ பூக்காரம்மாளையும்‌ அவளின்‌ பெண்ணையும்‌ அழைத்துக்‌ கொண்டு போய்‌ பணம்‌ கட்டி பாலிடெக்னிக்கில்‌ சேர்த்து விட்டு வந்தாள்‌ இவாஞ்சலின்‌.அன்றைக்கும்‌ இரு வரும்‌ கை கூப்பி கண்ணீர்‌ பெருக்கினார்கள்‌. இரண்டு நாள்‌ சென்றிருக்கும்‌. பூக்காரம்மாளின்‌ புருஷன்‌ மட்டும்‌ இவாஞ்சலினின்‌ வீட்டிற்கு வெளியே வந்து நின்றார்‌. அப்போது அருள்தாஸும்‌

வீட்டிலிருந்தார்‌. “எங்க குடும்பத்துக்கே விளக்கேத்தி வச்சுருக்கீங்க; கோடானுகோடி வருஷத்துக்கு நீங்க சுகமாய்‌ இருக்கனும்‌...” என்று கண்ணீருடன்‌ கை கூப்பி வணங்கினார்‌. எதுக்குப்‌ பெரிய வார்த்தையெல்லாம்‌ ...” என்றபடி அவரைச்‌ சமாதானப்‌ படுத்தி இருவரும்‌ வற்புறுத்தி வீட்டிற்குள்‌ அழைத்துப்‌ போனார்கள்‌. அவருக்கு சாப்பிட ஏதாவது தரலாமென்று இவாஞ்சலின்‌ சமையலறைகுள்‌ போனாள்‌.

அருள்தாஸ்‌ தான்‌ கேட்டார்‌..என்னைய்யா இப்படி அசட்டு மனுஷனா இருக்குற! உன்‌ ஜாதியில்‌ புள்ளைங்கள பதிஞ்சு வைச்சிருந்தீன்னா எவ்வளவு சலுகைகள்‌ கெடைச்சிருக்கும்‌? வேலை யிலயும்‌ முன்னுரிமையெல்லாம்‌ கெடைச்சுருக்குமில்ல; அத விட்டுட்டு ௭ஃப்‌.சி.ன்னு பதிஞ்சு பிள்‌ ளைங்களுக்கு ஒண்ணும்‌ கிடைக்காமப்‌ பண்ணிட்டீயே...”

அவர்‌ அருள்தாஸை தீர்க்கமாகப்‌ பார்த்தார்‌. அப்புறம்‌ பேசினார்‌ “சலுகைகள்‌ கிடைக்‌ கும்‌ தான்‌. கூடவே என்‌ ஜாதிக்கான இழிவும்‌ அவங்க மேல படிஞ்சுடுமே அதால இந்த சமூகம்‌ அவங்களுக்குத்‌ தர்ற வலி,அவமானம்‌ எல்லாத்தையும்‌ அவங்க அனுபவிச்சாகனுமே! எல்லோருக்கும்‌ தலித்துகள்‌ அனுபவிக்குற சலுகைகள்‌ மட்டும்‌ தான்‌ கண்ண உறுத்துது; அதுக்கு அவங்க குடுக்குற வெலை யாருக்குமே தெரிய மாட்டேங்குது.... கிராமத்துல போயி பள்ளனா, பறையனா, சக்கிலி யனா ஒரே ஒரு நாளாவது வாழ்ந்து பார்த்தாத்தான்‌ அந்த வலியும்‌ வேதணையும்‌ புரியும்‌...

மேளம்‌ வாசிக்குறது என்‌ மனசுக்கு ரொம்ப சந்தோஷம்‌ தர்ற விஷயம்‌ பட்டணத்துக்கு

பதிவுகள்‌ 02020

100 பதிவுகள்‌ 36 சிறுகதைகள்‌ (தொகுதி மூன்று)

பொழைக்க வந்ததும்‌ நான்‌ அதக்‌ கூட விட்டுட்டேன்‌; ஏன்னா அதுல என்‌ ஜாதி அடையாளம்‌ ஓட்டிட்டு இருக்கு; அதன்‌ மூலமாக்‌ கூட என்‌ ஜாதி என்னன்னு தெரிஞ்சு என்னைச்‌ சுத்தி இருக்குற வங்க என்‌ குடும்பத்தையும்‌ என்‌ பிள்ளைங்களையும்‌ இளக்காரமாப்‌ பார்க்குறத நான்‌ விரும்பல அதான்‌..என்‌ பிள்ளைகள பள்ளிக்கூடத்துல சேர்க்கும்போது சாதி இல்லைன்னு தான்‌ போடனும்னு ஆசைப்‌ பட்டேன்‌; ஆனா என்ன மாதிரி சாமானியன்‌ அப்படிச்‌ சொன்னா அத பள்ளிக்‌ கூடத்துல ஏத்துக்குவாங்களா என்ன! அதான்‌ என்‌ பொஞ்சாதியோட சாதியில சேர்த்தேன்‌...

நானும்‌ படிக்க ஆசைப்பட்டு சின்ன வயசுல கிராமத்துப்‌ பள்ளிக்கூடத்துக்குப்‌ போனேன்‌ ஸார்‌; அந்த நாட்கள்ல ஊருக்குள்ளதான்‌ சேரின்னு எங்கள ஒதுக்கி வச்சிருந்தாங்கன்னா, பள்ளிக்‌ கூடத்துலயும்‌ அதே கதை தான்‌... வகுப்புல தனியா உட்கார வச்சாங்க; மதிய உணவுக்கு தனி வரிசை; குடிக்குற தண்ணிக்கு தனி தம்ளர்‌; இழிந்த சாதின்னு வாத்தியார்களும்‌ சக மாணவர்‌ களும்‌ எங்க மேல செலுத்துன அதிகாரம்‌ இருக்கே, அப்பப்பா! அந்த வலியும்‌ வேதணையும்‌ இப்ப நெனைச்சாலும்‌ மனசு நடுங்குது.

நான்‌ ஆறாப்பு படிச்சுக்கிட்டிருந்த சமயம்‌; சின்ன வகுப்புல கிளாஸ்‌ ரூமுலேயே யாரோ ஒரு பையன்‌ வெளிக்குப்‌ போயிட்டான்னு சொல்லி என்னைக்‌ கூப்புட்டு 'அதைசச்‌ சுத்தப்‌ படுத்தச்‌ சொன்னாங்க... இத்தனை பேரு இருக்கும்‌ போது நான்‌ ஏன்‌ பண்ணணும்னு கேட்டேன்‌; என்‌ ஜாதியச்‌ சொல்லி, இதையெல்லாம்‌ நீங்க தாண்டா பண்ணனும்னாங்க; முடியாதுன்னுட்டு என்‌ வகுப்புக்குப்‌ போயிட்டேன்‌; ஹெட்‌ மாஸ்டர்‌ கூப்புட்டு, “ஏண்டா நாயெ உனக்கு அத்தனை திமிறா?ன்னு அடிச்சார்‌... அன்னைக்கோட படிப்பே வேணாமின்னுட்டு ஓடி வந்துட்டேன்‌ ஸார்‌...

அந்த நிலைமை என்‌ பிள்ளைகளுக்கு வர வேணாமின்னு தான்‌ அவங்களுக்கு என்‌ ஜாதியத்‌ தரல... ஜாதி இழிவுகளோட வலிய அனுபவிச்சு உணர்ந்த எனக்கு, சலுகைகள்‌ பெரிசாத்‌ தெரியல; நான்‌ பிறந்த ஜாதியோட நிழல்‌ கூட, என்‌ பிள்ளைங்க மேல படிய விட மாட்டேன்‌ ஸார்‌...” என்றார்‌ தீவிரமான குரலில்‌.

thangam.mary@gmail.com

பதிவுகள்‌, பெப்ருவரி 2010 இதழ்‌ 122

பதிவுகள்‌ 02020

101 பதிவுகள்‌ 36 சிறுகதைகள்‌ (தொகுதி மூன்று) 16. காதலர்‌ தினச்‌ சிறுகதை! முகநூல்‌ காதல்‌ - குரு அரவிந்தன்‌ -

உமா, உங்கள்‌ பேஸ்புக்கில்‌ நண்பராக என்னை இணைத்துக்‌ கொள்வீர்களா? மின்னஞ்சல்‌ மூலம்‌ அந்தச்‌ செய்தி வந்திருந்தது. உமா, உங்கள்‌ பேஸ்புக்கில்‌ நண்பராக என்னை இணைத்துக்‌ கொள்வீர்களா? மின்னஞ்சல்‌ மூலம்‌ அந்தச்‌ செய்தி வந்திருந்தது. முன்ஜென்மத்‌ தொடர்போ என்னவோ திரு என்ற அந்தப்‌ பெயர்‌ எனக்குப்‌ பிடித்தமானதாக இருந்ததால்‌ பத்தோடு பதினொன்றாக அவனையும்‌ எனது சினேகிதனாக ஏற்றுக்கொள்கிறேன்‌ என்று பதில்‌ அளித்தேன்‌. எனது புளக்கை பேஸ்புக்கில்‌ இணைத்திருந்தேன்‌. மறுநாள்‌ கணினி யன்னல்‌ விரிந்தபோது தமிழில்‌ உங்களுக்கு நிறைய ஆர்வமுண்டோ? திருவிடமிருந்து கேள்வியாய்‌ கண்‌ சிமிட்டியது.

ஏன்‌ கேட்கிறீங்கள்‌?' பதிலைக்‌ கேள்வியாக்கினேன்‌. “அவளைத்‌ தமிழ்‌ என்றார்கள்‌ வல்லினம்‌ மெல்லினம்‌ இடையினம்‌

அவனுக்குப்‌ பிடித்ததோ இடையினம்‌:

என்ற சில வரிகளை உங்க கவிதையில்‌ இருந்து படித்தபோது எனக்குச்‌ சிரிப்புத்தான்‌ வந்தது. அதனாலேதான்‌ கேட்கிறேன்‌. யார்‌ அந்த அவள்‌?

“அவனுக்குப்‌ பிடித்தவள்‌ என்று பதில்‌ எழுதினேன்‌.

“அதைத்தான்‌ கேட்கிறேன்‌. அவனையாவது யார்‌ என்று..?'

எங்கோ ஒருத்தன்‌, யாரறிவார்‌?

அது யாராயும்‌ இருக்கலாமா?'

இருக்கலாம்‌.

இப்படித்தான்‌ எங்கள்‌ நட்பு பேஸ்புக்கில்‌ ஆரம்பமாகித்‌ தொடர்ந்தது. பேஸ்புக்கின்‌ வாழ்க்கைக்‌ குறிப்பு பகுதியில்‌ அதிக தகவல்களை இருவருமே தரவில்லை. நான்‌ கனடா என்று எழுதியிருந்தேன்‌. திரு ஜெர்மனி என்றும்‌ குறிப்பிட்டிருந்தான்‌. புகைப்படம்‌

இருக்க வேண்டிய இடத்தில்‌ நான்‌ வெள்ளை நிற நாய்க்குட்டி ஒன்றைப்‌ போட்டிருந்தேன்‌. திரு இளம்‌ நடிகர்‌ ஆகாஷ்‌ படத்தைப்‌ போட்டிருந்தான்‌. அவ்வப்போது இரவு பகல்‌ பாராது பேஸ்புக்‌ மூலம்‌ தொடர்பு கொண்டு பல விடையங்களையும்‌ பரிமாறிக்‌

கொண்டோம்‌. சுறா மைனா சிங்கம்‌ சிறுத்தை என்று ஒரு படம்‌ விடாமல்‌ சினிமா

பதிவுகள்‌ 02020

102 பதிவுகள்‌ 36 சிறுகதைகள்‌ (தொகுதி மூன்று)

விமர்சனம்‌ செய்தோம்‌. எந்திரனையும்‌ மன்மதன்‌ அம்பையும்‌ ஒப்பிட்டுப்‌ பார்த்தோம்‌. சிங்கப்பூர்‌ உல்லாசப்‌ பயணக்‌ கப்பலில்‌ கமலும்‌ திரிஷாவும்‌ நடனமாடுவதை பார்த்து ரசித்தோம்‌. சிந்து சமவெளியில்‌ நடித்த அனகாதான்‌ மைனாவில்‌ வரும்‌ அமலா என்று புகைப்படத்தைப்‌ புரட்டிப்புரட்டிப்‌ பார்த்தே கண்டுபிடித்தோம்‌. ராதாவின்‌ வாரிசுதான்‌ கார்த்திகா என்று முகத்தைப்பார்த்தே அடித்துச்‌ சொன்னோம்‌. சூரியாவின்‌ தம்பி கார்த்திக்கின்‌ காதலி யாராக இருக்கும்‌ என்று தூண்டில்‌ போட்டுப்‌ பார்த்தோம்‌. காதலர்‌ தினத்திலன்று ஏதாவது புதிய படம்‌ வெளிவருகிறதா என்று விளம்பரத்தில்‌ தேடினோம்‌. இப்படியே தினமும்‌ உருப்படியான பல காரியங்களைப்‌ பேஸ்புக்கின்‌

உதவியோடு சலிப்பில்லாமல்‌ நாங்கள்‌ செய்து கொண்டிருந்தோம்‌.

முன்பெல்லாம்‌ கடிதம்‌ கையால்‌ எழுதி முத்திரை ஓட்டி முகவரி எழுதி அனுப்ப வேண்டும்‌. பதிலுக்கு நாட்கணக்கில்‌ காத்திருக்க வேண்டும்‌. இப்போ நவின தொழில்‌ நுட்பவசதியால்‌ அந்தக்‌ குறைகள்‌ எல்லாம்‌ நீங்கிவிட்டன. உடனுக்குடன்‌ தகவல்‌ பரிமாற முடிகிறது. மின்னஞ்சல்‌ மூலமோ அல்லது பேஸ்புக்‌ மூலமோ எழுத்துப்‌ பரிமாற்றம்‌ விரைவாக நடைபெறுகிறது. பெற்றோருக்குத்‌ தெரியாமலே அறைக்குள்‌ கணினி முன்‌ உட்கார்ந்தபடியே உலகைச்‌ சுற்றிவந்து பல விடையங்களைச்‌ செய்யமுடிகிறது. அவர்களிடம்‌ சிக்கிக்‌ கொள்ளாமல்‌ ஒருவருக்கொருவர்‌ பரிமாறும்‌ கடிதங்கள்‌ கூட இதனால்‌ தப்பிக்‌ கொள்ள வாய்ப்புண்டு.

திருவின்‌ பேஸ்புக்கில்‌ எங்கள்‌ குடும்பம்‌ என்று ஒரு வர்ணப்‌ புகைப்படம்‌ இருந்தது.

நாமிருவர்‌ நமக்கிருவர்‌ என்ற குடும்பக்கட்டுப்பாட்டு விளம்பரம்‌ போல்‌ திருவும்‌ சகோதரியும்‌ அப்பா அம்மாவும்‌ புன்னகை சிந்திய முகத்தோடு இருந்தார்கள்‌. சகோதரி ஒரு தேவதை போல்‌ என்‌ கண்ணுக்குத்‌ தெரிந்தாலும்‌ நான்‌ அதைப்பற்றித்‌

திருவிடம்‌ விமர்சிக்கவில்லை. பெண்களையே திரும்பிப்‌ பார்க்க வைக்கும்‌ அழகு அவளது அழகு என்று என்‌ மனதுக்குள்‌ சொல்லிக்‌ கொண்டேன்‌.

தற்செயலாக ஜெர்மனியில்‌ இருந்து எனது நண்பன்‌ அனுப்பிய திருமணப்படங்கள்‌ சிலவற்றில்‌ திருவின்‌ சகோதரி அழகாகச்‌ சிரித்துக்‌ கொண்டிருப்பதை அவதானித்தேன்‌. அந்தப்‌ படங்களில்‌ திருவும்‌ இருக்கலாம்‌ என்று தேடிப்பார்த்தேன்‌. அகப்படவில்லை. எனவே திருவிற்கு அது பற்றிப்‌ பேஸ்புக்‌ மூலம்‌ செய்தி அனுப்பினேன்‌.

' உன்னுடைய சகோதரியை நண்பனின்‌ திருமணப்‌ படத்தில்‌ பார்த்தேன்‌. அந்தத்‌ திருமணத்திற்கு நீ போகவில்லையா?

திருவின்‌ பதிலுக்குக்‌ காத்திருந்தேன்‌. பதில்‌ வரவில்லை. உடனுக்குடன்‌ பதில்‌ அனுப்பும்‌ திருவுக்கு என்ன நடந்தது?

பதிவுகள்‌ 02020

53 பதிவுகள்‌ 3 சிறுகதைகள்‌ (தொகுதி மூன்று)

உமா, உங்களுக்கு ஒரு உண்மையைச்‌ சொல்ல வேண்டும்‌, உங்கள்‌ தொலைபேசி எண்ணைத்‌ தருவிங்களா? உங்களுடன்‌ நான்‌ நேரடியாகப்‌

பேசவேண்டும்‌. திருவிடம்‌ இருந்து எதிர்பாராத செய்தி வந்திருந்தது.

நேரடியாகப்‌ பேசுவதற்கு அப்படி என்ன தேவை இருக்கிறது. ஏதாவது சுற்றுமாற்று வேலையோ? பேஸ்புக்‌ மூலம்‌ நிறைய ஏமாற்று வேலைகள்‌ நடப்பதாகக்‌ கேள்விப்‌ பட்டிருக்கிறேன்‌. வயது போனவர்கள்‌ இளைஞர்கள்‌ போல நடித்து பதின்ம வயதுப்‌ பெண்களை ஏமாற்றுவதாகக்‌ கூடக்‌ கேள்விப்பட்டிருக்கிறேன்‌. சீ. சீ.. திரு அப்படி எல்லாம்‌ செய்ய மாட்டான்‌.

இதிலே பயப்பிட என்ன இருக்கிறது? தொலைபேசி எண்தானே, அப்படி என்னதான்‌ பேசப்போகிறான்‌, கொடுத்தால்‌ போச்சு!

அசட்டுத்‌ துணிவோடு தொலைபேசி எண்ணைத்‌ திருவுக்கு அனுப்பிவிட்டேன்‌. மறுநாள்‌ தொலைபேசி வெளிநாட்டு அழைப்பு என்று சிணுங்கியது. ஹலோ... என்றேன்‌.

உமா இருக்கிறாங்களா? அவங்களோட பேசலாமா?

உமாவா.. நீங்க யார்‌ பேசிறீங்க..?'

'உமாவோட பிரென்ட்‌ திரு என்று சொல்லுறீங்களா?'

திருவா? குரலைக்‌ கேட்டதும்‌ ஒரு கணம்‌ அதிர்ச்சியில்‌ தயங்கினேன்‌. என்ன பேச்சையே காணோம்‌..!

இ..ல்லை வந்து.. நீங்க ஒரு பையன்‌ என்றல்லவா நினைச்சேன்‌.

அப்படித்தான்‌ உமாவும்‌ நினைச்சிட்டிருக்கிறா, அதைச்‌ சொல்லத்தான்‌ அவசரமாய்‌ எடுத்தேன்‌.

ஒரு கணம்‌ நான்‌ உறைந்து போய்விட்டேன்‌.

பதிவுகள்‌ 02020

104 பதிவுகள்‌ 36 சிறுகதைகள்‌ (தொகுதி மூன்று)

“அப்போ திரு, நீங்க ஒரு பெண்ணா..?'

ஆமா, பெண்தான்‌ திருமகள்‌ என்ற பெயரைத்தான்‌ சுருக்கித்‌ திரு என்று வைத்திருந்தேன்‌. அந்த உண்மையைச்‌ சொல்லத்தான்‌ நான்‌ இப்போ உமாவை அழைச்சேன்‌. உண்மையை மறைச்சதற்காக உமாகிட்ட மன்னிப்புக்‌ கேட்கவேண்டும்‌. ஆமா நீங்க யார்‌?

உமாவோட அண்ணனா?

இருங்க திருமகள்‌, உங்ககிட்ட நானும்‌ ஒரு உண்மையைச்‌ சொல்லவேண்டும்‌. 'என்ன..?'

நான்‌ சிறிது நேரம்‌ தயங்கினேன்‌. மறுபக்கத்தில்‌ நான்‌ சொல்லப்போகும்‌ அதிர்ச்சியைத்‌ திருமகள்‌ தாங்குவாளோ தெரியாது ஆனாலும்‌ சொல்லித்தானே ஆகவேண்டும்‌. என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியவளை நானும்‌ அதிர்ச்சிகுள்ளாக்க வேண்டாமா?

‘திரு, நான்தான்‌ உங்க பிரென்ட்‌ உமா, அதாவது உமாசுதன்‌!

kuruaravinthan@hotmail.com

பதிவுகள்‌, மார்ச்‌ 2011 இதழ்‌ 135

பதிவுகள்‌ 02020

105 பதிவுகள்‌ 36 சிறுகதைகள்‌ (தொகுதி மூன்று) 17. நீ விரும்பும்‌ தூரத்தில்‌ - ராம்ப்ரசாத்‌ சென்னை) -

வானம்‌ மப்பும்‌ மந்தாரமுமாய்‌ காட்சியளித்தது. மாலை சாய்ந்திருந்த வேளை, நடுத்தர குடும்பங்கள்‌ வசிக்கும்‌ புஷ்பம்‌ காலனி பெரியவர்கள்‌, மழை வரப்போவதாய்‌ குறிப்பறிந்து தத்தம்‌ விடுகளின்‌ முன்பாக கிரிக்கெட்‌ விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்களை வீட்டிற்குள்‌ விரட்டிக்கொண்டிருந்தனர்‌. விளையாட இடம்‌ கிடைத்த தோரணையில்‌ அங்குமிங்கும்‌ சுற்றித்திரிந்த கூதற்காற்றின்‌ மத்தியில்‌, அனிச்சையாய்‌, பழக்கப்பட்ட வழியில்‌ தானே நகரும்‌ கால்களுக்கு உடலைத்‌ தந்துவிட்டு, எங்கோ எதிலோ தொலைத்துவிட்ட நினைவுகளைத்‌ தேடக்‌ கூடத்‌ திராணியின்றி சோர்வாய்க்‌ காலனித்‌ தெருவில்‌ நடந்து வந்துகொண்டிருந்தான்‌ நந்தா. மெல்ல நடந்து, தரை தளத்திலொரு வீட்டில்‌ கட்டிப்போடப்பட்டிருந்த நாய்‌ இவனைப்‌ பார்த்ததும்‌ வாலாட்டியதை கவனியாமல்‌, தளர்வாய்ப்‌ படியேறி முதல்‌ மாடி வந்தான்‌. அவன்‌ எதிர்பார்த்தபடி அவன்‌ வீட்டுக்கதவு தாழ்‌ போடப்படாமல்‌ வெறுமனே சாத்தியிருந்தது அவன்‌ சோர்வை இரட்டிப்பாக்கியது. இன்னதென்று புரியாத வகைக்கு ஒரு வித ஆயாசம்‌ நந்தாவின்‌ மனதை சூழ்ந்துகொண்டது.

இரண்டு மூன்று நாட்களாக மஞ்சு சரியில்லைதான்‌. வீட்டை சரிவர கவனிப்பதில்லை. குழந்தைக்காவது சாப்பாடு கொடுத்தாளா? குழந்தை சாப்பிட்டாளா? நந்தா அவசரமாய்‌ கதவை மூடி உட்புறமாய்த்‌ தாழிட்டுவிட்டு, ஜந்து வயது பெண்‌ பிரமிளாவின்‌

ரூம்‌ கதவைத்‌ திறந்து எட்டிப்‌ பார்த்தான்‌. அவள்‌ வீட்டுப்பாடங்கள்‌ செய்தபடிக்கு, திறந்திருந்த ஒரு நோட்டுப்‌ புத்தகத்தின்‌ மீது எச்சில்‌ வழிய, குப்புற படுத்தபடி தூங்கிவிட்டிருந்தாள்‌. நாளை ஞாயிற்றுக்கிழமைதான்‌. அதனால்‌ தூங்கட்டும்‌. அவசரமில்லை என்பதாய்‌ பிரமிளாவின்‌ ரூமை பொத்தினாற்போல சாத்திவிட்டு வந்து ஹாலில்‌ சோபாவில்‌ உட்கார்ந்தான்‌. “பேன்‌ ஓடிக்கொண்டிருந்தது. தான்‌ ஃ.பேன்‌ போடவில்லை என்பது நினைவுக்கு வந்தது. ஹாலில்‌ யாரும்‌ இல்லாமல்‌ எத்தனை நேரம்‌ ஃபேன்‌ ஓடிக்கொண்டிருந்ததோ தெரியவில்லை? நந்தா ம்ச்‌ என்றவாறே ஒரு நீண்ட பெருமூச்சுவிட்டபடி சோபாவில்‌ சாய்ந்து, ஷூக்களிடமிருந்து லாவகமாய்‌ கால்களை விடுவித்துக்கொண்டு டீபாயின்‌ மேல்‌ சாக்ஸ்‌ மூடிய கால்களை நீட்டிச்‌ சாய்ந்தான்‌.

லேசாகத்‌ தலை தூக்கிப்‌ பார்த்தபோது மஞ்சு ரூமில்‌ ஒருக்களித்துப்‌ படுத்திருந்தது ஹாலிலிருந்தே தெரிந்தது. மூன்று வருடங்களுக்கு முன்பும்‌ இப்படித்தான்‌ நடந்தது முதல்‌ முறையாக. அப்போது தான்‌ நந்தாவுக்கும்‌ மஞ்சுவுக்கு திருமணம்‌ நடந்திருந்தது.திருமணமான இரண்டாவது மாதத்திலொரு நாள்‌ இதே போல விடு சரிவர ஒழுங்கு செய்யப்படாமல்‌, மஞ்சு ரூமில்‌ படுக்கையில்‌ ஒருக்களித்துப்படுத்திருந்தாள்‌. அவள்‌ கைகளைக்‌ குறுக்கே மடித்துக்‌ கட்டியிருக்க, கைகளுக்கும்‌ நெஞ்சுக்கும்‌

இடையே தங்க நிற ஃ.ப்ரேம்‌ போட்ட சட்டத்தில்‌ தியாகுவின்‌ புகைப்படம்‌. அந்த தங்க நிற ஃப்ரேம்‌ அவளின்‌ கண்ணிரில்‌ நனைந்திருந்தது. நந்தா சற்றே அருகே சென்று கவனிக்கையில்‌ அந்த சட்டம்‌ தியாகுவின்‌ புகைப்படத்தைத்‌ தாங்கியிருந்தது. அவள்‌

பதிவுகள்‌ 02020

106 பதிவுகள்‌ 36 சிறுகதைகள்‌ (தொகுதி மூன்று)

அன்னேரம்‌ தூங்கியிருந்ததால்‌, நந்தா கவனித்ததை அவள்‌ கவனித்திருக்கவில்லை.

தியாகு மஞ்சுவின்‌ முதல்‌ கணவன்‌. அடுத்த தெரு மஞ்சுவை நந்தா உருகிஉருகி காதலித்துக்கொண்டிருக்க, மஞ்சுவின்‌ மனதை கல்லூரித்தோழன்‌ தியாகு படிக்கத்தொடங்க, அது காதலாகி, கசிந்துருகி கல்யாணத்தில்‌ முடிந்திருந்தது. பிரமிளாவிற்கு

இரண்டு வயதிருக்கும்போது பிரமிளாவின்‌ அப்பா தியாகு ஒரு கார்‌ விபத்தில்‌ மரணமடைந்திருந்தான்‌. இரண்டு வயது பிரமிளாவுடன்‌ மஞ்சு இருபத்தினான்கு வயதிலேயே தனிமரமானது கேள்விப்பட்டு நந்தாவுக்கு இருதயமே நின்றுவிடும்‌ போலிருந்தது.

இளம்‌ விதவையாகி இருந்தாள்‌ அவன்‌ இதயம்‌ திருடியவள்‌. பெண்‌ உணர்வுகளின்‌ குவியல்‌. உணர்வுகள்‌ பெண்ணை ஆளாதிருக்கும்‌ நேரம்‌, அவள்‌ மரணம்‌ மட்டுமே. அவள்‌ மட்டும்‌ என்ன விதிவிலக்கா? பெண்‌ எனும்‌ வீட்டின்‌ ஜன்னல்கள்‌ திறக்கப்பட்டால்‌

பிரவேசிக்கும்‌ காற்று அவளின்‌ எதோவொரு உணர்வுடன்‌ மட்டுமெ பிரவேசிக்க முடிகிறது. அது தென்றலாவதும்‌, புயலாவதும்‌ அந்த உணர்வைச்‌ சார்ந்தே அமைகிறது. உணர்வுகளை ஆளக்‌ கற்கவில்லை அவள்‌. உணர்வுகளால்‌ உருப்பெற்றிருக்கிறாள்‌.

வெறும்‌ முலைகளும்‌, பிருஷ்டங்களுமே பெண்னென பார்க்கும்‌ உலகத்தில்‌ அவளை வல்லூறுகள்‌ குறிவைக்கலாம்‌. தென்றலும்‌ புயலும்‌ ஒரு முறையின்றி அவள்‌ ஆழ்மனதில்‌ அவளயுமறியாமல்‌ பலவந்தமாய்‌ மையம்‌ கொள்ள முயற்ச்சிக்கலாம்‌. அதனால்‌

அவள்‌ மாசடையலாம்‌. இதுபோன்ற தருணங்களில்‌ அவளுக்கு காவல்‌ தேவை. மஞ்சுவிற்கும்‌ அது தேவை. மஞ்சுவை உணர்வுகளால்‌ மட்டுமே பார்த்திருந்தான்‌ நந்தா. உணர்வுகளோடு மட்டுமே அவளை காதலித்திருந்தான்‌. அவன்‌ அவளுக்கு காவல்‌ இருக்க முடிவு செய்தான்‌. ஓடிச்சென்று வாழ்வளித்தான்‌ தன்‌ கனவு தேவதைக்கு. வல்லூறுகள்‌ அலையும்‌ மயானத்தில்‌ அரிதான பூ அவளுக்கு அழகியகுடையானான்‌. மஞ்சுவின்‌ எல்லா தேவைகளையும்‌ பூர்த்தி செய்தான்‌. மஞ்சுவின்‌ குழந்தையை தன்‌ குழந்தையாய்ப்‌ பார்த்துக்கொண்டான்‌. பிரமிளா மட்டுமே தனது ஒரே குழந்தை எனவும்‌ முடிவு செய்துகொண்டான்‌. மஞ்சுவின்‌ மேல்‌ கொண்ட அத்தனை வருட காதலில்‌ கனிந்த பாசம்‌ மொத்தத்தையும்‌ மஞ்சுவின்‌ மேல்‌ பொழிந்தான்‌. மஞ்சுவே அவனின்‌ எல்லைகடந்த பாசத்தில்‌, அன்பில்‌ திக்குமுக்காடிப்போனாள்‌ .அன்று தியாகுவின்‌ புகைப்படத்தைக்‌ கட்டியபடி ஒருக்களித்துப்‌ படுத்திருந்ததைப்‌ பார்த்ததுமே தோன்றியது, மஞ்சுவால்‌ தியாகுவை மறக்கமுடியவில்லை. இப்போது இந்த மூன்று வருடங்கள்‌ கழித்து மீண்டும்‌ அதே சூழ்நிலை உருவாகியிருக்கிறது.

நந்தா மீண்டும்‌ ஒரு முறை படுக்கை அறையைப்‌ பார்த்தான்‌. மஞ்சு அதே நிலையில்‌, ரூமில்‌ ஒருக்களித்துப்‌ படுத்திருந்தது தெரிந்தது. கொஞ்சம்‌ எக்கிப்‌ பார்த்தபோது, அவள்‌ இருகைகளுக்கும்‌ நெஞ்சுக்கும்‌ இடையே அதே தங்க நிற ஃப்ரேம்‌ போட்ட

சட்டம்‌. நந்தாவுக்கு புரிந்துவிட்டது. அவளால்‌ இன்னும்‌ தியாகுவை மறக்க முடியவில்லை.

பதிவுகள்‌ 02020

107 பதிவுகள்‌ 36 சிறுகதைகள்‌ (தொகுதி மூன்று)

தளர்வு அவனை மெல்ல படரத்‌ தொடங்கியிருந்தது. அவள்‌ எத்தனை நேரம்‌ இப்படி தியாகு நினைவாய்‌ படுத்திருக்கிறாளோ? சாப்பிட்டிருப்பாளா? தலை வலித்திருக்குமோ? ஒரு டீ போட்டுக்கொடுத்தால்‌ எழுந்து உட்கார்வாளோ? அல்லது, வேண்டாவெருப்பாய்‌ ஆனால்‌, எனக்காக, சகஜ நிலைக்கு திரும்பிவிட்டதாய்‌, என்னைப்‌ பொய்யாய்‌ சமாதானம்‌ செய்யவாவது எழுந்து உட்காரவாளோ? அவன்‌ கனவு தேவதை, காய்ந்த சருகாய்க்‌ கிடப்பது அவனால்‌ ஜீரணிக்கமுடியவில்லை.

அவளை எழுப்பவும்‌ தயக்கமாய்‌ இருந்தது. மூன்று வருடத்திற்கு முன்பு, மறுமணமான இரண்டாவது மாதத்தில்‌, அவள்‌ இப்படி ஒருக்களித்து படுத்திருக்கையில்‌, அவளை எழுப்பப்‌ அவள்‌ அம்மா போனபோது, தியாகுவை மறக்கமுடியவில்லை என்பதாயும்‌,

தியாகுவின்‌ காதலுக்கு தான்‌ அருகதையற்றவள்‌ என்பதாயும்‌, தியாகு அளவிற்க்கு ஒருவரை காதலிக்க முடியாது என்பதாயும்‌ அவள்‌ அழுது அரற்றிய குரல்‌ இன்னமும்‌ அவன்‌ காதுகளில்‌ ஒலித்துக்கொண்டே இருக்கிறது. இப்போதும்‌ அவளை எழுப்பினால்‌, அப்படி அவள்‌ அழுது அரற்றி தன்‌ மனக்கஷ்டத்திற்கு, சோகத்திற்கு வடிகால்‌ தேட அவளுக்குத்‌ தேவைகள்‌ இருக்கலாம்‌. ஆனால்‌, தன்னைப்‌ பார்த்துவிட்டு, தன்‌ முன்னே அப்படி வெளிப்படுத்தத்‌ தயங்கி, அவ்வேதனையை அவள்‌ அவளுக்குள்ளேயே

ஆழத்தில்‌ புதைக்க முயற்சிக்கலாம்‌. அல்லது என்‌ முன்னே எனக்கான வாழ்க்கைத்துணைவியாய்‌ இருப்பதாக பொய்யாய்‌, தன்‌ துக்கத்தைத்‌ தனக்குள்ளேயே மறைத்து, ஒரு தோற்றமளிக்க அவள்‌ யத்தனிக்கலாம்‌. அப்படி நடந்தால்‌, என்‌ மனதை நோகடிக்க

வேண்டாமென்கிற கரிசனத்தில்‌ அவள்‌ சாதாரணமாக எப்போதும்‌ போல்‌ நடந்துகொள்ள முயற்சித்தால்‌, அது அவளின்‌ இயல்பை விட்டு திரிந்ததாக இருக்குமோ? அவளின்‌ அந்த நேர துக்கத்துக்கான வடிகாலை அவள்‌ தானாகவே பெற்றிட, தானே ஒரு தடைக்கல்லாகிப்‌ போய்விடுவோமோ?

அவள்‌ இயல்பு தன்னால்‌ ஒரு போதும்‌ பாதிக்கப்படக்கூடாது. எந்த நிலையிலும்‌ அவள்‌ அவளாகவே இருக்கட்டும்‌. அவளின்‌ முழுச்சுதந்திரத்தையும்‌ அவளே ஆளட்டும்‌. அவனைப்பொறுத்தவரை இது ஒரு அற்பணிப்பு. மஞ்சுவிடம்‌ அவன்‌ கொண்ட காதலுக்கு அற்பணிப்பு. மஞ்சு என்கிற தன்‌ காதலை, அது எவ்வாறு இருந்ததோ, அதை அவ்வாறே ஒரு சின்ன சிதைவோ மாற்றமோ இன்றி அல்லது விரும்பாமல்‌ அப்படியே ஏற்றுக்கொண்டிருந்தான்‌ அவன்‌. அவனைப்‌ பொறுத்தவரை இறையும்‌ காதலும்‌ ஒன்றுதான்‌. இறைவனிடத்தில்‌ தன்னை அப்படியே உள்ளது உள்ளபடி அற்பணிப்பது போல, 'நீ உருவாக்கிய நான்‌, உன்னில்‌ ஒரு சிறு துளி நான்‌, உன்னையன்றி நான்‌ இல்லை, நீ பார்த்து என்ன செய்தாலும்‌ மனமுவந்து ஏற்றுக்கொள்ள சித்தமாயிருக்கிறேன்‌, என்‌ சகலமும்‌ உன்னுடையது, உன்‌ பின்புலம்‌ இல்லாமல்‌ என்னிடம்‌ எதிவும்‌ இல்லை, உன்னிடம்‌ என்னை அற்பணிக்கிறேன்‌' என்பதாக மஞ்சுவுடனான காதலுக்கும்‌ தன்னை அப்படியே அற்பணித்திருந்தான்‌. அவளுடனான காதலில்‌

பதிவுகள்‌ 02020

108 பதிவுகள்‌ 36 சிறுகதைகள்‌ (தொகுதி மூன்று)

முழுமையாக நனைதந்திருந்தான்‌. 'உன்னிடம்‌ அன்பு செய்யவே நான்‌ பிறந்திருப்பதாய்‌ உணர்கிறேன்‌. உன்னிடமிருந்து எனக்கேதும்‌ வேண்டாம்‌. உன்‌ விருப்பமாய்‌ நீ எதைக்‌ கொடுத்தாலும்‌ வாங்கிக்கொள்ள நான்‌ தயார்‌. நீயும்‌ என்னையே நினைக்க வேண்டும்‌ என்ற நிர்பந்தமில்லை. ஆனால்‌, உன்னையே நினைத்திருக்க எனக்கு நானே நிர்பந்திக்கவும்‌ எனக்கு பிடித்தம்‌. உனக்கென எப்போதும்‌ இருப்பேன்‌. நீ விரும்பும்‌ தூரத்தில்‌ இருப்பேன்‌. உன்னையே நினைத்திருப்பேன்‌. உன்‌ சலனம்‌ என்‌ கவலை. உன்‌ சந்தோஷமே என்‌ குறிக்கோள்‌. என்பதாய்‌ அவளைத்‌ தனக்குள்ளே பூஜித்திருந்தான்‌.

அவள்‌ வாடிக்கிடப்பது அவன்‌ மனதை வாட்டியது. கண்களில்‌ கண்ணீர்‌ முட்டியது. அவளின்‌ அப்போதைய நிலைப்பாட்டை புரிந்துகொள்ள முடிகிறது. அது அவளின்‌ மனதை கசக்கிப்பிழியும்‌ உணர்வுகளின்‌ வடிகால்‌. அது அப்போதைக்கு அவளுக்கு மிகவும்‌

தேவை. தன்னுடைய தலையீடு அவளின்‌ தவத்தை கலைக்கலாம்‌. ஒரு செயற்கையை தோற்றுவிக்கலாம்‌. அதை அவன்‌ விரும்பவில்லை. அவளாகவே அதைவிட்டு வெளியே வரட்டும்‌. பெருமூச்சொன்றை பிரசவித்தபடி எழுந்தான்‌. மெளனம்‌ அவனைச்‌

சுற்று எங்கும்‌ நிறைந்திருந்தது.

மதியம்‌ சமைக்கப்படவில்லை. இரவு நெருங்கிக்கொண்டிருக்கிறது. அவளுக்கு உணவு தேவைப்படலாம்‌. தன்‌ குழந்தையாகிப்போன, தியாகுவின்‌ குழந்தை பிரமிளா பசியோடிருப்பதை அவள்‌ தாயுள்ளம்‌ சகியாது. உணவு தயார்‌ செய்தால்‌ அவளுக்கு உதவியாக இருக்கும்‌ என்று எண்ணியவாறே உடைமாற்றிவிட்டு, சமையற்கட்டிற்குள்‌ நுழைந்து, அவளுக்கு மிகவும்‌ பிடித்தமான வெண்டைக்காய்‌ சாம்பார்‌ வைக்கத்‌ தொடங்கினான்‌. அங்கு பெட்ரூமில்‌, மஞ்சுவின்‌ கைகளுக்கும்‌ நெஞ்சுக்கும்‌ இடையில்‌ அந்த தங்க நிற ஃ.ப்ரேமில்‌ நந்தாவின்‌ புகைப்படம்‌ அவளது கண்ணீரில்‌ நனைந்துகொண்டிருந்ததையும்‌, யாரும்‌ எழுப்பாமல்‌, அவள்‌ மனம்‌ ' நந்தாவின்‌ காதலுக்கு தான்‌ அருகதையற்றவள்‌ என்பதாயும்‌, நந்தா அளவிற்க்கு ஒருவரை காதலிக்க முடியாது என்பதாயும்‌ அரற்றிக்கொண்டிருந்ததையும்‌ அவன்‌ அறிந்திருக்கவில்லை. நந்தாவுக்கு அது தேவையுமில்லை.

- ramprasath.ram@googlemail.com

பதிவுகள்‌, ஏப்ரல்‌ 2010 இதழ்‌ 124

பதிவுகள்‌ 02020

109 பதிவுகள்‌ 36 சிறுகதைகள்‌ (தொகுதி மூன்று)

18. விநோதன்‌ - ராம்ப்ரசாத்‌ ( சென்னை ) -

அவன்‌ இயல்பில்‌ அப்படி நிற்பவன்‌ அல்ல. ஆனால்‌ அன்று நின்றிருந்தான்‌, நடுத்தெருவில்‌. இடது புறம்‌ ஒரு சைக்கிள்காரரும்‌, வலதுபுறம்‌ ஒரு மொபெட்காரரும்‌ கடந்து செல்கையில்‌ இவனை வினோதமாக பார்த்துச்செல்கின்றனர்‌. ஆனால்‌, அதைப்‌ பற்றிய பிரங்ஞை இல்லாமல்‌ அவன்‌ பார்வைக்கு தெரிந்த சில நொடிக்காட்சிகள்‌ அப்படியே நின்று விட்டன. தெருவில்‌ சென்றுகொண்டிருந்த ஏனையோர்‌ அவனை வினோதமாய்‌ பார்த்திருக்க, அவனது பார்வையோ எங்கோ நிலைகுத்தியிருந்தது. கோடு போட்ட அரைகை சட்டையும்‌, கறுப்பு நிற கால்சட்டையும்‌ மறைத்திருந்த அவன்‌ உடலில்‌ எந்த வித அசைவும்‌ இன்றி சிலையாய்‌ நின்றிருந்தான்‌.

அவன்‌ பார்வை சிறையெடுத்த காட்சியில்‌, அவனே கைதியாகிடும்‌ படிக்கு தோன்றியது , அவள்‌ மட்டும்தான்‌. அவள்‌ லாவண்யா. சிகப்பு நிற சல்வாரில்‌, தலை நிறைய மல்லிப்பூவுடன்‌, நிலம்‌ பார்த்தபடி, நடந்து சென்றுகொண்டிருந்தாள்‌. அவளைத்தவிர சுற்றி இருந்த அத்தனையும்‌, விலக எத்தனிக்கும்‌ பனிமூட்டம்‌ போலவே பதியும்‌ அவன்‌ நினைவுகளில்‌. அவளுடன்‌ யாரும்‌ இல்லை. தனியே தான்‌ நடந்து கொண்டிருந்தாள்‌. மிக வேகமாயும்‌ இல்லாமல்‌, மிக மெதுவாகவும்‌ இல்லாமல்‌, நிதானமாக,

அவளைத்‌ தாங்கும்‌ நிலம்‌ கூட அவள்‌ இருப்பை உணர்ந்திருக்குமா என்று சந்தேகம்‌ கொள்ளும்‌ விதத்துக்கு நடந்திருந்தாள்‌. எல்லாம்‌ சில நொடிப்பொழுதுகள்‌ தான்‌.

எங்கிருந்தோ அவனைத்‌ தாண்டி கடந்து போன ஒரு கனரக வாகனம்‌ அவன்‌ பார்வை கோணத்தை கத்தரித்துச்‌ செல்ல, துண்டாகிப்‌ போன மறுபாதியில்‌ அவள்‌ எங்கோ மறைந்துவிட்டிருந்தாள்‌. அவள்‌ பார்வையில்‌ பட்ட அதிர்ச்சியினின்று

மீள்வதற்குள்ளாக, சட்டென அவள்‌, கண்களை விட்டு அகன்றதை ஜீரணிக்க முடியாமல்‌, அனிச்சையாக அவளை தேடத்தொடங்கியிருந்தான்‌. அவள்‌ நின்றிருந்த இடத்தில்‌, இருள்‌ சூழ பூட்டிக்‌ கிடந்த விட்டின்‌ முன்‌, அக்கம்‌ பக்கத்திலிருந்த கடைகளில்‌,

இந்தப்புறம்‌, அந்தப்புறம்‌ என எந்தப்புறம்‌ நோக்கினும்‌ அவளைக்‌ காணவில்லை.

நடுக்கடலில்‌ தத்தளிக்கையில்‌, தூரத்தே தெரிந்து, உயிர்‌ பிழைப்பதற்கான நம்பிக்கையூட்டி பின்‌ அப்படியே பார்வையினின்று மறைந்து போன கப்பலைப்‌ போல உணர்ந்தான்‌. அவனை விட மூன்று வயது மூத்தவளிடம்‌ தனக்கு ஏன்‌ இந்த மாதிரியான ஒரு

உணர்வு என்று அந்த நேரம்‌ அவனுக்கு தோன்றினாலும்‌, 'இப்படித்தான்‌ கடந்த நான்கு வருடமாய்‌ தோன்றுகிறது, ஆனாலும்‌ இது மாறுவதற்கில்லை, மாறுவதும்‌ பிடித்தமில்லை' என்பதாக அவனுக்கு தோன்றியது வழக்கம்போல்‌.

மனத்திற்கு எது சாசுவதம்‌ என்பது பல சமயங்களில்‌ ஒரு முரணின்‌ பிம்பமாகவே இருக்கின்றது. அவனுக்கு அவள்‌ பிடித்தம்‌. இத்தனைக்கும்‌ இந்த நான்கு வருடங்களில்‌

பதிவுகள்‌ 02020

110 பதிவுகள்‌ 36 சிறுகதைகள்‌ (தொகுதி மூன்று)

எதிர்விடாக இருந்தபோதிலும்‌ அவளுடன்‌ அவன்‌ பேசியது இல்லை. பேசவென்று அவன்‌ முயன்றதில்லை. அவள்‌ மேல்‌ அவன்‌ காதல்‌ வயப்பட்டிருக்கவில்லை. தோழி என்றழைத்திட அவளுடன்‌ பேசியுமிருக்கவில்லை. வலியப்‌ போய்‌ அறிமுகப்படுத்திக்கொள்ளவோ, பேசவோ காரணங்களில்லை.

வலுக்கட்டாயமாய்க்‌ ஒரு உறவை வளர்த்து அதற்கு காதல்‌ என்று பெயரிட்டு உலவ அவனுக்குத்‌ தேவைகள்‌ இருக்கவில்லை. ஆனால்‌ அவளைப்‌ பார்த்துக்கொண்டிருக்க பிடிக்கிறது. அதில்‌ ஏதோ இருக்கிறது. மனம்‌ லேசானது மாதிரி, வர வேண்டிய இடத்துக்கு வந்தாயிற்று என்பது போல. பூர்வ ஜென்ம பந்தமாக இருக்குமோ என்று கூட அவ்வப்போது யோசித்திருக்கிறான்‌.

அவளைப்‌ பார்க்கும்‌ போது ஒரு அமைதி கலந்த சாசுவதம்‌ மனதில்‌ பரவுகிறது. அந்த நேரம்‌ அது போதும்‌. எந்த பேச்சும்‌ வேண்டாம்‌. பேசி என்னாகப்போகிறது. இந்தப்‌ பார்வையில்‌, ஆயிரம்‌ கோடி காதல்கள்‌ கூடுமே. அவ்வப்போது இவன்‌ புறமாக அவள்‌ திரும்புவது போதுமே. அது தன்னைப்‌ பார்க்கவா, சீ சீ வேறு யாரையோ பார்க்கவா? இப்படி ஏன்‌ யோசிக்கவேண்டும்‌? கோயிலுக்கு போகிறோம்‌. அம்பாள்‌ தன்னைப்‌ பார்க்கிறாளா? இல்லையா? என்பது அனாவசியம்‌. அம்பாளின்‌ மேல்‌ தனக்கு பக்தி இருக்கிறது. அந்த பக்திக்கு உண்மையாய்‌ இருத்தல்‌ போதும்‌. அது போதும்‌ தனக்கு என்பதாகும்போது, அம்பாள்‌ எதைப்‌ பார்க்கிறாள்‌, எப்படிப்‌ பார்க்கிறாளென்றெல்லாம்‌ கண்டேனா? எதையும்‌ எதிர்பார்க்காமல்‌ அன்பு செலுத்துவதில்‌ இது அடங்கிப்போகுமா? உண்மையில்‌ அப்படி அன்பு செலுத்துவதுதான்‌ அவன்‌ இயல்பு அல்லது அவன்‌ விருப்பம்‌. விருப்பமே இயல்பாகியிருக்கலாம்‌. அதனை அவன்‌ தன்‌ இயல்பென நினைத்திருக்கலாம்‌. அவள்‌ பார்வையில்‌ அகப்படவில்லை. அவன்‌ பார்வை மீண்டும்‌ மீண்டும்‌ அலைபாய்ந்தது. ஆறு மாதங்களுக்கு முன்பு வீடு மாற்றி சென்றுவிட்டது அவள்‌ குடும்பம்‌. அன்றிலிருந்து இந்த தேடல்‌. அவளை போகும்‌ இடமெல்லாம்‌ தேடும்‌ வேதனை. காணும்‌ பெண்களிலெல்லாம்‌ அவளைத்‌ தேடும்‌ பிரங்ஞை. இன்று அவளே எதிர்படுகையில்‌, எதிர்பட்டது அவள்‌ தானா என அவதானிக்கையிலேயே, அவள்‌ மறைந்துவிட்டிருந்தாள்‌. எங்கேயாவது அவளை மீண்டும்‌ பார்த்திட மாட்டோமா என்‌ ஏங்கியது அவன்‌ மனம்‌. சளைக்காமல்‌ இங்குமங்கும்‌ பார்த்தபடியே இருந்தான்‌ அவன்‌.

குறைத்தபடி ஒடும்‌ நாய்‌, பேப்பர்‌ பொறுக்கும்‌ சிறுவன்‌, தனியே சுழலும்‌ காற்றோடு சேர்ந்து சுழலும்‌ குப்பை காகிதங்கள்‌, கையில்‌ காய்கறிக்கூடையுடன்‌ கடந்து போகும்‌ குடும்பப்பெண்கள்‌ என எல்லோர்‌ மத்தியிலும்‌ அவளைத்‌ தேடிக்கொண்டே தெரு முனைக்கு வந்துவிட்டிருந்தான்‌. அந்தத்‌ தெரு இருபுறமும்‌ பிரிந்தது. அதில்‌ வலது புறம்‌ பிரிந்த தெருவில்‌ அவன்‌ பார்வை படர்ந்த போது அவள்‌ மீண்டும்‌ அகப்பட்டாள்‌. அதே சிகப்பு நிற சல்வார்‌. அவளை மீண்டும்‌ கண்ணால்‌ கண்டது மிகவும்‌ சந்தோஷமாக இருந்தது. மனதுக்கு இதமாக இருந்தது. இதயத்தின்‌ மூலையில்‌ எரியத்‌ தொடங்கிய ஏதோ

பதிவுகள்‌ 02020

111 பதிவுகள்‌ 36 சிறுகதைகள்‌ (தொகுதி மூன்று)

ஒரு ஜ்வாலை மீது பனிக்குடம்‌ கவிழ்ந்தது போலிருந்தது. அவளின்‌ வசிப்பிடம்‌ தெரிந்துகொள்ளும்‌ ஆவலில்‌ அவளைத்‌ தொடரலானான்‌. அவள்‌, அவன்‌ பார்வைக்கு, காற்றிலே மிதந்தபடி, அருகாமையில்‌ இருந்த கோயிலை நோக்கிச்‌ சென்று கொண்டிருந்தாள்‌. அவள்‌ பின்னாலேயே அவனும்‌ சென்றான்‌. அவன்‌ வேகத்தில்‌, அவளை கோயிலுக்கு முன்னமேயே சந்தித்து விடுவோமோ எனத்‌ தோன்றியது. அது நாள்‌ வரை பேசாத அவளிடம்‌ திடீரென்று என்ன பேசுவது. அவனுக்கு ஒன்றும்‌ தோன்றவில்லை. பிற்பாடு பேசலாம்‌, இப்போதைக்கு அவளின்‌ இருப்பிடம்‌ அறியலாமென்று சற்றேன வேகம்‌ குறைத்து நடக்கலானான்‌. சாலையோரம்‌ ஒரு வீட்டின்‌ முகப்புக்கதவில்‌ கட்டப்பட்டிருந்த நாய்‌ அவளையும்‌, சற்று பின்னாலேயே வரும்‌ அவனையும்‌ பார்த்து என்ன நினைத்ததோ, குறைக்கத்‌ தொடங்கியது. அவள்‌ கோயிலை நெருங்கினாள்‌. அவனும்‌

பின்னாலேயே நெருங்கினான்‌. அவள்‌ சட்டென வலதுபுறம்‌ திரும்பி, கோயிலை ஒட்டியிருந்த வீட்டினுள்‌ நுழைந்தாள்‌. அதுதான்‌ அவள்‌ விடாக இருக்க வேண்டும்‌. அவன்‌ நினைத்துக்கொண்டான்‌. இத்தனை பக்கமாகவா இருக்கிறாள்‌. இது நாள்‌ வரை எப்படி கவனியாது போனோம்‌ என ஆச்சரியம்‌ கொண்டான்‌. வீட்டு வாசலில்‌ நீர்‌ தெளித்து கோலமிடப்பட்டு, அந்த கோலப்பொடியை சில எறும்புகள்‌ ஓர்‌ ஓரமாய்‌ மொய்த்திருந்தன. வீடு, முகப்பிலிருந்து, துளசி மாடத்தை மையமாகக்‌ கொண்ட, பல்வேறு

பூச்செடிகள்‌ நிறைந்த, சீராக நடைபாதை அமையப்பெற்ற தோட்டத்தைத்‌ தாண்டி, உள்வாங்கியிருந்தது.

அவன்‌, உள்ளே செல்வதா வேண்டாமா என்ற தயங்கியவாறே நின்றிருந்தான்‌. என்னவென்று சொல்லிச்‌ செல்வது என்று யோசித்தபடியே நின்றிருந்தான்‌. சரி, வீட்டினுள்‌ யாரெனும்‌ தென்படுவார்கள்‌. மாமாவோ, அத்தையோ யாரேனும்‌ தென்பட்டால்‌ நலம்‌ விசாரித்தபடி அறிமுகம்‌ செய்தவாறே பிரவேசிக்கலாம்‌ என்‌ எண்ணியவாறே அவன்‌ தோட்டத்தைத்‌ தாண்டி வீட்டினுள்‌ பார்வையை செலுத்திய போது அதைக்‌ காண நேர்ந்தது. அவள்‌ தலை நிறைய மல்லிப்பூவுடன்‌ பச்சை தாவணியில்‌ சிரித்த முகமாய்‌

இருந்த புகைப்படத்தை சுற்றி மாலை அணிவிக்கப்பட்டு எரிந்து கொண்டிருந்த நிலையில்‌ இரண்டு ஊதுவத்திகள்‌ கொலுத்தப்பட்டு புகைப்படத்தைத்‌ தாங்கியிருந்த சட்டத்தில்‌ செருகப்பட்டிருந்தன.

அந்தப்‌ புகைப்படத்தின்‌ மீது அவன்‌ பார்வை நிலை கொண்டிருக்க, அவன்‌ மீண்டும்‌ விநோதனாகியிருந்தான்‌.

ramprasath.ram@googlemail.com

பதிவுகள்‌ 02020

112 பதிவுகள்‌ 36 சிறுகதைகள்‌ (தொகுதி மூன்று)

19. (ஒரு) மாற்றம்‌ - தமயந்தி கிரிதரன்‌ - ஆங்கிலத்திலிருந்து தமிழில்‌ : லதா ராமகிருஷ்ணன்‌

[ கூர்‌ 2010 கனடாக்‌ கலை இலக்கிய மலருக்காக தமயந்தி கிரிதரனால்‌ ஆங்கிலத்தில்‌ எழுதப்பட்டு எழுத்தாளர்‌ லதா ராமகிருஷ்ணன்‌ அவர்களால்‌ தமிழாக்கம்‌ செய்யப்பட்டு பிரசுரிக்கப்பட்ட சிறுகதை. இங்கு தமிழ்‌ மொழிபெயர்ப்பையும்‌ இதன்‌ ஆங்கில மூலத்தினையும்‌ ஒருசேர வாசிக்கலாம்‌. ]

இருள்‌ ஒரு போர்வையைப்‌ போல்‌ என்னைச்‌ சுற்றிக்‌ கவிந்து போர்த்தியது. உண்மையில்‌, அது ஒரு போர்வை தான்‌. என்றும்‌ பாதுகாப்பான கருவறைத்தோற்றநிலையில்‌ என்னை சுருட்டிக்கொண்டிருந்தேன்‌.அந்த சொகுசான, கதகதப்பான போர்வை ஒரு புதுத்‌ தாய்‌ தன்னுடைய குழந்தையை அரவணைத்துக்‌ கொள்வதைப்‌ போல்‌ என்னைத்‌ தழுவிக்கொண்டது. அந்தப்‌ பாதுகாப்புணர்வு எப்போதுமே தோலின்‌ அந்த மென்மடிப்புகளின்‌ நடுவே அமைந்திருக்கிறது; குழந்தையைப்‌ பெற்றெடுத்ததால்‌ இன்னும்‌

கூடுதலாக மென்மையாக்கப்பட்ட, அடர்வாக்கப்பட்ட அந்தப்‌ புதுத்தோலின்‌ மென்மடிப்புகளில்‌. குழந்தை பிறந்தவுடனேயே, அந்த உணர்வு என்றைக்குமாய்‌ அந்தத்‌ தாயிடம்‌ நிலைகொண்டுவிடுகிறது - பிள்ளைப்பேற்றின்‌ போது உடலில்‌ சேரும்‌ அதிகப்படியான கொழுப்புச்சத்து போன பிறகும்‌ கூட.இருள்‌ ஒரு போர்வையைப்‌ போல்‌ என்னைச்‌ சுற்றிக்‌ கவிந்து போர்த்தியது. உண்மையில்‌, அது ஒரு போர்வை தான்‌. என்றும்‌ பாதுகாப்பான கருவறைத்தோற்றநிலையில்‌ என்னை சுருட்டிக்கொண்டிருந்தேன்‌.அந்த சொகுசான, கதகதப்பான போர்வை ஒரு புதுத்‌ தாய்‌ தன்னுடைய குழந்தையை அரவணைத்துக்‌ கொள்வதைப்‌ போல்‌ என்னைத்‌ தழுவிக்கொண்டது. அந்தப்‌ பாதுகாப்புணர்வு எப்போதுமே தோலின்‌ அந்த மென்மடிப்புகளின்‌ நடுவே அமைந்திருக்கிறது; குழந்தையைப்‌ பெற்றெடுத்ததால்‌ இன்னும்‌ கூடுதலாக மென்மையாக்கப்பட்ட, அடர்வாக்கப்பட்ட அந்தப்‌ புதுத்தோலின்‌ மென்மடிப்புகளில்‌. குழந்தை பிறந்தவுடனேயே, அந்த உணர்வு என்றைக்குமாய்‌ அந்தத்‌ தாயிடம்‌ நிலைகொண்டுவிடுகிறது - பிள்ளைப்பேற்றின்‌ போது உடலில்‌ சேரும்‌ அதிகப்படியான கொழுப்புச்சத்து போன பிறகும்‌ கூட.

நான்‌ இன்னமும்‌ என்னுடைய பாட்டியின்‌ முக்காலியைவிட உயரமாகிவிடவில்லை. மற்றவர்களுக்கு அல்லது தனக்குப்‌ பயன்படும்‌ வகையில்‌ உறுதியாக, திடமாக இருக்கவேண்டி பழைய சிந்தூர மரத்திலிருந்து வெட்டியெடுத்தத ஒரு துண்டைக்கொண்டு அவள்‌ தயார்‌ செய்தது. அந்த முக்காலி சின்னதாக இருந்தது. நானும்‌ தான்‌. அநத சமயத்தில்‌ என்னுடைய தங்கை பிறந்திருக்கவில்லை. எனவே, நான்‌ மற்றவர்களுக்கு அல்லது எனக்கே கூட எப்படி உறுதியும்‌ திடமுமாக இருக்கவேண்டும்‌ என்பது

எனக்குத்‌ தெரிந்திருக்கவில்லை. எல்லாவற்றிற்கும்‌ என்னுடைய பெற்றோர்களைச்‌ சார்ந்தபடியிருந்தேன்‌. ஏனெனில்‌, அது மட்டுமே நான்‌ என்ன செய்யவேண்டுமென்று எனக்குத்‌ தெரியவேண்டிய தேவையாக இருந்தது. சார்ந்திருத்தல்‌. அவர்களைச்‌

பதிவுகள்‌ 02020

113 பதிவுகள்‌ 36 சிறுகதைகள்‌ (தொகுதி மூன்று)

சார்ந்திருத்தல்‌. ஏனெனில்‌, அவர்கள்‌ பாதுகாப்பார்கள்‌ என்று எனக்குத்‌ தெரியும்‌. ஆனால்‌, இன்று அப்படியில்லை.

நாள்‌ வழக்கம்போல்‌ தான்‌ ஆரம்பமானது. மேகமூட்டத்தோடு, கொஞ்சம்போல்‌ சூரியன்‌ எட்டிப்பார்த்துகொண்டிருக்கும்படியாக. ஜன்னல்களுக்குப்‌ பக்கத்தில்‌ என்னுடைய சாய்விருக்கையில்‌ கோணல்மாணலாக என்னைக்‌ கிடத்தியிருந்தேன்‌. அது

என்னுடைய புதுநாளின்‌ தொட்டிலாகியிருந்தது (அதற்குப்‌ பிறகு அது எனக்குத்‌ தேவைப்படவில்லை என்பது வெளிப்படை). பழைய இலக்கியநூல்களில்‌ நமக்குக்‌ காணக்கிடைக்குமே, அது போன்ற அழகான கையால்‌ தீட்டப்பட்ட சித்திரங்களைக்‌ கொண்டு மிகுந்த பிரியத்தோடு அலங்கரிக்கப்பட்டிருந்த ஒரு புத்தகத்தைப்‌ படித்தேன்‌.அந்த வயதில்‌ நான்‌ வெறும்‌ படங்களை மட்டுமே வாசித்துக்கொண்டிருந்தேன்‌, காரணம்‌ அப்பொழுதெல்லாம்‌ எனக்கு “வாஷ்‌-ரூம்‌” சுத்திகரிப்பு அறை) என்ற வார்த்தையை மட்டுமே எழுத்துக்கூட்டிப்‌ படிக்க, அர்த்தம்‌ புரிந்துகொள்ளத்‌ தெரிந்திருந்தது. காலம்‌ செல்லச்செல்ல நான்‌ நிறைய வார்த்தைகளைக்‌ கற்றுக்கொள்வேன்‌ என்பதும்‌ எனக்குத்‌ தெரிந்திருந்தது.

நான்‌ தினசரி உண்டு வளர்ந்திருக்கும்‌ உணவை - சாதம்‌, கறி - அம்மா சமைத்துக்கொண்டிருந்தாள்‌. தினமும்‌ நான்‌ அரிசிச்சாதம்‌, கறியை உண்பது வழக்கமாக இருந்தது. உண்மையாகவே சொல்கிறேன்‌, இது ருசிமரத்துப்‌ போவதில்லை; இது வெறுமே, ஒரு சம்பிரதாயமாக, ஒரு செளகரியமாக, ஒரு எதிர்பார்ப்பாக மாறிவிடுகிறது. உணவில்‌ சேர்க்கும்‌ நறுமணப்பொருட்களின்‌ வாசனை விடு முழுக்கப்‌ பரவியது. நான்‌ குறிப்பிட்டதுபோல்‌, அது ஒரு வழக்கமான நாள்‌ தான்‌. ஒரேயொரு விஷயம்‌

தவிர்த்து. அன்று சலவைநாள்‌. எல்லா சலவைநாள்களையும்‌ போலவே அன்றும்‌ நான்‌ கீழ்தளத்திற்கு, அங்குள்ள பொது சலவையறைக்கு அம்மாவோடு சேர்ந்து போய்வர வேண்டும்‌. எங்களுடைய குடியிருப்பு இருந்‌ அடுக்குமாடிக்‌ கட்டிடம்‌ உங்களுக்குத்‌ தேவையான அனைத்தையும்‌ தனது சுவர்களுக்குள்ளாகவே வைத்திருந்தது; ஒரு சலவை அறை, குப்பை கூளங்களை அகற்றும்‌ அறை, யாருக்கும்‌ புரியாத ஒரு மேல்தள அறை, யாரும்‌ புரிந்துகொள்ள விரும்பாத ஒரு தரையடித்தளம்‌, தவிர, நீச்சல்குளம்‌

இல்லை. அது பரவாயில்லை. எப்படியிருந்தாலும்‌, எனக்கு நீந்தத்‌ தெரிந்திருக்கவில்லை.

சலவை அறைக்குச்‌ செல்வதென்றால்‌ எனக்கு எப்பொழுதுமே கொஞ்சம்‌ பரவசமாய்‌, படபடப்பாய்‌ இருக்கும்‌. எப்பொழுதுமே நாங்கள்‌ அங்கே சில பேரைப்‌ பார்ப்பதுண்டு. பெரும்பாலும்‌ வயது முதிர்ந்த பெண்மணிகள்‌. அவர்கள்‌ என்னை எப்பொழுதுமே

அன்பு பாராட்டி ஏகத்துக்குக்‌ கொண்டாடினார்கள்‌. உண்மையிலேயே, அது மனதை மிகவும்‌ ஈர்க்கும்‌ விஷயம்‌. அவர்கள்‌ என்னுடைய ஒருகாலத்தில்‌ கொழுகொழுவென்றிருந்த கன்னங்களைக்‌ கிள்ளி எனக்கு இனிப்புகள்‌ தருவார்கள்‌. நான்‌

அவற்றையெல்லாம்‌ இயல்பாக எடுத்துக்‌ கொண்டு விடுவேன்‌. ஆனால்‌, என்னுடைய

பதிவுகள்‌ 02020

114 பதிவுகள்‌ 36 சிறுகதைகள்‌ (தொகுதி மூன்று)

பெற்றோர்கள்‌ நான்‌ நாகரீகமாக நடந்துகொள்ள வேண்டும்‌ என்று எனக்குக்‌ கற்றுத்தந்திருந்ததால்‌ நான்‌ கண்ணியமாக நடந்துகொள்ள வேண்டும்‌ என்பது எனக்கு ஞாபகமிருந்தது. வழக்கமாக நான்‌ அந்த இனிப்புகளை யெல்லாம்‌ என்‌ பற்களால்‌ அரைத்து நொறுக்கிநாகர்‌ கமாக நடந்து கொள்வதாகக்‌ காட்சியளித்தவாறே) கையில்‌ கிடைத்தவுடன்‌ அவற்றை விழுங்கித்‌ தீர்ப்பேன்‌. அவர்கள்‌ எப்பொழுதுமே என்னைப்‌

பார்ப்பதில்‌ ஆனந்தமடைவதாகத்‌ தோன்றும்‌. நான்‌ பெருமை பீற்றிக்கொள்வதாக நினைக்கவேண்டாம்‌. உள்ளது உள்ள்படியே கூறுகிறேன்‌ - ஆனால்‌, நான்‌ சொல்வதைப்போல்‌ தான்‌ எல்லாம்‌ இருந்தது. அவர்கள்‌ வேறு எந்தக்‌ குழந்தைக்காவது இனிப்பு வழங்கியிருப்பார்களா என்பது சந்தேகமே. கொடுத்திருக்க மாட்டார்கள்‌ என்று நம்பவே எனக்கு விருப்பம்‌..

வழக்கமாகச்‌ செல்வதுபோல்‌ சலவையறைக்குச்‌ செல்ல என்னுடைய அம்மா என்னை அழைப்பதற்காகக்‌ காத்துக்கொண்டிருந்தபடி என்னுடைய சாய்விருக்கையில்‌ சோர்ந்து படுத்துக்கிடந்தேன்‌ நான்‌. நான்‌ படித்துக்கொண்டிருப்பதாய்‌ பாவ்லா செய்துகொண்டிருந்தேன்‌ என்பது அவளுக்குத்‌ தெரிந்திருந்தது. நான்‌ யாரையும்‌ ஏமாற்றிக்கொண்டிருக்கவில்லை.

ஒருவேளை, அவள்‌ என்னை வேண்டுமென்றே தவிர்க்கிறாளோ என்னவோ. ஒருவேளை நான்‌ படிப்பதுபோல்‌ பாவனை செய்துகொண்டிருந்ததால்‌ என்னைக்‌ கடுப்பேற்றுவதற்காகவே அவள்‌ சலவையறைக்கு நாளை செல்வதாக இருக்கிறாளோ என்னவோ.

இப்படியெல்லாம்‌ அபத்தமான எண்ணங்களை நான்‌ ஓடவிட்டுக்கொண்டிருந்ததற்கு, அம்மா என்னிடம்‌ வந்து அவளுக்கு ஏற்கனவே என்னுடைய பதில்‌ தெரிந்திருந்த அந்தக்‌ கேள்வியைத்‌ தன்னுடைய தாய்மொழியில்‌ கேட்கும்வரை என்னை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்வது தான்‌ முக்கிய நோக்கமாக இருந்தது: * என்னோடு வந்து துணிகள்‌ சலவை செய்யப்படுவதைப்‌ பார்க்கவேண்டுமென்று உனக்கு ஆசையாக இருக்கிறதா?”

ஆனால்‌, அதற்கு பதில்‌ அம்மா இவ்வாறு கூறினாள்‌: நான்‌ கீழ்த்தளத்திற்குச்‌ சென்று துணிகளையெல்லாம்‌ சீக்கிரமாக சலவை இயந்திரத்தில்‌ போட்டுவிடுகிறேன்‌. இன்று என்னால்‌ அங்கே அதிக நேரம்‌ இருக்க முடியாது. வேறு வேலைகள்‌ இருக்கின்றன. நீ இங்கேயே இரு. நான்‌ உடனேயே திரும்பிவந்து விடுவேன்‌. சரியா?”

இது என்ன பைத்தியக்காரத்தனமான பேச்சு? நான்‌ உடனேயே அடக்கமாட்டாமல்‌ கத்திவிட்டேன்‌. அம்மா, அது பாதுகாப்பில்லை -- துணிகளுக்கு! யாராவது அவற்றைக்‌ களவாடிவிடுவார்கள்‌”.

நீ சொல்வது அபத்தம்‌, நம்முடைய உள்ளாடைகளை யாரும்‌ திருட விரும்பமாட்டார்கள்‌!”, என்னுடைய அம்மா கேலியாகச்‌ சிரித்தாள்‌. அவள்‌ சொன்னது சரிதான்‌. என்னுடைய சொந்த ஜட்டியைத்‌

பதிவுகள்‌ 02020

115 பதிவுகள்‌ 36 சிறுகதைகள்‌ (தொகுதி மூன்று)

திருடக்கூட நான்‌ விரும்பியதில்லை. அம்மா எங்களுடைய அழுக்குமூட்டையை நேர்த்தியாகப்‌ பொட்டலம்‌ கட்டியெடுத்துக்‌ கொண்டு நான்‌ அவளைத்‌ தடுத்துநிறுத்த முற்படுவதற்கு முன்பாகவே, விடைபெறுவதாய்‌ என்னை முத்தமிட்டுவிட்டுச்‌ சென்றுவிட்டாள்‌. வேண்டுமென்றே தான்‌ அம்மா அப்படிச்‌ செய்தாள்‌ என்பதை நான்‌ அறிந்திருந்தேன்‌.

அவள்‌ என்னைவிட்டுச்‌ சென்றுவிட்டாள்‌. மணமூட்டப்பட்ட உணவுப்பண்டங்களின்‌ வாசனை இன்னமும்‌ காற்றில்‌ பரவியிருந்தது, என்றாலும்‌ அது ஒரு திக்கற்ற வாசனையாக அமைந்தது. அதற்குமேலும்‌ என்னால்‌ படிப்பதுபோல்‌ பாவை செய்துகொண்டிருக்க இயலவில்லை; அந்த கரிக்கட்டைசக்கோட்டுருவங்கள்‌ இப்போது விடுவிக்கப்படவேண்டிக்‌ காத்துக்கொண்டிருக்கும்‌ பொறியிலகப்பட்ட உருவங்களாய்‌ மாறின. நான்‌ அவற்றை விடுவிக்க விரும்பவில்லை. சூரியன்‌ மேகங்களூடாய்‌ எட்டிப்பார்க்கத்‌ துணியவில்லை; அதுவும்‌ அச்சத்திலாழ்ந்திருந்தது. நான்‌ அமைதியாக, எனில்‌ துரிதமாக ஜன்னல்களுக்கு அருகில்‌ இருந்த சாய்விருக்கையிலிருந்து என்னை விலக்கிக்கொண்டு அறையின்‌ குறுக்காய்‌ பாய்ந்து சென்று என்னுடைய படுக்கையில்‌ ஓடி விழுந்தேன்‌.

ஆக, அங்கே, அதோ நான்‌ என்னுடைய தாயிடமிருந்து எனக்குக்‌ கிடைக்கும்‌ பாதுகாப்புக்கு இணையான ஒரு பாதுகாப்பை பதற்றத்தோடு தேடியவாறு என்னுடைய போர்வைகளின்‌ கீழ்‌ கிடந்தேன்‌. ஏறத்தாழ ஒரு மணி நேரம்‌ முடிந்துவிட்டதாகத்‌ தோன்றியது பின்‌, திரும்பவும்‌, எனக்கு வார்த்தைகளையும்‌, நேரத்தையும்‌ எப்படிப்‌ படிப்பது என்று தெரிந்திருக்கவில்லை. இன்னமும்‌ இருந்துகொண்டிருந்தது என நான்‌ அறிந்திருந்த சூரியவொளியில்‌ படுத்துக்கொண்டு சுகம்‌ அனுபவித்துக்‌ கொண்டிருக்கவில்லை. என்னை மனமகிழ வைப்பதற்காக மட்டுமே இருப்பதாக நான்‌ அறிந்திருந்த அந்தக்‌ கோட்டோவியங்களை நான்‌ ரசிக்கவில்லை. என்னுடைய போர்வைக்குள்ளிருந்து, அதாவது, சூரியவன்‌ கனத்த மேகத்திரளிலிருந்து எட்டிப்பார்க்கத்‌ துணியவில்லை என்று நான்‌ எப்படிக்‌ கருதெனேனோ அவ்வண்ணமே ., எட்டிப்பார்க்க நான்‌ துணியவில்லை

என்னுடைய படுக்கையின்‌ ஒரு பாதுகாப்பான எனில்‌ தனியாக அப்பால்‌ ஒதுங்கிய மூலையில்‌ என்னைப்‌ புதைத்துக்கொண்டேன்‌. இங்கே கண்டிப்பாக பாதுகாப்பாகத்தான்‌ இருந்தது. என்றாலும்‌, அது தான்‌ உண்மையில்‌ செய்யவேண்டிய ஒன்றா?

என்னுடைய மனதில்‌ இடம்பெற்றுவிட்ட அந்தக்‌ கைவரை உருவங்களோடு என்னால்‌ விளையாட முடிந்திருக்காது. என்னுடைய அம்மா திரும்பிவருவாள்‌ என்று அவள்‌ வருகைக்காய்‌ இருளின்‌ நிச்சயத்தில்‌ காத்திருப்பது என்னுடைய நாளைக்‌

கழிப்பதற்கான வழியேயல்ல. என்னை நானே ஒரு நிச்சயத்தில்‌ ஒளித்துக்கொண்டிருப்பது எந்தவிதத்திலும்‌ வாழ்க்கையாகாது. எனது அம்மா தந்த அந்த நீடித்திருக்கும்படியான கதகதப்பை என்னுடைய போர்வை எனக்குத்‌ தரவில்லை.

பதிவுகள்‌ 02020

116 பதிவுகள்‌ 36 சிறுகதைகள்‌ (தொகுதி மூன்று)

அது வெறும்‌ ஒரு போர்வை மட்டும்தான்‌. குளிராக இருக்கும்‌ நேரங்களில்‌ நம்மை கதகதப்பாய்‌ வைத்துக்கொள்ள உதவும்படியான மனிதனால்‌ தயாரிக்கப்பட்ட ஒரு துண்டுத்துணி. அவ்வளவு தான்‌. உதவிசெய்யும்‌ கரம்‌ மட்டுமே: எல்லா நாட்களுக்கும்‌ நாம்‌ சார்ந்திருக்க முடிந்த ஊன்றுகோல்‌ அல்ல.

நான்‌ என்னை போர்வைகளுக்குள்ளிருந்து நழுவி வெளியேகினேன்‌. நிச்சயமின்மை இன்னமும்‌ என்னுடைய ம்னதின்‌ மூலை முடுக்குகளில்‌ வாழ்ந்துகொண்டிருந்தது, என்றாலும்‌ சூரியன்‌ இன்னமும்‌ அங்கேயேதானிருந்தது. அதனுடைய கதிர்கள்‌ திரைச்சீலையினூடாய்‌ , அது எப்போதும்‌ செய்வதுபோல்‌- உள்ளே கசிந்து பரவின. மிகவும்‌ கவனமாக என்னுடைய அசைவுகளை! நகர்வுகளை படுக்கையிலிருந்து வெளியேற்றி என்னுடைய சாய்விருக்கை பொருந்தியமர்ந்திருந்த வரவேற்பறைக்குள்‌ நுழைந்துகொள்ளும்படியாகத்‌ திட்டமிட்டுச்‌ செயல்படுத்தினேன்‌.நான்‌ முன்பு அச்சுறுத்துவதாக நான்‌ உணர்ந்த பக்கத்தில்‌ அந்த நூல்‌ திறந்துகிடந்தது. எல்லாமே வெகு இயல்பாக இருந்தன.

சில சமயங்களில்‌ ஒருவருடையதேயான முட்டாள்தனம்‌, தனதேயான அற்பத்தனங்கள்‌ குறித்த பிரக்ஞை மட்டும்‌ ஒருவரிடம்‌ குடியேறிவிட்டரலே போதுமானது - அதன்‌ பின்‌ அவருடைய நடவடிக்கைகள்‌ மாற்றமடைந்துவிடும்‌.

என்னளவில்‌ அது நிச்சயம்‌ போதுமான நேரம்‌ தான்‌.

என்னுடைய அம்மா போய்வர சுமார்‌ ஐந்துநிமிடங்கள்‌ தான்‌ ஆகியிருந்தது. கையில்‌ அந்த வயது முதிர்ந்த பெண்மணிகளில்‌ ஒருவரிடமிருந்து கிடைத்திருந்த, நேர்த்தியாகப்‌ பொதியப்பட்டிருந்த எலுமிச்சைமஞ்சள்‌ நிற இனிப்புப்பண்டத்தைக்‌

கையிலெடுத்துக்‌ கொண்டு திரும்பி வந்துவிட்டாள்‌.அதை, நாகரீகமாக நடந்துகொள்ள ஏறத்தாழ மறந்துவிட்ட அளவில்‌, இயல்பாக அவளுடைய கையிலிருந்து பறித்துக்கொண்டு என்‌ அம்மாவுக்கு நன்றி கூறினேன்‌ (ஆம்‌, அதை நான்‌

நினைவுவைத்திருந்தேன்‌. அந்த இனிப்புப்பண்டம்‌ அதுவாகவே கரைந்துபோகும்வரை என்‌ நாக்கிலேயே அமர்ந்த்திருக்க மகிழ்ச்சியோடு நான்‌ அனுமதித்த நாள்‌ அது.

நன்றி: கூர்‌ 2010 மலர்‌

Short Story: A CHANGE By Thamayanthi Giritharan

Darkness wrapped around me like a blanket. Actually, it was a blanket. | had curled myself

into the ever-safe fetal position. The plush, warm blanket hugged me like a new mother

பதிவுகள்‌ 02020

117 பதிவுகள்‌ 36 சிறுகதைகள்‌ (தொகுதி மூன்று)

hugs her child. That feeling of protection was always in between those soft folds of skin; the new skin that was made softer and thicker with childbirth. As soon as the child is born, that feeling remains with the mother forever - even after the baby fat is gone. Darkness wrapped around me like a blanket. Actually, it was a blanket. | had curled myself into the ever-safe fetal position. The plush, warm blanket hugged me like a new mother hugs her child. That feeling of protection was always in between those soft folds of skin; the new skin that was made softer and thicker with childbirth. As soon as the child is born, that

feeling remains with the mother forever - even after the baby fat is gone.

| was not yet taller than my grandmother's stool, a wooden piece she whittled out of old oak. The stool was small, and so was I. My sister was not born yet so | did not yet understand how to be strong for others, or for myself. | relied on my parents for everything because that was all | needed to know how to do. Rely. Rely because | know they will

protect. But not today.

The day started as a normal day, cloudy with a bit of the Sun peeking through. | was sprawled on my couch next to the windows, which became my new day crib (apparently | did not need it anymore). | read a book fondly decorated with the rich, hand-drawn illustrations you would find in the old classics. At this age, | just read images since | only knew how to read the word “WASHROOM” and understand what it meant. | knew | would

learn more words with time.

My mother was cooking the food | have grown with, rice and curry. | ate rice and curry every day. Honestly, this does not become bland; it just becomes a custom, a comfort, an expectation. The spicy aromas pervaded the apartment. Like | said, it was a normal day, except for the fact being that it was Laundry day and, like every Laundry day, | was to accompany my mother downstairs to the communal laundry room. Our apartment building had everything you needed within its walls: a laundry room, a garbage disposal room, an attic no one understood, a basement no one wanted to understand, and no swimming pool. That

was okay, | didnt know

பதிவுகள்‌ 02020

118 பதிவுகள்‌ 36 சிறுகதைகள்‌ (தொகுதி மூன்று)

how to swim anyway.

| was always a bit excited to go to the laundry room. We always saw some people there, mosily elderly ladies. They always found me adorable. It's quite fascinating really. They'd pinch my once-chubby cheeks and give me sweets. I'd take them with ease - but | remembered to be polite because my parents taught me to be civil. | would usually crunch them with my teeth (while appearing civil) and gobble them up almost instantly. They always seemed happy to see me. I'm not being pompous; it was just the way it was. | wonder if

they gave candy to the other little kids. | shall hope not.

| was languishing on my couch waiting for my mother to summon me for the routine trip to the laundry room. She knew | was pretending to read; | was fooling no one. Maybe she was purposely avoiding me. Maybe she was to do the laundry tomorrow just to spite me because | was fake reading. Of course, | was thinking such ludicrous thoughts so | could keep myself busy till my mother would ask in her native tongue a question she already

knew the answer to, “You want to come watch clothes being washed with me?”

Instead, she said this, “I will go downstairs and quickly put the clothes in the washer. | can’t stay there long today because there's other work to do. Just stay here and Il be

right back, okay?”

What was this crazy talk? | immediately burst out, “Amma, that's not safe... for the clothes!

Someone will steal them!” “Silly, no one will want to steal our underwear!” my mother giggled. She was right. | didn’t even want to steal my own underwear. She deftly packed up the dirty load and kissed me

goodbye before | could stop her. | knew she did that on purpose.

She left me. The smell of spicy foods still hung in the air, but it was a forlorn scent. |

couldn't pretend to read anymore; the charcoal sketches now became trapped figures waiting

பதிவுகள்‌ 02020

119 பதிவுகள்‌ 36 சிறுகதைகள்‌ (தொகுதி மூன்று)

to be released. And | didn’t want to release them. The Sun did not dare peek through the clouds; it too was frightened. | quietly, but quickly, removed myself from the couch next to

the windows and darted across the room and dove into my bed.

So here | was, under my covers frantically searching for a protection equivalent to my mother’s. An hour seemed to have passed; then again, | didn’t know how to read words or time. | didn’t bask in the sunlight | knew still existed and enjoy myself with those hand- drawn images | knew were there to only entertain me. | did not dare to peek out of my

covers, like how | thought the Sun dared not to peek through the thick of cloud.

| had burrowed myself within a safe, but isolated, corner of my bed. It was certainly safe here, but was it really something to do? | wouldnt have been able to play with the hand- drawn figures in my mind. Waiting in the certainty of darkness for my mother to come back

was no way to spend my day. Hiding myself in a certainty was no way to live.

The blanket did not give me the lingering warmth my mother gave me.

It was just a blanket; a manmade piece of cloth used to help us keep warm in times of

cold. Just a helping hand, not a crutch to rely on for all your days.

| slid myself out from beneath the covers. Uncertainty still lived in the nooks of my mind, but the Sun was still there. Its rays seeped through the curtains, as it always had. | carefully manoeuvred my movements out of my bed and into the living room where my couch resided. The book lay open at the page | had earlier felt to be so menacing. It was all so normal. Sometimes the realization of one’s own stupidity is enough to change one’s

ways. It was definitely enough for me.

My mother was only gone for five minutes or so. She came back with a neatly wrapped

piece of lemon-yellow candy from one of the older ladies. | snatched it with ease, almost

பதிவுகள்‌ 02020

120 பதிவுகள்‌ 36 சிறுகதைகள்‌ (தொகுதி மூன்று)

forgetting to be polite and thanking my own mother (I remembered, of course). It was a day

| happily let the candy sit on my tongue until it melted away.

பதிவுகள்‌, ஏப்ரல்‌ 2010 இதழ்‌ 124

பதிவுகள்‌ 02020

121 பதிவுகள்‌ 36 சிறுகதைகள்‌ (தொகுதி மூன்று) 20. நண்டு - கமலாதேவி அரவிந்தன்‌ (சிங்கப்பூற்‌) -

முத்தையாவுக்கு உடம்பு சுட்டது. ஆனால்‌ காய்ச்சல்‌ கொஞ்சம்‌ கூட இல்லை. மனைவி சகுந்தலா பசார்‌ சாமான்‌ வாங்கவும்‌, பலசரக்கு வாங்கவும்‌, போன கையோடு,அப்படியே கொஞ்சம்‌ அவள்‌ பருத்த உடம்புக்கு பொருத்தமான நைட்டி கிடைத்தால்‌,அப்படியே அதையும்‌ சைஸ்‌ பார்த்து வாங்கவும்‌, என பல காரியங்களுக்காக , ,தேக்காவுக்குப்‌ போயிருந்தாள்‌. மகனும்‌ மருமகளும்‌ வந்துமனைவியை அழைத்துக்கொண்டு போகும்போது, வழக்கம்போலவே,அவர்கள்‌ வீட்டு பணிப்பெண்ணை, இங்கு விட்டுவிட்டுப்‌ போவார்கள்‌. முத்தையாவுக்கு உடம்பு சுட்டது. ஆனால்‌ காய்ச்சல்‌ கொஞ்சம்‌ கூட இல்லை. மனைவி சகுந்தலா பசார்‌ சாமான்‌ வாங்கவும்‌, பலசரக்கு வாங்கவும்‌, போன கையோடு,அப்படியே கொஞ்சம்‌ அவள்‌ பருத்த உடம்புக்கு பொருத்தமான நைட்டி கிடைத்தால்‌,அப்படியே அதையும்‌ சைஸ்‌ பார்த்து வாங்கவும்‌, என பல காரியங்களுக்காக , .தேக்காவுக்குப்‌ போயிருந்தாள்‌. மகனும்‌ மருமகளும்‌ வந்துமனைவியை அழைத்துக்கொண்டு போகும்போது, வழக்கம்போலவே,அவர்கள்‌ வீட்டு பணிப்பெண்ணை, இங்கு விட்டுவிட்டுப்‌ போவார்கள்‌.

அவர்கள்‌ வருவதற்குள்‌ விடு கூட்டி, துடைத்து,சன்னல்‌ கம்பிகளை எல்லாம்‌ சுத்தப்படுத்திவிட்டு,துணிகளுக்கும்‌ இஸ்திரி போட்டு முடிப்பதற்குள்‌, எப்படியும்‌ அவர்கள்‌ வந்து விடுவார்கள்‌. அப்படியே தாமதமானாலும்‌ கவலையில்லை. முத்தையாவுக்கு இரவுச்சாப்பாட்டை தயாரித்துக்‌ கொடுத்துவிடுவாள்‌ பணிப்பெண்‌. இந்த அட்டவணையிலும்‌ புதுமை ஒன்றும்‌ இல்லை.ஆனால்‌ பணிப்பெண்ணில்தான்‌ புதுமை. ஆமாம்‌, இதற்கு முன்பிருந்த பிலிப்பினோ, இந்தோலீசிய, பணிப்பெண்கள்‌ போலல்லாமல்‌,இந்த

முறை முத்துலட்சுமி வேலைக்கு வந்திருந்தாள்‌. குழந்தைகளுக்கு தமிழ்ச்‌ சாப்பாடு பழக்கணும்‌,தமிழ்‌ பேசக்‌ கற்றுக்‌ கொடுக்கணும்‌, இப்படி சில காரண காரியங்கள்‌, திடீரென்று மருமகளுக்கு, ஞானோதயமாய்‌ உதிக்க, தஞ்சாவூர்‌ பக்கத்தில்‌, அத்திப்பட்டி கிராமத்திலிருந்த முத்து லட்சுமி கொடுத்து வைத்தாள்‌.

முத்துலெட்சுமி வேலைக்குச்‌ சேர்ந்த புதிதில்‌,புட்வையில்‌ பார்த்ததாகத்தான்‌ ஞாபகம்‌.இப்பொழுது அப்படியல்ல.டீ ஷர்ட்டும்‌,ஸ்லேக்குமாய்‌,ரொம்பத்தான்‌

நாகரீ கமாகிப்போனாள்‌. முத்தையாவின்‌ மனைவிக்கு அவ்வப்போது வாய்க்கு

ருசியாய்‌ புளிச்சக்கீரை கடைசல்‌,முத்தையாவின்‌ கால்வலிக்கு வல்லாரைக்கீரை கொதிக்கவைத்து, லேசாய்‌ தேன்‌ கலந்து சுடச்சுட கஷாயம்‌, , குழந்தைகளுக்கு சளி, இருமல்‌, என்றால்‌ ,கற்பூரவல்லி இலையை மாவில்‌ முக்கி அச்சு அசலாய்‌ பஜ்ஜி, என விதம்விதமாய்‌, சமையல்‌ நிபுணியாய்‌ சமைத்துப்போட்டதில்‌ எல்லோருக்குமே முத்துலெட்சுமியை பிடித்துத்தான்‌ போச்சு.

ஊரிலிருந்து கஷ்டம்‌ என்று லெட்டர்‌ வந்தால்‌ போதும்‌.அவரவர்‌ பங்குக்கு

பதிவுகள்‌ 02020

122 பதிவுகள்‌ 36 சிறுகதைகள்‌ (தொகுதி மூன்று)

ஆறுதலும்‌,முடிந்தால்‌ சம்பளப்பணத்தை முன்கூட்டியேகொடுத்து, ஊருக்கு அனுப்பிவைக்க உதவுவதுமாய்‌ ஏதோ, முத்துலெட்சுமியின்‌ வாழ்க்கைச்‌ சக்கரம்‌, சிங்கப்பூரில்‌ சாதகமாகத்தான்‌ ஓடிக்கொண்டிருந்தது. ஆனால்‌ முத்தையாவுக்குள்தான்‌ ஏதோ ரசவாதம்‌ அவரை தடம்‌ புரட்டிப்‌ போட்டுக்கொண்டிருந்தது.

கொஞ்ச நாட்களாகவே அவருக்குள்‌ இனம்‌ புரியாத தவிப்பு. மனைவி சகுந்தலா அம்மா வழக்கம்‌ போல்‌ கிட்டே வந்து படுத்தால்‌ ஏனோ கட்டிக்‌ கொள்ளத்‌ தோன்றவேயில்லை. சகுந்தலா அம்மா பேசவந்தாலே எரிச்சல்‌ எரிச்சலாக வந்தது. சிங்கப்பூரில்‌

ஒவ்வொரு பொம்பளையும்‌, எப்படியெல்லாம்‌ உடம்பை ஸ்டைலா ஒடுக்கி வச்சுக்கிட்டு திரியுதுங்க., இவ என்னடான்னா தலை முடியைக்கூட கறுப்பாக்கிக்கத்‌ தெரியாம,பொதபொதன்னு சதை போட்டுக்கிட்டு, பிடிப்பிடியாய்‌ நகையையும்‌ மாட்டிக்கிட்டு, பார்க்கவே சகிக்கலை. இதிலே வேற மனுஷனை கொஞ்சநேரமாச்சும்‌ நிம்மதியா இருக்க விடறதுண்டா? என்னங்க, என்னங்கன்னு , சதா தொணதொண்ப்பு வேறு!

முத்தையாவுக்கு ஏனோ சகுந்தலா அம்மாவைப்‌ பார்க்கவே பொடு பொடுவென்று வந்தது.

ஒருமுறை அப்படித்தான்‌,மகனும்‌ மருமகளும்‌ வெளியூரூக்குப்‌

போயிருந்தவேளையில்‌,, முத்துலெட்சுமி இவர்களோடு தங்கியிருக்க வந்தாள்‌. அப்பொழுது, திடீரென்று ஒருநாள்‌ இவருக்கு முதுகு சுளுக்கிக்‌ கொண்டது.இப்படி அப்படி திரும்ப முடியவில்லை. உயிர்போகும்‌ வலியில்‌ இவர்‌ தவிக்க, பச்சை நரம்பை தேடிப்பிடித்து, சூடு எண்ணையை பதனமாய்‌, தேய்த்துவிட்டு, சகுந்தலா அம்மாவை சுடுநீரை பேசினில்‌ பிடித்துக்கொள்ளச்‌ சொல்லி, முத்துலெட்சுமி ஒத்தடம்‌ கொடுத்து, உருவி, உருவி, நீவிவிட்ட சுகத்தில்‌, அப்பொழுதே சுளுக்கு மாயமாய்‌ மறைந்துவிட்டது.

முத்துலெட்சுமியின்‌ கை சுகத்தில்‌ முத்தையா அப்படியே கரைந்து நீராகிப்போனார்‌.முத்துலெட்சுமி உருவிய உருவலை மறக்க முடியவில்லை. அதிலிருந்து மீண்டும்‌ ஏதாவது உடம்புக்கு வராதா என்று கூட மனசார ஏங்கத்‌ தொடங்கினார்‌. அன்றிலிருந்து தொடங்கியதுதான்‌ ரோகம்‌. கிண்ணம்‌ போன்ற மார்பகமும்‌ செதுக்கிச்‌ செதுக்கி வார்த்துவிட்டாற்‌ போன்ற உடம்புமாய்‌,35 வயசுக்கு முத்துலெட்சுமி கிண்ணென்றிருந்தாள்‌. குனிந்து நிமிர்ந்து அவள்‌ வேலை செய்யும்போது, இவருக்குள்ளிருந்து அத்தனை தேள்களும்‌ படை படையாய்‌ வெளியே வந்தது. உடம்பெல்லாம்‌ ஊர்ந்து ஊர்ந்து , அவரை உன்மத்தனாக்கியபோது, ஆகி முதிர்ந்த திமிரோடு, அப்படியே அவளை மார்போடு சேர்த்து இறுகத்‌ தழுவணும்போல்‌, மீண்டும்‌ உடம்பெல்லாம்‌ பரபரத்தது.

காத்திருந்தாற்போல்‌ அரிய சந்தர்ப்பம்‌ ,லட்டுபோல்‌ இன்றுதான்‌ லபித்திருக்கிறது. அட, ! இப்பொழுதுதானா தொலைபேசி அலற வேண்டும்‌? குசினியில்‌ வேலை செய்த கையோடு,

பதிவுகள்‌ 02020

123 பதிவுகள்‌ 36 சிறுகதைகள்‌ (தொகுதி மூன்று)

தொலைபேசியை எடுக்க குடுகுடுவென்று ஒரு புள்ளிமானாய்‌ ஓடிவந்த முத்துலெட்சுமியின்‌ , நனைந்த டீ ஷர்ட்டில்‌ தெரிந்த, முன்னெழிலை கண்கொட்டாமல்‌ பார்த்தார்‌. எப்படா! தான்‌ படுத்திருக்கும்‌ அறைக்குள்‌ வருவாள்‌, என்று தருணம்‌ பார்த்துக்‌ காத்திருந்தார்‌. லேசாகக்‌ கண்ணை மூடினாற்போல்‌ படுத்துக்‌ கொண்டிருந்தாலும்‌, முத்துலெட்சுமியின்‌ நடமாட்டத்திலேயே கண்கள்‌ நிலை குத்தியிருந்தது.

இன்றும்‌ முத்தையாவுக்கு வீர்யம்தான்‌. சகுந்தலா அம்மா தான்‌ , என்னமோ அம்பது வயசிலேயே கிழவியாகிவிட்டாற்போல்‌, ஏனோ தானோ என்றிருக்கிறாள்‌.சில சமயங்களில்‌ இவருக்கே சே என்றாகிவிடும்‌. போயும்‌ போயும்‌ இந்த பொம்பள கிட்டே என்னத்தைக்கண்டு அன்று கட்டிக்கிடோம்‌.!என்று சலிப்பு கூட வரும்‌.ஆனால்‌ முத்தையா சகுந்தலாவைக்‌ கை பிடிக்கும்போது,கொடிபோல்‌ இடையும்‌, பிடிக்குள்‌ அடங்கும்‌ மெல்லிசு பெண்ணாகவே அன்று சகுந்தலா அம்மா இருந்தார்‌ என்பதை மட்டும்‌ நினைக்ககூட, அவருக்குப்‌ பிடிக்காது. அம்பது வயசிலேயே பெண்கள்‌ கிழடு தட்டிப்போவர்கள்‌ என்பதை அவரால்‌ நம்பவும்‌ முடியவில்லை.

பேசாமல்‌ நணபர்கள்‌ செய்வதுபோல்‌ எங்காவதுபோய்‌ காரியத்தை முடித்துவிட்டு வரலாம்‌ என்றால்‌,அதற்குத்‌ துணிச்சலும்‌ இல்லை. காலம்‌ போன காலத்தில்‌,ஏதாவது வியாதியில்‌ இழுத்து விட்டுக்கொண்டால்‌, பின்‌ ஊர்‌ சிரிச்சுப்‌ போயிடாது?

இத்தனைக்கும்‌ மொட்டைத்தலையும்‌,பருத்த தொந்தியும்‌ , மார்பெல்லாம்‌ கரடிபோல்‌ கண்றாவிமுடியுமாய்‌, பாவாடைராயன்போல்‌ தோற்றமளிக்கும்‌ தன்னைப்பற்றி, அவர்‌ ஒரு நாளும்‌ கவலைப்பட்டதேயில்லை. முத்தையா ஒருக்களித்துப்‌ படுத்துக்‌ கொண்டார்‌.. இப்பொழுது வாளியைத்‌ தூக்கிக்கொண்டு,இவரது அறைக்குள்‌ முத்துலெட்சுமி நுழைவதைக்கண்டதும்‌, சட்டென்று கண்களை மூடிக்கொண்டார்‌.நாற்காலியில்‌ ஏறி நின்று கொண்டு ,உடம்பை வளைத்து,வளைத்து இப்படியுமாய்‌, அப்படியுமாய்‌,ஜன்னல்‌ கம்பிகளையும்‌, கண்ணாடி ஜன்னல்களையும்‌ முத்து லெட்சிமி தேயோ தேய்‌ என்று தேய்க்கத்‌ தேய்க்க, இவரது மனசும்‌ கூடவே தேய்ந்தது. ஒரு கட்டத்தில்‌ உடம்பெல்லாம்‌ முறுக்கேறி, , இவருக்கே தாங்கமாட்டாமல்‌,தனை மறந்து முத்துலெட்சுமி, என்று அழைத்து விட்டார்‌.

சட்டென்று அவள்‌ திரும்பிப்பார்த்து ஓடி அவர்‌ அருகில்‌ வருவாள்‌ என்று எதிர்பார்த்தால்‌, சே, அவள்‌ திரும்பியும்‌ பார்க்கவில்லை. மீண்டும்‌ தாபத்தோடு, முத்து என்றழைக்க,அப்பொழுதுதான்‌ அவர்‌ குரல்‌ அவருக்கே கேட்கவில்லை, என்பதே அவருக்கேப்‌ புரிந்தது. அதற்குள்‌ முத்துலெட்சுமி இரவு சமையலப்‌ பார்க்க அடுக்களைக்குப்போய்‌ விட்டாள்‌.

என்ன வந்தாலும்‌ சரி. இன்று ஒரு கை பார்க்காமல்‌ விடுவதில்லை, என்ற வேகத்தோடு ,

பதிவுகள்‌ 02020

124 பதிவுகள்‌ 36 சிறுகதைகள்‌ (தொகுதி மூன்று)

கட்டிலிலிருந்து எழவும்‌, அய்யோ, என்று திடீரென்ற ஓலம்‌, தூக்கிவாரிப்போட ,முத்தையா திடுக்கிட்டுப்போய்‌ , எழுந்து ஓடினார்‌. அய்யோ, அய்யோ, அப்பா! அப்பா!

என்ற கதறலோடு, கையில்‌ ரத்தம்‌ சொட்டச்சொட்ட, முத்துலெட்சுமியைப்‌ பார்த்ததும்‌ சகலமும்‌ பதறியது முத்தையாவுக்கு.நின்று நிதானிக்கக்‌ கூட நேரமில்லை.பாய்ந்து சென்று. முத்துலெட்சுமியின்‌ விரல்களைக்‌ கிழித்துக்கொண்டிருந்த அந்தக்‌ காண்டா நண்டை,கத்தரிக்கோலால்‌ வெட்டித்‌ தூக்கி,சிங்கில்‌ போட்டார்‌. ரத்தமாய்‌ கொட்டிக்‌ கொண்டிருந்த முத்துலெட்சுமியின்‌ விரல்களை, உடனே பைப்பில்‌ பீறிட்ட தண்னிருக்குக்கீழே காட்டி, சுத்தமாக அலசினார்‌. முதலுதவிப்பெட்டியை எடுத்து காயத்துக்கு மருந்து போடும்போது, சுரீலென்ற வலியில்‌ விறிடாத குறையாய்‌ முத்துலெட்சுமி அழுதாள்‌.

“அப்பா ! அப்பா! ரொம்ப எரியுதுப்பா! ரொம்ப வலிக்குதுப்பா ! ! என்று முத்துலெட்சுமி துடித்தழுதது ,பாவமாக இருந்தது. நண்டின்‌ விஷக்கொடுக்குகள்‌ ஆபத்தாயிற்றே, என்று சட்டென்று தோன்ற, உடனே புளோக்கின்‌ கீழே உள்ள, 24 மணிநேர

மருந்தகத்துக்கு, அழைத்துப்போனார்‌. எதிர்பார்த்தாற்போலவே, மருத்துவர்‌ ஊசி போட்டு,குடிக்க மருந்தும்‌ கொடுத்து,நன்றாக ஓய்வெடுக்கும்படி கூறினார்‌.

அப்பா! அப்பா! என்று ஓயாமல்‌ அழுதாள்‌ முத்துலெட்சுமி. முத்துலெட்சுமியை உட்காரச்சொல்லிவிட்டு,முத்தையா அடுக்களைக்குள்‌ போனார்‌. சில நிமிஷங்களில்‌ சூடான மைலோ கலக்கிக்கொண்டு வந்து, குடிக்கச்சொன்ன நிமிஷத்தில்‌ ,

பதறிப்போய்விட்டது முத்துவுக்கு.

வேண்டாம்பா! நீங்க போய்‌ எனக்கு செய்யணுமாப்பா!அப்பா! வேண்டாம்பா! எனக்கு ஒண்ணுமே வேண்டாம்பா! என்று மீண்டும்‌ அழ, “பேசாம குடிம்மா! ரொம்ப ரத்தம்‌ வெளியாயிருக்கே! என்று முத்தையா ஒரு அதட்டல்‌ போட, தயங்கி தயங்கித்‌ தான்‌ குடித்தாள்‌ .

முத்து லெட்சுமி வியர்த்திருந்தாள்‌. களைத்திருந்தாள்‌. மைலோவை ஊதி ஊதி குடித்தபோது, முகம்‌ கூட வியர்த்துப்‌ போனது. ஆனால்‌ முத்தையாவுக்கு மனதில்‌ எந்த விகல்பமுமே தோன்றவில்லை. முத்து முத்தாக வியர்வை அரும்பிய முகமும்‌, அசங்கிய கூந்தலும்‌, கலங்கிய கண்களுமாய்‌, முத்துலெட்சுமி ஏறிட்டு நோக்கியபோது, பரிவோடு பேசாம குடி தாயி! என்பதற்குமேல்‌ அவரால்‌ பேசவே முடியவில்லை, தான்‌ பெற்ற மகளே எதிரே அமர்ந்திருப்பதுபோல்‌ தான்‌ பட்டது அவருக்கு. மனசை என்னவோ செய்தது.

சற்று நேரத்துக்கு முன்பு வரை, இந்தக்‌ குழந்தையையா, அப்படியெல்லாம்‌ அசிங்கமாய்‌...! சே! ஞான்‌ எல்லாம்‌ ஒரு மனுஷனாட்டம்‌! சட்டென்று வெளியேறி, சகுந்தலா அம்மாவுக்கு சேதிசொல்ல, தொலைபேசியை நோக்கி நடந்தபோது ,அவருக்கும்‌ கண்கள்‌ கலங்கித்தான்‌ போயிருந்தது. முத்துலெட்சுமியின்‌ கையைப்‌ பதம்‌ பார்த்த நண்டு , எப்போதோ உயிரை

பதிவுகள்‌ 02020

125 பதிவுகள்‌ 3 சிறுகதைகள்‌ (தொகுதி மூன்று) விட்ட கோலத்தில்‌,சிங்கில்‌ மல்லாந்து கிடந்தது.

kamaladeviaravind@hotmail.com

பதிவுகள்‌ , ஜூன்‌ 2010 இதழ்‌ 126

பதிவுகள்‌ 02020

126 பதிவுகள்‌ 36 சிறுகதைகள்‌ (தொகுதி மூன்று) 21. இவர்களும்‌ சுவர்களும்‌ - சோ.சுப்புராஜ்‌ -

கடினமாக இருந்தாலும்‌

பெரும்‌ போராட்டத்திற்கு பிறகாவது வீதியில்‌ மனிதர்களைப்‌ பிரித்தபடி விஸ்தீரணமாய்‌ எழும்பி நின்ற சாதீயச்‌ சுவர்களை

உடைத்து விட்டோம்‌ ; ஆனால்‌ மனவெளிகளில்‌ மதிலுகளாய்‌

உயர்ந்து நிற்கும்‌ உத்தப்புரச்‌ சுவர்களை

சோ.சுப்புராஜ்‌ கடினமாக இருந்தாலும்‌ பெரும்‌ போராட்டத்திற்கு பிறகாவது விதியில்‌ மனிதர்களைப்‌ பிரித்தபடி விஸ்தீரணமாய்‌ எழும்பி நின்ற சாதீயச்‌ சுவர்களை உடைத்து விட்டோம்‌ ; ஆனால்‌ மனவெளிகளில்‌ மதிலுகளாய்‌ உயர்ந்து நிற்கும்‌ உத்தப்புரச்‌

இளமாறன்‌ எழுதிய சிறு கவிதை அதிகம்‌ பெயர்‌ தெரியாத அந்த சிறுபத்திரிக்கையில்‌ பிரசுரிக்கப்பட்டிருந்தது. அவன்‌ எழுதி அச்சில்‌ வந்த முதல்‌ கவிதை. ஓவ்வொரு

எழுத்தாக வாசித்து மனசுக்குள்‌ சந்தோஷப்‌ பட்டுக்‌ கொண்டிருந்தான்‌. இதை யாரிடமாவது வாசித்துக்‌ காட்ட வேண்டும்‌ போல்‌ இருந்தது. ஆனால்‌ இந்த அலுவலகத்தில்‌ யாருக்காவது கவிதை பிடிக்குமா என்பது பற்றி அவனுக்கு எதுவும்‌ தெரியாது. அப்போது ஆவுடையப்பன்‌ இளமாறனுக்கு தேனீர்‌ கொண்டு வந்தான்‌.

இளமாறன்‌ தனக்குப்‌ பரிமாறப்பட்டிருந்த தேனிரை மிகவும்‌ ரசித்துக்‌ குடித்தான்‌. குடித்து முடித்ததும்‌ ஆவுடையப்பனை மனதாரப்‌ பாராட்டினான்‌. போடுறதுல நல்லா தேநீட்ட ஆவுடையப்பா...நீ போடுற டீக்கு நான்‌ அடிமை ஆகிக்கிட்டே வர்றேன்‌; இப்பல்லாம்‌ காலையில நீ போட்டுக்‌ குடுக்குற டீயக்‌ குடிச்ச பெறகு தான்‌ வேலையே ஓடுது...” என்றான்‌.

அட்மினிஸ்ட்ரேஷன்‌ ஆபிஸரே மனதாரப்‌ பாராட்டிய பின்பும்‌ ஆவுடையப்பனின்‌ முகத்தில்‌ சந்தோஷத்திற்குப்‌ பதில்‌ வாட்டமே மிகுந்திருந்தது. நீங்க பாராட்டுறீங்க; ஆனா மத்தவங்க... இன்னைக்கும்‌ யாரும்‌ எதுவுமே குடிக்கல ஸார்‌; மனசுக்கு

ரொம்பக்‌ கஷ்டமா இருக்கு...” என்றான்‌ அழுதுவிடுகிற தொனியில்‌.

“இதுல உன்னோட தப்பு எதுவுமில்ல ஆவுடை ; இது எனக்கும்‌ அவங்களுக்குமுள்ள சின்ன ஈகோ பிரச்னை..சீக்கிரம்‌

பதிவுகள்‌ 02020

127 பதிவுகள்‌ 36 சிறுகதைகள்‌ (தொகுதி மூன்று)

தீர்த்துடலாம்‌... கொஞ்சம்‌ பொறுமையா இரு...”

“அது இல்ல ஸார்‌; இப்பவும்‌ நாலஞ்சு நாளா இப்படித்தான்‌ நடக்குது... கலந்த காஃபி, டீயெல்லாம்‌ ஒவ்வொரு நாளும்‌ அப்படியே கீழ கொட்டும்‌ போது தாங்க முடியல... சாயங்காலமும்‌ இப்படித்தான்‌ ஆகுது; ஸ்நாக்ஸும்‌ சாப்பிட மாட்டேங்குறாங்க... எதுக்கு இந்தப்‌ போராட்டம்‌? நான்‌ வேணும்னா ஊருக்கே திரும்பிப்‌ போயிடட்டுமா ...?”

“நோ நோ... அவசரப்பட்டு எந்த முடிவுக்கும்‌ வந்துடாத ஆவுடை...” என்ற இளமாறன்‌ திடீரென்று இவனிடம்‌ காட்டினால்‌ என்ன என்று எண்ணமிட்டபடி கவிதை வந்த இதழை அவனிடம்‌ விரித்துக்‌ காட்டி படித்துப்‌ பார்க்கச்‌ சொன்னான்‌. “நீங்க எழுதுனதா ஸார்‌.... நீங்க கவிதை எல்லாம்‌ எழுதுவிங்களா ஸார்‌...” என்றபடி ஆர்வமாய்‌ வாசிக்கத்‌ தொடங்கினான்‌. படித்து முடித்ததும்‌ “எனக்கு சொல்லத்‌ தெரியல்‌; ஆனா ரொம்ப நல்லா இருக்கு ஸார்‌....” என்றபடி காலிக்‌ கோப்பையை எடுத்துக்‌ கொண்டு போனான்‌.

இன்றைக்கும்‌ அலுவலகத்தில்‌ யாருமே காஃபி, தேனிர்‌ எதுவும்‌ குடிக்கவில்லை. எல்லோருடைய மேஜைகளிலும்‌ பீங்கான்‌ கோப்பைகளில்‌ பரிமாறப்‌ பட்டிருந்த காஃ.பியும்‌ தேலிரும்‌ அலுங்காமல்‌ குலுங்காமல்‌ அப்படி அப்படியே வண்ண வேலைப்பாடுகள்‌ நிறைந்த மூடிகளால்‌ மூடப்‌ பட்டிருந்தன. அவை குளீரூட்டப்பட்ட அறையின்‌ குளிர்ச்சியில்‌ வேக வேகமாய்த்‌ தன்‌ வெப்பத்‌ தன்மையை இழந்து கொண்டிருந்தன.

இளமாறன்‌ தன்‌ அறை ஜன்னலில்‌ தொங்கிய வெனீஸியன்‌ பிளைன்டை விலக்கிப்‌ பார்த்தான்‌. அனைவரும்‌ இரண்டு மூன்று பேர்களாகச்‌ சேர்ந்து வேலைத்‌ தளத்திற்கு வெளியே கீற்றுக்‌ கொட்டகையில்‌ இயங்கும்‌ அவசர டீக்கடை நோக்கி மெதுவாய்‌

நகர்ந்து கொண்டிருந்தார்கள்‌. அப்போது சென்னையின்‌ தலைமை அலுவலதகத்திலிருந்து வைஸ்பிரஸிடென்ட்‌ பிரபுபட்டேலின்‌ வாகனம்‌ அலுவலகம்‌ நோக்கி வந்து கொண்டிருப்பது தெரிந்தது. வாகனத்தை நிறுத்தி, கார்க்‌ கண்ணாடியை இறக்கி விட்டு,

கொத்துக்‌ கொத்தாய்ப்‌ போய்க்‌ கொண்டிருப்பவர்களில்‌ ஒருத்தனை அழைத்து அவர்‌ ஏதோ விசாரிப்பதும்‌, அவன்‌ ஏதோ பதில்‌ சொல்வதும்‌, இங்கிருந்து தெரிந்தது. இன்றைக்கு கண்டிப்பாய்‌ பிரச்னை வெடிக்கப்‌ போகிறது என்று இளமாறன்‌ நினைத்துக்‌

கொண்டார்‌. அவர்களும்‌ இதைத்தான்‌ எதிர்பார்த்திருப்பார்கள்‌.

இது மிகச்சிறிய மார்க்கெட்டிங்‌ அலுவலகம்‌. 15 பேர்‌ தான்‌ வேலை பார்க்கிறார்கள்‌ - இரண்டு பெண்களையும்‌ சேர்த்து. சென்னையிலிருந்து 40 கி.மீ.தூரத்தில்‌ பிரதான சாலையிலிருந்து வெகுவாக தள்ளி பெரும்‌ பசி கொண்ட நகரத்தால்‌ வேக வேகமாக விழுங்கப்பட்டுக்‌ கொண்டிருக்கும்‌ ஒரு கிராமத்தில்‌, சுற்றிலும்‌ விவசாயம்‌ செய்யப்‌ படாமல்‌ வெறுமனே போடப்பட்டிருக்கும்‌ நிலங்களால்‌ சூழப்பட்டு, புத்தம்‌ புதுப்‌ பொலிவுடன்‌ இப்போது தான்‌ கட்டிமுடிக்கப்‌ பட்ட கட்டிடத்தில்‌ இயங்குகிறது. சுற்றிலும்‌

பதிவுகள்‌ 02020

128 பதிவுகள்‌ 36 சிறுகதைகள்‌ (தொகுதி மூன்று)

தரிசாகப்‌ போடப்பட்டிருக்கும்‌ நிலங்களில்‌ எல்லாம்‌ அடுக்குமாடி குடியிருப்புகளும்‌, ஐ.டி.பார்க்குகளும்‌ கட்டப்போகிறார்கள்‌. அவற்றை விற்பனை செய்வதற்கான அலுவலகம்‌ தான்‌ இது.

இந்த அலுவலகத்திற்கு ஹவுஸ்‌ கீப்பிங்‌ வேலைகளுக்குத்‌ தான்‌ இளமாறனுக்கு சட்டென்று ஆட்கள்‌ அகப்படவில்லை.எலக்ட்ரிக்‌ வேலைகளுக்கு பக்கத்து கிராமத்திலிருந்து ஒருவனை நியமித்து விட்டான்‌. இன்னொரு ஆள்‌ வேண்டும்‌. அவன்‌ ஆல்‌ ரவுண்டராக - ஆபிஸ்‌ பையனாக, காஃபி, டீ கலந்து தருபவனாக, அலுவலகத்தைக்‌ கூட்டிப்‌ பெருக்குவனாக,முக்கியமாக தினசரி ஒருமுறையாவது கழிவறைகளைச்‌ சுத்தப்‌ படுத்துபவனாக - இருக்க வேண்டும்‌ என்று எதிர்பார்த்தான்‌. எவ்வளவு முயன்றும்‌

அப்படி ஒர்‌ ஆள்‌ அவருக்கு அகப்படவே இல்லை.

பக்கத்து கிராமத்திலிருந்து வேலை கேட்டு வருபவர்களும்‌ கழிவறைகளைச்‌ சுத்தப்‌ படுத்த வேண்டுமென்று சொன்னதும்‌ முகஞ்சுழித்துப்‌ போய்விட்டார்கள்‌. ஏதாவது ஏஜென்சியை நியமிக்கலாமென்றால்‌ இரண்டே இரண்டு சிறிய கழிவறைகளை தினசரி

ஒருமுறைச்‌ சுத்தப்‌ படுத்துவதற்கு மாதம்‌ ரூபாய்‌ 15 ஆயிரம்‌ வேண்டுமென்று கேட்டார்கள்‌. சென்னையிலிருந்து தூர மென்றும்‌, அக்கம்‌ பக்கத்தில்‌ வேறு அலுவலகம்‌ ஏதும்‌ இல்லாததால்‌ இந்த வேலைக்கென்று தனியாக முழு நேரமாகத்தான்‌ ஆட்களை

நியமிக்க வேண்டுமென்றும்‌ காரணம்‌ சொன்னார்கள்‌.

ஒருமுறை நீண்ட இடைவேளைக்கப்புறம்‌ இளமாறன்‌ தன்‌ சொந்த கிராமத்திற்குப்‌ போயிருந்த போது சங்கரலிங்கத்துடன்‌ பேசிக்‌ கொண்டிருந்தார்‌. அவர்‌ இவர்களின்‌ தோட்டத்தில்‌ பண்ணையாளாக வேலை பார்த்தவர்‌. இளமாறனின்‌ அப்பா பெரியாரிடம்‌ தீவிர ஈடுபாடு கொண்டவராய்‌ இருந்ததால்‌ ஜாதி வித்தியாசங்களுக்கு அப்பாற்பட்டு இவர்களின்‌ விடுகளில்‌ சகஸமாகப்‌ புழங்க அனுமதிக்கப்‌ பட்டவர்‌. இளமாறனை சிறு வயதிலிருந்தே தூக்கி வளர்த்தவர்‌.

“என்‌ பையன்‌ ஆவுடைக்கு ஏதாவது வழி பண்ணக்‌ கூடாதா தம்பி? வேலை வெட்டி எதுக்கும்‌ போகாம, ஊர்க்‌ காரங்களோட சண்டையும்‌ சச்சரவுமா அலையுறான்‌. புதுசு புதுசா பிரச்னைகளையும்‌ இழுத்து விட்டுக்கிறான்‌...கூப்பிட்டு கொஞ்சம்‌ புத்தி

சொல்லிட்டுப்‌ போங்க தம்பி ; நீங்க சொன்னாக்‌ கொஞ்சம்‌ கேப்பான்‌...”.

உள்ளூர்‌ பள்ளியில்‌ எட்டாம்‌ வகுப்பு வரை படித்துவிட்டு, அப்புறம்‌ நான்குமைல்‌ நடந்து போய்ப்‌ பக்கத்து ஊரில்‌ படிக்க பால்மாறிக்‌ கொண்டு, படிப்பை எட்டாவதோடு நிறுத்திக்‌ கொண்டு, காடுமேடுகளில்‌ காலித்தனமாய்‌ அவன்‌ அலைந்து கொண்டிருப்பதாகவும்‌, இப்போது ஒரு பெரிய பிரச்னையில்‌ வேறு அவன்‌ மாட்டிக்‌ கொண்டிருப்பதாகவும்‌ சொன்னார்‌.

பதிவுகள்‌ 02020

129 பதிவுகள்‌ 36 சிறுகதைகள்‌ (தொகுதி மூன்று)

அவர்களின்‌ ஊரைச்‌ சேர்ந்த அமைச்சர்‌ ஒருவர்‌ தமிழகத்தில்‌ தீண்டாமைக்‌ கொடுமைகள்‌ வெகுவாகக்‌ குறைந்து விட்டது என்றும்‌, டீக்கடைகளில்‌ இரட்டை டம்ளர்‌ முறை எல்லாம்‌ இல்லவே இல்லை என்றும்‌ சட்டமன்றத்தில்‌ பேசியிருந்தார்‌. அந்த செய்தியைப்‌ படித்த கோடானு கோடிப்பேர்‌ மனசுக்குள்‌ சிரித்தபடி கடந்து போய்விட, ஆவுடையப்பனுக்கு மட்டும்‌ பலியாய்‌ கோபம்‌ வந்திருக்கிறது.

அமைச்சரின்‌ சொந்த கிராமத்திலேயே தீண்டாமைக்‌ கொடுமைகள்‌ தாண்டவமாடுவதையும்‌ , டக்‌ கடைகளில்‌ இரட்டை டம்ளர்‌ முறை இன்னும்‌ அமலில்‌ இருப்பதை ஆதாரங்களுடன்‌ விவரித்தும்‌, அவரின்‌ மாவட்டத்தில்‌ மட்டும்‌ இன்னும்‌ எங்கெல்லாம்‌

இரட்டை டம்ளர்‌ முறை கடைபிடிக்கப்‌ படுகிறது என்று ஒரு பெரும்‌ பட்டியலையும்‌ தயாரித்து அந்த செய்தி வந்த பத்திரிக்கைக்கே வாசகர்‌ கடிதமாக எழுதி விட்டான்‌.

எதிர்க்‌ கட்சிக்கு ஆதரவான அந்தப்‌ பத்திரிக்கைக்காரனுக்கு இந்த விஷயம்‌ லட்டு மாதிரி. அவனுடைய பத்திரிக்கையிலேயே குறிப்பிட்ட ஜாதியினரைத்‌ தவிர வேறு யாரும்‌ உள்ளே போய்‌ எட்டிப்‌ பார்த்துவிடக்‌ கூட முடியாது; ஆனாலும்‌ அவர்கள்‌ ஏதோ ஜாதிக்கு எதிரிகள்‌ மாதிரி பாய்ந்து கொண்டு, தங்களுடைய நிருபரை அனுப்பி வண்ணப்‌ புகைப்படங்கள்‌ எடுக்கவைத்து ஆவுடையப்பனைப்‌ பேட்டி கண்டு நீண்ட கட்டுரையாக எழுதி முதல்‌ பக்கத்திலேயே

அமைச்சரின்‌ ஊரிலேயே தீண்டாமைக்‌ கொடுமைகள்‌; டீக்கடைகளில்‌ இன்னும்‌ தொடரும்‌ இரட்டை டம்ளர்‌ அவலம்‌

என்று கொட்டை எழுத்துக்களில்‌ செய்தியை வெளியிட்டு விட அமைச்சருக்கு மானமே போய்விட்டது. அன்றைக்கிலிருந்து அமைச்சரின்‌ உறவினர்களும்‌ கட்சிக்காரர்களும்‌ ஆவுடையப்பனுக்கு குடைச்சல்‌ கொடுக்கத்‌ தொடங்கி விட்டார்கள்‌. தகுந்த வாய்ப்புக்‌ கிடைத்தால்‌ அவனைப்‌ போட்டுத்‌ தள்ளவும்‌ தயங்க மாட்டார்கள்‌ என்பதால்‌ உயிருக்குப்‌ பயந்து ஓடி ஒளிந்து கொண்டிருக்கிறான்‌.

இளமாறன்‌ ஆவுடையை அழைத்துப்‌ பேசினான்‌.

”எங்க அப்பன்‌ தலையால்‌ அடிச்சிக்கிச்சு படிக்கச்‌ சொல்லி..உங்கள மாதிரி நானும்‌ ஒழுங்காப்‌ படிச்சிருந்தா இந்தப்‌ பாழாப்போன ஊரை விட்டுப்‌ போயி கெளரவமா பொழச்சிருக்கலாம்‌..... உலகம்‌ எங்கயோ போயிட்டுருக்கு; ஆனால்‌ இன்னும்‌ நம்ம மாதிரி கிராமங்கள்ல, அய்யா, சாமின்னு துண்டை எடுத்து கக்கத்துல வச்சுக்‌ கூழைக்‌ கும்புடு போட்டுக்கிட்டு, குடியான வங்க குண்டியைத்‌ தாங்கிக்கிட்டு அடிமையா வாழ வேண்டியிருக்கு..! இதெல்லாம்‌ மாற இன்னும்‌ எத்தனை நூற்றாண்டு

பதிவுகள்‌ 02020

2 பதிவுகள்‌ 3% சிறுகதைகள்‌ (தொகுதி மூன்று)

ஆகணுமோ”? என்றான்‌ விசனத்துடன்‌.

“ஜாதிங்கிறது நம்ம இந்திய சமுதாயத்தோட இரத்தத்துலயே இருக்குற வியாதி ஆவுடை. கிராமங்கள்ல மட்டுமில்ல; பட்டணத்துலயும்‌ கண்ணுக்குத்‌ தெரியாம இருக்கத்‌ தான்‌ செய்யுது...” என்று அவனை ஆறுதல்‌ படுத்த முயன்றான்‌ இளமாறன்‌.

“அங்கெல்லாம்‌ இலைமறை காய்மறையா இருக்கலாம்‌ ஸார்‌; ஆனா கிராமங்கள்ல தான்‌ வெட்ட வெளிச்சமா எந்த குற்ற உணர்ச்சியுமில்லாம்‌ பிறந்த ஜாதிக்காக ஒரு கூட்டம்‌ பெருமைப்‌ பட்டுக்கிட்டும்‌ இன்னொரு கூட்டத்த சிறுமைப்‌ படுத்திக்‌ கிட்டும்‌ இருக்காங்க... என்னையும்‌ உங்க கூடவே கூட்டிட்டுப்‌ போயிடுங்களேன்‌ ஸாரர்‌.... ஆப்புட்ட வேலை செஞ்சு பொழச்சுக்கிறேனே...”

இளமாறனுக்கு தன்னுடைய புது அலுவலகத்திற்கே ஒரு ஆள்‌ தேவை என்பது உறைக்க உடனே சரி என்றான்‌. வேலை பற்றியும்‌ விவரித்தான்‌.”பட்டணத்துக்குக்‌ கூட்டிட்டு வந்து நம்மல இப்படி கக்கூஸ்‌ கழுவ விட்டுட்டானே நம்ம ஊர்க்காரன்னு என்மேல

வருத்தப்‌ படக்‌ கூடாது ஆவுடை... உன்‌ மனசுக்கு ஒப்புச்சுன்னா மட்டும்‌ என்கூட கிளம்பி வா..நாளைக்கே போகலாம்‌...”

“எந்த வேலையும்‌ எனக்குச்‌ சம்மதந்தான்‌.. இப்போதைக்கு இந்த சனியம்புடிச்ச ஊருலருந்து தப்பிச்சுப்‌ போனாப்‌ போதும்‌...” என்று சொல்லி மாறனுடன்‌ கிளம்பி வந்து விட்டான்‌.

வேலை எளிமையாகவும்‌ சந்தோஷமாகவுமே இருந்தது. காலையில்‌ ஆவுடைதான்‌ அலுவலகத்தைத்‌ திறந்து வைத்து, மேஜை நாற்காலிகளைத்‌ துடைத்து, அறைகளையும்‌ பெருக்கி, கழிவறைகளையும்‌ சுத்தப்‌ படுத்தி அலுவலகத்தை தயார்ப்‌ படுத்துவான்‌. காலை 10 மணிக்கு ஒரு முறையும்‌ மாலை 4 மணிக்கு இன்னொரு முறையும்‌ எல்லோருக்கும்‌ காஃபி, டீ கலந்து தருவான்‌. அப்புறம்‌ நகல்‌ எடுப்பது, கேட்பவர்களுக்கு வெளியில்‌ போய்‌ சாப்பாடு வாங்கி வருவது என்று அவ்வப்போது இடப்படுகிற வேலைகளையும்‌ சுணங்காமல்‌ செய்வான்‌. பத்து நாட்களுக்கு மேல்‌ எந்தப்‌ பிரச்னையுமில்லாமல்‌ சுமுகமாகப்‌ போய்க்‌ கொண்டிருந்தது.

ஒருநாள்‌ மிகச்‌ சீக்கிரமே அலுவலகம்‌ வந்துவிட்ட கோபாலன்‌, ஆவுடையப்பன்‌ கழிவறைகளை கழுவுவதைப்‌ பார்த்ததும்‌ பதறிப்‌ போய்‌ விட்டான்‌. அவனிடம்‌ எதுவும்‌ சொல்லாமல்‌ இளமாறன்‌ வந்ததும்‌ அவருடன்‌ சண்டைக்குப்‌ போனான்‌.

“என்ன அட்மினிஸ்ட்ரேஷன்‌ ஆபிஸர்‌ நீங்க? கக்கூஸ்‌ கழுவுறவனையா காஃபி டீ கலந்து

கொடுக்குச்‌ சொல்றது...”

பதிவுகள்‌ 02020

131 பதிவுகள்‌ 36 சிறுகதைகள்‌ (தொகுதி மூன்று)

“ஏன்‌ இதிலென்ன தப்பு? ஒவ்வொண்ணுக்கும்‌ தனித்‌ தனியா ஆள்‌ போடுறதுக்கு இதென்ன அவ்வளவு பெரிய ஆபிஸா என்ன? என்று கேட்டான்‌ மாறன்‌. “அதெப்படி, கக்கூஸ்‌ கழுவுறவன்‌, காஃபி டீ கலந்து கொடுத்தா அது ஹைசீனிக்கா இருக்குமா

என்ன!”

“ஏன்‌ இருக்காது? நீங்க எல்லாம்‌ கக்கூஸ்‌ போயி கழுவிட்டு அப்புறம்‌ காபி டீ குடிக்கிற தில்லையா? அல்லது சாப்புடுறது தான்‌ இல்லையா?”

“இது விதண்டாவாதம்‌! நானும்‌ அவனும்‌ ஒண்ணா உங்களுக்கு? நான்‌ கக்கூஸ்‌ உள்ள போயிட்டாளே, சோப்புப்‌ பட்டு கம்பிளீட்டா கழுவிட்டுத்தான்‌ வெளியவே வருவேன்‌; அதே அளவுக்கு சுத்தமும்‌ அக்கறையும்‌ இவன்கிட்ட எதிர்பார்க்க முடியுமா?

கண்டதையும்‌ ஒழப்பிட்டு அப்படியே வந்து காஃபி டீ கலந்து குடுத்துட்டான்னா, அதை குடிக்குற நம்மளோட ஆரோக்கி யத்துக்கு யாரு பொறுப்பு?” என்று சீறினான்‌.

“இங்க பாருங்க கோபாலன்‌; தேவை இல்லாம்‌ பிரச்னை பண்ணாதீங்க... அவன்‌ எட்டாவது வரைப்‌ படிச்சிருக்கான்‌; சுத்தம்‌ பத்திய அடிப்படையான விஷயங்கள்‌ அவனுக்கும்‌ தெரியும்‌; நானும்‌ அவனைக்‌ கண்‌ காணிச்சுக்கிட்டுத்தான்‌ இருக்கேன்‌; அதனால

நீங்க பதட்டப்‌ படுற மாதிரி எதுவும்‌ நடந்துடாது..” இளமாறன்‌ பொறுமையாய்‌ எடுத்துச்‌ சொல்லியும்‌ அவன்‌ சமாதானமாகாமல்‌ திருப்பித்‌ திருப்பிச்‌ சொன்னதையே சொல்லிக்‌ கொண்டிருந்தான்‌. கக்கூஸ்‌ கழுவுகிறவனை காஃபி, டீ, கலந்து கொடுக்க

அனுமதிக்கக்‌ கூடாது என்று.

இளமாறனுக்கு கோபம்‌ வந்து விட்டது. “உங்களுக்கு இதுல இஷ்டமில்லைன்னா, அசூசையா பீல்‌ பண்ணீங்கன்னா நீங்க வேணு மின்னா ஆபிஸ்ல எதுவும்‌ குடிக்காம

விட்டுப்‌ போய்‌ விட்டான்‌. அலுவலகத்தில்‌ வேலை பார்க்கும்‌ மற்றவர்களிடமும்‌ சொல்லி, அவர்களுக்கும்‌ பீதியைக்‌ கிளப்பி விட்டு எல்லோரும்‌ ஆவுடையப்பனைப்‌ புறக்கணிக்கத்‌ தொடங்கி விட்டார்கள்‌ மெளனமாய்‌.

எதிர்பார்த்தபடி வைஸ்பிரஸிடென்ட்‌ அனைவரையும்‌ ஒரு அவசர மீட்டிங்கிற்கு அழைத்தார்‌. நேரடியாக விஷயத்திற்கு வந்தார்‌. “இளமாறன்‌ என்னப்பா இதெல்லாம்‌? ஸ்டாஃப்‌ வெல்பேர்‌ அரேன்ஞ்மென்ட்‌ இவ்வளவு மோசமாவா பண்றது? ஹைஸனிக்கா இருக்காதுன்னு ஃபீல்‌ பண்ணாங்கன்னா ஆள மாத்துறத விட்டுட்டு இதென்ன அக்கப்போர்‌...?”

“ஸார்‌, மன்னிக்கனும்‌; இது ஹைஸனிக்‌ சம்பந்தப்பட்ட பிரச்னை இல்ல. அதுதான்‌ உண்மையின்னா இப்ப இவங்கல்லாம்‌ காஃபி, டீ, குடிக்கிற கீத்துக்‌ கொட்டகை

ஓட்டலுக்குள்ள ஒரே ஒரு தடவை போய்ப்‌ பார்த்துட்டு வாங்க...ஈயும்‌ எறும்புமாய்‌

பதிவுகள்‌ 02020

132 பதிவுகள்‌ 36 சிறுகதைகள்‌ (தொகுதி மூன்று)

எவ்வளவு அருவருப்பா இருக்குன்னுட்டு... அதுமட்டுமில்ல; அங்க ஒரே வாளி தண்ணில தான்‌ காலையிலருந்து இராத்திரி வரைக்கும்‌ எச்சிக்‌ கிளாஸ்‌ முக்கி முக்கி கழுவுறதா பேர்‌ பண்றாங்க... பார்த்தாலே குமட்டலெடுக்கும்‌ அந்த சூழல்ல எப்படி

சந்தோஷமாகக்‌ குடிக்குறாங்க?” என்றான்‌ இளமாறன்‌.

வி.ப. கோபாலனைப்‌ பார்த்தார்‌. “எங்களுக்கு வேற வழி இல்லாததால தான்‌ அங்க போய்க்‌ குடிக்குறோம்‌ ஸார்‌..பிரச்னையையே புரிஞ்சுக்க மாட்டங்கறார்‌ ஸார்‌...” என்றான்‌ அவன்‌.

“என்னோட சின்ன வயசுல எங்க கிராமத்துப்‌ பள்ளிக்‌ கூடத்துல சத்துணவு சமைக்கிறதுக்கு ஒரு தலித்‌ பெண்ண நியமிச்சார்‌ ஹெட்மாஸ்டர்‌...ஊர்க்காரங்கல்லாம்‌ ஒண்ணாச்‌ சேர்ந்துக்‌ கிட்டு தங்கள்‌ பிள்ளைகள சாப்பாடு வாங்க அனுப்பாமப்‌

புறக்கணிச்சாங்க...ஒரு தலித்‌ சமைச்சத தாங்கள்‌ சாப்பிடுறதாங்கிற ஜாதித்‌ திமிர்‌ அது... அதேதான்‌ இங்கேயும்‌ நடக்குது; படிச்ச பட்டணத்துக்‌ காரங்களுக்கும்‌ படிக்காத கிராமத்துக்காரங்களுக்கும்‌ ஜாதி பார்க்குறதுல மட்டும்‌ பெரிய வித்தியாசம்‌ எதுவுமில்லன்னு நிரூபிக்கிறாங்க...” என்றான்‌ இளமாறன்‌. கோபாலன்‌ அவசரமாய்‌ இடை மறித்தான்‌. “எல்லாத்துலயும்‌ ஜாதிக்கண்ணாடி மாட்டிக்கிட்டு குதர்க்கமாப்‌ பார்க்காதீங்க ஸார்‌... ஆவுடையப்பன்‌ என்ன ஜாதீன்னு இதுவரைக்கும்‌ எங்க யாருக்கும்‌

தெரியாது; அதைப்‌ பத்தி எங்களுக்கு அக்கறையும்‌ இல்ல... ரெண்டு வேலையையும்‌ ஒருத்தரே செஞ்சா கண்டிப்பா ஹைஸனிக்கா இருக்காதுன்னு நெனைக்கிறோம்‌; அதான்‌ எதிர்க்குறோம்‌..”

“என்ன கோபாலன்‌ ஹைஸீனிக்‌ ஹைஸனிக்குன்னு ரொம்பத்தான்‌ அலட்டிக்கிறீங்க;, அவன்‌ என்ன கைய உள்ளவுட்டா கக்கூஸ்‌ கழுவுறான்‌...எல்லா வேலைக்கும்‌ டூல்ஸ்‌ இருக்கு; ஸொலுசனைத்‌ தெளிச்சு, பிரஸ்ஸால தேய்ச்சு,:.பிளஸ்ஸவுட்ட

திறந்துவிட்டா கிளீனிங்‌ முடிஞ்‌ சது..கையில கிளவுஸ்‌ மாட்டிருக்கான்‌; முகத்துலயும்‌ கவசம்‌ அணிஞ்சுதான்‌ வேலை பார்க்குறான்‌... இதுல எங்கருந்து ஹைஸினிக்‌ பிராப்ளம்‌ வருதுசொல்லுங்க... நம்ம வீடுகள்ள எல்லாம்‌ நம்ம பொண்ணுங்க கழிவறைய

கிளீன்‌ பண்ணீட்டு வந்து சமையல்‌ கட்டுல வேலை பார்க்குறதில்லையா? அவங்க சமைச்சத நாம சாப்புடுறதுதான்‌ இல்லையா?

ஆவுடையோட ஜாதி என்னன்னே தெரியாதுன்னு அப்படியே அப்பாவி மாதிரி பேசறீங்களே! நெஞ்சைத்‌ தொட்டுச்‌ சொல்லுங்க... கக்கூஸ்‌ கழுவ சம்மதிச்சு வர்றாங்கன்னாலே அவங்க தலித்‌ ஜாதியாத்‌ தான இருப்பாங்கன்னு உங்களுக்குத்‌ தெரியாதா என்ன? அந்த அடிப்படையில தான அவன்‌ காஃபி, டீ, கலந்து தர்றத எதுக்குறீங்க...?” இளமாறன்‌ நீளமாய்ப்‌ பேசிக்‌ கொண்டே போக வி.பி. இடையில்‌ புகுந்தார்‌.

“இளமாறன்‌ உங்க லெக்சரக்‌ கேட்க இப்ப நாம கூடி இருக்கல! அதோட இதை ஜாதிப்‌

பதிவுகள்‌ 02020

2 பதிவுகள்‌ 3 சிறுகதைகள்‌ (தொகுதி மூன்று)

பிரச்னையா நீங்க மாத்த முயற்சி பண்ணாதீங்க... நம்ம விடுகள்ளயே ஒரே ஓவர்ஹெட்‌ டேங்க்லருந்து தான்‌ சமையலறைக்கும்‌ தண்ணி வர்றது; கழிவறைக்கும்‌

வர்றது; சமையலறை குழாய்லருந்து ரெம்ப சாதாரணமா தண்ணி புடிச்சுக்‌ குடிப்போம்‌; ஆனால்‌ கழிவறை குழாயிலருந்து தண்ணி புடிச்சுக்‌ குடிக்க நமக்கு மனசு ஒப்புமா? அசூசையா பீல்‌ பண்ணுவமா இல்லையா? அது ஹுமன்‌ சைக்காலஜி அவ்வளவு தான்‌; இங்கயும்‌ அதுதான்‌ பிரச்னைன்னு நான்‌ நெனைக்கிறேன்‌..அதனால ரெண்டு வேலையையும்‌ ஒருத்தன செய்ய விடாதீங்க; பிரிச்சுடுங்க...” என்றார்‌ தீர்மானமாய்‌.

“சரி ஸார்‌; இன்னையிலிருந்து ஆவுடையப்பன்‌ காஃபி, டீ மட்டும்‌ கலந்து குடுப்பான்‌; கக்கூஸ்‌ கழுவுறதுக்கு நான்‌ வேற ஆள்‌ ஏற்பாடு பண்ணிக்குறேன்‌...” என்றான்‌ இளமாறன்‌.

அவசரமாய்‌ ஆட்சேபித்தான்‌ கோபாலன்‌ “நோ..நோ...அதெல்லாம்‌ சரியா வராது ஸார்‌; ஆவுடை கக்கூஸ்‌ வேணா கழுவட்டும்‌...காஃபி, டீ கலக்குறதுக்கு வேற ஆள்‌ போடச்‌ சொல்லுங்க...”

“ஏன்‌ ஸார்‌ அப்படி...” சிரித்தபடி கேட்டான்‌ இளமாறன்‌.

“பொதுவாவே அவங்க சுத்தமா இருக்க மாட்டாங்க; அவங்க கலக்குறத எப்படி ஸார்‌ எல்லோரும்‌ குடிக்க முடியும்‌?”

இளமாறனுக்கு ஆக்ரோஷமாய்க்‌ கோபம்‌ வந்தது. அப்படியே பொங்கினான்‌. “ஏன்‌ ஸார்‌ இப்படி இருக்கிறீங்க? இதை நான்‌ தான்‌ ஏதோ வலிஞ்சு ஜாதிப்‌ பிரச்னையா மாத்திறேன்னு சொன்னீங்களே, பார்த்தீங்களா ஸார்‌ இவரோட அடி மனசோட விகாரத்த..இப்படித்‌ தான்‌ அர்த்த மில்லாம எதையாவது சொல்லி காலங்காலமா அவங்கள ஒதுக்கி வைச்சுருக்கோம்‌... அவங்க குளிச்சு சுத்தபத்தமா இல்லாததால தான்‌ கோயிலுக்குள்ள விடுறதில்லைன்னு அபத்தமா சொல்லிக்கிட்டும்‌ திரியறோம்‌...என்ன கொடுமை ஸார்‌ இதெல்லாம்‌..!

உத்தப்புரம்ங்குற கிராமத்துல தீண்டாமையின்‌ சின்னமா இருந்த ஒரு நீண்ட சுவரக்‌ கண்டுபிடிச்சு ரொம்பப்‌ பெரிய போராட்டத்துக்கப்புறம்‌ அதோட ஒரு சிறு பகுதிய அரசாங்கம்‌ தலையிட்டு உடைச்சிருக்காங்‌ களாம்‌..நெஞ்சத்‌ தொட்டுச்‌ சொல்லுங்க, அந்த மாதிரிச்‌ சுவர்‌ அங்க மட்டுந்தான்‌ இருக்கா? அந்த உயர்‌ ஜாதி மனோபாவமும்‌ அகம்பாவமும்‌ நம்ம எல்லோருடைய உள்ளுணர்வுலயும்‌ இல்லையா? அதனால தான தலித்துகள்னா சுத்தமா இருக்க மாட்டாங்க; அவங்க கலக்குற காஃபி, டீ எல்லாம்‌ ஹைஸனிக்கா இருக்காதுன்னு கண்டபடி கதை கட்டிக்கிட்டு அவங்களத்‌ தொட்டா தீட்டு பார்த்தா பாவம்னுட்டு ஒதுக்கி வச்சுக்கிட்டு இருக்குறோம்‌...” மூச்சு விடாமல்‌ பேசியதும்‌ அந்த இடத்திலிருந்து எழுந்து கோபமாய்‌ வெளியேறினான்‌ இளமாறன்‌.

பதிவுகள்‌ 02020

134 பதிவுகள்‌ 36 சிறுகதைகள்‌ (தொகுதி மூன்று)

அடுத்த நாள்‌ இளமாறனும்‌ ஆவுடையப்பனும்‌ அந்தக்‌ கம்பெனி வேலையிலிருந்து விடுவிக்கப்பட்டார்கள்‌.

engrsubburaj@yahoo.co.in

பதிவுகள்‌, ஜூன்‌ 2010 இதழ்‌ 126

பதிவுகள்‌ 02020

135 பதிவுகள்‌ 36 சிறுகதைகள்‌ (தொகுதி மூன்று) 22. கரையோரத்து சிறு நண்டு ...! - மட்டுவில்‌ ஞானக்குமாரன்‌ -

கால்களைத்‌ தழுவிய கடல்‌ அலையின்‌ ஈரம்‌ மூழைவரையும்‌ சென்று குளிர்‌ ஏற்றிக்‌ முகிலெடுத்து வந்து ஒத்தடம்‌ கொடுத்தது மாலைக்காற்று .கரையோரத்திலே கட்டியிருந்த படகொன்று அலையின்‌ தாளத்துக்கேற்ப அபிநயம்‌ பிடித்தது. தனது நான்கு வயது மகனோடு கடற்கரையோரமாக உலாப்‌ போய்க்கொண்டிருந்தான்‌ வசீகரன்‌. வெளிச்ச வீட்டுக்கு முன்பாகவிருந்த கோட்டல்‌ மணலில்‌ இருந்தபடிக்கு சூரியன்‌ மறைவதை விதம்‌ விதமாக படம்‌ பிடித்துக்‌ கொண்டிருந்த வெள்ளைக்கார உல்லாசப்‌ பயணிகளில்‌ ஒருத்தி வருணனையும்‌ தனது புகைப்படக்‌ கருவிக்குள்ளே வாரிக்‌ கொண்டாள்‌. தகப்பனின்‌ கைகளைப்‌ பிடித்திருந்த வருணன்‌ அவனது கைகளில்‌ இருந்து விடுபட்டு கரையோரத்திலே குவிந்திருந்த சிப்பிகளை சேகரிக்கத்‌ தொடங்கினான்‌. எதிர்ப்‌ பக்கமிருந்து கிழிந்த சட்டையோடு சிறுவன்‌ ஒருவன்‌ இவனிடம்‌ வந்து கையை நீட்டினான்‌.

“என்ன” என்றான்‌ வசீகரன்‌..

“காசு குடுங்க அண்ணே என்றபடி தலையைச்‌ சொறிந்து கொண்டு நின்றவனை ஏற இறங்கப்‌ பார்த்து விட்டு

“என்னட்டை சில்லறை இல்லை” என்றபடி அலட்சியமாக அவனை விட்டு விலகிச்‌ சென்றான்‌. அப்படி அவன்‌ சொன்னதுக்கு ஒரு காரணமும்‌ இருந்தது.இவனை மாதிரிப்‌ பெடியளுகள்‌ கடக்கரைக்கு வாற ஆக்களிடம்‌ காசு வாங்கிக்‌ கொள்ளுறதுக்காக

ஏதாவது பொய்‌ சொல்லுவாங்கள்‌. பிறகு கையிலை கிடைக்கிற காசிலை பீடி சிகரெட்‌ எண்டு வாங்கி சின்ன வயசிலையே கெட்டுப்போடுவாங்கள்‌. இப்பிடி ஒரு சின்னப்‌ பெடியன்‌ கெட்டுப்‌ போயிட ஏன்‌ நானும்‌ ஒரு காலாகவேணும்‌ என்பதே இவன்‌ வாதம்‌.

தும்பு மிட்டாயை வித்தபடிக்கு தூரத்திலே ஒரு வயோதிபர்‌ கடற்கரை ஓரமாக வந்து கொண்டிருந்தார்‌. கைகளிலே இருந்த மிட்டாயப்‌ பெட்டியைக்‌ கண்டவுடன்‌ அவரை நோக்கி ஓடினான்‌ வருணன்‌. அந்த மனிதரது முகத்திலே முதுமை தனது முகவரியைப்‌ பதித்து விட்டிருந்தது. இந்த வயசு போன நேரத்திலும்‌ உழைத்துச்‌ சாப்பிட வேணும்‌ எனும்‌ அவரது வைராக்கியத்தை பார்க்கையிலே அவனது தகப்பனின்‌ பிடிவாத குணமே நினைவுக்கு வந்தது.

“ஏனப்பா இன்னும்‌ வேலைக்குப்‌ போறிங்கள்‌” என்று கோட்டால்‌

“சுத்தும்‌ வரை தான்‌ தம்பி பூமி உழைக்கும்‌ வரை தான்‌ மானிசன்‌. சொந்த உழைப்பிலே சோறுண்ணும்‌ சுகம்‌ தான்‌ சுகம்‌” என்று பெரிமிதம்‌ கொள்வார்‌. “சரி அப்பா அதுக்குத்தானே

அரசாங்கம்‌ உங்களுக்குப்‌ பென்சன்‌ தருதே” என்றால்‌ பதில்‌ பேசாது சிரித்துச்‌

பதிவுகள்‌ 02020

136 பதிவுகள்‌ 36 சிறுகதைகள்‌ (தொகுதி மூன்று)

சமாளிப்பார்‌.அந்த வயோதிப மிட்டாய்க்‌ காரனைப்‌ பார்த்ததும்‌ அவனது அப்பாவின்‌ கொள்கைப்‌ பிரகடனமே நினைவுக்கு வந்தது.

மிட்டாய்‌ வாங்கித்‌ தருமாறு கையைச்‌ சுரண்டினான்‌ மகன்‌.

கைகளால்‌ மிட்டாய்க்காரரை அழைத்தான்‌. முறுவல்‌ ஒன்றை உதிர்த்தபடி அருகிலே வந்தவரிடம்‌. “என்னவிலை” என்றான்‌. “பத்துக்கும்‌ இருக்கு இருபது ரூபாக்கும்‌ இருக்கு” அவனது பதிலுக்காக முகத்தைப்‌ பார்த்தார்‌.

“புத்து ரூபாவுக்கு ஒண்டு தாங்கோ ஜயா

தும்பு மிட்டாய்‌ பெட்டியில்‌ இருந்து சிறிதளவை எடுத்து மடித்து மகனிடம்‌ கொடுத்தார்‌. தம்பிக்கு எந்த இடம்‌ ..? காசை வாங்கிக்‌ கொண்டே அவனிடம்‌ கேட்டார்‌ அந்தப்‌ பெரியவர்‌

“யாழ்ப்பாணம்‌ அய்யா ... எப்பிடி வியாபாரம்‌ நானா ..? அவர்‌ அணிந்திருந்த தொப்பி அவரை அவனுக்கு அடையாளங்‌ காட்டியது.

“எங்கை தம்பி யாவாரம்‌ முன்னைய மாதிரி இல்லை எல்லாம்‌ படுத்திட்டுது. தமிழரும்‌ முசுலீமுகளும்‌ வாழமுடியாத சூழல்‌” வேறு யாருக்கும்‌ கேட்டுவிடாத படிக்கு குரலைத்‌ தாழ்திப்‌ பேசினார்‌.

“என்‌ மகனுக்கு தும்பு மிட்டாய்‌ எண்டா சரியான விருப்பம்‌ ஜயா ... உங்களுக்கும்‌ பிள்ளையள்‌ இருக்கினமோ .? * தனது தந்தையைப்‌ போல இருந்தபடியினாலேயே அதைக்‌

கேட்டான்‌.

“இரண்டு பெண்ணுகளும்‌ ஒரு பையனும்‌ ஒரு பெண்ணைக்‌ கட்டிக்‌ கொடுத்திட்டன்‌...ம்‌ பாப்பம்‌ அல்லா வழிவிடுவான்‌”.

சரி நான்‌ போய்த்து வாறன்‌. ஏன்றபடி மிட்டாய்‌ பெட்டியோடு கடற்கரை ஓரம்‌ போய்க்கொண்டிருந்தார்‌.

இப்பொழுதெல்லாம்‌ சனி ஞாயிறென்றால்‌ மகனோடு கடற்கரைக்குப்‌ போய்‌ விடுகிறான்‌ வாகீசன்‌. மகனையும்‌ கூடவே அழைத்துப்‌ போவதற்க்கு இரண்டு காரணம்‌ உண்டு ஒன்று; அவனது மகனுக்கு கடல்‌ என்றால்‌ பிடிக்கும்‌. மற்றையது மகனோடு

பதிவுகள்‌ 02020

137 பதிவுகள்‌ 36 சிறுகதைகள்‌ (தொகுதி மூன்று)

வெளியே சென்றால்‌ பக்கத்துணையும்‌ பாதுகாப்பும்‌ அதிகமாகக்‌ கிடைக்கும்‌ என்பதும்‌. இன்று விடுமுறை தினம்‌ ஆனாலும்‌ சனக்கூட்டம்‌ குறைவாகவே இருந்தது. காரணம்‌ எங்கோ நடந்த ஏதோ ஒரு அரசியல்‌ அசம்பாவிதம்‌.

ஒரு கதவடைப்பு நாள்‌ போல ஆரவாரமின்றி இருந்தது கடற்கரை. ஏங்கும்‌ ஒருவரை மற்றவர்‌ சந்தேகக்‌ கண்‌ கொண்டு பார்க்கிறார்கள்‌ இங்கே. பேருந்திலும்‌ தொடருந்திலும்‌ கடைத்‌ தெருவிலும்‌ இது தான்‌ இப்போதைய இலங்கை நிலவரம்‌.தட்டுத்‌ தடுமாறி வேட்டி சட்டை விபூதி பொட்டோடு ஒருவர்‌ வந்தால்‌ அவர்‌ கதை கூண்டோடு கைலாயம்‌ போவேண்டியதுதான்‌.

கடற்கரை யோடு ஒட்டிய அந்த பாறையின்‌ ஒரு பகுதி கடலுக்குள்‌ மூழ்கி இருந்தது. பாறைக்கு அந்தப்‌ பக்கம்‌ மீன்‌ பிடிப்படகுகள்‌ வரிசையாக நிறுத்தப்பட்டிருந்தன. சிறுவன்‌ ஒருவன்‌ எந்தவித தயக்கமும்‌ இன்றி இயற்க்கைக்‌ கடனை கழித்துக்‌

கொண்டிருந்தான்‌.

யாரோ பின்பக்கமாக சுரண்டவே திரும்பிப்‌ பார்த்தான்‌ அன்றொரு நாள்‌ பிச்சை கேட்ட அதே சிறுவன்‌ தான்‌ இன்றும்‌. கிழிந்த சட்டையோடு கலைந்த கேசத்துடன்‌ காட்சி தந்தான்‌. இம்முறை அவனைப்‌ பார்க்கையிலே ஒரு அனுதாபம்‌ ஏற்பட்டது. எதையோ சொல்வதற்க்காக அலைந்து கொண்டிருக்கிற அழகான அந்த அலையைப்‌ போலவே அந்த சிறுவனின்‌ முகத்திலும்‌ ஏதோ கவலை புதைந்து போயிருக்கிறது என்பதை அவன்‌ கண்களுக்குள்‌ வசீகரன்‌ கண்டு கொண்டான்‌. அவனோடு பேச வேணும்‌ போல

ஒரு ஆர்வம்‌ பிறந்தது.

ஏன்‌ தம்பி உன்னுடைய அம்மா அப்பா எங்கே .? அவனுடைய கண்களை ஊடுருவினேன்‌.

“அம்மா செத்துட்டா அப்பாவுக்கு இழைப்பு... சாப்பாட்டுக்கே கஸ்டமண்ணே .!” என்றவன்‌ கண்களிலே கண்ணீர்‌ துளிர்த்தது.

சரி உன்னோடை விடு எங்கையிருக்கு” சேரிப்பக்கமிருந்த திசையைச்‌ சுட்டினான்‌.

“வா வீட்டுக்குப்‌ போய்வருவம்‌”; என்றபோது தயங்கினான்‌;. வில்லங்கமாக அவனையும்‌ என்‌ மகனை இழுத்துக்‌ கொண்டு அந்தச்‌ சேரியை நோக்கிப்‌ போனேன்‌. மூக்கைப்‌ பொத்திக்‌ கொண்டான்‌ வருணன்‌. பூவரசு மரத்துக்குக்‌ கீழே படங்கால்‌ போடப்பட்ட

பந்தலுக்குக்‌ கீழே இருமிய படி படுத்திருந்தான்‌ ஒருவன்‌.; நோயால்‌ அனுங்கிக்‌ கொண்டிருந்தான்‌.எலும்புக்கு மேலால்‌ தோல்‌ போர்த்தியிருப்பது போலவே அவனைப்பார்க்கத்‌ தெரிந்தது. “இவரு தான்‌ எங்கய்யா” என்றபடி தகப்பனின்‌ தலையைத்‌ தடவினான்‌ அவன்‌.

பதிவுகள்‌ 02020

138 பதிவுகள்‌ 36 சிறுகதைகள்‌ (தொகுதி மூன்று)

அய்யா ...அய்யா * என்று தகப்பனைத்‌ தட்டி எழுப்பினான்‌. ஆவரால்‌ எழுந்திருக்க முடியாது இருந்தது.தலையை உயர்த்திப்‌ பார்த்து விட்டு மீண்டும்‌ படுத்துக்‌ கொண்டான்‌. என்மகனளவிலே ஒரு சிறுமியைக்‌ காட்டி அவளைத்‌ தங்கை என்றான்‌.

“காலையிலே பேப்பர்‌ பொறுக்கி வித்தாத்தான்‌ மத்தியானம்‌ வயிறு நிறையும்‌. புஓன்னேரம்‌ யாராச்சுத்‌ பாவப்பட்டு ஏதாவது குடுத்தாத்தான்‌ உண்டு.” வெக்கம்‌ வந்ததோ தெரியவில்லை குனிந்த படியே பேசினான்‌.

“அப்ப பள்ளிக்‌ கூடம்‌.” “போய்க்‌ கனகாலம்‌”

பேசைத்திறந்து உள்ள பணத்தை எல்லாம்‌ கொடுத்துவிட்டு விடை பெற்றேன்‌ பேசினதும்‌ மனசினதும்‌ பாரம்‌ குறைந்து போயிற்று. அதென்ன யுத்தக்‌ கறையானுக்கு தமிழ்ச்‌ சமுதாயம்‌ மட்டும்‌ தான்‌ உணவாகிப. போனதோ...? வினாக்கள்‌ பல எழுந்து வந்து அவன்‌ உடலைச்‌ சுற்றிக்‌ கொண்டன.

ஒரு சில வருடங்களுக்குப்‌ பின்னதாக அந்த இடத்திலே அவனது கால்கள்‌ மிதிக்கின்றன. ஆமாம்‌ இறந்து போன தாய்‌ இழைப்பு வந்தே இழைத்துப்போன தகப்பனோடு அந்த சிறுவன்‌ வசித்த அதே கடற்கரை தான்‌. இப்போ நிறைய மாற்றங்களை

உள்வாங்கி இருந்தது. எவ்வளவு சிரமப்பட்டு எங்கு தேடியும்‌ கூட அந்தச்‌ சிறுவனையோ அவனிருந்த குடிசை வீட்டையோ காண்டு பிடிக்க முடியவில்லை. அங்கிருந்து சுண்டல்‌ விற்ற ஒருவனிடம்‌ விசாரித்துப்‌ பார்த்ததில்‌;.;; அந்த இடத்தைச்‌ சுனாமி

தின்று விட்டதாகவே சொன்னான்‌. ஏமாற்றமாகவே இருந்தது.

அந்த இடத்தினைக்‌ கடந்து இப்போது போனாலும்‌ கூட அந்தச்‌ சிறுவன்‌ எங்காவது தென்படுகிறானா என்றே வசீகரனின்‌ கண்கள்‌ அவனைத்‌ தேடிப்‌ பார்க்கும்‌.

maduvilan@hotmail.com

பதிவுகள்‌, பெப்ருவரி 2009 இதழ்‌ 110

பதிவுகள்‌ 02020

139 பதிவுகள்‌ 36 சிறுகதைகள்‌ (தொகுதி மூன்று) 23. ' நான்‌ அவனில்லை... - வ.ந.கிரிதரன்‌

“” எழுத்தாளர்‌ சுஜாதா அறக்கட்டளையும்‌ ஆழி பப்ளிஷர்ஸும்‌ இணைந்து நடத்திய அமரர்‌ சுஜாதா அறிவியல்‌ புனைகதைப்‌ போட்டியில்‌ வட அமெரிக்காவுக்கான விருதினைப்‌ பெற்ற சிறுகதை! -

தமிழகத்தின்‌ சென்னையிலுள்ள மிகப்பிரமாண்டமான திறந்த வெளிச்‌ சிறைச்சாலையில்‌ தனக்குரிய அறையினுள்‌ பாஸ்கரன்‌ அமர்ந்திருந்தான்கி.பி.2700 ஆம்‌ ஆண்டிலொருநாள்‌.... ...

தமிழகத்தின்‌ சென்னையிலுள்ள மிகப்பிரமாண்டமான திறந்த வெளிச்‌ சிறைச்சாலையில்‌ தனக்குரிய அறையினுள்‌ பாஸ்கரன்‌ அமர்ந்திருந்தான்‌. சிறைக்காவலர்களற்ற திறந்த வெளிச்‌ சிறைச்சாலைகளில்‌ அடைக்கப்பட்டிருக்கும்‌ அனைத்துக்‌ கைதிகளின்‌ உடல்களிலும்‌ அவர்களது அடையாளங்கள்‌ பற்றிய அனைத்துத்‌ தகவ்ல்களுடன்‌ கூடிய சிலிக்கான்‌ சில்லுகள்‌ இணைக்கப்பட்டிருந்தன. அவற்றின்‌ மூலம்‌, 6௪5 தொழில்‌ நுட்பத்தின்‌ மூலம்‌ அவர்கள்‌ அனைவரும்‌ பிறிதோரிடத்தில்‌ அமைந்திருந்த

சிறைச்சாலைத்‌ தலைமைச்‌ செய்லகத்திலிருந்து அவதானிக்கப்பட்டுக்‌ கொண்டிருந்தார்கள்‌. செவ்வாய்க்‌ கிரகம்‌, சந்திரன்‌ போன்ற கிரகங்களெல்லாம்‌ புதிய புதிய காலனிகளால்‌ நிறைந்து விட்டிருந்தன. சூரிய மண்டலத்தில்‌ பல்வேறு விண்வெளிக்‌

காலனிகள்‌ உருவாக்கப்‌ பட்டிருந்தன. பூவுலகின்‌ பல்வேறு நாடுகளும்‌ மானுடர்களென்ற ரீதியில்‌ ஒன்றிணைந்து விட்டிருந்தார்கள்‌. ஒரு கிரகம்‌! அதன்‌ மக்கள்‌ நாம்‌! என்று பக்குவப்பட்டிருந்த மானுடர்கள்‌ பூவுலகு மக்கள்‌ கூட்டமைப்பு என்று ஒன்றிணைந்து விட்டிருந்தார்கள்‌. நாடுகளுக்கிடையில்‌ பயணிப்பதற்குக்‌ கடவுச்‌ சீட்டு, விசா போன்ற எதுவுமே தேவையாகவிருக்கவில்லை. நாடுகள்‌, தேசிய இனங்கள்‌, தேசிய பாதுகாப்பு போன்றவற்றின்‌ அடிப்படையில்‌ பல்வேறு நாடுகளும்‌ தத்தமது வெளிநாட்டுக்‌ கொள்கையினை வகுத்திருந்த காலம்‌ எப்போழுதோ இப்பூமியில்‌ மலையேறிவிட்டிருந்தது. இன்று விண்வெளித்‌ தொழில்‌ நுட்பம்‌ மிகவும்‌ முன்னேறி விட்டிருந்ததொரு நிலையில்‌ வேற்றுக்‌ கிரக வாசிகள்‌, உயிரினங்களிலிருந்து இப்பூமிக்கான பாதுகாப்பு

என்னும்‌ அடிப்படையில்‌ பூவுலகின்‌ பாதுகாப்பு தீர்மானிக்கப்பட்டது. இத்தகையதொரு சூழல்‌ நிலவும்‌ காலகட்டமொன்றில்தான்‌ இவ்விதம்‌ திறந்தவெளிச்‌ சிறைச்சாலையொன்றில்‌ அமர்ந்திருந்தான்‌ இயற்பியல்‌ விஞ்ஞானியான பாஸ்கரன்‌. அவனது சிந்தனையெல்லாம்‌ அடுத்த நாளைப்‌ பற்றியதாகவேயிருந்தது. செய்யாத குற்றத்திற்காக அவனுக்கு மரணதண்டணை விதிக்கப்‌ பட்டிருந்தது. சந்தர்ப்ப சாட்சியங்கள்‌ சதி செய்து விட்டன.

இத்தனைக்கும்‌ அவன்‌ செய்ததாகக்‌ கருதப்பட்ட குற்றச்சாட்டு: அல்பா செஞ்சுரி நட்சத்திர மண்டலத்திலுள்ள சிறியதொரு, பூமியையொத்த கிரகமான பிளானட்‌ அலபாவில்‌ வசிக்கும்‌ மானிடர்களைப்‌ பெரும்பாலுமொத்த வேற்றுலகவாசிகளுக்குப்‌ பூமியின்‌ பாதுகாப்பு இரகசியங்களை வழங்கியிருந்தத்தாகக்‌ குற்றஞ்சாட்டப்பட்டிருந்தான்‌. நமது பூமிக்குத்‌ துரோகம்‌ செய்ய முனைந்தவனாகக்‌ குற்றவாளியாக்கப்பட்டிருந்தான்‌. அதற்கான

பதிவுகள்‌ 02020

140 பதிவுகள்‌ 36 சிறுகதைகள்‌ (தொகுதி மூன்று)

தண்டனைதான்‌ மறுநாள்‌ நிறைவேற்றப்படத்‌ தீர்மானிக்கப்பட்டிருந்த, அவன்மேல்‌ விதிக்கப்பட்டிருந்த மரணதண்டனை. இதிலிருந்து தப்புவதற்கென்று ஏதாவது வழிகளிருக்கிறதாவென்று பல்வேறு கோணங்களில்‌ சிந்தனையைத்‌ தட்டிவிட்டான்‌. தப்புவதற்கான சந்தர்ப்பமே இல்லையென்பது மட்டும்‌ நன்றாகவே விளங்கியது.

முதன்‌ முறையாகச்‌ சாவு, மரணம்‌ பற்றி மனம்‌ மிகத்‌ தீவிரமாகச்‌ சிந்திக்கத்‌ தலைப்பட்டது. வேறு மார்க்கமேதுமில்லை. நடப்பதை ஏற்றுக்‌ கொள்ளவேண்டியதுதான்‌.

இயற்பியல்‌ விஞ்ஞானியான பாஸ்கரன்‌ எப்பொழுதுமே தனிமையில்‌ சிந்திப்ப்தை மிகவும்‌ விரும்புவன. பிரபஞ்சத்தின்‌ தோற்றம்‌ பற்றி, இதற்குச்‌ சமாந்தரமாக இருக்கக்‌ கூடிய ஏனைய பிரபஞ்சங்கள்‌, காலத்தினூடு பயணித்தல்‌, கருந்துளைகள்‌...

பற்றியெல்லாம்‌ அவன்‌ பல நூல்கள்‌ , ஆய்வுக்‌ கட்டுரைகள்‌ எழுதியிருப்பவன்‌. பிரபஞ்சத்தின்‌ இருப்பு பற்றி ஆராய்ந்தவனின்‌ இருப்பு விரைவிலேயே இல்லாமல்‌ போகப்‌ போகிறதா?

அவனது முடிவை அவன்‌ தனித்து நின்று எதிர்நோக்க வேண்டியதுதான்‌. மானிடர்களிடையே குடும்பம்‌, நட்பு போன்ற உறவுகளற்றுப்‌ பல நூற்றாண்டுகள்‌ கடந்து விட்டிருந்தன. இனப்பெருக்கம்‌ மானிடப்‌ பண்ணைகளில்‌ நடைபெறத்‌ தொடங்கி விட்டிருந்தன. மேலும்‌ குளோனிங்‌ தொழில்நுட்பத்தின்‌ மூலம்‌ தொழிலாளர்கள்‌, விஞ்ஞானிகள்‌, போர்‌ விரர்கள்‌, வர்த்தகர்கள்‌, கலைஞர்கள்‌, மத குருக்களென ஒரே மாதிரியான மானுடர்கள்‌ உருவாக்கப்பட்டுக்‌ கொண்டிருந்தார்கள்‌. ஆண்‌ விந்துக்களும்‌, பெண்‌ முட்டைகளும்‌ பாதுகாப்பாகச்‌ சேமிக்கப்பட்டு பல்வேறு வகைகளில்‌ கலந்து மானுடர்‌ உருவாக்கம்‌ தேவைகளுக்கேற்ப நடைபெற்றுக்‌ கொண்டிருக்கும்‌ காலத்தில்‌ வாழ்ந்து கொண்டிருந்தவனுக்கு குடும்ப உறவுகள்‌ மின்னூல்களில்‌ மட்டுமே அறிந்து கொள்ளக்‌ கூடியதாகவிருந்தது. அவற்றைப்‌ பற்றி எண்ணும்போது அவன்‌ அன்றைய மானுடர்களின்‌ அன்புநிறைந்த வாழ்க்கை வட்டம்‌ பற்றி ஆச்சரியப்படுவான்‌.

அவனது சிந்தனையோட்டம்‌ பல்கிக்‌ கிளை விரிந்தோடிக்‌ கொண்டிருந்தது.

நாளையுடன்‌ இந்த உலகுடனான எனது இந்த இருப்பு முடிந்து விடும்‌. அதன்‌ பிறகு நான்‌ என்னவாவேன்‌? " இவ்விதம்‌ அவன்‌ சிந்தித்தான்‌. இதற்கான தெளிவான விடை கிடைக்காததொரு நிலையில்தான்‌ இன்னும்‌ மானுடகுலமிருந்தது. பொருளா?

சக்தியா? பொருள்முதல்வாதமா? கருத்து முதல்வாதமா? இவ்விதமான தத்துவப்‌ போராட்டம்‌ இன்னும்‌ முடிவற்று தொடர்ந்து கொண்டிருந்தது.

அப்பொழுதுதான்‌ அவன்‌ முன்‌ அந்த அதிசயம்‌ நிகழ்ந்தது.

அவன்‌ கண்களின்‌ முன்‌ திடீரென்‌ ஒரு கோளம்‌ போன்றதொரு வடிவம்‌ தோன்றி

பதிவுகள்‌ 02020

141 பதிவுகள்‌ 36 சிறுகதைகள்‌ (தொகுதி மூன்று)

மறைந்தது. அவன்‌ திகைப்பு அடங்குவதற்குள்‌ அதனைத்‌ தொடர்ந்து மேலும்‌ சிறிய,பெரிய கோளங்கள்‌ சில தோன்றி மறைந்தன.

இயற்பியல்‌ விஞ்ஞானியான பாஸ்கரனுக்குச்‌ சிறிது நேரம்‌ நடந்த நிகழ்வுகளைக்‌ கிரகிப்பதற்குக்‌ கடினமாகவிருந்தது. தான்‌ காண்பது கனவா அல்லது நனவா என்பதிலொரு சந்தேகம்‌ எழுந்தது. அடுத்தநாள்‌ மரண தண்டனையென்பதால்‌ அவனது புத்தி

பேதலித்து விட்டதாயென்ன? இவ்விதமாக அவன்‌ ஒரு முடிவுக்கும்‌ வராமல்‌ திணறிக்கொண்டிருந்த வேளையில்‌ அவன்‌ முன்னால்‌ மேலுமொரு அதிசயம்‌ நிகழ்ந்தது.

இம்முறை அவன்‌ முன்னால்‌ ஒரு வெள்ளை நிறக்‌ காகிதம்‌, 4-1 அளவில்‌ தோன்றி , செங்குத்தாக அவன்‌ வாசிப்பதற்கு இலகுவாக நின்றது. அக்காகிதம்‌ மறையாமல்‌ நிலைத்து நிற்கவே அவனுக்குத்‌ தான்‌ காண்பது கனவல்ல என்பது புரிந்தது.

அதில்‌ பின்வருமாறு எழுதியிருந்தது: நண்பா! என்ன திகைத்துப்‌ போய்‌ விட்டாயா?

அதனைப்‌ படித்துவிட்டு அதற்குப்‌ பதிலிறுக்கும்‌ முகமாக 'ஆம்‌' என்று தலையசைத்தான்‌ இயற்பியல்‌ விஞ்ஞானி.

இப்பொழுது அந்தக்‌ காகிதம்‌ மறைந்து மீண்டும்‌ தோன்றியது. இம்முறை அதில்‌ கீழுள்ளவாறு எழுதப்‌ பட்டிருந்தது:

பயப்படாதே நண்பா! நான்‌ உனது பிரபஞ்சத்துடன்‌ கூடவே இருந்து வரும்‌ பல்லாயிரக்கணக்கான பிரபஞ்சங்களில்‌ ஒன்றினைச்‌ சேர்ந்த உயிரினம்‌. எங்களது பிரபஞ்சம்‌ உங்களுடையதை விட பதினான்கு வெளிப்‌ பரிமாணங்களும்‌ , ஒரு காலப்பரிமாணமும்‌ கொண்டது. அதனால்‌ உங்களது பிரபஞ்சத்தினுள்‌ நாம்‌ தோன்றும்போது மட்டும்‌ , உங்களது முப்பரிமாணங்களுக்குரிய எங்களது உருவத்தின்‌ பகுதிகள்‌ தெரியும்‌. ஆனால்‌ உங்களால்‌ எங்களின்‌ முழுத்தோற்றத்தினையும்‌ பார்க்க

முடியாது. ஆனால்‌ எங்களால்‌ உங்களது தோற்றம்‌ மற்றும்‌ செய்ற்பாடுகள்‌ அனைத்தையுமே பார்க்க முடியும்‌..

'அப்படியா..!' என்று வியந்து போனான்‌ இயற்பியல்‌ விஞ்ஞானி. அதன்பின்‌ அவர்களுக்கிடையிலான உரையாடற் தொடர்பானது அவன்‌ கூறுவதும்‌, அதற்குப்‌ பதிலாக அந்தப்‌ பல்பரிமாண உயிரினத்தின்‌ காகிதப்‌ பதில்களுமாகத்‌ தொடர்ந்தது. அதனை

இலகுவாக்கும்‌ பொருட்டுக்‌ கீழுள்ளவாறு உரையாடல்‌

பதிவுகள்‌ 02020

142 பதிவுகள்‌ 36 சிறுகதைகள்‌ (தொகுதி மூன்று) குறிப்பிடப்படும்‌.

இயற்பியல்‌ விஞ்ஞானி: ' உங்களால எங்கள்‌ மொழியை வாசிக்க முடிகிறது. ஏன்‌ பேச முடியவில்லை...

அண்டவெளி உயிரினம்‌: 'எங்களுக்கிடையிலான உரையாடல்களெல்லாம்‌ உங்களைப்‌ போல்‌ கூறுவதும்‌ பதிலிறுப்பதுமாகத்‌ தொடர்வதில்லை. மாறாக நினைப்பதும்‌, அவற்றை உணர்வதுமாகத்‌ தொடருமொரு செயற்பாடு. அதனால்‌ எங்களிடையே

உங்களுடையதைப்‌ போன்ற ஒலியை மையமாகக்‌ கொண்ட உரையாடல்‌ நிலவுவதில்லை. அதற்குரிய உறுப்புகளின்‌ தேவைகளும்‌ இருப்பதில்லை.

இயற்பியல்‌ விஞ்ஞானி: 'எவ்வளவு ஆச்சரியமாகவும்‌, திருப்தியாகவுமிருக்கிறது. என்‌ இருப்பின்‌ முடிவுக்கண்மையில்‌ எனக்கு இபப்டியொரு அறிதலும்‌, புரிதலுமா? '

அண்டவெளி உயிரினம்‌: 'என்ன கூறுகிறாய்‌ நண்பா! என்ன உன்‌ இருப்பு முடியும்‌ தறுவாயிலிருக்கிறதா? ஏன்‌..?'

இயற்பியல்‌ விஞ்ஞானி இதற்குப்‌ பதிலாகத்‌ தன்‌ கதையினையும்‌, நிறைவேற்றப்படவுள்ள தண்டனை பற்றியும்‌ குறிப்பிட்டான்‌. இதற்குப்‌ பதிலாகச்‌ சிறிது நேரம்‌ அண்டவெளி உயிரினத்திடமிருந்து மெளனம்‌ நிலவியது. பின்னர்‌ அது கூறியது.

'இதற்கு நீ ஏன்‌ கவலைபடுகிறாய்‌? கவலையை விடு! இந்த இக்கட்டிலிருந்து உன்னை நான்‌ தப்ப வைக்க முடியும்‌. நீ உன்‌ உலகத்துச்‌ சட்டதிட்டங்களின்படி விடுதலையானதும்‌ நாம்‌ அடிக்கடி சந்தித்துக்‌ கொள்வோம்‌."

இயற்பியல்‌ விஞ்ஞானி: 'உன்னால்‌ என்னை எவ்விதம்‌ காப்பாற்ற முடியுமென நினைக்கிறாய்‌?"

அண்டவெளி உயிரினம்‌: நாளை உனக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட இருப்பதனால்‌ , காலதாமதம்‌ செய்வ்தற்குரிய தருணமல்ல இது. அதனால்‌...

இயற்பியல்‌ விஞ்ஞானி: 'அதனால்‌...'

அண்டவெளி உயிரினம்‌: 'முதலில்‌ இன்று உன்‌ சிறைக்‌ காவலர்களுடன்‌ தொடர்பு கொண்டு உன்‌ இறுதி முறையான மேன்முறையீட்டினை விண்ணப்பித்துவிடு. உங்கள்‌ உலகத்துச்‌ சட்டதிட்டங்களின்படி மரணதண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முன்வரையில்‌ தகுந்த காரணம்‌ இருப்பின்‌ , நிரூபிக்கப்படின்‌ அவ்விதமான மேன்முறையீடுகளை

பதிவுகள்‌ 02020

143 பதிவுகள்‌ 36 சிறுகதைகள்‌ (தொகுதி மூன்று) விண்ணப்பிக்கலாமல்லவா?' இயற்பியல்‌ விஞ்ஞானி: 'ஆம்‌. உண்மைதான்‌...

அண்டவெளி உயிரினம்‌: 'அவ்விதம்‌ உன்‌ மேன்முறையீட்டினை உடனடியாகவே விண்ணப்பித்து முதலில்‌ குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும்‌ நீ உண்மையில்‌ இயற்பியல்‌ விஞ்ஞானி பாஸ்கரன்‌ அல்லனென்று கூறவேண்டும்‌; நிரூபிக்க வேண்டும்‌. ..'

இய்ற்பியல்‌ விஞ்ஞானி: 'அதெப்படி.. ஒன்றுமே புரியவில்லையே... எதற்காக நான்‌ , இயற்பியல்‌ விஞ்ஞானி பாஸ்கரன்‌ அல்லனென்று கூறவேண்டும்‌? நான்‌ பாஸ்கரன்‌ தானே!

அண்டவெளி உயிரினம்‌: 'வேறு வழியில்லை... அதுவொன்றுதான்‌ தற்போதுள்ள இலகுவான வழி.. முதலில்‌ நீ தப்ப வேண்டும்‌. அதன்பின்‌ எங்களுக்கிடையிலான தொடர்பு தொடரட்டும்‌...'

இயற்பியல்‌ விஞ்ஞானி: '. ஒன்றுமே புரியவில்லையே... நான்‌ நானில்லையென்றால்‌ வேறு யார்‌?'

அண்டவெளி உயிரினம்‌: ' இயற்பியல்‌ விஞ்ஞானி பாஸ்கரனுக்கு அவனது இதயம்‌ எந்தப்‌ பக்கத்திலுள்ளது? "

இயற்பியல்‌ விஞ்ஞானி: 'அதிலென்ன சந்தேகம்‌... இடது புறத்தில்தான்‌..'

அண்டவெளி உயிரினம்‌: 'இயற்பியல்‌ விஞ்ஞானியின்‌ முக்கிய அடையாளங்களிலொன்றான பிறப்பு மச்சம்‌ எந்தப்‌ பக்கத்திலிருக்கிறது?'

இயற்பில விஞ்ஞானி: 'அது தாடையின்‌ வலப்புறத்தில்தான்‌...

அண்டவெளி உயிரினம்‌: ' அவற்றினை இடம்‌ மாற்றி வைத்து விட்டால்‌ வேலை சுலபமாகிவிடும்‌. அதன்‌ பின்னர்‌ உனது மேன்முறையீட்டில்‌ உண்மையான இயற்பியல்‌ விஞ்ஞானியின்‌ இதயம்‌ இடது ப்றத்தில்‌ இருப்பதையும்‌, அவனது அங்க அடையாளங்களின்‌ இருப்பிடங்களையும்‌ குறிப்பிட வேண்டும்‌. ஆனால்‌ அவை எல்லாமே உன்னைப்‌ பொறுத்தவரையில்‌ இடம்‌ மாறியிருக்கும்‌. ஆக நீ - நான்‌ அவனில்லை - என்று வாதாட வேண்டும்‌. உன்‌ உடலின்‌ எல்லாப்‌ பாகங்களுமே இடம்‌ மாறியிருப்பதால்‌ உன்‌ இடது கை வலது கையாகவும்‌, வலது கை இடது கையாகவுமிருக்கும்‌. நீதி மனறத்திடமிருக்கும்‌ தகவல்களின்படி அவர்களிடமிருப்பது போலியான கைரேகையாகவிருக்கும்‌.. என்ன

பதிவுகள்‌ 02020

144 பதிவுகள்‌ 36 சிறுகதைகள்‌ (தொகுதி மூன்று) புரிகிறதா?

இயற்பியல்‌ விஞ்ஞானி; 'ஏதோ கொஞ்சம்‌ புரிகிறது. புரியாமலுமிருக்கிறது... ஆனால்‌ ஒன்று மட்டும்‌ புரிகிறது: நான்‌ அவனில்லையென்று வாதாட வேண்டும்‌ என்று. தற்போதுள்ள என்‌ அங்கங்கள்‌ தொடக்கம்‌ அனைத்தையுமே தற்போதுள்ள இடத்திலிருந்து

இடம்‌ மாற்றி வைத்தால்‌ இவையெல்லாம்‌ சாத்தியமென்று நீ குறிப்பிடுவதும்‌ புரிகிறது... ஆனால்‌ அவையெல்லாம்‌ - இடமாற்றம்‌- எவ்விதம்‌ சாத்தியமென்றுதான்‌ புரியவில்லை '

அண்டவெளி உயிரினம்‌. 'சபாஷ்‌ நீ கெட்டிக்காரன்‌ தான்‌. உனக்கு எல்லாமே புரிகிறது ஒரு சிலவற்றைத்‌ தவிர. ஆனால்‌ இவ்விதமான புரிதல்‌ உன்னைப்‌ பொறுத்தவரையில்‌ இயல்பானதொன்றுதான்‌...'

இயற்பியல்‌ விஞ்ஞானி: 'என்ன இயல்பானதா.. என்ன சொல்கிறாய்‌? சற்று விளக்கமாகத்தான்‌ கூறேன்‌?'

அண்டவெளி உயிரினம்‌: 'உன்னால்‌ உணர முடியாது. காரணம்‌: உனது முப்பரிமாண எல்லைகள்‌. அவற்றை மீறி உன்னால்‌ உணர முடியாது. ஆனால்‌ உனக்குக்‌ கீழுள்ளவற்றை ஒப்ப்பிடுவதன்மூலம்‌ அவற்றை , உன்னிலும்‌ அதிகமான பரிமாணங்களின்‌

சாத்தியங்கள்‌ பற்றிய புரிதலுக்கு உன்‌ அறிவு போதுமானது. உணர முடியாவிட்டாலும்‌ புரிய முடியும்‌.

அண்டவெளி உயிரினம்‌ தொடர்ந்தது: ' மானுட நண்பா! இரு பரிமாணங்களிலுள்ள உலகமொன்றிருப்பின்‌ அங்குள்ள உயிர்கள்‌ தட்டையானவையாகத்தானிருக்கும்‌. அவற்றால்‌ உன்னால்‌ உணர முடிந்த உயரத்துடன்‌ கூடிய முப்பரிமாண உலகைப்‌ பார்க்க

முடியாது. அவர்களைப்‌ பொறுத்தவரையில்‌ நீளமும்‌ அகலமுமேயுள்ள சிறைச்சாலையை விட்டு வெளியில்‌ செல்ல வேண்டுமானால்‌ நீள அகலச்‌ சுவர்களை உடைத்துதான்‌ செல்ல வேண்டும்‌. ஆனால்‌ முப்பரிமாணங்களுள்ள உன்னால்‌ மிக இலகுவாக

உனது மூன்றாவது பரிமாணமான உயரத்தினூடு அந்தத்‌ தட்டை மனிதர்களை மேலெடுத்து மீண்டும்‌ சிறைச்சாலைக்கு வெளியே அவர்களது தட்டைச்‌ சிறைகளை உடைக்காமலே கொண்டு சென்று விட முடியும்‌. நீ அவர்களை உனது மூன்றாவது பரிமாணமான உயரத்தினுள்‌ எடுத்தவுடனேயே அவர்களைப்‌ பொறுத்தவரையில்‌ அவர்களது தட்டை உலகத்திலிருந்து மறைந்து விடுவார்கள்‌. ஆனால்‌ அவர்கள்‌ உண்மையில்‌ மறையவில்லை மூன்றாவது பரிமாணத்தினுள்‌ இருப்பது உனக்கு மட்டும்தான்‌

புரியும்‌. இல்லையா? '

இயற்பியல்‌ விஞ்ஞானி: 'ஆம்‌. நீ கூறுவது தர்க்கரீதியாகச்‌ சரியாகத்தானிருக்கிறது..'

பதிவுகள்‌ 02020

145 பதிவுகள்‌ 36 சிறுகதைகள்‌ (தொகுதி மூன்று)

அண்டவெளி உயிரினம்‌: 'அதுபோல்தான்‌ .. இடது புறத்தில்‌ இதயமுள்ள தட்டை உயிரினமொன்றை உனது பரிமாணத்தினுள்‌ எடுத்து, 180 பாகையில்‌ திருப்பி மீண்டும்‌ அதனது உலகினுள்‌ கொண்டு சென்று விட்டால்‌ என்ன நடக்கும்‌? அதன்‌ உறுப்புகளின்‌ இடம்‌ மாறியிருக்கும்‌. புரிகிறதா? மானுடனே! புரிகிறதா?'

இயற்பியல்‌ விஞ்ஞானி: புரிகிறது. நன்றாகவே புரிகிறது. என்னை இப்பொழுது உனது அதிஉயர்‌ வெளிப்‌ பரிமாணங்களிலொன்றினுள்‌ அழைத்துச்‌ சென்று, 180 பாகை திருப்பி , மீண்டும்‌ இங்கு கொண்டுவந்து இறக்கி விடப்போகின்றாய்‌. அப்படித்தானே

அண்டவெளி உயிரினம்‌: பட்சே அதெ! அதே!' இயற்பியல்‌ விஞ்ஞானி: 'அட உனக்கு மலையாளம்‌ கூடத்‌ தெரியுமா?

அண்டவெளி உயிரினம்‌: 'எனக்குத்‌ தெரியாத உன்‌ பிரபஞ்சத்து மொழிகளே இல்லை. எல்லாவற்றையும்‌ மிக இலகுவாக அறிந்து கொள்ள முடியும்‌. முதலில்‌ நீ விடுதலை பெற்று வா! அதன்‌ பிறகு உனக்கு நான்‌ இன்னும்‌ பல அதிசயங்களைச்‌ சொல்லித்‌ தருவேன்‌. அவற்றைப்‌ பாவித்து நீ உன்‌ உலகத்தில்‌ மிகவும்‌ பலமுள்ள ஆளாக மாறலாம்‌. எப்பொழுதுமே என்‌ உதவி உனக்குண்டு. அதற்கு முன்‌.. இப்பொழுது உன்னை நான்‌ உனது முப்பரிமாணங்களிலும்‌ மேலான இன்னொருமொரு வெளிக்குரிய பரிமாணத்தினுள்‌ காவிச்‌ செல்லப்‌ போகின்றேன்‌. இவ்விதம்‌ பரிமாணங்களினூடு பயணிப்பதன்‌ மூலம்‌ உன்‌ பிரபஞ்சத்தின்‌ நெடுந்ததொலைவுகளைக்‌ கூட மிக இலகுவாக, ஒரு சில கணங்களில்‌ கடந்து விட முடியும்‌... என்ன தயாரா?'

இயற்பியல்‌ விஞ்ஞானி: கண்களை மூடிக்‌ கொள்கிறான்‌. 'அப்பனே! முருகா! எந்தவிதப்‌ பிரச்சினைகளுமில்லாமல்‌ மீண்டும்‌ என்னை இந்த மானுட , முப்பரிமாண உலகுக்கே

கொண்டு வந்துவிட நீ அருள்‌ புரிய வேண்டும்‌..'

அண்டவெளி உயிரினம்‌: ' என்ன கடவுளை வேண்டிக்‌ கொள்கிறாயா? என்‌ மேல்‌ இன்னும்‌ உனக்கு நம்பிக்கை வரவில்லையா...

இயற்பியல்விஞ்ஞானி: சிறிது வெட்கித்தவனாக ' அப்படியொன்றுமில்லை. நீ என்னை இப்பொழுதே காவிச்‌ செல்லலாம்‌...

அடுத்த சில கணங்களில்‌ நாற்பரிமாணங்களைக்‌ கொண்ட வெளிநேரப்‌ பிரபஞ்சத்திலிருந்து இயற்பியல்‌ விஞ்ஞானி மறைந்து மீண்டும்‌ தோன்றினான்‌.

என்ன ஆச்சரியம்‌!

பதிவுகள்‌ 02020

146 பதிவுகள்‌ 36 சிறுகதைகள்‌ (தொகுதி மூன்று)

அவனாலே அவனை நம்ப முடியவில்லை. அவனது இதயம்‌ வலது புறத்திலிருந்து துடித்துக்‌ கொண்டிருந்தது. முன்பு வரை இடது பக்கமாகவிருந்த அவ்னது உடற்‌ பாகங்கள்‌ , பிறப்படையாளங்கள்‌, அனைத்துமே வலப்புறமாக இடம்‌ மாறியிருந்தன.

அண்டவெளி உயிரினம்‌: 'மானுட நண்பனே! சரி மீண்டும்‌ நாளை உனது மறுபிறப்புக்குப்‌ பின்னர்‌ வருகிறேன்‌. அதன்‌ பின்னர்‌ இன்னும்‌ பலவற்றை உனக்குத்‌ சொல்லித்‌ தருவேன்‌. மானுடராகிய உங்களவர்களின்‌ உடல்களைத்‌ திறக்காமல்‌, வெட்டாமல்‌

எவ்விதம்‌ சத்திர சிகிச்சைகளச்‌ செய்வ்து போன்ற பல விடயங்களில்‌ என்னால்‌ உனக்கு உதவ முடியும்‌. உன்‌ மேன்முறையீடு மூயற்சி வெற்றிபெற எனது வாழ்த்துகள்‌. வருகிறேன்‌. நண்பா! நன்கு இருண்டு விட்டது. இப்பொழுது நீ நன்கு தூங்கு.

விடிந்ததும்‌ முதல்‌ வேலையாக உன்‌ மேன்‌ முறையீட்டினைச்‌ செய்‌. வருகிறேன்‌.'

இயற்பியல்‌ விஞ்ஞானி: - (தனக்குள்‌) 'பலபரிமாண நண்பனே! உன்‌ உதவிக்கு நன்றி இவ்விதமாக எண்ணியவன்‌ தூக்கத்திலாழ்ந்தான்‌. நாளை விடிந்ததும்‌ அவன்‌ தன்‌ மறுவாழ்வுக்காக வாதாடுவான்‌. தன்‌ அங்க அடையாளங்கள்‌, கை ரேகை, இதயத்தின்‌

இருப்பிடம்‌ பற்றியெல்லாம்‌ தெளிவாக எடுத்துரைத்து இயம்புவான்‌ நான்‌ அவனில்லை மென்று.

பதிவுகள்‌ 02020

147 பதிவுகள்‌ 36 சிறுகதைகள்‌ (தொகுதி மூன்று) 24. புகலிடம்‌ தேடி - ஸ்ரீரஞ்சனி

கண்‌ விழித்துப்‌ பார்க்கிறேன்‌. எனது மூன்று வயது மகள்‌ ஆரணி என்‌ கழுத்தைக்‌ கட்டிப்‌ பிடித்துக்‌ கொண்டு படுத்திருக்கிறாள்‌. இரவு முழுவதும்‌ தூங்குவதும்‌ விழிப்பதுமாக நிம்மதியற்ற நிலையில்‌ கழிந்ததால்‌ கண்கள்‌ கனக்க உடல்‌ அசதியாக இருந்தது. ஆயினும்‌, வேலைக்குப்‌ போக வேண்டுமே என்ற நினைவு தலைதூக்க மெல்ல மகளின்‌ கையை விலக்கி, அவளின்‌ நெற்றியில்‌ முத்தமிட்டு விட்டு எழும்புகிறேன்‌.கண்‌ விழித்துப்‌ பார்க்கிறேன்‌. எனது மூன்று வயது மகள்‌ ஆரணி என்‌ கழுத்தைக்‌ கட்டிப்‌

பிடித்துக்‌ கொண்டு படுத்திருக்கிறாள்‌. இரவு முழுவதும்‌ தூங்குவதும்‌ விழிப்பதுமாக நிம்மதியற்ற நிலையில்‌ கழிந்ததால்‌ கண்கள்‌ கனக்க உடல்‌ அசதியாக இருந்தது. ஆயினும்‌, வேலைக்குப்‌ போக வேண்டுமே என்ற நினைவு தலைதூக்க மெல்ல மகளின்‌

கையை விலக்கி, அவளின்‌ நெற்றியில்‌ முத்தமிட்டு விட்டு எழும்புகிறேன்‌.

நேற்று காணாமல்‌ போன சோபனாவின்‌ முகம்‌ எங்கும்‌ நிழலாடி மனதில்‌ ஒரு இனம்‌ புரியாத படபடப்பை தந்;தது. நாம்‌ கனடாவுக்கு புதிதாக வந்தபோது எங்களது அயலவர்கள்‌ அவர்கள்‌. பின்பு நாமும்‌ அவர்களும்‌ வேறுவேறு திசைகளில்‌ இடம்‌

மாறிவிட்டதால்‌ எங்காவது விழாக்களில்‌ தான்‌ காண்பதுண்டு.

“அன்று காலை பாடசாலைக்குப்‌ போன பிள்ளை வீடு வரவில்லை. பிள்ளை எங்கே, எப்போ, யாருடன்‌, ஏன்‌ போயிருக்கும்‌ என்பது பெற்றோருக்குத்‌ தெரியாது. பாடசாலையால்‌ வர நேரமாகும்‌ என்று மட்டும்‌ தான்‌ தெரியும்‌. இரவு 9 மணிக்கும்‌ காணாததால்‌

பொலீசுக்கு அறிவிக்கப்பட்டது” என்ற தமிழ்‌ வானொலிச்‌ செய்தி அடிக்கடி நினைவுக்கு வந்து மனதை அலைக்கழித்தது

குளித்து, உடைமாற்றி காரில்‌ ஏறிக்கொள்கிறேன்‌. சாப்பிட மனசு வரவில்லை. எவ்வளவு